பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 13, 2009

நானும் ராதாவும் ஸ்கூல் டூர் போன கதை!!! பாகம் # 2

இந்த இரண்டாம் பாகம் புரிய வேண்டுமானால் வ வா சங்கத்திலே நான் எழுதிய முதல் பாகம் இந்த லிங் ல படிச்சுட்டு இங்க வாங்க. அங்கயே 2ம் பாகமும் போட இருந்தேன். ஆனா மார்ச் மாசம் என்னை கேட்காம முடிஞ்சு போச்சு. அதனாலத்தான் மக்கா!

*************************************************

எப்படியும் நாம நம்ம ஸ்கூல் பஸ்சை பாண்டி ஹார்பர்ல பிடிச்சிடனும்னு நினைச்சுகிட்டு பாண்டிக்கு போக அந்த இரவு 3 மணிக்கு பஸ்டாண்டு வந்து பஸ் ஏறிட்டோம். காலை 6.30 க்கு பாண்டி வந்து ஒரு வழியா ஹார்பர் சேரும் போது காலை ஒன்பது ஆச்சு.

அதே நேரம் இங்க நம்ம ஸ்கூல்ல என்ன ஆச்சுன்னா அப்பதான் பிரபாகன் பஸ் சர்வீஸ் ரிப்பேர் எல்லாம் முடிஞ்சு வந்து எல்லாரும் பஸ் ஏறிகிட்டு இருக்காங்க. ராத்திரியே சார் எல்லாருக்கும் ரோல் நம்பர் சொல்லியிருந்தார். நாங்க பஸ்ல ஏறி உட்காந்ததும் அந்த நம்பரை சொல்லனும் சத்தமா. எவனாவது மிஸ் ஆச்சுன்னா தெரியும்ல. அதனல அப்படி செஞ்சிருந்தாங்க. அதை தவிர எல்லார் கையிலயும் மேப் , எந்தெந்த ஊர்க்கு எத்தனை மணிக்கு போய் சேருவோம், எங்க எங்க சாப்பிடுவோம் இரவு எந்த பள்ளி கூடத்திலே படுக்கை( ஹோட்டல் எல்லாம் கிடையாது ஒரு 15 பைசா தபால் கார்டு போட்டு ஸ்கூல் புக் செஞ்சிருந்தார் சார்) எல்லா விபரத்தையும் ரகு சார் பசை தடவிய ஏதோ ஒரு மிஷினில் அழுத்தி அழுத்தி காப்பி எடுத்து எல்லார் கையிலயும் கொடுத்து இருந்தார்.

எப்போதும் போல நாங்க ரெண்டு பேரும் (ரோல் நம்பர்27. 28) மிஸ்ஸிங். யாருன்னு சார் தன் கையில இருந்த பேரை பார்த்தா தொல்ஸ், ராதா மிஸ்ஸிங். பின்ன என்ன, வேற யாராவது வரலைன்னா கூட சைக்கிள் விட்டு தேடி வீட்டுக்கு ஆள் அனுப்பி கூப்பிட சொல்லியிருப்பார். நாங்க ரெண்டு பேரும் இல்லைன்னு சொன்னதும் சந்தோஷமா வண்டி கிளம்பிடுச்சு. ஆக, டூர் மிக சரியா 5 மணி நேர வித்யாசத்தில் பின் தங்கி வண்டி கிளம்ப நாங்களோ சரியான நேரத்துக்கு அந்த அஜண்டாவில் உள்ள படி போய் கிட்டு இருந்தோம்.

நேரா ஹார்பர்ல இருந்த செக்யூரிட்டி கிட்ட " சார் எங்க பள்ளி கூடத்திலே இருந்து டூர் வந்தவங்க உள்ள இருக்காங்களா"ன்னு கேட்டதுக்கு அவரு " ஆமா காலை ஆறு மணிக்கு வந்தாங்க. இப்ப தான் போனாங்க" ன்னு சொன்னாரு.(எந்த ஸ்கூலோ) அடப்பாவமே மிஸ் பண்ணிட்டோமே என்னடா பண்றதுன்னு ராதா கிட்ட கேட்டதுக்கு " விடுடா, எங்க போயிட போறாங்க மரக்காணம் ரோடு எல்லாம் பார்த்துட்டு அவங்க போய் கழுகு லஞ்ச்க்கு போகும் முன்ன நாம கழுகு மாதிரி பறந்து போயிடுவோம் வேற ஒரு ரூட் இருக்குன்னு மேப் எல்லாம் பிரிச்சு பார்த்து பெரிய ராணுவ திட்டம் மாதிரி சொன்னான். சரின்னு அடுத்த பஸ் பிடிச்சுட்டோம். அப்ப தான் மெதுவா கேட்டேன். " டேய் நாம போய் திருபரங்குன்றத்துல அவங்களோட சேரும் போது எங்கடா போயிட்டீங்கன்னு சார் கேட்டா என்னடா சொல்றது"ன்னு கேட்டேன். அதுக்கு அவன் "பஸ்ஸிலே தான் இருந்தோம்னு சொல்லிடுவோம் கேட்டா ஹார்பர்ல கப்பல்லாம் சூப்பரா இருந்துச்சுன்னு எதுனா சொல்லிடுவோம்" என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு. "ஏண்டா நாம தான் கப்பலையே பார்கலையே சார் கப்பல் என்ன கலர்ல இருந்துச்சுன்னு கேட்டா என்னடா சொல்றது?"ன்னு கேட்டதுக்கு அவன் " என்ன பிரமாதம் கப்பல் எல்லாம் கருப்பு கலர்தாண்டா, நீ ரத்ததிலகம் படம் பார்த்தியோ? நான் பார்த்தேன் பக்கத்து ஆத்து ரமா அம்மா அழச்சுண்டு போனா நான் சின்னதா இருக்கச்சே. அதில வரும் கப்பல் நல்ல கரு கருன்னு கருப்பு தாண்டா"ன்னு சொன்னான். எனக்கு அப்ப அதை ஒத்துகிட்டாலும் இதை டைப்பும் போது தான் அந்த படம் கருப்பு வெள்ளை படம் என்பது நியாபகம் வருது. அடப்பாவி கருப்பு வெள்ளை படத்துல வரும் கப்பல் சிகப்பாவா இருக்கும். என்னை இத்தனை நாள் மடையனா ஆக்கிட்டியே ராதா! நல்லா இருடா!

நாங்க ஒரு வழியா திருகழுகுன்றத்துல போய் மதியம் 1 மணிக்கு மலை மேலேயும் ஏறி வந்துட்டோம். வந்து பார்த்தா அங்க அங்க திட்டு திட்டா எல்லாம் மெரினா பீச்சுல நெருப்பு வச்ச மாதிரி மனித தலை. எல்லாம் கழுகு வந்து அந்த ரெண்டு உருண்டைய கொத்தி திங்கிறதை பார்க்க கூட்டம். கூட்டம் அத்தனை நெருக்கமா இல்லாம அலசலா அங்க அங்க உட்காந்து இருக்க நானும் ராதாவும் ஒரு இடத்திலே நிக்காம அந்த கழுகு மாதிரி வட்டம் அடிச்சுகிட்டே இருந்தோம் எங்க பள்ளிகூட கூட்டத்தை எதிர் பார்த்து.
அதே நேரம் ஹார்பர்ல சுத்தி பார்த்துட்டு எல்லாரும் பஸ்ஸில் ஏறி வரிசையா நம்பர் சொல்ல 27, 28 மிஸ்ஸிங். வழக்கம் போல சார் பேப்பரை பார்த்துட்டு "அவனுங்க தான்"ன்னு முனு முனுத்துகிட்டே "போலாம் ரைடேய்ய்ய்ய் அடுத்து நேரா திருகழுகுன்றம் தான். ஆனா இந்நேரம் கழுகு சாப்பிட்டு இருக்கும் நம்ம ஸ்கூலுக்கு தான் குடுப்பினை இல்லை"ன்னு சொல்லிகிட்டு இருந்தார்.

எப்படி குடுப்பினை இல்லாம போகும். அந்த புண்ணியத்தை எங்க ஸ்கூலுக்கு சேர்க்கத்தான் நாங்க ரெண்டு பேரும் தேவுடு காத்துகிட்டு உட்காந்து இருந்தோமே! எங்க பக்கத்திலே இருந்த பிராமண பாட்டி தன் பேத்திகிட்ட (பேத்தி கிட்ட தட்ட எங்க வயசு இருக்கும், நாங்க இடம் பார்த்து தான் உட்காந்தோமாக்கும்) அந்த 'தல" புராணத்தை சொல்லிகிட்டே வந்தாங்க.
"தோ பாருடீ பெருமாளுக்கு நைவேத்தியம் பண்ணிட்டு பட்டாச்சாரியார் வராரு பாரு, நேரா அந்த இடத்துல வந்து வைப்பாரு. டாண்னு ஒரு மணிக்கு கருடன் வருவார். சாப்பிடுவார்"ன்னு சொல்ல நான் ராதா கிட்ட "ஆமாடா ராதா எங்கம்மாவும் வெள்ளிகிழமை மதியம் விரதம் பண்ணிட்டு அப்பா மதியம் 12 மணிக்கு சாப்பிட வரும் முன்ன ஓட்டிலே சாதம் வைப்பாங்க "காக்கா" பாட்டு கூட பாட வேண்டாம். தானா வந்து சாப்பிடும்" ன்னு சொல்ல அந்த பாட்டி என்னை முறைக்க ராதா என்னிடம் இருந்து கொஞ்சம் அந்த பாட்டி பக்கமா நகர்ந்து உட்காந்து கிட்டு என்னை நீ யாரோ நான் யாரோ என்பது போல பார்க்க அந்த பெண் அவனை சினேகமா பார்த்துச்சு. திரும்ப வரும் போது ராதா முனுமுனுத்துகிட்டே வந்தான் "பெருமாளே அவா பாரத்வாஜ் கோத்திரமா இருக்க கூடாது"ன்னு என்னவோ. எனக்கு ஒன்னும் புரியலை. சரின்னு அடுத்த திட்டம் என்னடான்னு அவன் என்னை கேட்க நான் " டேய் மரக்காணம் ரோட்டிலே பஸ் பஞ்சர் ஆகியிருக்கும் அதை சரி செய்யங்காட்டிலும் கழுகு மதிய சாப்பாடு சாப்பிட்டு இருக்கும்னு நெனைச்சு நேரா செஞ்சி கோட்டைக்கு விட்டிருப்பாங்க. வா நேரா அங்க போய் பிடிச்சிடலாம். செஞ்சி ஸ்கூல்ல தான் நைட்டு தங்கனும். அதனால ரெடி ஜூட் செஞ்சி"ன்னு செஞ்சி பஸ் ஏறியாச்சு.

அங்கயோ சார் " கழுகு சாப்பிட்டு முடிச்சா என்ன நாம பெருமாளை சேவிச்சுட்டு லேட்டா போறோம் செஞ்சிக்கு. பின்ன ஒரு சேதி ஒரு சின்ன மாற்றம். செஞ்சி ஸ்கூல்ல என் கூட பி எட் முடிச்ச சார் கிட்ட தான லெட்டர் போட்டு இடம் கேட்டேன் தங்குவதற்கு அந்த ஸ்கூல்ல. அவர் கிட்ட பாண்டியிலே இருந்து போன் போட்டு பேசினேன். அவர் வீட்டுக்கு பக்கத்துல தான் போஸ்ட் ஆபீஸ். அந்த நம்பர் ஒரு அவசரத்துக்கு கொடுத்து இருந்தார். செஞ்சி ஸ்கூல்ல டாய்லட் வசதி அத்தன நல்லா இருக்காதாம். அவர் மேல்மலையனூர்ல தான் ஜாகை. அங்க ஒரு ஆரம்ப பள்ளி இருக்குதாம். பக்கத்துல காடு குளம் எல்லாம் இருக்கு தாம். அதனால நாம அங்க தான் ராத்திரி தங்குறோம்"ன்னு சொல்லிகிட்டு இருக்கார்.

செஞ்சி வந்து இறங்கியாச்சு நாங்க. நண்பனே எனது உயிர் நண்பனேன்னு தோள் மேல கைய போட்டுகிட்டு பாடிகிட்டே கோட்டைக்கு வந்தாச்சு. சுற்றியும் என்னவோ கூழாங்கல்லை கொட்டி குவிச்ச மாதிரி மலை. மெதுவா மலையும் ஏறியாச்சு. ஏகப்பட்ட ஸ்கூல் பஸ், பசங்க எல்லாம் வந்திருந்தாங்க டெங்கினிகோட்டை அரசினர் மகளிர் மேல் நிலை பள்ளி கூட ஒட்டிகிட்டு சுத்தி பார்ப்போமா இல்லாட்டி கோட்டயம் ஜான்குரியகோஸ் ப்ரீ டிகிரி லேடீஸ் காலேஜ் கூட போவாமா என நானும் ராதாவும் குழம்பாமல் ஒத்துமையா முடிவெடுத்து அந்த குரியகோஸ் குரூப்புல கோந்து மாதிரி ஒட்டிகிட்டோம். "கேட்டா என்னடா சொல்றது"ன்னு கேட்டேன். அதுக்கு அவன் "சுத்தி பார்க்க வந்த கைடு"ன்னு சொல்லிடுவோம்டான்னு சொன்னான். "லூசாடா நீ கைடு எங்கயாவது சுத்தி பார்ப்பானா? அவன் சுத்தித்தான் காமிப்பான்"ன்னு சொல்லிட்டு அப்படியே அந்த குரூப்போட மலை ஏற ஆரம்பிச்சோம். அந்த கூட்டத்துல எல்லாம் ஒரே பீட்டர். ராதாவுக்கு கொள்ளை ஆசை அது போல பீட்டர் விட. என் கிட்ட சொன்னான் " மிஸ்டர் தொல்ஸ் மிஸ்டர் தேசிங் ராஜ்ஸ் எ பிக் மன்னன் கட்டிபைஃயிங் ஹிஸ் குதிரை திஸ் பிளேஸ்"ன்னு ஒரு மரத்தை என் கிட்ட காமிக்க அந்த மொத்த கூட்டமும் எங்களை பார்த்தது!!

எங்களை பார்த்தாதான் நல்லா தெரியுமா அதும் +2 படிக்கும் போது பால்வடியும் முகமாச்சா(?) கைடுன்னு சொன்னா எல்லாம் கதகளி ஆடிடும்னு தெரியும். அப்படியே நைசா முன்னோக்கி நடந்து போய் டிங்கினிகோட்டை அரசினர் மகளிர் பள்ளியோடு ஐக்கியமானோம். ஒரு குதிரை மாத்திரம் இருந்தா சிட்டா ராஜா தேசிங்கு மாதிரி பறக்கலாம்டான்னு ராதா சொன்னப்ப கூட எனக்கு வந்தியதேவன் தான் நியாபகத்துக்கு வந்தான்.

அப்படியே அந்த கூட்டத்தை விட்டு வெளியே வந்து " நீ பார்த்த பெண்னை நான் பார்த்ததில்லை நான் பார்த்த பெண்னை நீ பார்த்ததில்லை, துள்ளி வரும் வெள்ளி நிலா"ன்னு மாத்தி மாத்தி பாடிகிட்டே இரவு அந்த ஸ்கூல்க்கு போனோம். வாட்ச்மேன் கிட்ட "ஏங்க மாயவரத்தில ஒரு ஸ்கூல்ல இருந்து டூர் வர்ரதா சொன்னாங்களே"ன்னு முடிப்பதுக்கு முன்னமே "ஆமா தம்பி ஜமுக்காளம் எல்லாம் அந்த ரூம்ல இருக்கு மத்தவங்க எல்லாம் வரலியான்னு கேட்க ராதா " வருவாங்க சுத்தி பார்த்துகிட்டு இருக்காங்க எங்களுக்கு தலை வலி அதான் முன்னால வந்துட்டோம் நான் ஸ்கூல் பீப்பிள் லீடர், இவன் அஸிஸ்டண்ட் ஸ்கூல் பீப்பிள் லீடர்"ன்னு பீலா விட்டான். சரின்னு அந்த பாட்டனி லேப்ல போய் படுத்தோம் எப்படியும் நம்ம பசங்க வந்துடுவாங்கன்னு நம்பிக்கையிலே. படுத்தது தான் தெரியும் மலை எல்லாம் ஏறின அலுப்பிலே அப்படியே தூங்கிட்டோம். காலை வாட்ச்மேன் வந்து எழுப்பின பின்ன தான் யாருமே வரலைன்னு தெரிஞ்சுது.

அதுக்காக கலங்கிடுவோமா என்ன? எழுந்து குளிச்சு முடிச்சு அந்த லேப்ல ஒரு பந்து இருந்துச்சு அதை விளையாடிகிட்டு அப்பவும் நம்ம பசங்க வந்துடுவாங்கன்னு நம்பிக்கையிலே இருந்தோம். ஒரு ஆர்வகோளாறுல அதை எட்டி உதைக்க அங்க இருந்த ரவீந்திரநாத் தாகூர் பொல பொலன்னு அழுதுட்டார். தூரத்திலே இருந்து வாட்ச்மேன் சத்தம் கேட்டு ஓடிவர அடுத்த நிமிடம் சாத்தனூர் டேம் போகும் பஸ்ஸில் இருந்தோம்.

சாத்தனூர் முதலை பண்ணையில் இருந்த செக்யூரிட்டிகிட்ட "சார் எங்க ஸ்கூல் பசங்க டூர் வந்தாங்களா,ஏன்னா நாங்க அவங்களை மிஸ் பண்ணிட்டோம்"ன்னு சொன்னதுக்கு அவர் "இப்படி மொட்டையா சொன்னா எப்படி தம்பி உங்க ஸ்கூல்க்கு எதுனா அடையாளம் சொல்லுங்கப்பா"ன்னு சொன்னதுக்கு ராதா " சார் ஒரு பத்து வருஷம் முன்ன கணபதிராமன்னு எங்க சீனியர் 464 மார்க் வாங்கி ஸ்டேட் பஸ்ட் வந்தாரு"ன்னு சொன்னான். நல்லா சொன்னான் அடையாளம். அவர் முறைத்ததை கண்டுக்காம உள்ளே போனோம்.

எங்க பள்ளி டூர் அப்ப தான் காலை மேல்மலையனூர்ல எழுந்து கிளம்பி செஞ்சிகோட்டை வந்தாங்க. நாங்க சாத்தனூர் போயிட்டு முதலை பண்ணை, டேம் எல்லாம் மிகச்சரியா எங்க கையில இருந்த அஜண்டா படி முடிச்சுகிட்டே மகாபலிபுரம் வந்தோம்.

அங்க எல்லாம் சுத்தி பார்த்துட்டு (ஒரு முழுநாள் மகாபலிபுரம்ன்னு டூர் புரொக்ராம்) மதியம் வெண்ணை உருட்டும் பாறைகிட்ட வந்து பார்த்தா அட எங்க ஸ்கூல் பஸ் வந்து நிக்குது. தப தபன்னு பசங்க இறங்கிகிட்டு இருக்காங்க. நாங்க கொஞ்சம் வெயிட் பண்ணி கடைசியா இறங்கின வினாயகத்தை பஸ் பின்னால இருந்து டொக் அடிச்சு கூப்பிட்டு அவன் எங்களை பார்த்துட்டு வந்து விஷயம் எல்லாம் சொல்லி பின்ன அவன் கிட்ட நாங்க 27, 28 சீட்டுல குந்திக்கிறோம். நீ போய் நம்ம பசங்களை கூட்டிகிட்டு வான்னு சொல்ல அடுத்த 10 நிமிஷத்துல எல்லாரும் ஆஜர்.

பின்ன நடந்தது எல்லாம் இரண்டு பக்கமும் பரிமாறிக்கப்பட்டது. அப்படியே ஒரு முடிவெடுத்தோம். பின்ன டூர் எல்லாம் முடிஞ்சு எல்லாம் பஸ்ஸில் ஏறி சார் ரோல் கால் ஆரம்பிச்சப்ப 25, 26, 27, 28 ,29 .... சார் "நிறுத்துங்கடா"ன்னு ஒரு கத்தல். நாங்க ரெண்டு பேரும் எதுவுமே நடக்காதது போல அப்படியே அவரை பாவமா பார்த்தோம்.

"டேய் எந்திரிங்கடா, எங்க போயிருந்தீங்க?ன்னு கேட்டதுக்கு கொஞ்சமும் முகம் மாறாம ராதா ரெண்டு கையும் கட்டிகிட்டு வெண்ணை உருட்டும் பாறைக்கு சார்"ன்னு சொல்ல நான் " நான் அதை பார்க்கலை சார் கால் வலிச்சுது அதனல நான் முன்னமே வந்துட்டேன் சார்"ன்னு சொன்னேன். செம டென்ஷன் ஆகிடுச்சு சாருக்கு. பின்னே மத்த பசங்களும் அப்படியே எங்களுக்கு சப்போர்டா " சார் இவன் ஹார்பர்ல என் காலை தடுக்கி விட்டான் சார்" "சார் இவன் சாத்தனூர்ல அந்த குஞ்சி முதலையை பிடிச்சு மேல விட்டுடுவேன்ன்னு சொன்னான் சார்" அப்படின்னு சொல்லிகிட்டே போக ராதா " நீ மட்டும் என்னவாம் திருகழுகுகுன்றத்துல கழுகு எப்படி இருக்கும்ன்னு கேட்டதுக்கு முட்டிகையை கொக்கு மாதிரி வச்சி காமிச்சியே அதை சொல்லவா சாருக்கு" அப்படின்னு சொல்ல சொல்ல சொல்ல சாருக்கு குருதிஅழுத்தம் அதிகமாச்சு.

சரி இவனுங்க கிட்ட பேசினா சரியா வராதுன்னு தெரிஞ்சு போச்சு. அப்படியே ஊர் வந்து சேர்ந்தோம். அப்பப்ப சார் எங்களை திரும்பி பார்க்கும் போதல்லாம் நாங்க "சத்தியமா நாங்க உங்க கூட ஆரம்பம் முதலே வரோம் சார் என்பது மாதிரியா பார்ப்பதும் பின்னே அவர் தன் நெஞ்சை பிடிச்சுகிட்டே திரும்பிப்பதும் நடந்து கொண்டிருந்தது.

ஆச்சு ஒரு இரண்டு நாள் ஒரு நாள் பிரேயர் முடிஞ்சு எல்லாம் வகுப்புக்கு போகும் போது எங்களை நிறுத்தி கேட்டார். "கேக்குறனேன்னு தப்பா நினைக்காதீங்கடா? என்ன தான் நடந்துச்சு, நான் கோவிச்சுக்க மாட்டேன் சொல்லுங்கடா"ன்னு சொல்ல ரெண்டு பேரும் கோரஸா "சார் நாங்க ஆரம்பம் முதலே உங்க கூடத்தான் வந்தோம் நீங்க தான் நாங்க ஆப்சண்ட் அப்படின்னு தப்பாவே சொல்லிகிட்டு இருக்கீங்க வேணும்ணா "டேய் சங்கர் சொல்லுடா நாங்க உங்க கூட தான வந்தோம்" அப்படின்னு சொல்ல பியூன் வைத்தா வந்து "சார் உங்களுக்கு ஒரு லெட்டர்ன்னு கொடுத்தாரு.
பிரிச்சு படிச்சார். மெதுவா நடு நடுவே லெட்டரில் இருந்து தலை தூக்கி எங்களை பார்த்தார். லெட்டரை மடிச்சு பாக்கெட்ல வச்சிட்டு "ம் இப்ப சொல்லுங்க என்ன நடந்துதுன்னு கேட்டார்.

திரும்பவும் கேரஸாக "சார் நாங்க ஆரம்பம் முதலே....." கையால் எங்களை பேசுவதை நிப்பாட்ட சொல்லி சமிக்கை செஞ்சுட்டு அந்த லெட்டரை எடுத்து கொடுத்துட்டு போனார். ஒன்னும் பேசலை.
மெதுவா வாங்கி அதை படிச்சோம்.

அதிலே ரவீந்திரநாத் தாகூர் உடைச்சு போன கதையை அந்த சார் விலாவாடியா பத்து மார்க் கட்டுரை மாதிரி அடித்தல் திருத்தல் இல்லாமல் பத்தி விட்டு பத்தி விட்டு பிழை இல்லாமல் எழுதியிருந்தார். நான் மட்டும் அவருக்கு தமிழ் வாத்தியாரா இருந்திருந்தா பத்துக்கு நூறு மார்க் போட்டிருப்பேன்.

28 comments:

 1. மீ த பஷ்ட்டேய்ய்ய்ய்ய்ய்!

  ReplyDelete
 2. //ஆனா மார்ச் மாசம் என்னை கேட்காம முடிஞ்சு போச்சு. அதனாலத்தான் மக்கா!
  ///

  வாட் ஏ ஸேட் இன்சிடண்ட் ! :(

  பட் பரவாயில்ல இங்கன வந்து நாங்க படிக்கிறோம் அண்ணே! :))

  ReplyDelete
 3. :))))

  பாவம் அந்த வாத்தியார்.. :))

  //மிஸ்டர் தொல்ஸ் மிஸ்டர் தேசிங் ராஜ்ஸ் எ பிக் மன்னன் கட்டிபைஃயிங் ஹிஸ் குதிரை திஸ் பிளேஸ்//

  கிகிகி.. :))

  ReplyDelete
 4. //சார் ஒரு பத்து வருஷம் முன்ன கணபதிராமன்னு எங்க சீனியர் 464 மார்க் வாங்கி ஸ்டேட் பஸ்ட் வந்தாரு"ன்னு சொன்னான். நல்லா சொன்னான் அடையாளம். அவர் முறைத்ததை கண்டுக்காம உள்ளே போனோம்.//

  :))))))

  ReplyDelete
 5. //நீ மட்டும் என்னவாம் திருகழுகுகுன்றத்துல கழுகு எப்படி இருக்கும்ன்னு கேட்டதுக்கு முட்டிகையை கொக்கு மாதிரி வச்சி காமிச்சியே அதை சொல்லவா சாருக்கு" அப்படின்னு சொல்ல சொல்ல சொல்ல சாருக்கு குருதிஅழுத்தம் அதிகமா//

  :)))))))))))))))

  ReplyDelete
 6. ஃபுல் கலக்கல் காமெடி கலாட்டா !

  ரசிச்சு ரசிச்சு சிரிச்சாச்சு! :))

  (அடுத்த லீவுல ஊருக்கு போய் கண்டிப்பா ராதாவை மீட் பண்ணியே ஆகணும்!)

  ReplyDelete
 7. //பின்ன என்ன, வேற யாராவது வரலைன்னா கூட சைக்கிள் விட்டு தேடி வீட்டுக்கு ஆள் அனுப்பி கூப்பிட சொல்லியிருப்பார். நாங்க ரெண்டு பேரும் இல்லைன்னு சொன்னதும் சந்தோஷமா வண்டி கிளம்பிடுச்சு//

  ஆகா...இப்படில்லாம் வேற இருக்கா?!!

  ReplyDelete
 8. வயிறு வலிக்க சிரிச்சேன் சித்தப்பூ, அம்புட்டு சேட்டைய செஞ்சுருக்கீங்க.

  ReplyDelete
 9. நல்லாப் போனீங்க டூரு:))! தாகூர் உடைஞ்ச சேதியோடுனான அந்த லெட்டர் மட்டும் கிடைக்காமலே போயிருந்தால் பாவம் உங்க சாரு, யோசித்து யோசித்து ஒரு வழியாகிப் போயிருப்பார்:))!

  ReplyDelete
 10. சார், நானும் துபாய்ல தான், கூடிய சீக்கரம் சந்திப்போம் ( சிவ் ஸ்டார் வந்தா சொல்லுங்க ) ... பதிவு நல்ல இருந்திச்சி

  ReplyDelete
 11. அபி அப்பா தொடரும் போட்டு இன்னும் கலக்குங்க.மகிழ்ச்சியா இருகக வாய்ப்பு குறைவாக உள்ள தேர்தல் நேரத்துல நன்றாக சிரிக்க முடிந்தது.
  இல்லன்னா....
  நம்ம சென்ஷியையும், பிறந்த நாள் காணும் பாலகன் அய்யனாரையும் பின் நவீனத்துவமா எழுதச் சொல்லி கெஞ்சி கேட்டுக்குவேன்.

  ReplyDelete
 12. அப்ப அந்த இன்னொரு ஜாதி தலைவர் சிலைய உடைச்சதும் நீங்கதானா?

  ReplyDelete
 13. ஆமா நான் கூட காலேஜ் டூரில் ரெண்டுபேரு வரலைன்னு பஸ் கிளம்பும்முன்ன வீடு தேடி போய் கூட்டிட்டு வந்தேன்..
  :)
  உங்களை எல்லாம் போய் கூட்டிட்டு வர சொல்வாங்களா.. :))

  ReplyDelete
 14. அபி அப்பா,

  சிரித்து சிரித்து .... amazing piece. மிக மிக ரசித்தேன். 'கலக்கிட்ட சந்துரு' அளவு இதையும் ரசித்தேன்.

  //எனக்கு அப்ப அதை ஒத்துகிட்டாலும் இதை டைப்பும் போது தான் அந்த படம் கருப்பு வெள்ளை படம் என்பது நியாபகம் வருது. // :)))

  //"பெருமாளே அவா பாரத்வாஜ் கோத்திரமா இருக்க கூடாது"ன்னு என்னவோ. எனக்கு ஒன்னும் புரியலை// இப்பவாவது புரிந்ததா?

  அனுஜன்யா

  பி.கு.: முதல் பாகத்தையும், உங்கள் தளத்திலும் போட்டு விடுங்களேன்.

  ReplyDelete
 15. //அடப்பாவி கருப்பு வெள்ளை படத்துல வரும் கப்பல் சிகப்பாவா இருக்கும். என்னை இத்தனை நாள் மடையனா ஆக்கிட்டியே ராதா! நல்லா இருடா!//

  இந்தப் பதிவுல ஒவ்வொரு வரியும் டாப் டக்கர். சான்ஸே இல்லை
  அவ்வளோ அப்பாவியா நீங்க?

  ReplyDelete
 16. தம்பி .... அபி நைனா.......!!!! இந்த கத ஏற்கனவே " தொட்டி ஜெயா" ன்னு ஒரு படமா ரிலீஸ் ஆயிருச்சு......!! நீ மேல ஒரு மொழம் மல்லியப்பூவ சுத்தி கதய மாத்துனா எங்குளுக்கு தெரியாதா......??

  உம்பட மொக்க ரவுசுக்கு அரு அளவே இல்லாம போச்சு தம்பி......!!

  கடும் கண்டனத்துடன்,

  லவ்டேல் மேடி.........

  ReplyDelete
 17. பள்ளி நினைவுகளை எழுதியதற்கு கருத்து தெரிவிக்காத தீபா வெங்கட் டை கண்டிக்கிறேன் !

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. //நான் தொட்டி ஜெயாவும் பார்க்கலை குட்டிஜெயாவும் பார்கலை.//

  தொட்டிஜெயா தெரியும்
  இது யாருங்க குட்டிஜெயா


  பதிவுலகில் இதெல்லாம் சகஜம்னு தெரியும்!
  நீங்களே டென்ஷன் ஆகலாமா?

  ReplyDelete
 20. பாவம் அந்த வாத்தியார்.. :(

  ReplyDelete
 21. \லவ்டேல் மேடி said...

  தம்பி .... அபி நைனா.......!!!! இந்த கத ஏற்கனவே " தொட்டி ஜெயா" ன்னு ஒரு படமா ரிலீஸ் ஆயிருச்சு......!! நீ மேல ஒரு மொழம் மல்லியப்பூவ சுத்தி கதய மாத்துனா எங்குளுக்கு தெரியாதா......??

  உம்பட மொக்க ரவுசுக்கு அரு அளவே இல்லாம போச்சு தம்பி......!!

  கடும் கண்டனத்துடன்,

  லவ்டேல் மேடி.........

  \\

  என்னோட எந்த பதிவை நீ நல்லா இருக்குன்னு சொல்லியிருக்க. முதல் தடவை படிச்ச போதே முடிவு செஞ்சிருக்கனும். இவன் கிட்ட இத்தனை தான் சரக்கு இருக்குன்னு. திரும்ப திரும்ப வந்து ஏன் இம்சை பண்ணிகிட்டு இருக்க.

  நான் தொட்டி ஜெயாவும் பார்க்கலை குட்டிஜெயாவும் பார்கலை. தவிர சம்பவம் நடந்தது 1982ல. நான் தான் தெளிவா வாத்தியார் பேர்ல இருந்து போட்டிருக்கேனே. போய் விசாரிச்சுக்க வேண்டியது தானே. அப்ப நீயும் பிறக்கலை சிம்புவும் பிறக்கலை.

  நீ என்னை தம்பி தம்பின்னு கூப்பிட்ட போதல்லாம் நான் கூட நீ என்னைவிட மூத்தவர்ன்னு நினைச்சு மரியாதை கொடுத்தேன்.

  உன் மரியாதையை கெடுத்துக்காதே! ஓடிடு!


  Abi appa Unmai Sudum... Yezhuthiya nokkam sirikka vaikka mattume alathu pahirthal mattume yenil yen intha kovam... Neer nalla yezhuththalar thaan aanaal yethirmarai vimarsanangalai yetrukkollavum katrukkolla vendum
  Ungal (Arasiyal thavirththa)pathippugalin Rasigan.

  ReplyDelete
 22. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 23. அண்ணா முடியல நிப்பாட்டுங்க:)))))))))))))
  தனியா பெப்பர பெப்பேனு சிரிச்சிட்டு இருக்கேன்:)))

  ReplyDelete
 24. தொட்டி ஜெயாவா ? அப்படி ஒரு படம் வந்துச்சா ?

  பதிவு நல்லா இருக்கு ,எதுக்கு தேவை இல்லாம டென்சன் ஆகிகிட்டு ...கூல் சித்தப்பா

  ReplyDelete
 25. வாழ்த்துகள்:))

  விகடனில் இந்த பதிவு:0)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))