பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 7, 2009

நம்ம தங்கச்சி இயற்கைக்கு இன்னிக்கு பிறந்த நாள்!!!

நமது அன்பு தங்கை இயற்கைக்கு இன்று பிறந்த நாள்.

காலை துபாய் வந்து இறங்கி போன் செஞ்சுது தங்கச்சி. எங்கம்மா இருக்கன்னு கேட்டேன். "ஏர்போர்ட்ல அண்ணா" அப்படியா ஒரு டாக்சி பிடி.

"பிடிச்சாச்சு"
"டிரைவர் கிட்ட போன் கொடு"
"அவருக்கு தமிழ் தெரியலையே"
"பரவா இல்லை கொடு"
"ஆங் ஜி"
"ஜி ஆங்"
"அல் கூஸ் மாலுமே கிராண்ட் சிட்டி மால் ஒ ரவுண்டபுட் சே சீத நேஷனல் டாக்சி ரோட் பக்கடோ பிர் ஏக் நம்பர் ரைட்டு. சீத ஆவோ. T ஜங்ஷன் ஆயகா. உதர் ரைட் மாரோ. பஸ் கலாஸ் அம் உதரியே கடேயகா"
"யோவ் தமிழ்ல சொல்லுய்யா வெண்ணை, ஏன் இந்திய கொல்ற"
"அட நான் பாகிஸ்தானின்னு நெனச்சு பாப்பா சொல்லிடுச்சு, அக் மார்க் முத்திரை குத்தின மாயவரம் தான் ந்நானும்"
"அட அப்படியா எந்த தெரு தங்கச்சிகிட்ட போன் கொடு"
"அண்ணா இவர் தமிழ் தான் போல"
"ஆமாடா இரு நானும் அண்ணியும் கீழே வர்ரோம் நட்டுவோட! உனக்காக ஸ்பெஷல் சமையல் ஆகிடுச்சு. சாப்பிட்டு கோவிலுக்கு போவோம்"

இரவு 2 மணி. என் ரூம் மெட் எழுப்பறான். ஜி சாப் ஜி சாப்!

"என்னைய்யா"
"நீங்க ஜூஸ் குடிக்கவே இல்லை"
"அருமையான கனவை கலைச்சுட்டியே"
"ஆமா உங்களுக்கு என்ன தங்கச்சி கல்யாண நாள், தம்பி பர்த்டேன்னு கனவு வரும். எங்களுக்கு நீங்க நல்லா இருக்கனும்"

"தங்கச்சி கல்யாண நாள் இல்லைய்யா, பிறந்த நாள்"
"இது எந்த தங்கச்சி"
"ராஜி - இயற்கைன்னு பேர்ல அழகா எழுதும்"
"என் வாழ்த்தையும் சொல்லிடுங்க அதுக்கு முன்ன ஜூஸ் குடிங்க நான் டூட்டிக்கு போறேன்"

அன்பு தங்கைக்கு அண்ணனின் வாழ்த்துக்களும்!

"

16 comments:

 1. முதல் வாழ்த்து என்னோடது!

  வாழ்த்துக்கள் இயற்கை!

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. சகோதரி இயற்க்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..!!!


  எல்லா வளங்களையும் பெற்று.....புகழுடன் வாழ... எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்...!!!!


  வாழ்க வளமுடன்.....!! வாழ்க பல்லாண்டு....!!!!!

  ReplyDelete
 4. நல்ல வாழ்த்து:)!

  நானும் சொல்லிக் கொள்கிறேன் இயற்கைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை!

  ReplyDelete
 5. அட!! என வாழ்த்துகளும்...

  ReplyDelete
 6. பிறந்த நாள் வாழ்த்துகள் தோழி..

  ReplyDelete
 7. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இயற்கை ;)

  ReplyDelete
 8. இங்கயும் வாழ்த்திக்கிறேன். :)

  //இயற்கைன்னு பேர்ல அழகா எழுதும்//

  என்னது? பேரையா? :)

  ReplyDelete
 9. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இயற்கை :)))))))))))

  ReplyDelete
 11. சித்தப்பூ,
  உங்க அன்புத் தங்கைக்கு என் வாழ்த்துக்கள்.

  நல்லா கனவுலயே இருங்கப்பூ.

  ReplyDelete
 12. அனைவ‌ருக்கும் ந‌ன்றீ

  ReplyDelete
 13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இயற்கை!!

  ReplyDelete
 14. அட..குடும்பத்தோட அங்க போயாச்சான்னு நினைச்சுக்கிட்டிருக்கும்போதே பையன் எழுப்பிட்டானே..!

  நானும் நம்பி..வாழ்த்துக்கள் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.
  அதுனால என்ன?
  இதோ தங்கச்சிக்கு அதை டைவர்ட் பண்ணிரவேண்டியதுதான்..

  வாழ்த்துக்கள் இயற்கை!

  ReplyDelete
 15. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))