பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 19, 2009

அபியின் அன்றாட வாழ்க்கை!!!!!

காலை 5 மணிக்கு அபிஅம்மாவின் செல் சினுங்குது. அவளுக்கு எழும்ப மனம் இல்லை. ஆனா நட்ராஜ் விடுவதா இல்லை. அக்கா அக்கான்னு எழுப்பறான். அரக்க பறக்க எழுகிறாள். ஓடி போய் ஹால் லைட் போடுறா. முதலில் தெரு கதவை திறக்கிறா.

ஓடிப்போய் காம்பவுண்ட் சுவறில் இருக்கும் பால் ஜாடியை எடுத்து வந்து வைக்குறா. நட்ராஜ் முதுகிலே தொத்திக்கிறான்.

இரண்டு கேட்டையும் திறந்து பசும் சாணி எடுக்குறா. வாசல்ல இரவே வைத்திருந்த பிளாஸ்டிக் வாளியிலே அதை கரைத்து தெருவில் போட்டு கோலம் போட்டு வெள்கம்ன்னு எழுதறா. பின்னே முதுகில் தொங்கும் தம்பியை கீழே பிடுங்கி போட்டு விட்டு இரவே அயன் செய்த தன் யூனிபார்ம் கூட டாய்லெட் உள்ளே போகிறாள்.நட்ராஜ் கதவை தட்டி கிட்டே அழுவறான். யூனிபார்ம் உடன் வந்த அபி தம்பியை இடுப்பில் தூக்கிகிட்டு கிச்சன் போறா. தஞ்சாவூர் பில்டர் காபி தயாராகுது. தம்பிக்கு மாத்திரம் வெறும் பால் தான் தரா. அவன் அதை குடிச்ச பின்னே வந்து அம்மாவை எழுப்பறா!அம்மா எழுந்த பின்னே நட்ராஜ் அவங்க கண்ட்ரோல் லிமிட்க்கு போகிறான். இவ ஓடி போய் இரவு சமையல் செய்த பாத்திரம் கழுவறா! பின்ன அவங்க அம்மா வந்து தலை சீவி சடை போட படுது.ஆச்சு காலை எட்டு. எட்டு ஆனதும் நட்டு அபியின் புத்தக மூட்டை கொண்டு வந்து வெளியே வைக்கிறான். அக்கா கேட்டுடன் பூட்டிய சைக்கிளை தன் மூத்திர ஜட்டியால் துடைக்கிறான்.அதற்குள் அபிக்கு ஸ்னேக்ஸ் ரெடி, சாப்பாடு ரெடி, அவ டெய்லி புக்கில் அம்மாவின் கையெழுத்துக்காக வேயிட்டிங்.அம்மா கையெழுத்து போடலை."அம்மா அடுத்த தடவை நான் இன்னும் மார்க் வாங்கி காட்டுறேன், இல்லாட்டி என் உண்டியல் பணம் எல்லாம் நீங்களே எடுத்துகுங்க"கையெழுத்து ஆகுது. அபி திரும்ப ஒரு தடவை சைக்கிளை துடைத்து விட்டு அந்த லேடி பேர்டு முன் பக்க கூடையில் புத்தக பை வச்சு கிட்டு அம்மணமா இருக்கும் தன் தம்பிய கேரியர்ல உட்கார வச்சுகிட்டு (வெட்கமே இல்லாம) ஒரு ரவுண்டு நகரை!பின்னே அம்மாவும் அபியும் நட்டுவை பிடிச்சு இழுத்து போட கிளம்புகிறாள்.மாலை 4 மணிக்கு வர்ரா. வந்த உடனே ஒரு குட்டி தூக்கம். இவன் விட மாட்டான். "அய்க்கிள் அய்க்கிள்"ன்னு தொந்ததரவு செய்வான்.அதாவது சைக்கிள்ல போகனுமாம்.உடனே எழுந்து நார்மல் டிரஸ்க்கு மாறி முகம் கழுவி சைக்கிள்ல தம்பிய வச்சு அரை மணி நேரம். பின்னே வீட்டுக்கு வந்து மதிய பாத்திரம் ஏல்லாம் சுத்தம் செஞ்சுட்டு ஹார்பிக் எடுத்து போய் 3 டாய்லெட் பாத்ரூம் சுத்தம் செய்வா.அத்தோட அவ வேலை முடிஞ்சுதா? இல்லை. அப்பதான் அவளுக்கு 1 மணி நேரம் நெட் கிடைக்கும். அந்த 1 மணி நேரம் அவ அக்காக்கள் வருவாங்க. அவங்க கூட இருப்பாங்க..அடுத்து இரவு சாப்பாடு. பின்னே பால் வாங்கி எடுத்து கிட்டு மாடிக்கு போய்டுவா. அங்கே தான் படிப்பு. 11 மணிக்கு மாடியிலே தான் அடுத்த நாள் யூனிபார்ம் எல்லாம் அயன் செஞ்சு கீழே வைப்பா. பின்னே படுப்பா.காலை 5 மணிக்கு அபிஅம்மாவின் செல் சினுங்குது. அவளுக்கு எழும்ப மனம் இல்லை. ஆனா நட்ராஜ் விடுவதா இல்லை. அக்கா அக்கான்னு எழுப்பறான். அரக்க பறக்க எழுகிறாள். ஓடி போய் ஹால் லை போடுறா. முதலில் தெரு கதவை திறக்கிறா.

20 comments:

 1. இன்று வரை எனக்கு என் துணிகளை அயன் செய்வதற்கு சோம்பேறித்தனம். பெண் பிள்ளைகளுக்கு என்றுமே Self Discipline அதிகம்

  ReplyDelete
 2. Looks like the little girl is stretched out too much...

  And only 6 hours of sleep?!!

  When does she plays?

  ReplyDelete
 3. நட்டுவோட டெய்லி நடவடிக்கை அடுத்து எதிர்பாக்கிறேன் !

  போன் பண்ணினேன் எடுத்து கிட்டதட்ட 20 நிமிசம் பேசுறேன் சொல்லி,அவுரு மொழியில பேசி என்னைய கலாய்ச்சுப்புட்டாரு அண்ணே அவுரு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)))

  ReplyDelete
 4. இதை மட்டும் எங்கம்மா படிச்சாங்கன்னா என்னை எதுல சாத்துவாங்கன்னே தெரியலை. நான் கூட இத்தனை வேலை செய்யறது இல்லை. சின்ன பொண்ணு இத்தனை வேலையா :)

  ReplyDelete
 5. அராஜகத்தனம்..

  இவ்வளவையும் பாப்பா செய்யும்னு சொல்லிட்டு வெட்டியா துபாய்ல உக்காந்துக்கிட்டு நீர் என்ன செய்றீர் பிரதர்..?

  இதுவே வெளிநாடா இருந்தா நீங்க இந்நேரம் கம்பி எண்ணிட்டிருப்பீங்க..!

  ReplyDelete
 6. இதை மட்டும் எங்கம்மா படிச்சாங்கன்னா என்னை எதுல சாத்துவாங்கன்னே தெரியலை. நான் கூட இத்தனை வேலை செய்யறது இல்லை. சின்ன பொண்ணு இத்தனை வேலையா :)//


  mm....repeatuuu:-))

  ReplyDelete
 7. //அராஜகத்தனம்..

  இவ்வளவையும் பாப்பா செய்யும்னு சொல்லிட்டு வெட்டியா துபாய்ல உக்காந்துக்கிட்டு நீர் என்ன செய்றீர் பிரதர்..?

  இதுவே வெளிநாடா இருந்தா நீங்க இந்நேரம் கம்பி எண்ணிட்டிருப்பீங்க..!

  //

  உண்மைத்தமிழன் அண்ணாச்சி சொன்னதுக்கு ஒர் அழுத்தமான ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.....

  ReplyDelete
 8. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  அராஜகத்தனம்..

  இவ்வளவையும் பாப்பா செய்யும்னு சொல்லிட்டு வெட்டியா துபாய்ல உக்காந்துக்கிட்டு நீர் என்ன செய்றீர் பிரதர்..?

  இதுவே வெளிநாடா இருந்தா நீங்க இந்நேரம் கம்பி எண்ணிட்டிருப்பீங்க..!

  //

  யோவ் வெண்ணை ! துபாய் என்ன இந்தியாவிலயா இருக்கு ! வெளிநாடுதானே. தில் இருந்தால் அபிஅப்பாவை கம்பி எண்ண வைய்யா பாக்கலாம்

  உண்மைத்தமிழன் ரசிகர் மன்றம்.
  10088 வது கிளை, கத்தார்

  ReplyDelete
 9. chinna vayasula ivllo velai seitha nallathu than but oru 40 years akum pothu antha ponnuku life la oru veruppu thattum, kichan velaiki pathiala konjam music dance or handcrafts kathuko sollunga then antha ponnu manasu santhosama irukkum, unga wife intha velai seithal avanga weight and udambu kuraiyum. this good for her health also

  ReplyDelete
 10. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

  அராஜகத்தனம்..

  இவ்வளவையும் பாப்பா செய்யும்னு சொல்லிட்டு வெட்டியா துபாய்ல உக்காந்துக்கிட்டு நீர் என்ன செய்றீர் பிரதர்..?

  இதுவே வெளிநாடா இருந்தா நீங்க இந்நேரம் கம்பி எண்ணிட்டிருப்பீங்க..!

  repeateyyyyyyyyyyyy

  ReplyDelete
 11. Looks like the little girl is stretched out too much...

  And only 6 hours of sleep?!!

  When does she plays?

  Repeateyyyyy

  ReplyDelete
 12. அபி அப்டேட்ஸ் அருமை. காட்சிகள் கண்முன் விரிகிற மாதிரி எழுதியுள்ளீர்கள்!

  ReplyDelete
 13. அபி அப்பா, பாவம் அபி, இப்படியா வேலை வாங்கறது.

  ReplyDelete
 14. என்னய்யா இது?????

  சைல்ட் லேபர்!!!!

  எங்கூரா இருந்தா முதல்லே உங்க ரெண்டு பேரையும்( ரங்க் & தங்க்) பிடிச்சு உள்ளே போட்டுருவாங்க.

  குழந்தைப் பிள்ளைக்குச் செய்யும் கொடுமையைப் பாரீர்.

  (நல்லவேளை இதைக் கோபாலைப் படிக்கச் சொல்லலை)

  ReplyDelete
 15. இதில் வேறு ஏதேனும் உள்கருத்து உள்ளதோ?

  ReplyDelete
 16. :( பாவம் குழந்தை. கொஞ்சம் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்க சொல்லுங்க

  ReplyDelete
 17. ennanne... mathatheukellam vizhuthu vizhunthu comments podareegna.. ithukku ethuvum bathil comments podalaye?!

  ReplyDelete
 18. //
  தெரு கதவை திறக்கிறா.
  //
  அபிஅப்பா..

  அங்க நீங்க தெருவுக்கே கதவு வெச்சிருக்கிங்களா..

  ReplyDelete
 19. பொறுப்புணர்வுடன் செயல்படுகிறாளா? பொறுக்க முடியாமல் செயல்படுகிறாளா?
  மனதுக்குள் மகிழ்வாளா?
  மனதுக்குள் அழுவாளா?
  தனக்கான உலகம் என இசைத்தாளா?
  தன் தம்பிக்கு என உலகம் சமைத்தாளா?

  இப்படி ஓடியாடி செயல்கள் புரியும் அபியின் சிறப்பைச் சொல்லும் பதிவுதனை 'மொக்கை' எனக் குறிப்பிட்டதுதான் பெரும் வலியைத் தருகிறது.

  அபி இதைப் படித்தாளா?
  சரியான கதை என இடித்தாளா?

  மிக்க நன்றி.

  ReplyDelete
 20. அடப்பாவமே...

  ஒரு சின்ன புள்ளையை இப்படியா வேலை வாங்குவீங்க.. child labour now allowed...

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))