(அன்பகம் இணைய நண்பர்கள் கூட்டத்தில்) |
எஸ். எஸ். சிவசங்கர்............. இந்த பதிவை எப்படி எழுதப்போகிறேன் என தெரியவில்லை. விஷயம் நிறைய இருக்கு மனசிலே. அதை கோர்வையாக சொல்ல முடியுமா என்றால் .... தெரியல... அனேகமா பதிவு அடிக்கும் போது சொதப்பிடுவேன் என்றே நினைக்கிறேன்... இருப்பினும் சொல்கிறேன்..
அவரை நான் முதன் முதலாக சந்தித்ததே அன்பகத்தில் தான். திமுக இளைஞரணி அலுவலகம். அங்கே இணையத்தில் புழங்கும் திமுக நண்பர்கள் சந்திப்பு. முதல் வரிசையில் லக்கி யுவகிருஷ்ணா, நான், அப்துல்லா உட்பட எல்லோரும் பேண்ட், சட்டை சகிதம் அமர்ந்திருக்க அடுத்தடுத்து பெரியண்ணன் அரசு (புதுகை மாவட்ட செயலர்... அவர் என் தம்பி செட் பூண்டி புஷ்பம் காலேஜ்ல பி ஜி படிக்கும் காலத்தில், என் தம்பி கெமிஸ்ட்ரி, அவரு பிசிக்ஸ்) அடுத்து எஸ். எஸ். சிவசங்கர். எனக்கு இருவரையுமே தெரியாது. ஆனா இருவரும் அருமையான பேண்ட் சர்ட்ல் வந்திருந்தாங்க. அதே போல புரபசர் சுப.வீரபாண்டியன் அய்யாவும் பேண்ட் சர்ட். அதே போல மின்னும் மன்னை ச.ம.உ டி ஆர் பி ராஜாவும் பேண்ட் சட்டை. பாவம் டி கே எஸ் இளங்கோவன் அண்ணன் மாத்திரம் வேட்டி சட்டை. வந்ததும் சிவசங்கர் சாரை பார்த்து கடிந்து கொண்டார். "என்ன சிவா, ஒரு போன் போட்டு சொல்லக்கூடாதா? என் கிட்ட பேண்ட் சட்டை இல்லியா? நீங்கல்லாம் மாத்திரம் காலேஜ் பசங்க மாதிரி இருக்கீங்க. நான் மட்டும் "பெரிசு" மாதிரி வேட்டி சட்டையிலே வந்திருக்கேன்" என சொல்ல ஒரே சிரிப்பு.
நான் பக்கத்தில் இருந்த யுவாவிடம் கேட்டேன் "யுவா யாரு அது?" . யுவா சொன்னாரு "அண்ணே அவரு தான் அரியலூர் மாவட்டம்" எனக்கு தூக்கிவாரிப்போட்டது. பின்னர் அவரிடம் பேசினேன். பின்னர் அவர் மேடைக்கு போய்விட்டார். அதற்கு முன்னர் முனைவர் ஞானமணி என்னும் தோழர் ..அவர் அரியலூர் சேர்ந்தவர். பேசும் போது அண்ணன் ராசா அவர்களை பற்றி பேசினார். உணர்சி மேலீட்டால் அழுதே விட்டார். பின்னர் எஸ். எஸ். சிவசங்கர் சார் பேசும் போது அந்த ஞானமணி அவர்கள் பேச்சுக்கு வரிக்கு வரி பதில் சொல்லி நாமெல்லாம் பெரம்பலூர் அரியலூர் என்றால் பெருமைப்பட வேண்டும் என அழுத்தம் திருத்தமாக பேசினார். நான் பல மாவட்ட செயலர்களை பார்த்து இருக்கேன். சிலர் கேஷுவலாக பேசுவாங்க. சிலர் சீரியசாக பேசுவாங்க. சிலர் டிபிக்கல் மேடைப்பேச்சாளர்களாக பேசுவாங்க. ஆனா இவர் பேச்சு அன்னிக்கு அப்படி ஒரு பேச்சு. ஒரு தேர்ந்த மேடைப்பேச்சாளர் பேச்சு போல, ஒரு கேஷுவல் பேச்சாளர் போல, ஒரு நண்பன் சக நண்பனிடம் பேசுவது போல ... இன்னும் எப்படி எப்படியோ.... பின்னர் நான் அவரை சந்தித்ததும் அதே அன்பகத்தில் தான். அதாவது பெரம்பலூர், அரியலூர் மாவட்ட இளைஞரணி "இண்டர்வியூ"வுக்கு வந்த போது. அவர் கூடவே அவர் மாவட்ட இளைஞர்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். அத்தனை பேரையும் கட்டி போட்டு இருந்தார். அத்தனை கூட்டத்திலும் அவரது பார்வைக்கு கட்டுப்பட்டனர்.
அன்பகத்துக்கு எதிரே இருக்கும் டீக்கடையில் டீ குடிக்க போகலாம் என நினைத்து அவர் போகும் போது "பசங்கலா" என அவர் அழைத்த அழைப்புக்கு அங்கே 50 இளைஞர்கள் "அண்ணே" என்றார்கள். சாலையை கடந்து டீக்கடை போகும் போதும் அதே ஒழுங்கு. அடடே... அன்பால் கட்டுப்படுத்த முடியும் என புரிந்து கொண்டேன். கலைஞருக்கு ஒரு சண்முகநாதன் போல இவருக்கு லூயிகதிரவன். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். டீக்கடையில் காசு கொடுப்பது முதல் பசங்க யார் யார் இன்னும் சாப்பிடலை என்பது வரை இவர் கண் அசைப்பு எல்லாம் லூயிக்கு தெரியும். உடனே சரி செய்வார்.
அப்படித்தான் ஒரு நாள் அக்டோபர் 11ம் தேதி 2012 என நினைக்கிறேன், நான் சென்னையில் திருவான்மியூரில் இருந்தேன். போன் செய்தார். "நான் வீட்டை விட்டு கிளம்பிட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க வீட்டுக்கு வருவேன்"..... எனகு கையும் ஓடலை, காலும் ஓடலை... அட ஒரு மாவட்ட செயலர்... நான் "வீட்டுக்கு வாங்க சார்"என சொன்னதுக்காக வருகின்றார்.... அரக்க பரக்க ஓடி குளித்தேன். "நான் வந்து விட்டேன்" என சொன்னார். ஓடிப்போய் வரவேற்றேன். சத்யா எனும் கமல் படம் பார்த்து இருப்பீங்க. அதிலே அமலா கமல் வீட்டுக்கு வரும் போது ஜட்டி எல்லாம் நாத்காலியில் கிடக்குமே.. அப்படி இருந்தது வீடு. நானும் கிட்டத்தட்ட அந்த கமல் நிலையில் தான் இருந்தேன். ஒரு நீண்ட அரசியல் பேச்சு. அப்பாடா... திகட்ட திகட்ட அரசியல் பேசினோம். அன்று தான் திமுக மாநில இளைஞர் அணி மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பு வெளிவந்தது முரசொலியில். அப்போது சொன்னார் சிவசங்கர் சார் " நான் என் மாவட்டத்தை விட அதிகம் எதிர்பார்த்தது தஞ்சை மாவட்டம் தான். ஏன்னா தம்பி வி. எஸ். கே . செந்திலுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் கும்பகோணம் குட்டி என்கிற தெட்சினாமூர்த்திக்கு கிடைத்துவிட்டது. செந்தில் தம்பிக்கு போன் செய்யனும்" என சொல்ல நான் உடனே செந்திலுக்கு போன் செய்தேன். சாரே பேசினார். "செந்தில்! உங்க உழைப்பு கட்சிக்கு என்னான்னு தலைமை வரை தெரியும். சோர்ந்து விட வேண்டாம். நிச்சயம் உங்களுக்கான மரியாதை கட்சியில் கிடைக்கும்" என சொன்ன போது செந்தில் உணர்சி வசப்பட்டார். ஒரு அண்டை மாவட்ட செயலர் தனக்கு ஆறுதலாக சொல்லும் போது ஒரு கட்சிக்காரன் , உழைத்தவன் மன நிலை எப்படி சந்தோஷத்தில் குதிக்கும்! இது தான் சிவசங்கர் சார்!
நிற்க! இப்படியாக இருக்கும் போது கடந்த பிப்ரவரி முதல் தேதி என் பெரிய அக்காவின் 3 வது பையனுக்கு ஹைதராபாத்தில் கல்யாணம். ஜனவரி 30 மாலையே கிளம்பியாச்சு. நானும் என் தம்பி கொக்கரக்கோ சௌமியனும் "டேய் நாளை அங்க போனதும் மொதல்ல நம்ம சிவசங்கர் சார் அப்பாவை பார்க்க போகனும்" என பேசிக்கொண்டோம். ஏனனில் அவங்க அப்பா முன்னாள் ச.ம.உ, முன்னாள் மாவட்ட செயலர், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர், இன்னாள் திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர் அய்யா சிவசுப்ரமணியம் அவர்கள் ஒரு அறுவை சிகிச்சைக்காக ஹைதை நிம்ஸ் மருத்துவமணையில் இருந்தார். 31ம் தேதி நானும் என் தம்பியும் தவிர என் அக்கா பசங்க (கல்யாண மாப்பிள்ளை உட்பட) இருவரும் போனோம்.
(ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் ) |
அய்யா சிவசும்ரமணியம் அவர்களை பார்த்தோம். அறுவை சிகிச்சை முடிந்து இரு நாட்கள் ஆகி இருந்தன. கைலி உடை. அதில் கறை கருப்பு சிவப்பு. அட கைலியில் கூட கருப்பு சிவப்பா என ஆச்சர்யப்பட்டோம். அதை கேட்கவும் செய்தோம். "மனசு வச்சா கருப்பு சிவப்பு நிறம் எங்கும் வரும்" என சொன்னார்.
பின்னர் பேசிக்கொண்டு இருந்தோம். பொதுவாய் எங்கள் வீட்டு திருமணத்துக்கு எல்லாம் கலைஞர் வீட்டில் இருந்து எல்லோரும் வருவார்கள் எனினும் நாங்கள் இப்போது இருப்பதோ ஹைதராபாத். அக்கா பையன் ஐ டி யில் வேலை செய்வதால் கூட ஒர்க் பண்ணும் ரெட்டி பொண்ணை உசார் பண்ணிட்டான். ரெட்டிய தாக்குறொம், பொண்ணை தூக்குறோம் என்றில்லாமல் ரெட்டி சகல மரியாதையுடன் கல்யாணம் செஞ்சு கொடுக்க முன்வந்தார். அதுக்கு கட்சிகாரங்க இல்லாம கல்யாணமா என்னும் மன சஞ்சலம் இருந்து கொண்டே இருந்தது.
மெதுவாய் நானும் என் தம்பியும் விஷயத்தை சிவசங்கர் சாரிடம் சொல்ல "அட அதுக்கென்ன, நாளை கல்யாணத்துக்கு வரேன்" என சொன்னார். நன்றாக நினைத்து பாருங்கள்! ஒரு மாவட்ட செயலர்.... அவரை கேட்டு தான் அவங்க மாவட்டத்தில் திருமண தேதி வைப்பார்கள். ஆனா எங்க அதிஷ்டம்... நாங்க அடுத்த நாள் திருமணத்துக்கு முதல் நாள் கூப்பிடுகிறோம். வரேனு சொல்லிட்டாரு...
அடுத்த நாள் வந்து விட்டார் திருமணத்துக்கு. ரெட்டிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பரபரப்பு. ரெட்டி மெதுவா வந்து கேட்கிறார் நம் சிவசங்கர் சார் கிட்டே ...
'நிஜங்கானே நீரு எம் எல் ஏ னா'
"அவுனு நேனு எம் எல் ஏ னே"
"நீக்கு கன்மேன் எவரு லேதா"
"அட்லாண்டி தப்பு நேனு செய்யலேதுண்டி"
(அப்பா, நான், சௌமி, சௌமியன் பையன் சர்வோதயன், நட்ராஜ் ஆகியோருடன் மாவட்டம்) |
நான் தாலிய எடுத்து கன்ணில் ஒத்திக்காத குறை தான். எங்க மாவட்டம் தெலுகு எல்லாம் பேசுதுன்னு. பின்ன தான் நியாபகம் வந்தது அவரின் முகநூலில் அவருக்கு தெரிந்த மொழிகள்னு பார்த்தா தமிழ், ஆங்கிலம், தெலுகு, கன்னடம் இப்படியாக திராவிட மொழிகள் எல்லாம் தெரியும் என்பது. பின்னர் தான் யோசித்தேன். சார் B.E., M.B.A முடித்து விட்டு பெங்களூருவில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் வேலை செய்தவர் என்பது!
எங்களுக்கு ஒரே பெருமை தான் அன்று முழுமைக்கும். ஒரு திமுக மாவட்டம் எங்கள் வீட்டு திருமணத்துக்கு வந்தமை குறித்து. ஆனால் அந்த செய்தியை நான் அன்று வெளியிட வில்லை. காரணம் அன்று சட்டசபை கூட்டம் இருந்தது. அதற்கு நான்கு நாட்கள் முன்பாகத்தான் ராசா அண்ணன் நேரிடையாக ஹைதை வந்து அப்பாவை பார்த்து விட்டு சென்றார். அதற்கு இரு நாட்கள் முன்பாகத்தான் தளபதி அவரிடம் தொலைபேசியில் அவங்க அப்பா உடல் நிலை குறித்து கேட்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் கல்யாணத்துக்கு வரும் போது தான் திருமதி கனிமொழி அவர்கள் அப்பாவின் உடல் நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்து இருந்தார். ஆனால் அன்றைக்கு தான் பேஸ்மேக்கர் ட்யூனிங் என்பதால் இவரால் சட்டமன்ற கூட்டம் போக இயலவில்லை.
(திருமணத்தின் போது மணமக்களுடன்) |
நான் கேட்டேன் .... "தளபதிக்கு சொல்லியாச்சா, நீங்க வரலைன்னு" ... அவர் சொன்னார்... "இல்லை... இதுக்கு தளபதிகிட்டே லீவ் சொல்லக்கூடாது, கட்சி கொறடாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். அவர் தான் எங்களுக்கு க்ளாஸ் லீடர்" அட, இதான் கட்சி... இதான் உண்மையான ப்ரோட்டோகால்.... தன் அப்பாவுக்கு அன்று முக்கியமான ட்ரீட்மெண்ட் இருப்பினும் எங்கள் வீட்டு திருமணத்துக்கு வந்தமை குறித்து எங்களுக்கு பெருமையோ பெருமை!
"ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... இன்னும் 50 ஆண்டுகாலத்துக்கு பெரம்பலூர் , அரியலூர் மாவட்டம் இவரது உள்ளங்கையின் உள்ளே மட்டும் என்பது நிச்சயம்" சார் திருமணத்துக்கு வந்து போன பின்னே ஒரு 78 வயது பழம்பெரும் திமுக தொண்டரான என் அப்பா உதிர்த்த வார்த்தைகள் இது!
சமீபத்தில் கூட நான் சென்னையில் அருள் பிரகாசம் சார் வீட்டில் இருந்த போது எப்போதும் போல "வீட்டுக்கு வாங்க சார்" என சொன்னமைக்காக வந்தார். பின்னர் ஒரு இணைய நண்பர் மனைவி மருத்துவமனையில் இருப்பதை அறிந்து தானும் வந்தார். மிகுந்த சந்தோஷமாக இருந்தது. வெளியில் வந்து "அவங்களுக்கு என்ன விதமான மருத்துவ உதவி வேண்டுமோ அதை தயங்காமல் கேளுங்க. செய்வோம்" என ஆறுதல் கொடுத்தார்.
அப்பாடா.... என்னவோ மனசில் பட்டதை எல்லாம் அடிச்சுட்டேன்... இன்று அவருக்கு பிறந்த நாள். அவருக்கு உங்களின் வாழ்த்தை சொல்லுங்களேன் நண்பர்களே!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடன்பிறப்பே )))
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அபி அப்பா. சிவசங்கர் சாருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா..
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா..
ReplyDeleteஅபியோட தாத்தாவும் அபியப்பாவும் அண்ணன் தம்பி மாதிரி இருக்காங்க. ஒரே உருவம் வேற :-)
ReplyDeleteஎன்ன அபி அப்பா... இவ்வளவு ஒல்லியாவா இருக்கது... நல்லா சாப்பிடுங்க உங்களுக்காகவே எங்க எங்க என்னா என்னா கிடைக்கும்னு ஒரு லிஸ்ட் தந்துஇருக்கேன். உடம்பைத் தேத்துங்க. இல்லைன்னா தலவருக்கு தானே கெட்ட பேரு... தன்னை தன் குடும்பத்தை மட்டுமே பார்த்துகிடுறாருன்னு.....
ReplyDeleteராம்நாட் - கோமுட்டி வற்றல்
உடன்குடி - சோத்துமிட்டாய்,பனங்கற்கண்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா,பல்லி மிட்டாய்
சென்னை-நெல், அவல், மனோரஞ்சிதப்பூ
மதுரை -இட்லி,ஜிகிர்தண்டா,வெற்றிலை
கல்லிடைக்குறிச்சி -அப்பளம், சரவணன்-மீனாட்சி
திருநெல்வேலி- அருவா, உடும்புக்கறி
குற்றாலம்- ரசமலாய்
கடையநல்லூர்-இடிச்சபுளி
பொட்டல்புதூர்-சர்க்கரைப் பொங்கல்
பாபநாசம்- கார்லிக் நான்
மாயவரம்- எருமை மாடு, பழைய சாதம்
கீழக்கரை - புளியோதரை, வென்பொங்கல்
இராஜபாளையம் - கொயயாப்பழம், குள்ளக்கத்திரி வத்தல்
குலசேகரன்- மரவள்ளிக் கிழங்கு, அன்ரூல்ட் பேப்பர் பொரியல்
கொல்லாம் பழம் ,
நெல்லை - அல்வா,பாப்பாளி தோசை
மணப்பாறை - முருக்கு, மண்டைப்பனியாரம்
சாத்தூர் - சேவு,சாமியார்கோட்டம் பாக்கு
கீழக்கரை-தொதல்,சீப்புபணியம்,ஓட்டுமா
மாயவரம்-ஜவ்வு மிட்டாய், க்ரீம் பிஸ்கட்
சங்கரநயினார் கோவில் - பிரியாணி, கருப்பு அவரைக்காய் கூட்டு
ப்ரானூர் பார்டர் - சிக்கன், சின்ன மாம்பழம்
நாமக்கல் - முட்டை, பல்பு மீன் வருவல்
பழனி - பஞ்சாமிர்தம்
கோயம்புத்தூர் - மைசூர்பாக், சப்போட்டா தொக்கு,மிளாகா ரசம்
திண்டுக்கல் - தலைப்பாகட்டு பிரியாணி,தக்காளி வருவல்
பொள்ளாச்சி - இளநீர், வெண்டைக்கா பாயாசம்
ராமேஸ்வரம் - கருவாடு, மழிப்பிமீன் தொக்கு
உடன்குடி - கருப்பட்டி
சவுதி - பேரீச்சம்
காரைக்குடி - உப்புக்கண்டம் , தேங்காய் சட்னி
விருதுநகர் - புரோட்டா , பன்னீர் பஜ்ஜு
வெள்ளியணை - அதிரசம்
திருச்செந்தூர் - பனங்கல்கண்டு
நெய்வேலி - முந்திரி
மன்னார்குடி - பன்னீர்சீவல்
மேச்சேரி - ஆடு, கணக்கு மட்டை
திருநெல்வேலி- மல்லிகைப்பூ, கவிதை
குற்றாலம்- ரசமலாய்
மாசிக்கருவாடு - இராமேஸ்வரம்
வேலூர் - வாத்துக்கறி , தார் டின்
சேலம் - வெடிச்ச மாம்பழம்
ஊத்துகுளி - வெண்ணெய், சோன்பப்டி
ராசிபுரம் - நெய், வெளக்கமாறு
முதலூர் - மஸ்கோத் அல்வா
ஊட்டி - டீ வர்க்கி
திருச்சி - பெரியபூந்தி, கொளுத்தி மீன் சூப்