பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 9, 2013

எம்பியே படிக்கலாமா அல்லது குந்திகிட்டு அருமையா படிக்கலாமா?

நேத்து ஒரு பதிவு எழுதினேன். அட, ஆச்சர்யம்...என் பழைய நண்பர்கள் எல்லாரும் வந்து தொலைபேசியிலும், பின்னர் தனி மடலாகவும் "ஹாய் அபிஅப்பா ஹவ் ஆர் யூ" என கேட்க எனக்கே ஒரு ஜில்லாகிப்போச்சு. பொடி விஷயம் பத்தி சிலர் சிலாகிச்சு சொன்னாங்க. அந்த பொடி மேட்டர் பதிவிலே இன்னும் ஏகப்பட்டது பாக்கி பொடி இருக்கு. பொடி வச்சுல்லாம் பேசலை. நெசமாவே பாக்கி பொடி இருக்கு. அதை இன்னிக்கு என்னோட "இட்லி நெய் ஜீனி" வரிசை பதிவிலே போட்டுடலாம் என ஆசை! ஆனா போடலை. ஏன்னா தினம் தினம் இனி காமடி பதிவு மொக்கை போட இருக்கேன். இன்னிக்கு பொடி பார்ட் டூ....

பொடி சமாச்சாரம்:

அனேகமா இதை எழுதி இருக்கலாம் நான். நான் நாய் வாய் வச்ச மாதிரி இணையத்தில் எல்லா இடத்திலும் இருப்பதால் எங்க எழுதினேன் எந்த சூழலில் எழுதினேன் என தெரியலை... அனேகமாக எழுதாமலும் இருக்கலாம்.

அதாவதுங்க பொடி இருக்கே பொடி... அந்த மனிதர்கள்... ஒரு தனி ஜாதி. அந்த ஜாதில ஆரியர், திராவிடர், ஆதி திராவிடர், கலப்பினர், இந்து, முஸ்லீம், கிருத்துவ என எந்த பிரிவும் கிடையாது. ஒரே சமத்துவம் தான்.அவசரத்துக்கு  ஒரு பாதிரி ஒரு குருக்கள் கிட்டே ஒரு சிட்டிகை கொடுன்னு மூக்கை நீட்டி கேட்டா போதும் கிடைச்சிடும். அது போல நேத்து பதிவிலே ஒரு பின்னூட்டம் "எல்லாருக்கும் பொடி கடைல ஃப்ரீயா பொடி கொடுப்பாங்கலாமே"ன்னு . இல்லை. கண்டவனுக்கும் கொடுக்க மாட்டாங்க. அவங்க ஜாதிக்காரனுக்கு கொடுப்பாங்க. அது பொடி ஜாதி.

12 இஞ்சிக்கு ஒரு தராசு பார்த்து இருக்கீங்களா? ...யெஸ்.. அதே தான்.. நகைக்கடையில் இருக்கும். 5 கிராம் படிக்கல் பார்த்தது உண்டா? நீங்க தினம் போகும் கத்திரிக்காய் கடையில்... இருக்காது... ஆனா ஜுவல்லரில இருக்கும். ஆக பொடியும், தங்கமும் ஒன்னு. ஆமாம் இங்க மட்டும் தான் 5 கிராம் படிக்கல் இருக்கும். ரொம்ப குழியா இருக்கும் அந்த ஒரு தட்டில் (தட்டில்னு சொல்லக்கூடாது... குழியில் 5 கிராம் பொடியை ஒரு நீண்ட சில்வர் கரண்டி... கரண்டின்னா குழம்பு கரண்டி இல்லை... அதோட மினியேச்சரின் மினியேச்சர்... அதை அந்த வடலூர் வெள்ளைக்களிமண் ஜாடில இருந்து (அந்த காலத்திலே நாம ஊறுகாய் வைப்போமே...அது போல ஜாடி) டிங் டிங் னு எடுத்து போடுவார். 5 கிராம் படிக்கல் அவசரத்துக்கு கிடைக்கலைன்னா தன் மோதிரத்தை எடுத்து போடுவார் அந்த கடைக்காரர். கவனிக்க...எத்தனை ஒரு துள்ளிய வியாபாரம்....

ஆக பொடி போட்டாச்சு...."விஸ்க்...".. நோ நோ.. தராசிலே போட்டாச்சு... இத்தனை துள்ளியமா கொஞ்சம் கூட கூடாம குறையாம போடும் அந்த ஆளுங்க பொடியை "ஃப்ரீயா"வா கொடுப்பாங்க. மாட்டாங்க. ஆனா கொடுப்பாங்க. ஏன்னா.... இருங்க பதிவை படிச்சு முடிங்க..... பின்ன தெரியும்..

சரி பொடியை எடை போட்டாச்சு. அதை எப்படி டப்பாவிலே மாற்ற வேண்டும்? .... கால் கிராம் அல்லது குண்டுமணி அளவு கூட வெளியே போகக்கூடாது. என்ன செய்யலாம்? அங்க தன் இருக்கு லாவகமே! வந்தவர் கிட்டே இருக்கும் வெள்ளி பொடி டப்பா அல்லது தகர டப்பா வை வாங்கி அதை மூடி கழட்டி அதை அப்படியே தராசு தட்டில் (குழி கிண்ணத்தில்) கவிழ்ப்பாரு. அந்த ஒன்னரை செண்டி மீட்டர்  டயா உள்ள வட்டமும் , ஒன்னரை இன்ச் நீளமுமான உருளை டப்பா வின் உள்ளே அந்த பொடி போய்டும். பின்ன அடுத்த அடுத்த இடத்தில் அந்த குழி கிண்ணத்தில் அமுக்கினா சபாஷ்....எல்லா பொடியும் 5 கிராம் பொடியும் உள்ளே போய்டும்!

கடைக்காரர், கஸ்டமர் இருவரும் ஹேப்பி.... உடனே அதை மூடி வேட்டில சுருட்டிப்பாங்க. ஆனா ஒன்னு மட்டும் முக்கியம். அந்த உருளை டப்பாவில் கீழே காத்து தான இருக்கும். (அதன் கொள் அளவு 23 கிராம்) அதனால மூடியை தட்டிட்டு தான் பொடி போடனும். இப்ப தெரியுதா? ஏன் பொடி போடும் பழைய நடிகர்கள் சாரங்கபாணி பிள்ளை, டி ஆர் ராமச்சந்திரன், எஸ் வி சுப்பையா என எல்லாரும்  டப்பிய தட்டிட்டு போடுறாங்கன்னு....

இந்த மாயவரம் மக்கள் மாத்திரம் ஒரு விஷயத்தில் ரொம்ப உறுதியா இருப்பாங்க. காபி பொடி வாங்கினா 50 கிராம். பொடி வாங்கினா 5 கிராம். ஏன்னா "அன்னின்னிக்கு யூஸ் பண்ணா தான் ஃப்ரஷா இருக்கும்டா" . அடிங்கொய்யால..

இன்றைக்கு மணிவண்ணன் என்னவோ துள்ளாதமனமும் துள்ளும் படத்திலே குவாட்டர் பாட்டிலை கீழே தட்டி மேலே ஓப்பன் செய்வதை அதிசயமாக பார்க்கும் வாசகர்களே, நான் சொன்ன இந்த அறிவியல்பூர்வ காரணம் இப்போது புரிகின்றதா?

இதிலே ஒரு கணக்கு பாடம் கூட சொல்லி இருக்கேன். ஒரு உருளை, அதன் விட்டம் ஒன்னரை செண்டி, உயரம் ஒன்னரை இண்ச், கொள்ளளவு எத்தினின்னு இன்னிக்கு என் பொண்ணு அபிகிட்ட கேட்டா படார்ன்னு சொல்லுவா இத்தினி கிராம் மூக்கு பொடின்னு. அவ அதுக்கும் மேலயும் சொல்லுவா... "ஒரு அன் சைஸ் மூக்குக்கு இத்தினி கிராம் தேவைப்படும். அதிலே இத்தனை நாத்தம் வரும், இத்தனை தும்மல் வரும், இத்தனை கைக்குட்டை துவைக்கனும்" என்கிற சரியான கணக்கு சொல்லுவா. அதை விடுங்க....

இதை எல்லாம் விடவும்... நான் விட்ட இடத்துக்கு வர்ரேன். ஒரு நண்பர் போட்ட பின்னூட்டத்துக்கு வரேன். பொடி ஒரு சிட்டிகை "ஃப்ரீயா" தருவாங்கலாமே??

நோ நோ... அதன் பின்னால் ஒரு பெரிய தாத்பர்யம் இருக்கு. இன்றைக்கு எம்பியே படிக்கும் மாணவர்கள் கூட அன்றைக்கு பொடிக்கடையில் உட்காந்தே படிச்ச விஷயம் அது!

ஆமாம்... இங்க தான் என் அப்பா கிட்டே வரேன். என் அப்பா படிக்கும் காலத்தில்... அட .. படிச்சாங்கப்பா..நம்புங்க.. டி பி டி ஆர் நேஷனல் ஸ்கூல்ல அது ஒரு பெரிய செட்டு. சேவிங் செட்டுல்லாம் இல்லை. நிஜமாகவே பெரிய செட்டு. எங்க பள்ளியில் நான் ஆசிரியராக இருக்கும் போது படிச்சவங்க. (அய்யோ... குழப்பிட்டேன்) நான் படிக்கும் போது ஆசிரியரா இருந்தவங்க. என். வி சார், எம் ஆர் சார், என் அப்பா வைத்தியநாதன் என்னும் வைத்தா , என் பெரியப்பா செல்வரத்தினம் என்னும் செல்வராஜ்ன்னு... ஒரு பெரிய கூட்டம்...இதிலே பெரிய கூத்து என்னான்னா  பி ஆர் சார் என் அப்பாவுக்கு வாத்தியார், எனக்கும் வாத்தியார்!

(அந்த பி ஆர் சார் தான் நாங்க படிக்கும் போது ஹெட்மாஸ்டர்! எல்லாரையும் அவங்க அப்பா பேரை சொல்லி தான் கூப்பிடுவாரு. டேய் வைத்திநாதான்னா நான் எந்திருக்கனும் என நான் பின்னர்  ஃபாரின் போவதுக்கு பாடம் எடுத்தவர் அவர். இமிக்ரேஷன்ல அப்படித்தான் கூப்பிட்டு தொலைப்பானுங்க, அது போல நடராஜான்னா பாலுவும்... டேய் உப்பிலின்னா நம்ம நம்ம பிரண்டும்... இப்படியாக... உப்பிலியை நான் இப்பவும் உப்பிலின்னு தான் கூப்பிடு தொலைக்கிறேன்... மாத்திக்கனும்டா தோழா)


டபார்ன்னு சில பாரா மாறிடுங்கப்பா... நான் கொஞ்சம் ஸ்கூல் விஷயம் அனத்திக்கனும்...


{பி ஆர் சார் இருக்காரே ... எங்க இருக்காரு அவரு போயாச்சு.... அவரு ஒரு காங்கிரஸ் ஆள். ஒரு நாள் "டேய் வைத்தி ...எந்திரிடா ..நான் நல்ல மூட்ல இருக்கேன்... நான் ஒரு பாட்டு பாடுறேன்... அது யார் கீர்தனைன்னு சொல்லு....நீதான் பெரிய இசைக்குடும்பம் ஆச்சே"

பாடினார். பாடினார்... பிட் அடிக்க வழி இல்லை. என்ன செய்யலாம். பக்கத்திலே இன்றைக்கு நன்னிலம் ஊராட்சி மன்ற பெருந்தலைவராகவும் இருக்கும் அதை விட பெரிய பதவி ஒன்றிய செயலர் வரத.கோ. ஆனந்த் சொன்னான்..."மாப்ள எப்டியும் அந்தாளு காங்கிரஸ்... அடிச்சு விடுடா காமராசர் பேரை"...

நான் சொன்னேன்... சார் காமராஜர்!

அவர் கொஞ்சமும் கோவமாகலை! "நான் இன்னிக்கு ரிட்டையட் ஆகிறேன்"

நான் சொன்ன பதிலாலயான்னு இது வரைலை!  எனக்கு தெரியலை. அதை விடுங்க!}

இதிலே அதிஷ்டவசமா என்.வி சார் என்னும் என். வெங்கட்ராமய்யர் (என் பள்ளி ஆசிரியர்) அவருக்கு கிட்ட தட்ட செகண்டு ஃபாரம் படிக்கும் போது அவரோட வீட்டுக்கு வேதம் படிக்கும் வரும் வாத்தியார் கிட்ட இருந்து லைட்டா பத்திகிச்சு பொடி.

ஆனா அவங்க அப்பாவோ ரொம்ப பெரிய வைதீகர். ரொம்ப கட்டுப்பெட்டியான ஆள். தன் பொடி டப்பாவை தன் மகன் கண்ணுக்கு காட்டவே மாட்டாரு. விடுவாரா என்.வி. உடனே காசு கொடுத்து காலணா கொடுத்து ஒரு டப்பா வாங்கினாரு நம்ம டி ஏ எஸ். ரத்தினம் பட்டணம் பொடிக்கடையிலே. இருங்க.... அங்க தான் நிக்கிறாரு நம்ம என். வி. சார்.... தான் அதை போடலை. தன் சக நண்பர்களுக்கு "ஃப்ரீ டிஸ்ட்ரிபூஷன்" . ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை. கிட்ட தட்ட 4 நாள். 5 வது நாள் இவரு வாங்கலை. பசங்க , அதாவது அவரோட நண்பர்கள் என் அப்பா, பெரியப்பா, எம்.ராமச்சந்திரன் சார் உள்ளிட்ட எல்லோரும் வந்து கேட்க அவரு "இல்லைடா மோனே... அவ்விட டுனீஷியா வெற்றி சின்னம் மணிக்கூண்டு கிட்டே போனா டி ஏ எஸ் ரத்தினம் பட்டிணம் பொடிக்கடை இருக்குமோல்யோ...."ன்னு சொல்ல.. இவா எல்லாம் அங்க ஓடினா ஓடினா... செம ஓட்டம்...

ஆளுக்கு ஒரு டப்பா... பி ஆர் சார் கணக்கு பாடம் எடுக்கும் போதெல்லாம் ஒரே சர் சர் சர் சத்தம் தான். அவருக்கு சர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு கோவம் வந்துடுச்சு. "டேய் கம்மனாட்டிகளா! எவனோ மூக்கு பொடி போடுறான். அவனா எந்திரிச்சு வந்தா உத்தமம். இல்லே நானா கண்டு பிடிச்சா அந்த பொடி டப்பாவை அபஷ்கரிச்சுடுவேன்" என மிரட்ட ஒட்டு மொத்த வகுப்பும் எழுந்து நிக்குது.

பி.ஆர் சார் கண்ணுல ஜலம். இத்தனை பேர் கெட்டு போனாலும் என். வெங்கட்ராமன் மாத்திரம் ஸ்பஷ்டமா அவா தோப்பனார் மாரி இருக்கானே"ன்னு கண்ணுல ஜலம். அவரை கூப்பிட்டு கட்டிண்டார்"

எல்லாம் முடிஞ்சுது. அரைவெட்டு அடிச்ச அத்தனை பார்ட்டியும் (எல்லாரும் அப்போ அரைவெட்டு குடுமி தான்) என். வியை சுத்தி கிட்டு "அது எப்டிடா நீ மட்டும் பொடி டப்பா வைச்சுக்கலை" என கேட்க அவரு....

"டேஸ் ஃபூல்ஸ்... நேக்கு ஒரு நாளைக்கு எட்டு தரம் இழுத்தா போதும். அதுக்கு காலணா ஆகும். அதை எட்டு பேருக்கு பழப்படுத்திட்டா அவா நேக்கு ஒரு இழுப்பு தர மாட்டாளா... ஆனா இத்தனை பேர் இழுப்பேள்னு நேக்கு தெரியலைடா.... அதனால நான் டப்பா வாங்கலை"ன்னு சொன்னாராம்.

இப்ப புரியுதா? ஏன் அந்த பொடிக்கடையிலே பொடி ஃப்ரீயா தந்தாங்கன்னு? அடுத்து இப்ப தெரியுதா ஏன் டி பி டி ஆர்ல படிச்சவன் எல்லாம் இப்படி இருக்கான்னு? M.B.A க்கு பால பாடம் கத்து கொடுத்ததே இந்த சின்ன பொடி விஷயம் என்பதை நீங்க மறுக்க இயலுமா?

(பை தி பை... என் மகள் அபி இப்போ பத்தாவது பரிட்சை போகிறா, என் தம்பி பையன் சர்வோவும் தான் ... இருவருக்கும் உங்கள் ஆசிகள் வேண்டும்... இனி ஒரு 20 நாள் நான் இது போல காமடின்னு பேர்ல அனுபவ மொக்கை மட்டுமே போடுவேன். நோ அரசியல்... வாங்க ப்ளீஸ்)



10 comments:

  1. அனுபவம்,
    கணித சாஸ்திரம்,
    மொக்கை
    எல்லாம்
    கலந்த
    கலவை.

    ReplyDelete
  2. best wishes to your daughter on her exams. Nee intha mathiri mattum ezhudhuda. Arasiyal vendaam

    :-)

    -Bala Natarajan

    ReplyDelete
  3. a new trend in your writing very good
    ( i am using snuff for the past 55 years and the reason is what you have explained)

    ReplyDelete
  4. "அவரு காமராஜரு" "விசாவுக்கு அப்பா பேரை கூப்பிடுறத பழக்கத்தை தொடங்கி வச்சவரு"

    டிப்பிக்கல் அபி அப்பா டச்.

    அண்ணா ஒரு சின்ன ஆலோசனை .in என்று முடிவதை சிறு கரெக்ஷன் செய்து .com என மாற்றிக் கொள்ளவும். என்னால் தமிழ்மணத்தில் ஓட்டு போட முடியவில்லை. செய்து விட்டீர்கள் என்றால் தங்களது பதிவு தான் மகுடத்தில் இருக்கும்.

    ReplyDelete
  5. வாவ்... செந்தில் ...வாவ்...மாத்திட்டேன்... அட ஆமாப்பா... இப்ப ஓட்டு போடும் ஆப்ஷன்லாம் வருது. அட ஆமாம்... மிக்க நன்றி மிக்க நன்றி!

    ReplyDelete
  6. நானே எனக்கு ஒரு ஓட்டும் போட்டுகிட்டேன் செந்தில்:-))

    ReplyDelete
  7. சூப்பர்ணா, தற்பொழுது நீங்கள் தான் தமிழ்மணம் மகுடத்தில் இருக்கிறீர்கள்

    ReplyDelete
  8. // நோ அரசியல்... வாங்க ப்ளீஸ்)// Adhu ! I like it , varuven

    ReplyDelete
  9. ம்ம்... நிறைய மலரும் நினைவுகள்.
    பி.ஆர் சார் - எனக்கு டி.பி.டி.ஆரில் அடைக்கலம் கொடுத்தவர். தனியாக வந்து தவித்து நின்றிருந்தேன். வழியில் நின்றவனை வாஞ்சையோடு அழைத்தார். +1 சேரவேண்டும் என்றேன், தோப்பனார் வரலியா என்றார்? அவர் இறந்துவிட்டார் என்றேன், மார்க் லிஸ்ட் கொடு என்று சொல்லி வாங்கி பார்த்தவர், அலுவகம் அழைத்துப் போய், ஃபார் போட்டு அம்பிய அட்மிஷன் போடுன்னு ஆணையிட்டார்.
    டி.பி.டி.ஆர்-க்கு படிக்க வந்த காலத்தில் பலருக்கு பொடி மட்டை போஸ்ட்மேனாக இருந்திருக்கிறேன். ஆகா அந்த பொடிக் கரண்டி (நிஜமாகவே அப்போதுதான் புரிந்தது சின்னக் கரண்டிக்கும் பொடிக் கரண்டிக்கும் உள்ள வித்தியாசம்) கையாளப்படும் லாவகம் இருக்கே... பீங்கான் சீசாவில் அழுத்தி எடுத்து, அதை ஒரு தட்டு தட்ட உதிரி பொடி உள்விழுந்து, கரண்டியில் பொடியின் அழுத்தப்பிடி தளர்ந்து, மட்டையில் மொட்டையாய் விழும் - அது ஒரு அழகு.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))