பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 22, 2013

என் அருமை புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்காக இந்த பதிவு! உண்மையை உணருங்கள்!சீமார், நெடுமரம், வைக்கோ கூட்டம் எல்லாம் ஒன்னு கவனிக்கனும். பிள்ளை பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைத்தது எப்பத்தில இருந்துன்னு கவனிக்கனும். திமுக, காங்கிரஸ் கூட்டனி புட்டுகிட்ட பின்ன தான். போன தேர்தல் இல்லை... 2009 தேர்தல்ல ஆரம்பிச்சு உங்க கூட்டம் காங்கிரசையும், திமுகவையும் பேசாத பேச்சில்லை. போன தேர்தல் வரை பிரபாகரன் படம் வச்சுகிட்டு நீங்க தமிழ்நாட்டிலே பண்ணாத ரவுசு இல்லை. (அதுக்கு முன்ன நீங்க பிறக்கவேயில்லையா?) கலைஞர் முதல்வராக இருந்த போது நீங்கள் பிரபாகரன் படம் வைத்து கொண்டு கூட்டம் நடத்திய போது இப்போது மாதிரி அத்தனை கெடுபிடி இல்லை. காங்கிரசும் வாயை திறக்கவில்லை. காங்கிரஸ் நினைத்து இருந்தால் உங்க வகையறாக்களை தேசிய பாதுகாப்பு சட்டப்படி (மத்திய அரசே நேரிடையாக) உள்ள தூக்கி போட்டு நொங்கு பிதுக்கி இருக்கலாம். ஆனால் கூட்டணி கட்சியாக திமுக இருந்ததால் வாயை மூடிகிட்டு இருந்துச்சு. நீங்களும் கலைஞரை கழுவி கழுவி ஊத்துனீங்க. கலைஞரும் காங்கிரசின் சிலுவையை தூக்கி சுமந்தார். இப்போது சிலுவையை காங்கிரசின் முதுகு மேலே தூக்கி வைத்து விட்டார்.

சிலுவை சுமக்கும் காங்கிரஸ் பாரம் தாங்காமல் இதோ நாராயணசாமி மூலமாக முதல் பிள்ளையார் சுழி போட்டுவிட்டது . இதுவரை தமிழகத்தில் இருந்து சுப்ரமணிய சாமி, சோ.ராமசாமி போன்ற சாமிகள் மட்டுமே நேரிடையாக பிரபாகரனை தாக்கி பேசியும் எழுதியும் வந்தனர். அதை மக்கள் அத்தனை ஒரு சிரத்தை எடுத்து கவனிக்கவும் இல்லை. கவனித்தாலும் அவங்க  ரெண்டு பேரும் அரசியல்வாதியா இருந்தாலும் அடிப்படையில் ஒரு நகைச்சுவைவாதிகளாக இருந்தமையால் மக்கள் சிரித்து விட்டு போய்விட்டனர். தவிர அந்த ரெண்டு சாமியும் ஒண்டிக்கட்டை சாமிகள். இந்த நாராயணசாமி ஒண்டிக்கட்டை சாமி இல்லை. ஒரு தேசிய கட்சியின் , நாட்டை ஆளும் பிரதமர் அலுவலக தலைமை பியூன். நிலக்கரி சுரங்க ஊழலில் பிரதமரை காப்பாத்த சட்ட அமைச்சரை (கேபினட் அந்தஸ்த்து ) பலிகடா ஆக்கிவிட்டு சி பி ஐ அறிக்கையை திருத்திய இந்த நாராயணசாமி கழுவிய மீனில் நழுவிய மீன் என்பதை உணரவும். இதோ அந்த நாராயணசாமி பிரபாகரனை பற்றி பேசியதை பாருங்கள்.....

\\ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரன் என்கின்றனர். அவர் ஒரு கோழை. பெண்கள், சிறுவர்கள் மற்றும் அப்பாவி மக்களை போரில் கேடயமாக பயன்படுத்தியவர் ஒரு வீரனா? ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்றபோது ராணுவ வீரரால் தாக்கப்பட்டார். அந்த தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பினார்.
வெற்றியோ, தோல்வியோ போரை முன் நின்று நடத்துபவர் தான் வீரன், பதுங்கிக் கொண்டவர்கள் அல்ல. சீமான் தன்னுடைய கூட்டத்தில் காஷ்மீர் தீவிரவாதி யாசின் மாலிக்கை அழைத்து வந்து பேச வைத்துள்ளார். தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவற்றை தூண்டிவிடுபவர்கள் தேச துரோகிகள். பலமுறை சிறைக்கு சென்ற சீமான் மீண்டும் சிறைக்கு செல்ல விரும்புகிறார். தமிழக அரசின் வழக்குக்கு பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் வைக்க வேண்டும். நக்சலைட்டுகளின் தீவிரவாதத்தையும், அசாம் தீவிரவாதத்தையும் ஒடுக்கியுள்ளோம்.
எங்களை பொறுத்த வரை சீமான் போன்றோர் சுண்டைக் காய்கள். இந்தியாவில் இருந்து கொண்டு நம் நாட்டுக்கே எதிராக செயல்படுபவர்களை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றார்.http://tamil.oneindia.in/news/2013/05/20/india-narayanasamy-wants-tn-govt-arrest-seeman-175644.html \\

நான் கூட எழுதினேன். ...."கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே"  என்னும் தலைப்பில். அவர் டெஸோ மீண்டும் உயிர்பித்தவுடன். ஆனால் எனக்கு கிடைத்தது வசவுகள் தான். எங்கிருந்து? புலம்பெயர் புண்ணாக்குகளிடமிருந்து!

இந்த அளவுக்கு தைரியமாக எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுவரை தமிழகத்தில் பேசியது இல்லை. ஜெயலலிதா கூட பிரபாகரனை பிடித்து வந்து இந்தியாவில் வைத்து தூக்கில் போட வேண்டும் என்றும், போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றும் சொன்னதற்கே இன்று வரை திமுக உள்ளிட்ட கட்சிகள் காய்ச்சி எடுத்து வருகின்றன. சரி இந்த மாதிரி இனி சொன்னல் தமிழகத்தில் எடுபடாது என நினைத்த ஜெயா கூட இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என டுபாக்கூர் விட்டுத்தான் ஆட்சியை பிடிக்க முடிந்தது. ஆனால் காங்கிரஸ் அது போல எந்த காலத்திலும் சொல்லாது. ஏனனில் காங்கிரஸ் என்பது ஒரு கழுத்தறுக்கும் சாத்தான். திமுகவும் இங்கே காங்கிரசால் கைகழுவி விடப்பட்டு இனி தமிழகத்தில் இழக்க எதுவும் இல்லை என்னும் நிலையில் எது வேண்டுமானாலும் செய்யும்.

அண்ணாவால் கருவறுக்கப்பட்ட காங்கிரஸை சமாளிக்க ஆளானப்பட்ட திமுகவே தன் முழு பலத்தையும் காட்ட வேண்டியுள்ளது. சீமான், வைக்கோ, நெடுமரம் குரூப் எல்லாம் நாராயணசாமி சொன்னது போல சுண்டைக்காய் தான் அவர்களுக்கு என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை.

@ புலம் பெயார்ந்த புண்ணாக்குகளுக்கு!

இனியாவது சீமான் குரூப்க்கு பணம் அனுப்பி உங்கள் தலைவர் மேதகு பிரபாகரன் (??)மானத்தை காற்றில் பறக்க விட வேண்டாம் புலம் பெயர்ந்த புண்ணாக்குகளே! ஒழுங்கு மாரியாதையா இருங்க. இல்லாட்டி இருக்கும் இடத்தில் கூட ஆப்பு வரலாம்.இதே தமிழகத்தில் இருந்து கொண்டு அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞரை நீங்கள் திட்டி தீர்த்து விட்டு இப்போது அம்மையார் ஆட்சி வந்ததும் கனடா, ரஒராண்ரோ எல்லாம் போய் ஒளிந்து கொண்டு அங்கேயும் இருந்து கொண்டு கலைஞரை திட்டுவதும் எங்களுக்கு தெரியும். இனியும் திமுக தொண்டர்கள் சும்மா விட மாட்டோம். மீண்டும் கலைஞர் ஆட்சி வந்ததும் இங்கே வந்து அவரை நொட்டலாம் என நினைச்சா நாங்க சும்மா விட மாட்டோம். 

எல்லோரும் கலைஞர் இல்லை. திட்டினா கூட "பாவம் போ..."ன்னு சொல்ல. நாராயணசாமி போன்ற நச்சு பாம்புகளும் உண்டு. நீங்க செத்த பாம்பு. உங்களை அடிக்க நாராயணசாமிகள்  போன்ற மண்புழுக்கள் மட்டுமே போதும். இனியும் கலைஞரை தான் திட்டுவேன் என சொன்னா உங்க மேல அனுதாபப்பட மட்டுமே முடியும்!

நான் "கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே" என போட்ட பதிவுக்கு வந்ததை விட அதிக வசவுகள் இதற்கு வரும் என தெரியும். போடா புண்ணாக்குகளா, நாங்கள் ஈழத்தில் வாழும் உண்மையான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக டெசோ அமைப்பை வைத்து இருக்கின்றோம். அதற்காக உழைக்கின்றோம். ஆனால் நீங்கள் கனடா, அவுஸ்த்ரேலியா, றொரண்றோ, நோர்வே என சொகுசு வாழ்வு வாழ்ந்து கொண்டு "ஈழம் கிடைத்தால் எங்கே நாட்டுக்கு திரும்பி போக நேரிடுமோ" என்னும் மனநிலையில் இருக்கும் புண்ணாக்குகள். உங்களுக்கு நாடு முக்கியம் இல்லை. காசு தான் முக்கியம். ஆனால் நாங்கள் போரிடுவது தமிழீழத்தில் இருக்கும் நிஜமான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக!

இனிமேலாவது புலம் பெயர்ந்து குந்திகிட்டு என்னை திட்டுவதை விடுத்து யதார்த்தத்தை கவனியுங்க. உங்க சொந்த பந்தம் எல்லாம் ஈழத்தில் இருக்காங்களே மிச்ச மீதி... அவங்க நலனுக்காக வாயையும் அதையும் பொத்திகிட்டு இருங்க. எத்தனை நாள் சீமானுக்கு பணம் கொடுப்பீங்க??? உங்க வாழ்நாள் முடியும் வரைக்குமா? நிப்பாட்டுங்க ஒரு மாசம். பின்ன இங்க சத்தம் குறையும். அப்பவே நீங்க தெரிஞ்சுக்கலாம். இவன் காசு கொடுத்தா கூவும் கிளி தான். புலி இல்லை என!

8 comments:

 1. நெத்தியடி. சூப்பரோ சூப்பர்.

  ReplyDelete
 2. என்னய்யா, வண்டி வண்டியா வந்த வசவ வாங்கி கன்பியூஸ் ஆயிட்டியா?

  ReplyDelete
 3. நாராயண சாமிய மதிச்சு அவன் பேச்சை சிகப்பு கலர்ல போட்ட ஒரே கட்சி காரன் நீர் தான்யா... ஒரு வேளை அந்தாளோட சி.பி.ஐ தான் உங்க கவிஆயினிய திகார் அனுப்பிச்சுன்னு மரியாதையா?

  ReplyDelete
 4. ///போடா புண்ணாக்குகளா, நாங்கள் ஈழத்தில் வாழும் உண்மையான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக டெசோ அமைப்பை வைத்து இருக்கின்றோம். அதற்காக உழைக்கின்றோம். ஆனால் நீங்கள் கனடா, அவுஸ்த்ரேலியா, றொரண்றோ, நோர்வே என சொகுசு வாழ்வு வாழ்ந்து கொண்டு "ஈழம் கிடைத்தால் எங்கே நாட்டுக்கு திரும்பி போக நேரிடுமோ" என்னும் மனநிலையில் இருக்கும் புண்ணாக்குகள். உங்களுக்கு நாடு முக்கியம் இல்லை. காசு தான் முக்கியம். ஆனால் நாங்கள் போரிடுவது தமிழீழத்தில் இருக்கும் நிஜமான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக!///

  பாருங்கப்பா அண்ணன்தான் போராடுறார், தேசொவை கையில் வச்சிருக்கார் இனி கிழிச்சிடுவார் கவலைப்படாதிங்க, அதே சமயம் அண்ணன் கண்டுபுடிச்சார் பாருங்க கண்டுபிடிப்பு ஈழத்தமிழர்களுக்கு காசு முக்கியமாம் ஊழல்ல ஊறிப்போன நாதாரி கட்சி எதுன்னு நல்லாவே மக்களுக்கு தெரியும்

  ReplyDelete
 5. ///இனியும் திமுக தொண்டர்கள் சும்மா விட மாட்டோம். மீண்டும் கலைஞர் ஆட்சி வந்ததும் இங்கே வந்து அவரை நொட்டலாம் என நினைச்சா நாங்க சும்மா விட மாட்டோம்.///

  பவர் ஸ்டார் இல்லாத குறைய இந்த தம்பி போக்குது பேசு தம்பி பேசு, கிழிய கிழிய பேசு, பிரபாகரன் மரணம் அப்படின்னு நியுஸ் வந்தப்போ மாயவரத்துல பல பேர் கண்ணீர் விட்டானா, அப்படிப்பட்ட மானமுள்ள மண்ணு தம்பி அது, அதோட பேருக்கு களங்கத்தை ஏற்ப்படுத்தாதே போ பொய் தலைவரை போலவே எவன் பொண்டாட்டி கூட எவனாவது ஆடன்னு டிவியில போடுவான் பாரு போ

  ReplyDelete
 6. அண்ணே, பத்து ரூவா கூலி கொடுத்தா கோடி கணக்கான ரூவாவுக்கு கூவுறியே அண்ணே நீ ரொம்ப நல்லவன் .

  ReplyDelete
 7. Just ignore these road side slaves in europ!

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))