பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 1, 2013

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா!வருஷா வருஷம் எனக்கு மார்ச் மாசம் ஒன்னாம் தேதி என் தலைவர் "தளபதி' அவர்கள் பிறந்த நாள் என நியாபகம் இருக்கும் அளவு அதற்கு அடுத்த நாள் என் மனைவியின் பிறந்த நாள் என நியாபகம் வருவது இல்லை... நான் அங்கே என் மனைவியின் கூட இருப்பதும் இல்லை. இந்த வருடமும் அப்படித்தான். நான் என் தளபதி பிறந்த நாளுக்காக இங்கே சென்னையில் இருக்க திடீரென தமிழ்மணம் பார்த்தால் துளசி டீச்சர் பதிவு.....

வாவ்.... என் கிருஷ்ணாவின் பிரதாபங்கள். இதுக்கு கீதாம்மா வேற பின்னூட்டம் வழி ஆகா ஒகோன்னு ஸ்ருதி.... போகட்டும்... டீச்சர்... நீங்க,கோபால் சார், கீதாம்மா, சாம்பு சார் எல்லாம் வீட்டுக்கு வந்ததே எங்க பாக்கியம். இதிலே பதிவு போட்டு பெருமை சேர்த்தா கிருஷ்ணாவை கைல பிடிக்க பிடிக்க முடியுமோ?  ஜோக்ஸ் அபார்ட்! நான் கிருஷ்ணாவை பத்தி பெருமையா சொல்லிப்பதாகவே இருக்கட்டும். போகட்டும்! ஐ லவ் ஹர்!

 \\ சில சமயம் நான் சண்டை போடும் மூட்ல இருந்தா அப்ப கிருஷ்ணா துரதிஷ்டவசமா வீட்டில் இல்லாட்டி கூட "என்னங்க நான் கோவிலுக்கு போயிருக்கேன். அஃப்கோர்ஸ் உங்க கண்ணாடி அனேகமா உங்க தலை மீது இருக்கலாம். அவசரமா திட்டனும்னா போன் செய்யவும். என் போன் நம்பர் கேஸ் அடுப்பு மேலே எழுதி வச்சிருக்கேன். இரண்டு நிமிஷம் மட்டும் திட்டவும். 1 ரூபாய் 66 காசுதான் இருக்கு உங்க போன்ல ... மிக முக்கிய பின் குறிப்பு # 1 : நான் வீட்டில் இருந்து கோவிலுக்கு போய் மீண்டும் வீட்டுக்கு வரும் வரை போனை ஆஃப் செய்து விடுவேன். பின் குறிப்பு # 2 : என் போன் நம்பரை கேஸ் அடுப்பின் மேல் எழுதி வச்சிருக்கேன் என்பதை மீண்டும் நியாபகப்"படுத்துறேன் " \\

 \\ என்னங்க! நீங்க உங்க கடேசி தாத்தா கிட்ட உங்க +2 பரிட்சைக்கு முன்ன போய் ஆசீர்வாதம் வாங்கினதும் அவரும் "நீ எல்லா பாடத்திலும் 90 மார்க்கு எடுக்கனும்னு ஆசீர்வாதம் செஞ்சதும் அது போலவே நீங்க எடுத்ததும் வெரி குட் ஆஃப் இந்தியா தாங்க.... ஆனா பரிட்சை எல்லாம் 200 மார்க்குன்னு நான் உங்க பசங்க கிட்ட இதுவரை சொல்லலைங்க.... \\

ஒரு நாள் திடீரென "என்னங்க, நான் ஒன்னு சொன்னா கோவிக்க மாட்டீங்களே" என கிருஷ்ணா சொன்ன போது லைட்டா பயம் வந்தாலும் "எப்படியும் கோவிக்கும் படி தான் சொல்வே, சொல்லு" என சொன்ன போது.... "சிதம்பரம் மெடிக்கல் ஹாஸ்பிட்டல், இப்ப திருவாரூர்ன்னு ஏகப்பட்ட மெடிகல் ஹாஸ்பிட்டல் வந்தாச்சுல்ல"

"ஆமாம்"

"இஞ்சினியரிங் காலேஜ் வந்தா பரவாயில்லை.ஆனா மெடிக்கல் பசங்க , மெடிகல் அனாடமி பாடத்துக்கு பாடிக்கு என்ன பண்ணுவாங்க?"'வாயை மூடிகிட்டு படு"

இப்படி எடக்கு மடக்கா கேள்வில்லாம் கேட்டா கூட ஒரு நல்ல மனைவி அவங்க. ரொம்ப அதிகமா கிருஷ்ணா பத்தி  நியாபகம் வருதேன்னு நினைச்சுகிட்டே இருந்தேன். படீர்ன்னு பாத்தா துளசி டீச்சர் பதிவு தமிழ்மணத்திலே!துளசி டீச்சர் என் வீட்டுக்கு வந்ததே பெருமை. அதிலும் அவங்க அக்கா மாதிரி கிருஷ்ணான்னு சொன்னது அதை விட பெருமை. துளசி டீச்சர் பதிவை படிக்க இங்க போங்க  www.http://thulasidhalam.blogspot.in/2013/03/blog-post.html 
டீச்சர் சொன்ன மாதிரி, மூக்குத்தி, சாப்பாடு வைக்கும் விதம்... சாப்பாட்டின் ருசி... குழந்தைகளை வளர்க்கும் விதம்... அட எல்லாமே நான் கொடுத்து வச்சவன் கொடுத்து வச்சவன் என்பதை தான் உறுதி செய்யுது!

 என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா! தமிழ்ல சொல்லனும்னா  ஹேப்பி பர்த் டே   கிருஷ்ணா!
23 comments:

 1. அபி அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!

  ReplyDelete
 2. கிருஷ்ணாக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :)))

  ReplyDelete
 3. அபி அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. என் அளப்பறிய அன்பிற்குரிய, அண்ணிக்கு என் இதயங்கனிந்த, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. என் அளப்பறிய அன்பிற்குரிய அண்ணிக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 6. அட! இன்னிக்கு க்ருஷ்ணாவுக்குப் பொறந்தநாளா??????/

  நல்லவங்களுக்கும் மனசுலே உண்மையான அன்பு இருப்பவர்களுக்கும்
  இப்படித்தான் எல்லாம் தாமாய் அமைஞ்சு போகுது!!!!

  பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் க்ருஷ்ணா.

  நல்லா இருங்க.

  ReplyDelete
 7. பிறந்தநாள் வாழ்த்துகள். குடும்பத்தையும் கொஞ்சம் கவனிக்கவும்

  ReplyDelete
 8. அன்பு கிருஷ்ணா,எப்பவும் சந்தோஷமாகவும் இதே புத்திசாலித்தனத்தோடும்
  அபி அப்பா,அபி,நட்ராஜுடன் மகிழ்ன்ந்து இன்னும் நிறைய பிறந்த நாட்களக் காணவேண்டும்.
  நன்றி அபி அப்பா.

  ReplyDelete
 9. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. அபி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 11. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருஷ்ணா..! :)

  ReplyDelete
 12. உங்கள் சுமைதாங்கி நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 13. அபி அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 14. அபி அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தங்கள் குடும்பத்தை பற்றி டீச்சர் தளம் மூலம் தெரிந்து கொண்டேன். குடும்பத்தில் என்றென்றும் மகிழ்ச்சி பெருகட்டும்.

  ReplyDelete
 15. அண்ணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ))

  ReplyDelete
 16. இது போல் பல பிறந்த நாட்களுக்கு அபி அப்பா தொடர்ந்து பதிவு எழுதும்படிப் பார்த்துக்குங்க கிருஷ்ணா. கிருஷ்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், ஆசிகள். அன்பான குடும்பம், அழகான மனைவி, குழந்தைகளோடு இதே சந்தோஷத்துடன் அபி அப்பா நீண்ட இல்லற வாழ்க்கை வாழ வேண்டும். குழந்தைகளோடும், மனைவியோடும் பூரண உடல் நலத்தோடும் சந்தோஷமாக வாழ வேண்டும் அபி அப்பா. கிருஷ்ணா கிட்டே சொல்லிடுங்க.

  ReplyDelete
 17. பிறந்தநாள் வாழ்த்துகள் :)

  ReplyDelete
 18. அபி அம்மாவுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 19. கிருஷ்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்!
  வாழ்கநலமுடன்!

  ReplyDelete
 20. Happy bithday Abi Amma

  ReplyDelete
 21. மாம்ஸ்ஸூ: அத்தைக்கு நம்ம வணக்கத்தையும் ("வாழ்த்த வயசில்லையாமாம்" மையும் சேர்த்து...) சொல்லிடுங்க...

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))