June 20, 2012
அத்திப்பூக்கள், சரவணன் - மீனாட்சி , தங்கம், புதியதலைமுறை இன்ன பிற...
போலி சாமியார்களை விட சீக்கிரமா கவனிக்கப்பட வேண்டிய லிஸ்டிலே "சீரியல் சாமியார்கள்" தான் இருக்காங்க. எல்லா சீரியல்லயும் ஒரு சாமியார் இருக்காங்க. பெரும்பாலும் கதாநாயகி போகும் கோவில்ல தான் இருப்பாங்கன்னு நீங்க நினைச்சா... ஐ ஆம் சாரி.... கதை நகரும் களங்கள் எல்லா இடத்திலும் ஏதேனும் கோவில் இருக்குமே, அங்கல்லாம் ஆஜர் கொடுக்குறாங்க. கேட்டா (நான் கேட்கலைங்க... கதாநாயகி கேட்டா 'நான் இங்க 'தீர்த்த யாத்திரை'க்கு வந்திருக்கேன் என ஒரே பதிலை சொல்றாங்க.காவி உடை, குவாட்டர் கண்கள் (அதாவது சின்ன கண்)அதிலே "வெறி"த்த பார்வை... பின்ன இருக்காதா? அழகான கதாநாயகி கிட்டே தான் அவங்க டூட்டி... ஒட்டிய தாடி, தவிர கதாநாயகி "என் கஷ்டம் எல்லாம் எப்ப தான் தீரும்" என கேட்கும் டீபால்ட் கேள்விக்கு ... அஃப்கோர்ஸ் பார்வையாளர்களாகிய நாமும் தான்... பதில் சொல்லாம மோட்டுவளையை பார்ப்பாரே ... அப்போ அச்சு அசலா இலங்கை பிரச்சனை எப்போ தீரும்னு மன்மோகன்சிங்கை நிருபர்கள் கேள்வி கேட்டா அவரு பார்ப்பாரே ஒரு பார்வை அது போல "எனக்கே தெரியலையேம்மா" என சோனியா காந்தி போட்டோவை பார்ப்பாரே அதே பார்வை...
இதல்லாம் எங்க இருந்து ஆரம்பிச்சுது இதல்லாம் என யோசித்து பார்க்கிறேன்... கிட்ட தட்ட "அண்ணாமலை" சீரியல்ல ஒரு கோமண சாமியார் வழியா தான் இந்த தொத்து வந்திருக்கனும் என நினைத்துக்கொண்டேன். வாழ்க சித்தி. வாழ்க எம் ஆர் ராதா!
************************
தம்பி வீடு கட்டும் போது மார்பிள் போட வந்தவரிடம் விலை சம்மந்தமா பேரம் நடந்த போது அவரிடம் "என்ன சார் நீங்க? அதான் மார்பிள் போடுறவங்க எல்லாம் ஹேர் கட் பண்ணிக்க போனா கூட ஒரு இரண்டு கோடி ரூபாய் பாக்கெட்ல போட்டு கிட்டு போறாங்க. டீ குடிக்க போனா ஒரு கோடி ரூபாய் எடுத்துட்டு போய்விட்டு மீதி சில்லரையை டிப்ஸ் ஆக கொடுத்டுட்டு வர்ராங்க, நீங்க என்னடான்னா சதுர அடிக்கு ஒரு ரூபாய் குறைக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க"என கேட்டு வச்சேன். அவர் பதறிப்போய் "அய்யோ எங்க இந்த கூத்து எல்லாம் நடக்குது?" என கேட்க நான் சொன்னேன்... "மதியம் ரெண்டு மணிக்கு அத்திப்பூக்கள் பாருங்க சார். சன் டிவில வருது.அதிலே தான் இதல்லாம்" என சொல்ல அந்த மார்பிள் ஓனர் கொஞ்சம் பதட்டம் தணிந்து "ஆமா சார் ஆமா. நானும் இதை எல்லாம் கேள்விப்பட்டு அதை ஒரு நாள் பார்த்தேன். இங்க 25,000 ரூபாய் செக் ரிட்டர்ன் ஆகிடாம இருக்க காலை 12 மணிக்குள்ள நான் படும் பாடு எனக்கு தான் தெரியும்" என சொன்னார். அத்திப்பூக்கள் சீரியலை என்ன செய்யலாம்? வாடகைத்தாய், வளர்ப்பு அம்மா, அம்னீஷியா, டொம்னீஷியா, சீரியல் சாமியார், மந்திரக்கிழவி, கம்பனி போர்டு மீட்டிங், பங்கு வர்த்தகம் என சகல விஷயங்களும் அத்திப்பூக்கள்ல கொலை செய்யப்படும். முடிஞ்சா பாருங்க. சவாலாகவே சொல்றேன்.. முடிஞ்சா பாருங்க... நீங்களே சாமிய வேண்டிப்பீங்க... சீக்கிரம் அது முடிஞ்சு தொலையனும் என!
*****************************
"தங்கம்"... இரவு சன் டிவில ஒளிபரப்பு ஆகுது. நான் பள்ளி படிக்கும் காலத்தில் வைகாசி பொறந்தாச்சு என்னும் பிரசாந்த் அறிமுகம் ஆன படத்திலே வந்து அறிமுகம் ஆன காவிரி என்னும் பெண்... இல்லை .. இல்லை...ஆண்ட்டி தான் இதிலே காமடி ரோல் பண்றாங்க. அவங்க மட்டுமா காமடி பண்றாங்க. அதிலே ஸ்ரீலஸ்ரீ விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி ரங்கராஜாய தியாகராஜாய தெருப்புழுதி மண்ணாங்கட்டியாக என்னவோ ஒரு தொண்டைமான் என்னும் செல்ல பெயராலும் "அய்யா" என்னும் முழுப்பெயராலும் அழைக்கப்படும் கலைக்குடும்ப தலைமகன் விஜயகுமார் அவர்கள் முழு நேர காமடியன். அவர் மச்சானாக குலசேகரன் என்னும் கேரக்டரில் வரும் நபர் நவதுவாரங்களிலும் மிளகாய் வச்ச மாதிரி பேசும் ஆள் தான் வில்லன். இன்னும் சொல்லப்போனா காமடி வில்லன். இந்த வில்லன் ஆக்ரோஷமா வசனம் பேசினா குழந்தைகள் கெக்கேபிக்கே கெக்கேபிக்கேன்னு சிரிக்கும். இந்த அய்யா இருக்காரே அய்யா அவரு அப்பப்ப அந்த வில்லனை அழிக்க கொந்தளிச்சு எழுவார். பின்ன அவர் மகள் வனிதா விஜயகுமார் அடிச்ச அடில கைல கட்டு போட்டு கிட்டு நடித்து வருவது நியாபகம் வந்து தொலைக்கும் போலிருக்கு. அப்படியே காத்து புடுங்கி விட்ட மாதிரி சாய்ந்து உட்காந்து விடுவார். முன்பெல்லாம் ஒரு படிப்பும் வரலைன்னா பெற்றோர்கள் "இவனுக்கு படிப்பே வரலை. அய்யோ பாவம் ஒரு டீச்சர் டிரைனிங்காவது படிக்க வைப்போம்" என படிக்க வைப்பாங்க. ஆனா இங்க அய்யா குடும்பத்திலே கதையிலே ஒரு புதுமை இருக்கட்டுமே என ஐ ஏ எஸ் படிக்க வைத்து எல்லாரும் அங்க இப்ப ஐ ஏ எஸ் ஆகிட்டாங்க. ஒரு கட்டத்துல நான் முதலில் சொன்ன அந்த காமடி கேரக்டர் காவிரியும் ஐ ஏ எஸ் படிக்கிறாங்க. ( அதுக்கு முன்ன அவங்க படிச்ச படிப்பு எட்டாம் கிளாஸ் பெயில் என்பது உபரி தகவல்) . சீரியல் முடியும் சமயத்தில் அனேகமாக அய்யா வீட்டுல பால் கறக்கும் மினிம்மா முதல் பீஸ் போட வரும் பையன்,தெவசம் பண்ண வரும் அய்யர் வரை ஐ ஏ எஸ் ஆகிவிடும் அபாயம் உள்ளது. இது சம்மந்தமாக ஒரிஜினல் அக்மார்க் ஐ ஏ எஸ் அதிகாரிகள் சங்கத்திலே எதுனா ரிட் போட்டு அந்த தங்கம் சீரியலை ஓவர் காமடி உடம்புக்கு ஆகாது என சொல்லி தடை வாங்க வேண்டும் என சமூகத்தின் சார்பாக விண்ணப்பிக்கிறேன்.
*******************************
கனாக்காணும் காலங்கள் - இது விஜய் டிவியில் இரவு,பகல், நள்ளிரவு, விடிகாலை, காலை என சகல நேரமும் மறு ஒளிபரப்பாகும். எப்போ முதல் ஒளிபரப்பு என்பது அவங்களுக்கே தெரியாது. இதிலே என்ன புதுமைன்னா ஒரு 5 ஆண் பசங்க, 4 பெண் பசங்க, ஒரு சோடாபுட்டி புரபசர், ஒரு பிரின்சிபால், ஒரு கரஸ்பாண்டண்ட். இதான் மொத்த கேரக்டரும். இந்த 12 பேருக்காக ஒரு பிரம்மாண்ட காலேஜ். இது சத்தியமா புதுமை தான். ஒரு பால்வாடியை எடுத்துகிட்டா கூட 50 பசங்க திமு திமுன்னு இருக்கும் காலத்தில் 12 பேருக்காக ஒரு காலேஜ் நடக்குது. அந்த பசங்க சினிமா போவாங்க, லவ் பண்ணுவாங்க, அவுட்டிங் போவாங்க, விளையாடுவாங்க, ஸ்ட்ரைக் பண்ணுவாங்க, புரபசரை கிண்டல் பண்ணுவாங்க.. ஆக மொத்தம் படிப்பை தவிர எல்லாம் செய்வாங்க.
இதிலே சமீபத்திலே ஒரு கூத்து என்னான்னா ஒரு தாதா ஜே சி பி எல்லாம் எடுத்து கிட்டு காலேஜை இடிக்க வர்ராரு. இந்த 12 பசங்களும் கொந்தளிக்கிறாங்க. "அய்யோ நாம படிக்கும்(?) காலேஜை இடிச்சுட்டா கல்விக்கடவுள் சரஸ்வதிக்கே அவமானம்" என்கிற ரேஞ்சில் டென்ஷன் ஆகிடுறாங்க. உடனே காலேஜ்ல படிக்கும் ஒரு பையனின் சித்தி தான் மினிஸ்டர். அவங்களை கூப்பிட அவங்களும் டவாலி, சிவப்பு விளக்கு வச்ச காரில் வந்து தாதா கிட்டே கெஞ்சிகிட்டு இருக்காங்க. உடனே ஒரு டீல்க்கு வர்ராங்க. அந்த தாதாவோட பையன் இருக்கும் கிரிக்கெட் டீம் கூட இந்த காலேஜ் கிரிக்கெட் டீம் விளையாடி ஜெயிச்சா அந்த பலகோடி பில்டிங் இனாம் என டீல். (ஸ்ஸ்ஸ்ஸ் மயக்கம் வருதுடா சாமி) அந்த காலேஜ்ல படிக்கும் மொத்த பசங்களே 5 பேர் தானே என நான் கவலைப்பட்டேன். 11 பேருக்கு எங்க போவாங்க? ஆனா டைரக்டர் கொஞ்சமும் கவலைப்படலை. மேட்ச் ஆரம்பிக்க இன்னும் சில வருஷங்கள் ஆகும் என நினைக்கிறேன். (இஞினியரிங் கோர்ஸ் மொத்தமே நான்கு வருஷம் தானே.. டைரக்டர் கோட்டை விட்டுட்டாரா என குனியமுத்தூர் வரதன் வாசகர் கடிதம் எழுதினா கடுப்பாகிடுவேன் மைலார்ட்.... எனக்கு இதுக்கு மேல எழுத அழுகை அழுகையா வருது.
*********************
பொதுவாவே தமிழ் சினிமா பார்த்து பார்த்து எதுனா கல்யாணத்துக்கு போனாவே தாலி கட்டும் நேரத்தில் "நிறுத்துங்க கல்யாணத்தை"ன்னு சொல்லனும் போலவே தோணும்.(எனக்கு இனிமே திருமண பத்திரிக்கை வைப்பவர்கள் கொஞ்சம் யோசிச்சு வைக்கவும்) விஜய் டிவில சரவணன் - மீனாட்சி என்னும் தொடர் வருது. அந்த கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு தான் இன்னிக்கு டாக் ஆஃப் தமிழ்நாடு. அத்தனை இடைஞ்சல் அந்த கல்யாணத்துல. பிரணாப் ஜனாதிபதி ஆனா என்ன? சங்மா ஆனா என்ன? கலாம் ஆனா என்ன? சரவணன் மீனாட்சி கல்யாணம் நல்ல படியா நடந்து தொலையனும் - இதான் இப்போதைய தமிழக வேண்டுதல்.... என்னவோ போங்கப்பா
*****************************
சரி சீரியல் எல்லாம் தான் இந்த லட்சனத்தில் இருக்குதுன்னு நடுநிலையா ஒரு செய்தி பார்ப்போம் என நினைச்சா அது எல்லாத்துக்கும் மேல காமடியா இருக்கு.
தமிழகத்தில் ஏழு வயது குழந்தை டெங்கு காய்சலுக்கு பலி - இக்குழந்தை கடந்த திமுக ஆட்சியின் போது பிறந்தது. அப்படி அது பிறந்திருக்காவிடில் இன்று அது இறக்கும் நிலை வந்திருக்காது என பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர்.இப்படியாக ஒரு குழந்தை மரணத்துக்கு திமுக காரணம் ஆகிவிட்டது. - இப்படிக்கு புதிய தாலைமுறை செய்திகளுக்காக நடுநிலையாக பீர் முகமது.
சென்னையில் தாம்பரத்தில் ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 75 சவரன் கொள்ளை. தப்பி ஓடிய கொள்ளைக்காரன் நேராக கோபாலபுரம் நோக்கி ஓட்டம். கோபாலபுரத்தில் பிரபல அரசியல் தலைவர் இருப்பது நாம் எல்லாம் அறிந்ததே - இப்படிக்கு புதியதலைமுறை செய்திகளுக்காக நடுநிலையாக பீர்முகமது.
**********************************
பை தி பை.. அபிஅப்பா நல்லா காமடியா எழுதிட்டாருன்னு சொன்னா, அது மகா பாவம். நான் ஜஸ்ட் மேற்கண்ட சீரியல் கதைகள் மட்டுமே எழுதினேன். அது காமடியா ஆகியிருந்தா முழு கிரியேட்டிவிட்டியும் அதன் இயக்குனர்களை மட்டுமே சார்ந்தது என உறுதி அளிக்கிறேன்!
Labels:
டி வி சீரியல்கள்,
நகைச்சுவை மாதிரி,
புதிய தலைமுறை
June 12, 2012
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கேலிச்சித்திரம் - ஒரு பார்வை!
இன்றைக்கு ஒரு வாரகாலமாக பரவலாக "இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட கேலிச்சித்திரம்" என்றும் சொற்கள் சுலபமாக எல்லோர் வாயிலும் புகுந்து வருகின்றது. அது என்ன கேலிச்சித்திரம்? அது என்ன புத்தகத்தில் வந்துள்ளது? என்ன பிரச்சனை?
இந்திய மத்திய அரசின் கல்விக்கான சார்பு கழகம் National Council of Education Research and Training (NCERT) சார்பில் வெளியிடப்பட்டுள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசியல் அறிவியல் (political science) பாடத்தில் எட்டாம் பிரிவில் 153ம் பக்கத்தில் தமிழக அரசியலை பற்றிய பாடத்தில் "1965ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பின் காரணமாக திமுக 1967ல் ஆட்சியை பிடித்தது" என்ற பொருள் வரும் படியாக ஒரு பாடம். அதை மாணவர்களுக்கு இன்னும் புரியும் படியாக விளக்குவதாய் நினைத்துக்கொண்டு ஒரு கேலிச்சித்திரம் இட்டுள்ளனர். அந்த கேலிச்சித்திரம் வரைந்தவர் பிரபல கேலிச்சித்திரக்காரர் தமிழகத்தை சேர்ந்த ராசிபுரம் கே. லெஷ்மன். 1965 கால கட்டத்தில் அவர் வரைந்து அப்போது பத்திரிக்கைகளில் வெளியான கேலிச்சித்திரம் இன்றைக்கு யாரோ ஒரு நியாபகசக்தி புண்ணியவான் கைங்கர்யத்தால் மீண்டும் மத்திய அரசு சார்ந்த பாடத்திட்டத்தில் புகுந்து தன் விஷமத்தன வரலாற்று திரிபுகளை மாணவர்கள் மத்தியில் உண்டாக்க செய்கின்றது.
அந்த் கேலிச்சித்திரம் என்ன சாராம்சம் உள்ளடக்கியது எனில் ஒரு கரும் பலகையில் சில வாசகங்கள் இருக்கின்றன. அந்த வாசகங்கள் இருக்கும் பலகையை பல மாணவர்கள் சேர்ந்து கல்லால் அடிக்கின்றனர். அந்த பலகையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும் வாசகம் என்ன தெரியுமா? "இந்தி கிடையாது. இந்தி கிடையாது. ஆங்கிலம் மட்டுமே, இந்தி கிடையாது" . இது தான் அந்த வாசகம். அந்த பலகையை தான் தமிழக மாணவர்கள் கல் கொண்டு அடிக்கின்றனர். போகட்டும்.. அந்த பலகையின் பின்னே இருவர் நிற்கின்றனர். யார்? ராஜாஜியும்,அப்போதைய முதல்வர் பக்தவத்சலமும். இருவரும் ஒரு விஷயம் பேசிக்கொள்கின்றனர். யாரைப்பார்த்து? யாருடைய செயலைப்பார்த்து? அந்த கல் கொண்டு அடிக்கும் மாணவர்களை பார்த்து. என்ன பேசிக்கொள்கின்றனர்? "அப்பன்னா இவனுங்களுக்கு இங்கிலீஷும் தெரியாது போல..."
அந்த கேலிச்சித்திரத்தில் ராஜாஜி தமிழக மாணவர்களை பார்த்து தமிழக மாணவர்களை கேலி செய்த வாசகங்கள் இவைகள். தோழர்களே, உங்களுக்கு அந்த கேலியின் பரிமாணம் தெரிகின்றதா? இப்போது அந்த கேலிச்சித்திரம் உங்களுக்குள் மாற்றம் ஏற்படுத்துகின்றதா? சரி அந்த மாணவர்கள் அதாவது அந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களின் இன்றைய நிலை எப்படி இருக்கு? யார் அவர்கள்? ராஜாஜி அல்லது ராஜாஜியின் மனோநிலையை பிரதிபலித்த கேலிச்சித்திரக்காரர் ஆர்.கே . லெஷ்மண் சொன்னது சரியா? சரி அப்போதைய கால கட்டத்தில் அப்படி ஒரு கேலிச்சித்திரம் வரைய காரணம் என்ன? தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்றால் என்ன? அதன் 'வால்யூம்" எத்தனை பெரியது. பலியான உயிர்கள் எத்தனை? என பார்ப்போம்.....கொஞ்சம் பெரிய பதிவாக இருப்பினும் முடிந்தவரை சுலபமாக சொல்ல முயற்சிக்கிறேன்.....
முதலில் நாம் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட காலத்திற்கு போகவேண்டும். தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் செப்டம்பர் 26ல் 1938ல் நடந்த போராட்டத்துக்கு போக வேண்டும். அதிலே பெரியார், அண்ணா உட்பட பலருக்கு நான்கு மாதம் சிறை தண்டனை கிடைத்தது. அதிலிருந்து நாம் இந்தி திணிப்பு எதிர்ப்பு பாதையில் நடந்து வந்தால் மிகுந்த நேரம் ஆகும். அதனால் நாம் 1938 முதல் 1963ம் ஆண்டு வரை ஓடியே கடந்து விடுவோம்.
அப்போது நேரு அவர்கள் இந்திய நாட்டு பிரதமர். லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் உள்துறை அமைச்சர். 1963ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி பாராளுமன்றத்தில் ஆட்சி மொழி மசோதாவை தாக்கல் செய்கிறார். அதன் படி 1965ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் இந்தி மட்டுமே இந்திய ஆட்சி மொழியாக இருக்கும். அரசாங்கத்தின் ஆணைகள் அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும். அப்போது மாநிலங்கள் அவையில் அண்ணா அவர்கள் உறுப்பினர். மக்களவையில் நாஞ்சில் மனோகரன் இருந்தார். அண்ணா அவர்கள் " இந்த மசோதாவின் 3 வது விதியின்படி ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பிடித்துக்கொள்ளும். இது இந்தி பேசாத மாநில மக்களுக்கு நிரந்தர தீமை உண்டாக்கும்" என தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் எந்த பிரயோசனமும் இல்லை. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.
உடனே தமிழகத்தில் 1963 ஏப்ரல் 29ல் ஒரு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அண்ணா அதில் இந்தி ஆட்சி மொழியாக ஆனால் என்ன என்ன கஷ்டம் வரும் நமக்கு என ஆதாரத்துடன் பேசினார். 1965 ஜனவரி 26க்குள் நாம் நமது கிராமம் தோறும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என பேசினார். இந்"தீ" பரவ ஆரம்பித்தது தமிழகம் எங்கும். இதனிடையே தமிழக முதல்வராக இருந்த காமராஜர் பதவி விலகி கட்சிப்பணிக்கு வந்து விட்டு பக்தவத்சலம் அவர்கள் முதல்வராக ஆனார்.
உடனே 1963ம் ஆண்டு அக்டோபர் 13 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அண்ணா பேசினார். பேச்சு என்றால் அது பேச்சு. அணல் காற்று. அண்ணா அவர்கள் அரசியல் சட்டம் மொழிப்பிரிவு 17ம் விதி இருக்கும் சட்ட நகலை 1963 நவம்பர் 17 அன்று பொது இடத்தில் கொளுத்துவது என்றும் அவருடன் சேர்ந்து டி. எம். பார்த்தசாரதி, டி.கே. பொன்னுவேலு, வி.வெங்கா, கே.பி.சுந்தரம் ஆகியவர்கள் கொண்ட ஐவர் அணி மாலை 4 மணிக்கு அறிவகத்தில் இருந்து புறப்பட்டு மெரினா சென்று அங்கே எரிப்பது என அறிவித்தார். அதன்படி அண்ணா அவர்கள் அந்த நாளில் புறப்பட்டு சென்று எரிக்கும் முன்னரே அமைந்தகரையில் கைது செய்யப்பட்டார். ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். அவருடன் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட குழுவின் முதல் அணியும் சிறை சென்றது.
அது போல ஒரு குழு தமிழகத்தின் ஒவ்வொறு பகுதியிலும் சென்று அடித்தட்டு மக்கள் வரை இந்தி நுழைந்தால் என்ன என்ன பாதகம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யும் வேலையை கலைஞர் அவர்கள் தலைமையிலான குழு செவ்வனே செய்தது.
அண்ணா அவர்கள் சிறை புகுந்த அந்த ஆறு மாதத்தில் அண்ணாவின் வளர்ப்பு அண்ணை (சித்தி) காலமானார். அண்ணா மிகுந்த மனவேதனை அடைந்தார். அதே போல அண்ணா சிறையில் இருக்கும் போதே நேரு அவர்கள் மறைந்தார். அண்ணா சிறையில் இந்தி எதிர்ப்பை கைவிட்டு விட்டார் என்றெல்லாம் ஊடகங்கள் இப்போது போலவே அப்போதும் பொய் பரப்புரை செய்தன. அந்த ஆறு மாதத்தில் அண்ணாவின் கைவலியின் காரணமாக உடல் நலமும் மோசமாகியது. அண்ணா சிறை மீண்டு வெளியே வந்தார். அதற்குள் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பிரதமர் ஆனார். நேரு மறைவினால் மத்திய அரசில் ஏற்பட்ட சுனக்கம் காரணமாக இந்தி திணிப்பு என்பது அமைதியாக இருப்பது போன்ற தோற்றம் கொடுப்பினும், அந்த மசோதா நேரு காலத்தில் 1963ல் நிறைவேற்றம் ஆகிவிட்டபடியால் கண்டிப்பாக 1965 ஜனவரி 26 குடியரசு தினத்தின் முதல் அமலாக்கத்துக்கு வந்து விடும் என நினைத்த கலைஞர் தீவிர இந்தி திணிப்பு எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
1964 ஏப்ரலில் அண்ணா சிறை மீண்டு வெளியே வந்த பின்னர் அந்த மசோதா அமலுக்கு வர எட்டு மாதங்கள் மட்டுமே இருந்தது. மத்திய அரசும் அப்போது மீண்டும் அந்த மசோதா மீது ஆர்வம் காட்ட தொடங்கியது. 1965ம் ஆண்டும் வந்தது.
மத்திய அரசு குடியரசு தினத்தின் அன்று இந்தி திணிப்பு மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டியது. அதனால் அண்ணா அவர்கள் 1965 ஜனவரி 26 அன்று துக்க தினமாக அறிவித்தார். அதிலேயும் மிகுந்த ஜாக்கிரதையாக "குடியரசு வாழ்க, ஆனால் இந்தி ஆட்சி மொழி ஆக்கப்படுவது ஒழிக" என்னும் கோஷத்துடன் மீண்டும் போராட்டத்தில் இறங்கினார். அண்ணா, கலைஞர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. திமுக தலைவர்கள் அனைவரும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் இந்த இடைப்பட்ட அதாவது 1963 ஏப்ரல் 13 முதலான காலகட்டத்தில் கலைஞர் பட்டிதொட்டி எங்கும் இந்தி திணிப்பின் பாதகம் எடுத்து பிரச்சாரம் செய்த காரணத்தால் திமுகவின் மாணவர் அணியினர் மிகுந்த உத்வேகத்துடன் போராட ஆரம்பித்தனர். இதுவரை இப்படி ஒரு போராட்டம் இந்தியாவில் சுதந்திர போராட்ட காலத்தில் கூட நடந்தது இல்லை என்னும் அளவுக்கு போராட்டம் நடந்தது.
திருச்சி மாவட்டம் சின்னசாமி , சென்னை கோடம்பாக்கம் சிவலிங்கம், சென்னை விருகம்பாக்கம் அரங்கநாதன் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர். திருச்சி மாவட்டம் சேர்ந்த ஒரு தலைமை ஆசிரியர் வீரப்பன் என்பவர் தீக்குளித்து இறந்தார். கோவை மாவட்டம் சேர்ந்த முத்து என்னும் விவசாயி தீக்குளித்து இறந்தார். மயிலாடுதுறையை சேர்ந்த ஏ.வி.சி கல்லூரி மாணவர் சாரங்கபாணி அவர்கள் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொண்டு சாகும் நேரத்தில் கூட இந்தி திணிப்பு ஒழிக, தமிழ் வாழ்க என கோஷமிட்டு கொண்டே உயிர் நீத்தார்.
ஐநா சபையில் இந்த போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் இங்குள்ள ஊடகங்கள் பட்டினி சாவு என்றும் குடும்ப சண்டை என்றும் காதல் தோல்வி எனவும் எழுதின. சமீபத்தில் தோழர். செங்கொடி வீரமரணத்தை கூட காதல் தோல்வி என தினமலர் எழுதியதே அப்படி அப்போதே நம் போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்பட்டன. எல்லா ஊர்களிலும் மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். முதல்வர் பக்தவத்சலம் அவர்களை காண சென்ற மாணவர்கள் தடியடிக்கு உள்ளானார்கள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள் ஊர்வலம் போன போது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டு ராஜேந்திரன் என்னும் மாணவர் மாண்டார்.
1965 பிப்ரவரி எட்டாம் நாள் சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் கூடினர். போராட்ட திட்டம் வகுத்தனர். அதன்படி பிப்ரவரி 9,10 ஆகிய நாட்களில் தமிழகத்தின் அனைத்து அஞ்சல் அலுவலகம் முன்பாக போரடுவது. பிப்ரவரி 11ம் தேதி தமிழகத்தில் ரயில் மறியல். பிப்ரவரி 12ம் தேதி பொதுமக்களை திரட்டி பொதுவேலை நிறுத்தம் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னையில் அண்ணாசலை அஞ்சல் அலுவலகம் முன்பாக போராட்டம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து சென்னை மாநிலக்கல்லூரி திடலில் இந்தி பிரச்சாரசபா வெளியிட்ட புத்தகங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மதுரை, கோவை, தஞ்சை, திருச்சி, வேலூர் என எல்லா இடங்களிலும் போராட்டம் வெடித்தது.
திருப்பூரில் 2000 மாணவர்கள் ஊர்வலம் நடத்திய போது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டு ஒரு மாணவர் பலியானார். ஆத்திரம் கொண்ட மாணவர்கள் போலீஸ் மீது தாக்குதல் தொடுத்தனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது.அடுத்த நாள் இரயில் மறியல் போராட்டம் நடந்தது. மாணவர்கள் ரயில்வே நிலையத்தில் குவிக்கப்பட்ட போலீசாருக்கு பயப்படாமல் ரயிலை ஓடவிடாமல் நிறுத்தினர். ரயில் இன் ஜினில் கருப்பு கொடி கட்டப்பட்டது. ரயில் பெட்டிகள் தீயிடப்பட்டன. அடுத்த நாள் பொதுமக்களும் மாணவர்களுக்கு ஆதரவாக போராடி பொது வேலை நிறுத்தம் நடந்தது.மாணவர்கள் கிளர்சியை போலீசாரால் கட்டுப்படுத்த இயலாமல் ராணுவம் வரவழைக்கப்பட்டது. தமிழ்நாடே பற்றி எரிந்தது.
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் "ஆங்கிலம் இணைப்பு மொழியாக நீடிக்கும் என அறிவித்தார். அண்ணா, கலைஞர் ஆகியோர் மாணவர்களை போராட்டத்தை நிறுத்தும் படி வேண்டுகோள் விடுத்தனர். மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா ஒரு அறிவிப்பு செய்தார் ஆங்கிலத்தில். கவனிக்க 1965 ஜனவரி 26 முதல் அரசு அறிவிப்புகள் இந்தியில் இருக்கும் என மசோதா நிறைவேற்றிய மத்திய அரசு ஆங்கிலத்தில் ஒரு அறிவிப்பு செய்கிறது. அது என்னவெனில் " இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும். தயவு செய்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்"
1963 ஏபரல் 13 ல் ஆரம்பமான இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரே நாளில் முடிவுக்கு வருமா? அதும் இத்தனை மாணவர்கள் உயிர் இழந்த நிலையில்? போராட்டம் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்தது.
இப்போது இந்த கட்டுரையின் மேலே குறிப்பிட்ட கேலிச்சித்திரத்துக்கு வருவோம். இந்த கால கட்டத்தில் தான் அந்த கேலிச்சித்திரம் ஆர்.கே.லெஷ்மன் அவர்களால் வரையப்பட்டது. அதைத்தான் இப்போது மாணவர்களுக்கு பொலிட்டிகல் சயின்ஸ் கற்று தருகிறேன் என National Council of Education Research and Training (NCERT) ஒரு சில வரிகளில் இந்த கேலிச்சித்திரம் போட்டு விஷமப்பிரச்சாரம் செய்கின்றது. இப்போது சொல்லுங்கள் தோழர்களே, இது சரியா? ஒரு மிகப்பெரிய போராட்டம் இப்படி கொச்சைப்படுத்தப்படுவது முறையா? இதை படிக்கும் மாணவர்கள் ஒரு தவறான புரிதலுடன் ஒரு பாடம் படிப்பது அவசியமா? வரலாற்று திரிபு அல்லவா இது? இதை அனுமதிக்கலாமா? இதே அந்த National Council of Education Research and Training (NCERT) கழகத்துக்கு நம்முடைய ஒரே கேள்வி தான். ஒரு இந்தி திணிப்பு எதிர்ப்பு என்னும் மாபெரும் போராட்டத்தை "ஜஸ்ட் லைக் தட்" ஒரு வரியில் கொச்சைப்படுத்தியும், ஒரு கேலிச்சித்திரம் வழியே நக்கல் அடிக்கவும் முடிந்த உங்களால் சமூக நீதி காவலர் திரு. வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது நீதிபதி மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த முயன்ற போது வடநாட்டில் ஆரிய மாணவர்களும், ஆரிய அடிவருடி மாணவர்களும் சேர்ந்து உடலில் தீவைத்து கொளுத்தி கொள்வது போல போராட்டம் செய்தமை குறித்து நக்கல் விட இயலுமா? ஒரு கேலிச்சித்திரம் வரைந்து மாணவர்களுக்கு "பொலிட்டிகல் சயின்ஸ்" நடத்த இயலுமா? முடியாதுல்ல... அப்படி எனில் இந்த கேலிச்சித்திரத்தையும் உடனடியாக நீக்க வேண்டும். உங்களுக்கு சீண்டிப்பார்க்க அம்பேத்காரும், தமிழக மாணவர்களும் தான் கிடைத்தனரா?
சரி. நாம் கேலிசித்திரத்தின் சாராம்சத்துக்கு இப்போது வருவோம். அதாவது ராஜாஜி அதிலே என்ன சொல்கிறார் எனில் குல்சாரிலால் நந்தாவின் ஆங்கில அறிவிப்பு தாங்கிய பலகை மீதும் மாணவர்கள் கல் அடிக்கின்றனர் எனில் அவர்களுக்கு ஆங்கிலமும் சரிவர தெரியாது என்னும் பொருள் வருகின்றதே? அப்படி எனில் அப்போது மாணவர்களாக இருந்தவர்களில் அப்போது அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் ஈரோட்டில் இப்போது புகழ்வாய்ந்த வழக்கறிஞராக செயலாற்றி வரும்மிகச்சிறந்த பெரியாரியவாதி திரு. பழனிசாமி கருப்பண்ணன் அவர்களை இன்று நானே நேரிடையாக கேட்டேன். "உங்களுக்கு எல்லாம் ஆங்கிலம் தெரியாது என பொருள்படும் படியான கேலிச்சித்திரம் வரைந்துள்ளதை இப்போது பாடத்திட்டமாக மத்திய அரசு வைத்துள்ளதே?" என . அதற்கு அவர் " நான் அந்த போராட்டத்தில் எங்களுடன் பங்கெடுத்தவர்கள் பட்டியல் தருகிறேன். அதில் பலரும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், ஐ ஏ எஸ் ஆபீசர்கள், சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் இப்படியாக இருந்தோம், இருக்கின்றோம். அப்படி இருக்க அந்த கேலிச்சித்திரம் ஒரு காழ்ப்புணர்வால் வரையப்பட்டது. இது கண்டிக்கப்பட வேண்டிய செயல். நான் பட்டியல் தருகிறேன்" என சொல்லி ஒரு நீண்ட பட்டியல் கொடுத்தார். அதை அப்படியே தருகிறேன். அடைப்புகளில் அவர்கள் வகித்த பதவிகள் உள்ளன.
(திரு.பழனிச்சாமி கருப்பண்ணன் அவர்கள்)
அதாவது போராட்டத்தில் முக்கிய பங்கெடுத்த அப்போதைய மாணவர்கள் திரு. எல். கணேசன், (பாராளுமன்ற உறுப்பினர்)செஞ்சி ராமச்சந்திரன் (மத்திய அமைச்சர், இவர் பஸ் எரிப்பு வழக்கில் மாட்டப்பட்டார்), கி.ராஜமாணிக்கம்( ஐ ஏ எஸ் அதிகாரி, கலைஞர் முதல்வராக இருந்த போது அவரது செயலாளர்) (அவரது தலைமையில் தஞ்சையில் இந்தி எதிர்பு மாநாடு. கி.ராசமாணிக்கம் தலைமையில் அண்ணா . ஜி.டி. நாயுடு துவக்கிவைத்து உரையாற்றினார்கள். முக்கியமாக மதுரையில் கா. காளிமுத்து (தமிழக அமைச்சர்) சட்டத்தை எரித்து சிறைசென்றவர்கள், டாக்டர் இலக்குவணார் மதுரையிலே அரசியல்சட்டப்பிரிவை எரித்து சிறைசென்வர். திரு. துரைமுருகன்(தமிழக அமைச்சர்)வைக்கோ (எம்.பி) என்கிற .வை.கோபால்சாமி , ஜீவாகலைமணி என்ற நண்பர், ரவிச்சந்திரன் என்ற கவல்துறைத்தலைவருடைய மகன், தற்போது ஒய்வுபெற்று காவல்துறை டி. ஐ. ஜி நண்பர் தவிட்டுப பாளையத்தைச்சார்நத பாண்டியன். அவர் டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு டெலிகேட்டாக மாநிலக்கல்லுாரியிலிருந்து சென்றார். துரைமுருகன் வகுப்பு தோழர் ஊத்தங்கரையைச்சார்ந்த நண்பர் நடேசன் தி்ருச்சி நேசனல்கல்லுாரில் படித்தவர், செய்தி மககள் தொடர்பு துறை இனை இயக்குநராக இருந்து ஒய்வு பெற்றவர். சென்னை லாகாலேஜ் ராஜாமுகமது (எம்.ஜி.ஆர் அரசில் தமிழக அமைச்சர்) , ரகுபதி என்பவர் செயின்ஜோசப்கல்லுர்ரி,எம். நடராசன்(தமிழரசி பத்திரிக்கை ஆசிரியர்(அரசு பி ஆர் ஓ வாக பணியாற்றியவர்) (அதங்க சசிகலா நடராசன்), திருச்சியில் வேங்குடுசாமிஎ னபவர் போக்குவரத்தில்பணியாற்றி ஒய்வு பெறறவர், ராஜ்குமார் மன்றாடியார் , விருதுநகர் சீனிவாசன்(எம் எல் ஏ) ,இரா.ஜனார்த்தனன்,எஸ்டிசோமசுந்தரம்(தமிழக அமைச்சர்) இவரு எல்லாம் டி. கே.சியின் குருப் (அதாவது இப்போது வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன் அவர்களின் தந்தையார். டி.கே.சீனிவாசன் (தத்துவமேதை) ,. பினனையுர் பன்னீர்செல்வம் புஷ்பம் கல்லுாரி(அவர் நடராசனின் நண்பர்.அவரும் பஸ் எரிப்பு வழக்கில்கைதுசெய்யப்பட்டார்.)ரகுபதி மிக முக்கியமானவர் (திருச்சி செயின் ஜேசப் கல்லுாரி ஐ ஏ எஸ்ஆகி ஒய்வு பெற்றுவிட்டார்),தஞ்சை கார்மேகம் அவர்கள் (எல் ஜி அவர்களின் நண்பர், செய்தி மக்கள் தொடர்பு துறையில் இனை இயக்குனராக பணீயாற்றி ஓய்வு பெற்றவர்), திருச்சி மேலகல்கொண்டார் கோட்டை என்னும் இடத்தில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற சொல்லி அண்ணா அவர்கள் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார். போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்த தியாகிகள் அந்தந்த ஊர்களில் உரிய மரியாதையுடன் கவுரவிக்கப்பட்டனர். (மயிலாடுதுறையில் மேம்பாலத்துக்கு பெயர் மாணவர் தியாகி சாரங்கபாணி மேம்பாலம்)
இப்படியாக திரு பழனிச்சாமி கருப்பண்ணன் அவர்கள் நீண்ட பட்டியல் கொடுத்தார். இந்த பழனிசாமி கருப்பண்ணன் அவர்கள் மிக தீவிரமாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர். முன்னாள் முதல்வரின் செயலர் கி.ராஜமாணிக்கம் அவர்களுடைய மற்றும் திரு எல்.கணேசன் ஆகியோருடைய கல்லூரி நண்பர். விடுதி நண்பர். அவர் எல்ஜி யோடு சட்ட மன்ற உறுப்பினர் அறை என் 225 எம் எல்ஏ விடுதியில்தங்கி 1973 முதல் 1975 வரை சென்னை ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர் என்பது உபரித்தகவல்.
இப்போது சொல்லுங்கள் தோழர்களே! மேற்சொன்ன இவர்களுக்கா ஆங்கிலம் தெரியாது? ராஜாஜியின் குரலை பிரதிபலித்த ஆர்.கே. லஷ்மண் வரைந்த கேலிச்சித்திரம் காழ்புணர்வுடன் கூடிய விஷமத்தனமானது என்பதற்கு மேல் சொன்ன லெஜண்டுகள் தான் சாட்சிகள்.
அந்த கேலிச்சித்திரம் நீக்கப்பட வேண்டும். அதற்கான முழு முயற்சியும் ஒட்டுமொத்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டும்! செய்வார்கள் என நம்புவோம்!
June 3, 2012
கலைஞர் என்ன சாதித்து கிழித்தார்?
இன்று ஜூன் மாதம் 3ம் நாள். கலைஞர் அவர்களின் 89ம் ஆண்டு பிறந்த தினம். அவரை வாழ்த்துபவர்கள் ஒரு பக்கம், வசை பாடும் சிறு குழுக்கள் ஒரு பக்கம் இருப்பினும் இந்த கலைஞர் அப்படி என்ன சாதித்து கிழித்து விட்டார் என எதுவுமே தெரியாமல் கேட்கும் நடுநிலைவாதிகளுக்காகவே இந்த கட்டுரை. இதன் சாராம்சம் முரசொலி போன்ற பத்திரிக்கைகள், முரசொலி மலர்கள், சில அரசு ஆவணங்கள் உதவியோடு தொகுக்கப்பட்டது தான். நன்றி முரசொலிக்கு! கலைஞர் ஆற்றிய சாதனைகளை கொஞ்சம் சிரமம் பாராமல் வாசித்து பாருங்கள். உங்கள் கருத்துகளை தராளமாக சொல்லுங்கள்!
இந்த இனிய நாளில் கலைஞரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்! வாழ்க கலைஞர்! தன் வாழ்நாளில் நூற்றாண்டு காணப்போகும் ஒரே அரசியல் தலைவர் உலகிலேயே கலைஞர் மட்டுமே என்னும் புகழ் உண்டாகட்டும் அவருக்கு. அவரால் தமிழும், திராவிடமும் உயரட்டும். தமிழகம் தலைநிமிரட்டும்!
"கலைஞர் என்ன சாதித்து கிழித்தார்?" என கேட்பவர்களுக்காகவே இந்த பதிவு என்பதால் அதையே தலைப்பாகவும் வைத்துவிட்டேன். தலைப்பு சில கலைஞர் அபிமானிகளுக்கு சின்ன உறுத்தல் கொடுக்கும் என்பதால் இந்த விளக்கம்!
*****************************
1969 முதல் 1976 வரையிலான ஆட்சி காலத்தில்:
1. பிச்சைகாரர்கள் மறு வாழ்வு திட்டம்.
2. இலவச கண்ணொளி வழங்கும் திட்டம்.
3. திருக்கோவில்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கருணை இல்லங்கள்
4. கை ரிக்சாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்சாக்களை வழங்கும் திட்டம்.
5. ஊனமுற்றோர் நல்வாழ்வு திட்டம்.
6. அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண திட்டம்.
7. ஜாதி கலப்பு திருமணம் செய்து கொண்டோருக்கு 1969 - 76 ல் தங்க பதக்கம் வழங்கும் திட்டம்.1989-90ல் நிதி உதவி ரூபாய் 5000, 1996- ல் 10,000 ரூபாய், 1997 முதல் 20,000 ரூபாய்.
8. அரசு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு திட்டம்.
9. பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் திட்டம்.
10. டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண திட்டம். 1975ல் தொடக்கம், 1989ல் நிதி உதவி ரூபாய் 5000. 1997-98ல் ரூபாய் 7000, 1999-2000 ல் ரூபாய் 10,000
11. குடிசை மாற்று வாரியம், சுற்றுலா வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கம்.
12. ஆதிதிராவிடர் இலவச கான்கிரீட் வீட்டு வசதி திட்டம்.
13. சிங்காரவேலர் நினைவு இலவச வீட்டு வசதி திட்டம்.
14. தலைமை செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோ நலன் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு தனித்துறை உருவாக்கம்.
15. மாநில திட்டக்குழு உருவாக்கம்.
16. பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து பிற்படுத்தப்பட்டோர் , ஆதி திரவிடர் இட ஒதுக்கீடுகளை உயர்த்தியது.
17. காவல் துறை மேம்பாட்டிற்கு 1969ல் முதலாவது காவல் ஆணையம். 1989ல் இரண்டாம் காவல் ஆணையம். 2006ல் மூன்றாவது காவல் ஆணையம்.
18 .பேருந்துகள் அரசுடைமை ஆக்குதல். போக்குவரத்து கழகங்கள் உருவாக்குதல்.
19. அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு திட்டம்.
20 விவசாய தொழிலாளர்களுக்கு அனுபோக தாரர்கள் குடியிருப்பு மனை உரிமை சட்டம்.
21. சேலம் உருக்காலை திட்டம்.
22. பதினைந்து ஏக்கர் நில உச்ச வ்ரம்பு சட்டம். ஒரு லட்சத்தி எழுபத்தி எட்டாயிரத்து எண்னூற்று எண்பது ஏக்கர் உபரி நிலம் கைப்பற்றப்பட்டு 1,37,236 விவசாயிகள் பயன் அடைய செய்தது.
23. சிப்காட் தொழில் வளாகங்கள்.
24. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்.
******************************************
1989 - 1991 ஆண்டு ஆட்சிகாலத்தில் செய்த சாதனைகள்:
1. மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான ஊதியம்.பொங்கல் போனஸ் முதலான பல சலுகைகள்.
2. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிட தனிச்சட்டம்.
3. ஏழைப்பெண்கள் பயன் பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம். நிதி உதவி, 1989ல் ரூ 5000, 1996ல் ரூ 10,000, 2006ல் ரூ 15,000 2007ல் 20,000, 2010ல் 25,000 ஆக உயர்வு.
4. ஈ வெ ரா நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம். தாழ்த்தப்பட்ட வகுப்பு, மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி. 2008ல் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி.
5.கருவுற்ற பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம். 1989-90ல் ரூ 200, 1996-2001ல் ரூ 500, 2006ல் ரூ 6,000 வழங்கப்பட்டது.
6. மகளிர் திட்டத்தின் மூலம் மாநிலம் எங்கும் சுய உதவி குழுக்கள்.
7.வன்னியர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 20 சதம் தனி இட ஒதுக்கீடு.
8. தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் 18 சதம் இட ஒதுக்கீடு நிர்ணயித்து பழங்குடி இனத்தவருக்கு ஒரு சதம் தனி ஒதுக்கீடு.
9. மகளிர்க்கு அரசு வேலைவாய்ப்பில் 30 சதம் இட ஒதுக்கீடு.
10. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.
11. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல்.
***************************************
1996- 2001 ஆட்சிகால சாதனைகள்:
1. உயர்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை, சமூக சீர்திருத்தத்துறை என புதிய துறைகள் உருவாக்கம்.
2. சென்னையில் டைடல் பூங்கா.
3. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு.
4. பெரியார் நினைவு சமத்துவபுர திட்டம்.
5. உழவர் சந்தை திட்டம். (14.11.1999)
6. வரும் முன் காக்கும் திட்டம் (29.11.1999)
7. கால்நடை பாதுகாப்பு திட்டம். (2000)
8. பள்ளிகளில் வாழ்வொளி திட்டம். (1999)
9. விவசாய தொழிலாளர் நல வாரியம் உட்பட தொழிலாளர் நலனுக்கான தனித்தனி நல வாரியங்கள்.
10. தமிழ்மொழி வளர்சிக்கு தனி அமைச்சகம்.
11. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்.
12. தென்குமரியில் 133 அடி உயர ஐயன் திருவள்ளுவர் சிலை.
13. ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் தடைப்பட்டு கிடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல்.
14. கிராமங்களில் சிமெண்ட் சாலைகள்.
15. வரலாறு காணாத வகையில் ஆறு, குளம் அனைத்திலும் தூர்வாறும் பணி.
16. சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம்.
17. கிராமப்புற மாணவர்களுக்கு தொழில் கல்லூரிகளில் 15 சதம் இட ஒதுக்கீடு திட்டம்.( அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முடக்கப்பட்டது)
18. கிராமப்புறங்களுக்கு மினி பஸ் திட்டம்.
19. சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம்.
20. சேமிப்புடன் கூடிய மகளிர் சிறு வணிக கடன் திட்டம்.வங்கியின் வாயிலாக சுழல் நிதி வழங்கும் திட்டம்.
21. பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம்.
22. மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற கிளை அமைப்பு.உலக நெறியில் எழில் கொழிக்கும் வடிவுடன் கட்டடங்கள்.
23. பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம்.
24. அண்ணா மறு மலர்ச்சி திட்டம்.
25. நமக்கு நாமே திட்டம்.
26. பத்தாயிரம் சாலைப்பணியாளர்கள் நியமனம்.
27. அதிமுக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட 13000 மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் நியமனம். (இப்போது அதிமுக அரசால் அவர்கள் மீண்டும் நடுத்தெருவில்)
**********************************
2006 முதல் 2010 வரை ஆட்சியில் செய்த சாதனைகள்:
.jpg)
1. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி. ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்கள் பலன்.
2. மாதம் தோரும் குறைந்த விலையில் பாமாயில் எண்ணை, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, மைதா, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு வழங்கல்.
3. மான்ய விலையில் மளிகை பொருட்கள் என 50 ரூபாய்க்கு பத்து சமையல் பொருட்கள்.
4. 22,40,739 விவசாய குடும்பங்களுக்கு 7000 கோடி ரூபாய் கூட்டுறவு கடன் தள்ளுபடி.
5. விவசாயிகளுக்கான பயிர்கடன் வட்டி 2005-2006ல் 9%, 2006-2007ல் 7%, 2007-2008ல் 5%, 2008-2009ல் 4%, 2009-2010ல் பயிர்கடன் வட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டது.
6. 2005-2006ல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூ 600, 2010-11ல் சாதா ரக நெல் விலை 1050 ரூ, சன்ன ரக நெல்விலை 1100 ரூ.
7. மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள். மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு.
8. பயிர்க்காப்பீடு திட்டத்தில் 2006ல் 50 சதம் காப்பீடு தொகையை அரசே மான்யமாக வழங்கி ஊக்கப்படுத்தியதால் 2005 - 2006ல் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில் 2009-2010ம் ஆண்டு 7,80000 விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர்காப்பீடு செய்தனர். கடந்த் நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 891 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
9. கரும்பு விவசாயிகளுக்கு 2005-2006 ல் டன் ஒன்றுக்கு கிடைத்த விலை 1024 ரூபாய், 2009-10ல் 1650 ரூபாய் என ஏற்றப்பட்டது. 2010-11 முதல் போக்குவரத்து கட்டணம் மற்றும் ஊக்க தொகையுடன் சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ 2000 ஆக்கப்பட்டது.
10. ஆதி திராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனம் மூலம் 31.03.2000 வரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட 5 கோடியே 25 லட்சம் தள்ளுபடி.
11. நில அடமானத்தின் மீது தொழில் செய்ய வழங்கப்பட்ட பண்ணை சாரா கடன்களுக்கு வட்டி , அபராத வட்டி எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டு வாங்கிய கடன் அசல் தொகையை செலுத்தினால் கடன் ரத்து.
12. மாநிலத்துக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகர திட்டத்தின் கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி, குண்டாறு இணைப்பு திட்டம்.
13. 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டம்.
14. கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உனவு தான்ய உற்பத்தி 2005-2006ல் 61 லட்சம் டன், 2008-2009ல் 95 லட்சம் டன்னாக உயர்வு.
15. விவசாய தொழிலாளர் நல வாரியம் உட்பட 31 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் 2 கோடியே 2 லட்சத்தி 21 ஆயிரத்து 504 உறுப்பினர்கள் சேர்ப்பு.
16. 13,6482 அமைப்பு சாரா தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 616,43,44,832 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.
17. 2687கோடியே 30 லட்சத்து 35 ஆயிரத்தி 794 ரூபாய் செலவில் ஒரு கோடியே 13 லட்சத்து 57 ஆயிரத்து 454 குடும்பங்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டன.
18. 360 கோடி செலவில் 20 லட்சத்தில் 660 குடும்பங்களுக்கு எரிவாய் இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள்.
19. ஒரு லட்சத்தி 57 ஆயிரத்தி 57 நிலமற்ற ஏழை விவசாயிகள் குடும்பங்களுக்கு 2,11,356 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டது.
20. 6,99,917 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள்.
21. காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்சி நாள் என பள்ளிகளில் கல்வி விழா.
22. 2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 லட்சம் குழந்தைகள் மாணவ மாணவியர்களுக்கு சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் வாழைப்பழங்கள் வழங்கப்பட்டன.
23. தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்துகும் மேற்ப்பட்ட மாணவ மாணவியருக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பு கட்டணங்கள் ரத்து. 11 லட்சம் மாணவ மாணவியருக்கு 10, 12ம் வகுப்புகளில் அரசு தேர்வுக்கு கட்டணங்கள் ரத்து.
24. பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்தி 75 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கலை, அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் படிப்பு கட்டணம் ரத்து. 2010-11 முதல் எம் ஏ, எம் எஸ்சி வகுப்புகளுக்கும் படிப்பு கட்டணம் ரத்து.
25. படிப்பை தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற தொழிற் பயிற்சிகளை சமுதாய கல்லூரிகள் மூலம் பெற ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலை பல்கலைகழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.
26. ஆண்டுதோறும் 24 லட்சத்தி 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும் 2 லட்சத்தி 99 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்.
27.ஏழை மகளிர்க்கு பட்ட படிப்பு வரை வழங்கப்பட்ட இலவச கல்வி முதுகலை பட்டப்படிப்பு வரை நீட்டிப்பு.
28. தொழிற்கல்வி படிப்புக்கான நுழைவு தேர்வு ரத்து.
29. கோவை திருச்சி நெல்லை ஆகிய இடங்களில் நான்கு புதிய அண்ணா தொழில் நுட்ப பல்கலைகழகங்கள்.
30. 2006க்கு பின் ஒரத்த நாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுகோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்.
31. மாவட்டத்து ஒரு மருத்துவ கல்லூரி கோட்பாட்டின் படி விழுப்புரம், திருவரூர், தர்மபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஆறு புதிய மருத்துவ கல்லூரிகள்.
32. அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவணம், விழுப்புரம், அரியலூர், பண்ருட்டி, திருக்குவளை , ராமநாதபுரம் திருவண்ணாமலை, தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி , கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள்.
33. பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய பாடம் என சட்டம்.
34. நூற்றாண்டு கனவை நனவாக்கி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைப்பு.
35. அருந்தமிழ் சான்றோர் 110 பேரின் நுல்களை நாட்டுடமை - 7 கோடியே 27லட்சம் ரூபாய் பரிசு தொகை.
36. 4020 திருக்கோவில்களில் 387 கோடி செலவில் திருப்பணிகள் செய்து குழமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
37.2010ல் மேலும் 1100 திருக்கோவில்கள் 100 கோடி செலவில் குழமுழுக்கு.
38. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண திட்ட நிதி உதவி 10,000 ரூ என்பது 25,000 ரூ ஆக உயர்வு. 2,92000 ஏழை பெண்களுக்கு 520 கோடி நிதி உதவி.
39. கருவுற்ற ஏழைப்பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி திட்டத்தின் கீழ் 20லட்சத்தி 11 ஆயிரத்து 517 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1052 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி உதவி.
40. 50 வயது கடந்து திருமணம் ஆகாமல் வறுமையில் வாடும் 9158 ஏழை மகளிர்க்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை.
41. தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என அறிவிப்பு.
42. வரும் முன் காக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு 14, 894 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே 37 ஏழைகள் பயன்.
43. தமிழகத்தில் உள்ள 1421 ஆரம்ப சுகாதார நிலயத்திலும் புதிதாக உண்டாக்கப்பட்ட 117 ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தலா 3 செவிலியர்களை பணியமர்த்தி 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிப்பதால் அங்கு 2005-06ல் நடைபெற்ற மகப்பேறு எண்ணிக்கை 82,530 என்பது 2009-10ல் 2,98853 ஆக மூன்று மடங்கு உயர்ந்து கிராமப்புற மகளிர் மகிழ்வு.
44.குழந்தைகள் உயிர் காத்திட மூடிய அறுவை சிகிச்சைக்கு 20,000 ரூபாய். திறந்த அறுவை சிகிச்சைக்கு 50,000 ரூபாய், கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு 1 லட்சம் ரூபாய் என அரசு நிதி உதவி.
45. 21.11.2007ல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டம், 3.6.2006ல் தொடங்கப்பட்ட பள்ளி சிறார் இதய அறுவை சிகிச்சை திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களி கீழ் 3264 சிறார்களுக்கு 17 கோடியே 10 லட்சம் சொலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவ மனைகள் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தைகள் காக்கப்பட்ட்னர்.
46. கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்திட ஈ எம் ஆர் ஐ நிறுவனத்துடன் இணைந்து 15.9. 2008ல் தொடங்கப்பட்ட 385 ஊர்திகளுடன் கூடிய அதி நவீன அவசரகால மருத்துவ ஊர்தி சேவை திட்டம் தமிழகம் முழுமைக்கும். 401152 பேர் இதனால் பயன். ஆபத்தான நிலையில் இருந்த 20,154 உயிர்கள் காப்பு.
47. அரசு ஊழியர்களுக்கு நான்கு ஆண்டுகளில் 2 லட்சம் வரை மருத்துவ உதவி வழங்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம்.
48. உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்டம் 2009 ஜூலை முதல் நடைமுறை. ஒரு கோடியே, 44 லட்சத்து 32 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடைந்தன. 2010 வரை அந்த திட்டத்தில் 87 ,135 ஏழை மக்களுக்கு 246 கோடியே 79 லட்சத்தி 30 ஆயிரம் ரூபாய் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
49. 1,05494 கைத்தறி நசவாளர்களுக்கும் 90,547 விசைத்தறி நசவாளர்களுக்கும் சிறப்பு தொகை செலுத்தி மின் இணைப்பு பெற 2,39,511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்.
50. 2,22,569 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 46,91 கோடி முதலீட்டில் 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு 12 அரசாணைகள் வெளியிடப்பட்டு 37 தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 2010 வரை 12 தொழிற்சாலைகள் திறப்பு.
51) 3,53,801 படித்த வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு 240 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.
52. 4,65,658 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
53. புதுப்பிக்க தவறிய 2,70000 இளைஞர்கள் 2001 முதல் பதிவு மூப்புடன் மீண்டும் புதுப்பித்து பயன்.
54. முதியோர் ஆதரவற்றோர் உதவித்தொகை மாதம் 200 முதல் 400 ரூபாய் என உயர்வு.7,39,541 முதியோரும், 7,90,041 ஆதரவற்றோரும் இதனால் பயன்.
55.கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகையாக மாதம் 200 ரூ என்பது 500 ரூ என உயர்த்தப்பட்டு 2006 முதல் ஆண்டு தோறும் 10,000 கடும் மாற்று திறணாளிகள் பலன்.
56. 1989ல் தர்மபுரி மாவட்டத்தில் கழக அரசு தொடங்கிய மகளிர் திட்டத்தின் மூலம் இதுவரை உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களில் எண்ணிக்கை 4,41,311. இவற்றுள் ஊரக சுய உதவி குழுக்கள் 3,0 2092. நகர்புற சுய உதவி குழுக்கள் 1, 39,219. இக்குழுவில் சேர்ந்துள்ள மகளிர் எண்ணிக்கை 69,91000. இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை மொத்தம் கடன் தொகை 6342 கோடியாகும்.
57. 2006 க்கு பின் 17,12000 மகளிர் கொண்ட1,25493 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உண்டாக்கப்பட்டன. 2,81,883 மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுழல் நிதி 281 கோடியே 88 லட்சம் ரூபாய். மகளிர் சுய உதவி குழுக்கள் போலவே 2006க்கு பின் 19,885 இளைஞர் சுய உதவி குழுக்களும் 30,000 நகர்புற சுய உதவி குழுக்களும் 10,772 விவசாயிகள் கூட்டுப்பொறுப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.
58. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகிய 56,748 இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
59) 2,033 கோடி ரூபாய் செலவில் 10,096 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்.2010ல் 2,514 ஊராட்சிகளில் 508 கோடி ரூபாய் செலவில் இத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
60. அதே போல அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 810 கோடி செலவில் 420 பேரூராட்சிகளில் கட்டமைப்பு பணிகள்: 2010ல் 141 பேரூராட்சிகளில் 70 கோடி செலவில் கட்டமைப்பு பணிகள். நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் தலா 75 லட்சம் செலவில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
61. மாநகராட்சி நகராட்சிகளில் நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட அவை அரசுக்கு செலுத்த வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி.
62. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிர்வு. 2006-07ல் எட்டு விழுக்காடு. அதாவது 2112 கோடி ரூபாய். 2007-2008ல் 9 விழுக்காடு. 2008-2009ல் 9 விழுக்காடு. அதாவது 2959 கோடி ரூபாய். 2009-10ல் 9.5 விழுக்காடு. அதாவது 3316 கோடி என உயர்வு. 2010-11ல் 10 விழுக்காடு. அதாவது 4,030 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
63. 12,094 கோடி ரூபாய் செலவில் 57 ஆயிரத்து 787 கிமீ நீள சாலைகளில் மேம்பாட்டு பணிகளும் பராமரிப்பு பணிகளும் நிறைவேற்றப்பட்டன.
64. 4,730 கிமீ நீளமுள்ள சாலைகள் இருவழித்தடங்கள் ஆக அகலப்படுத்தப்பட்டன.
65. தமிழகத்தில் உள்ள சாலைகளில் 1046 பாலங்கள் மற்றும் 3800 மிகச்சிறு பாலங்கள் 881 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டன.
66. தமிழகத்தில் உள்ள 4,676 கிமீ தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கிமி நீள சாலைகள் நான்கு வழிச்சாலைகள் ஆக மாற்றப்பட்டுள்ளன.
67. தலவரி, தலமேல்வரி, தண்ணீர் தீர்வை அனைத்தும் ரத்து. நிலவரி ஏக்கர் ஒன்றுக்கு புஞ்ஜை நிலத்துக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய் எனவும் நஞ்சை நிலத்துக்கு 50 ரூ என்பது 5 ரூ எனவும் பெயரளவுக்கு மட்டுமே வசூலிக்க அரசாணை.
68. ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய நான்கு நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.
69. அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்.
70. தர்மபுரி மாவட்டத்தில் ஆரூர் புதிய கோட்டம், காஞ்சி மாவட்ட்த்தில் தாம்பரம் புதிய கோட்டம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை புதிய கோட்டமென மூன்று புதிய கோட்டங்கள்.
71. திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், திருவள்ளூர் மாவட்டம் மாதவரம், கரூர் மாவட்டம் தரங்கம்பட்டியை தலைமை இடமாக கொண்டு கடவூர் , கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, வேலூர் மாவட்டம் ஆம்பூர், திருப்பூர் மாவட்டம் வடக்குகுளம், காஞ்சி மாவட்டம் ஆலந்தூர், சோழிங்கநல்லூர் என ஒன்பது புதிய வட்டங்கள் உண்டாக்கப்பட்டன.
72. கட்டணம் உயர்த்தப்படாமல் 12,137 புதிய பேருந்துகளுடன் மேலும் 3000 புதிய பேருந்துகள்.
73. இஸ்லாமிய சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு.
74. அருந்ததியர் சமூக அவலம் தீர 3 சதம் உள் ஒதுக்கீடு.இதன்காரணமாக 2009-2010ல் 56 மாணவர்கள் மருத்துவ கல்லூரியிலும், 1165 மாணவர்கள் பொறியியல் கல்லூரியிலும் சேர்ந்து பயில்கின்றனர்.
75. சமத்துவ சமுதாயம் காணும் நோக்கில் அனைத்து சாதியரும் அர்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளை சேர்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
76. அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவ புரங்கள் தந்தை பெரியார் சிலைகளுடன் நிர்மானிக்கும் திட்டம் நடைமுறை.
77. சென்னை கோட்டூர்புரத்தில் உலகத்தரத்திலான 200 கோடி மதிப்பிலான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்.
78. 1000 கோடி ரூபாய் செலவில் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமைச்செயலகம்.
79. 100 கோடி செலவில் அடையார் பூங்கா திட்டம்
80. சென்னை மாநகர் குடிநீர் பற்றாக்குறை முற்றிலும் தீர்த்திட வடசென்னை மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றம்.
81. மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ருபாய் நிதியுதவியுடன் தென்சென்னையில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.
82. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள்.
83. 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்.
84. 630 கோடி ரூபாய் செலவில் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றம்.
85. மதுரவாயிலில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு 1655 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பறக்கும் சாலை திட்டம் (கிட்டத்தட்ட முடியும் நேரத்தில் அதிமுக அரசு முடக்கி விட்டது)
86. மத சுதந்திரம்பேண கட்டாய மதமாற்ற சட்டம் ரத்து.
87. மூன்றாவது காவல் ஆணையம், மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி ஆர். பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு அது வழங்கிய 444 பரிந்துரைகளில் 2010 வரை 278 பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
88. 2,12,981 சத்துணவு பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம் - ஓய்வூதியம்.
89. டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டு 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5,115 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் ஆறாம் ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக 11, 099 கோடி ரூபாய் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிலுவை தொகையாக அனுமதிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டது.
90. 21 லட்சம் குடிசை வீடுகளை ஆறு ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீட்டு வசதி திட்டம் என்னும் புரட்சிகரமான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு முதல் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகளுக்கும் மேலாக கட்டி கொடுக்கப்பட்டும் விட்ட நிலையில் அடுத்து வந்த அதிமுக அரசு அந்த திட்டத்தை முடக்கிபோட்டது.
May 17, 2012
ஜெயா அரசின் ஓராண்டு கால சாதனைகள்!!! By J.P.பிரகாஷ்.
இதை எழுதியது நான் இல்லை. நண்பர் ஜே பி பிரகாஷ். சட்டசபையில் பேச திமுகவுக்கு அனுமதி இல்லை. இருந்தால் இதை எல்லாம் பேசியிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அங்கே ஜால்ரா சத்தம் தான் அதிகம் கேட்கின்றது. அதன் காரணமாக இந்த பதிவு இங்கே பதிக்கப்படுகின்றது. இதை ஜெயகுமார் ஒன்றும் செய்ய இயலாது. இப்போது பதிவை படியுங்கள்.கார்டூன் எங்கயோ சுட்டது. கார்டூன் வரைந்தவருக்கு நன்றி!
*******************************
ஜெயா தலைமையிலான அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகள் :
1. வரலாறு காணாத மின் கட்டண உயர்வு சுமார் 100% சதவீதத்துக்கு மேல் கட்டண உயர்வு...
2. வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு , சுமார் 200% சதவீதத்துக்கு மேல் கட்டண உயர்வு...
3. பால் விலை கடுமையாக உயர்வு
4. பத்திரபதிவு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது
5. கடுமையான மின் வெட்டு, குறைந்த பட்சம் 7 மணி நேரதிற்கு மேல்
6. வங்கி கொள்ளைகள், படுகொலைகள் அதிகரிப்பு, தினமும் சராசரி 3 கொலை சம்பவங்கள், 5 கொள்ளை சம்பவங்கள், 10 செயின் பறிப்பு சம்பவங்கள் என்று தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை மிக சிறப்பாக பேணி காப்பது..
7. எந்த ஒரு பெரிய திட்டத்தையும் அறிவிக்காதது
8. துறைமுக விரைவு சாலை பணியை நிறுத்தியது
9. திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட பல மேம்பால பணிகளை தாமதபடுத்துவது
10. அமைச்சர்களை பேசா மடந்தைகள் ஆக்கிவிட்டு, தானே அனைத்து அறிவிப்புகளையும் விதி எண் 110 இன் கீழ் வெளியிடுவது
11. சட்டசபையை, சுய புராண, தற்புகழ்ச்சி, ஜால்ரா மன்றமாக ஆக்கியது
12. உடன்பிறவா சகோதரி சசிகலாவை, சின்னக்காவாக்கி, மக்களை முட்டாளகியது...
13. பொய் வழக்குகளை போடுவதில் புதிய சாதனையை படைத்தது...அந்த பொய் வழக்குகளை நீதி மன்றங்கள் தள்ளுபடி செய்து குட்டுவாங்கியது...
14. கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டது
15. வெற்றிகரமாக சொத்துக்குவிப்பு வழக்கை சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இழுத்தடித்து கொண்டுவருவது..
16. சொத்துக்குவிப்பு வழக்கில் தான் மட்டும் ஜாமீனில் இருந்து கொண்டே, முதல்வர் பதவில் இருந்து கொண்டு , பிறரை குற்றம் சொல்வது..
17. பட்ஜெட்டில் பல்லாயிரம் கோடிக்கு வரிகளை போட்டது / உயர்த்தியது.
18. மக்களின் மேல் கடும் விலை உயர்வை சுமத்தியது
19. முந்தய திமுக ஆட்சியில் போடப்பட்ட, திட்டமிடப்பட்ட, துவக்கப்பட்ட திட்டங்களை , ஏதோ தான் ஆட்சிக்கு வந்து துவக்குவதாய் ஏமாற்றுவது
20. அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சீட்டு ஆட்டம் போல் மாற்றிக்கொண்டே இருப்பது, அனைவரையும் இடமாற்றம், பதவி மாற்றம் எப்போ வருமோ என்ற பயத்திலேயே வைத்து இருப்பது.
21. ஓராண்டு காலத்தில் நீதிமன்றத்திடம் அதிகமாக குட்டு வாங்கிய அரசு என்று பெயர் வாங்கியது
22. 200 கோடி மதிப்புள்ள , சென்னையின் மையபகுதிலுள்ள, (செம்மொழி பூங்கா எதிரில்) 115 கிரௌண்ட் அரசு நிலத்தை தனியாருக்கு (தோட்டகலை கிருஷ்ணமூர்த்தி என்ற அதிமுக பிரமுகருக்கு) தாரைவார்த்து கொடுக்கப்பட்டது.
23. விலையில்லா மென்பொருள் பல இருக்க, மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி கொடுத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவது (ஹிலாரியை சந்தித்தவுடன்)
24. சுமார் 500 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை பாழ்படுத்துவது.
25. இந்தியாவில் அங்கிகரிக்கப்பட்ட 3 செம்மொழிகளுள் , தமிழையும் பல ஆண்டு போராடி சேர்த்ததை இருட்டடிப்பு செய்து, செம்மொழி என்ற பெயர்களை மறைப்பது..
26. ஆசியாவின் பெரிய நவீன நூலகமாக திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற முயற்சிப்பது
27. சேலத்தில் சுமார் 100 கோடி செலவில் கட்டப்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை உபயோக படுத்தாமல் வீணடிப்பது
28. பழைய பாட திட்ட புத்தகங்கள் வீணாக அச்சிட்டு சுமார் 200 கோடி நஷ்டம்
29. 6800 கோடி புது வரி விதிப்பு (பட்ஜெட் அல்லாத)
30. பரமக்குடி காவல்துறை கண்மூடிதனமாக 6 பேரை சுட்டு கொன்றுள்ளது இனவெறியுடன் இருவர் தேடுதல் வேட்டையில் கொலை..
31. தொழில் துவங்க வரும் பன்னாட்டு நிறுவனங்களை குஜராத்க்கு அனுப்பபடுகிறது.
32. மணல் கொள்ளை
33. காவல் நிலையத்தில் இதுவரை 12 பேர் அடித்து கொலை.
34. வாரம் மூன்று முறை மீனவர்கள் மீது தாக்குதலை கை கட்டி வேடிக்கை பார்ப்பது.
35. செயல்அற்ற மற்றும் செயல்படாத அமைச்சரவை
36. நெசவாளர்கள் போராட்டம்
37. சமசீர் கல்வி போராட்டம், மாணவர்களின் கல்வியில் விளையாடியது
38. மக்கள்நல பணியார்களை வேலையிலிருந்து நீக்கி, அவர்களின் வாழ்கையில் விளையாடியது, பலரின் தற்கொலைக்கு காரணமாயிருப்பது..பதிமூனாயிரம் மக்கள் நல பணியாளர்கள் குடும்பங்களை நடு தெருவில் நிறுத்தியது
39. செங்கல் விலை ரூபாய் முன்றில் இருந்து ரூபாய் ஏழு ஆக உயர்வு
40. சிமெண்ட் விலை ரூபாய் 230 இல் இருந்து ரூபாய் 320 உயர்வு
41. நியாய விலை கடையில் கலைஞர் ஆட்சியில் வழங்கிய 30 ரூபாய் பருப்பு நிறுத்தப்பட்டுள்ளது
42. நியாய விலை கடைகளில் கலைஞர் வழங்கிய 25 ரூபாய் மளிகை பொருள்கள் கொடுப்பதில்லை
43. ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெ அளவை குறைத்து, விலையை உயர்த்தியது..
44. அனைத்து எண்ணைகளும், 50 ரூபாய் விலை உயர்வு
45. ஜவுளிகள் விலை உயர்வு
46. செய்யாத சாதனையை செய்ததாக கூறி 4 முழு பக்க விளம்பரங்களை, இந்திய அளவில் பெரும்பாலான நாளிதழ்களில் வெளியிட்டு அரசு கஜானாவை காலி செய்வது
47. செம்மொழி மற்றும் தமிழ் ஆய்வு நூலகங்களை பாழ்படுத்தியது
48. திருப்பூர் சாய பிரச்சனையை தீர்ப்பதாக கூறி, அனைத்து தரப்பினருக்கும் பட்டை நாமம் போட்டது..
49. பெரும்பாலான இடங்களில் மக்கள் போக்குவரத்திற்கு ஒத்துவராது என்று புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, மோனோ ரயிலை கொண்டுவருவேன் என்று அடம் பிடிப்பது..
50. மெட்ரோ ரயிலின் அடுத்த கட்ட விரிவாக்கங்களை கைவிட்டது
*****************************
உங்கள் கருத்துகளை அதாவது விட்டுப்போன கருத்துகளை பின்னூட்டமாக சொல்லுங்கள் தோழர்களே!
May 15, 2012
தகதகத்தாய சூரியன் பொய்மேகங்கள் கலைத்து வெளியே வந்தது!!!
இரண்டாம் அலைக்கற்றை விவகாரத்தில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொகை ஊடகங்கள் மற்றும் சி ஏ ஜி மதிப்பில் (???!!!) ஒரு லட்சத்தி எழுபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் இந்திய பணம் என்பதில் தொடங்கி பின்னர் சி பி ஐ கணக்குப்படி 35000 கோடி என்று வழக்கு பதிவும் செய்து கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி 2010ம் ஆண்டு திமுகவை சேர்ந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தொலை தொடர்பு அமைச்சருமான ஆ.ராசா அவர்கள் கைது செய்யப்பட்டு இன்று 15 மாதங்கள் முடிவடைந்து விட்டன.கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி 2010ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கையும் சி பி ஐ ஆல் தாக்கல் செய்யப்பட்டது. அவருடன் மற்றும் அவருக்கு பின்னர் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மீதம் 16 பேரின் பிணை வழக்குகள் விசாரிக்கப்பட்டு சி பி ஐ நீதிமன்றத்தின், டெல்லி உயர்நீதிமன்றத்தில், சில உச்சநீதிமன்றத்தில் கூட பிணை கொடுக்கப்பட்டு அவர்கள் விடுதலையும் செய்யப்பட்டு அவர்கள் தினம் தோரும் வழக்கிற்காக நீதிமன்றம் (விடுமுறை நாட்களை தவிர்த்து) வந்து விசாரனை நடைபெற்று கொண்டு இருக்கின்றனர்.
இதுவரை 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாக்குமூலங்கள் 1500 பக்கங்களுக்கு மேலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 100க்கும் மேலான வழக்கு ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு அதன் மீதான சரிபார்ப்பு மற்றும் பரிசீலனையும் முடிந்தும் விட்டன. அதாவது கிட்டத்தட்ட வழக்கு பாதிக்கும் மேலாக முடிவடைந்து விட்டது.
இதுவரையிலான வழக்கில் ஆ.ராசா அவர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்துக்கும், வழக்கு தொடுத்துள்ள சி பி ஐ க்கும் எவ்வித முட்டுக்கட்டைகளும் போடப்படவில்லை என்பதும் விசாரணை வாய்தாக்கள் கேட்கப்படவில்லை என்பதும் முழுமையான ஒத்துழைப்பு தருவதாக சி பி ஐ கூட தெரிவித்து இருப்பதும் எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. இதே இந்திய நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா போன்றவர்கள் தங்கள் மீது நிலுவையில் இருக்கு வழக்குகளில் எப்படி எல்லாம் வழக்கை இழுத்தடிக்கும் கூத்துகளும் நடந்து கொண்டு இருக்கின்றன, அதிலே எல்லாம் எத்தனை முறை வாய்தா வாங்கப்பட்டு கொண்டு இருக்கின்றன என்பதும், தனக்கு வழக்கு விபரங்கள் இன்ன இன்ன மொழியில் வேண்டும் என்றெல்லாம் நீதிக்கு வித்தை காண்பித்து கொண்டு இருக்கின்றனர் என்பதையும் மக்கள் பார்த்து கொண்டு தன் உள்ளனர்.
இது இப்படி இருக்க.... இந்த வழக்கு உண்மையா? சி ஏ ஜி அறிக்கை என்பது திராவிட, தலித்தியத்தின் மீதான காழ்புணர்வானதா? அல்லது உண்மையிலேயே அத்தனை இழப்பு ஏற்பட்டதா? அதே போல மற்ற மற்ற துறைகளில் அரசுக்கு இழப்பு என்பதே இல்லையா? அரசுக்கு இழப்பு ஏற்படுவதால் மக்களுக்கு பயன் உண்டா? அல்லது அரசுக்கு இழப்பு ஏற்படும் போதெல்லாம் மக்களுக்கும் இழப்பு தானா? அரசு என்பது ஒரு கார்பரேட் கம்பனி போல மக்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா? அல்லது கனிவான தாயைப்போல நடந்து கொள்ள வேண்டுமா? ராசா அவர்கள் வழக்கில் தானே பலமுறை வாதாடியும் வருகின்றாரே, அவர் என்ன மாதிரியான கருத்துகளை முன்வைக்கிறார்? சி பி ஐ இதுவரை வழக்கின் போக்கில் சரியான பாதையில் தான் போகின்றதா? பாரபட்சம் காட்டி செயல் படுகின்றதா? யாரால் இந்த வழக்கு பிரபல்யம் அடைந்ததோ அந்த நீரா ராடியா கைது செய்யப்பட்டாரா? ரிலையன்ஸ் இதில் முக்கிய குற்றவாளி என சொன்ன சி பி ஐ அம்பானிகளை கைது செய்யாமல் அவர்கள் கம்பனிகளின் அம்புகளை மட்டும் கைது செய்து விட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரு கம்பனியில் கடன் மட்டுமே வாங்கியமைக்காக கனிமொழியையே கைது செய்தது அரசியல் காரணமா? வழக்கின் பின்னனி காரணம் என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க இயலும்? எந்த எந்த கட்சிகள் இதன் பின்னனியில் உள்ளன? என்ன என்ன இயக்கங்கள் இதன் உள்ளே புகுந்து ஆட்டுவிக்கின்றன? ஊடகங்கள் செய்த அயோக்கியத்தனம் இதில் என்ன? என்பன பற்றி எல்லாம் இதோ நவம்பர் 14 , 2010 அன்று தன் அமைச்சர் பதவியை துறந்து விட்டு ராசா அவர்கள் "தி ஹிண்டு" நாளேடுகளுக்கு அளித்த ஒரு முழுமையான நேர்காணலில் காண்போம்.
நாம் மேலே கேட்ட அத்தனை கேள்விக்கான பதிலும் அதில் இருக்கின்றன. ராசா என்பவர் ஒரு சாதாரண அரசியல் வாதி அல்ல. அவர் வாஜ்பாய் அரசில் இருந்து இன்றைக்கு இருக்கும் மன்மோகன் அரசு வரை "கேபினட் அமைச்சராக" பல ஆண்டுகள் பணியாற்றியவர். பல முறை பிரதமர்களால் தனது துறை சம்மந்தமாக பாராட்டுப்பெற்றவர். தனதுதொகுதி மக்களுக்கும், தான் சார்ந்த மாவட்ட மக்களுக்கும் அளவில்லா செயலாற்றியவர். மேலும் தான் ஒரு மிகச்சிறந்த வழக்கறிஞர் என இப்போது சி பி ஐ நீதிமன்றத்தில் நிரூபித்தவர். அவருக்காக நாம் யாரும் கட்டுரை எழுதி ஆதரிக்கிறேன் என "வக்காலத்து" வாங்கும் நிலையில் அவர் இல்லை. அதனால் அவர் வாதத்தை அவரே இங்கு வைக்கட்டும். நீதி என்பது நீதிமன்றம் வழங்குவது மட்டும் அல்ல, மக்களே உங்கள் கையிலும் தான் உள்ளது. அவரது தரப்பு வாதத்தை கூர்ந்து படியுங்கள். அவர் என்னவோ ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளாக கத்தை கத்தையாக கண்டெய்னரில் பெரம்பலூர் எடுத்து சென்றதாக பரப்பப்பட்ட செய்தியில் உண்மை உண்டா அல்லது தலித்திய காழ்புணர்சி மட்டுமே அதில் உள்ளதா என்பதை நீங்கள் எடை போடுங்கள்.
****************************************
கேள்வி : இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து கசிந்ததாகக் கூறப் படும் பகுதி, அலைக் கற்றை ஒதுக்கீட்டில் உங்களது கொள்கை மூலமாக வும், மேலும் பல நிறு வனங்களை அறிமுகப் படுத்தியதன் மூலமாக வும், சில உரிமை நிபந்த னைகள் சில வற்றில் மாற்றங்கள் மூலமாகவும், அரசுக்கு ரூ.1.77 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுகி றதே. தங்களால் விளக்க முடியுமா?
அமைச்சர் ஆ.இராசா : தற்போது எழுப்பப் பட்டுள்ள பிரச்சினைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவ தாக அரசுக்கு ஏற்பட்டு விட்ட தாகக் கூறப் படும் இழப்பு, இரண்டாவதாக நடை முறைத் தவறுகள்.
மத்திய அமைச்சரவையால் பரிசீலிக்கப் பட்டு நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப் பட்ட 1999ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஏலமுறையிலிருந்து (94ஆம் ஆண்டு கொள்கை) வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு (99ஆம் ஆண்டு கொள்கை) மாற அதிகாரம் அளிக்கிறது. கசிந் துள்ள தணிக்கை அறிக்கை நாங்கள் ஏல முறையைக் கடைப் பிடித்து 3 ஜி படகில் கணக்கு ரீதியிலான பயணம் மேற்கொண்டி ருக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, தற் போது ஏற்பட்டுவிட்ட தாகக் கருதப்படும் இழப் புகணக்கிடப்பட்டுள்ள தற்கான அளவு கோலே சரியானதல்ல.
இங்கே நமக்குள்ள பிரச்சினை அரசியல் சட்ட ரீதியிலான ஒரு அமைப் பான தலைமைத் தணிக்கை அதிகரிக்கும் மற்றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்புகளான மத்திய அமைச்சரவை, மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கு இடையிலான அபிப்ராய பேதம் (கருத்து வேறுபாடு ) ஆகும்.
தணிக்கை அதிகாரி, அமைச்சரவை, நாடாளு மன்றம் மற்றும் மற் றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்பான தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யம், மற்றும் திட்டக் கமிஷன் ஆகியவற் றோடு ஒப்புக்கொள்ள முடியாததது போலத் தோன்றுகிறது. இப்படிப் பட்ட நிறுவன முறை மீறலுக்கு நீதித் துறை மூலமாகவோ அல்லது நாடாளுமன்ற அமைப்பு மூலமோ தீர்வு காணப் பட வேண்டும் என்பது எனது கருத்து.
கேள்வி: இந்தக் கொள்கையால் இழப்பு ஏற்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் ரூ.1.77 லட்சம் கோடி பற்றி?
அமைச்சர் ஆ.இராசா : 2 ஜி அலைக்கற்றை ஏன் ஏலம் விடப்படவில்லை என்ற அடிப்படைக் கேள் விக்கு ‘இந்து’ நாளேட்டில் எனது முந்தைய பேட்டி யில் விளக்கியுள்ளேன். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நாடாளு மன்றம் ஏற்றுக்கொண்ட 1999 ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஆவணம் மறுப் பதால், 2ஜி அலைக்கற் றையை ஏலத்தில் விட முடியாது.
நாடாளுமன்றம்தான் கொள்கையை திருத்த முடியும்
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம், பதினொறாவது ஐந்தாண்டுத்திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஆகியவையும் 99 ஆம் ஆண்டு கொள்கை யின்படியே உள்ளன. 99 ஆம் ஆண்டு கொள்கை யில் ஏதாவது திருத்தம் தேவையென்றால் அதை நாடாளுமன்றம் மட்டும் தான் செய்ய முடியும்.
புதிய ஒருமைப் பயன் பாட்டு சேவை உரிமங்கள் மற்றும் 2ஜி அலைக் கற்றை வழங்குவதற்கான தற் போதைய கொள்கை 2003 ஆம் ஆண்டு நவம்பர் முதல் எந்தவித மாறுத லும் இன்றி, வெளிப் படையான கொள்கை யாக இருந்து வருகிறது. 2003 அக்டோ பர் 31 அன்று மத்திய அமைச்ச ரவையால் ஒப்புதல் அளிக் கப்பட்டக் கொள்கை யிலிருந்து எந்த விலகலும் இல்லை. 2003 நவம்பர் முதல் இன்றுவரை அடுத் தடுத்து வந்த அரசு களால், உரிமங்கள் வழங்குதல், அலைக் கற்றை ஒதுக் கீடு செய்தல், கட்டணங்கள் ஆகியவற் றிற்கான நடைமுறைக் கொள்கை கடை பிடிக்கப் பட்டு வந்துள்ளது.
61 சதவிகித மக்களுக்கு செல்போன் வசதி
அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கான வரிகள் மற்றும் ஒழுங்கு முறைக் கொள்கை முன் னேற்றுவதற்காக இருந்து வந்துள்ளது, இருக்கிறது. அதில் வருவாய் ஈட்டுதல் என்பதற்கு இரண்டாவது இடம்தான் தரப்பட்டுள்ளது. இவை இத்துறையில் முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சிக்கும், தொலைத்தொடர்பு அடர்த்தியில் மிகப்பெரும் தாவுதலையும் கண்டுள் ளது என்பதால் இந்தக் கொள்கைகள் மாற்றப்படவில்லை ( அதாவது, உலகிலேயே இரண்டாவதாக தற்போது 70 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் உலகிலேயே மிகக்குறைந்த கட்டணங் களில் செல் போன் வசதி யைப் பெற்றுள்ளனர் -) கிராமப்புறங்களில் 2010 செப்டம்பர் மாதம் அது 28.46 சதவீதமாகவும், கிராமப்புறம் மற்றும் நகர்ப் புறம் சேர்ந்து மொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி 60.99 சதவீத மாக உயர்ந்துள்ளன. ( அதாவது 100 இந்தியர் களில் சுமார் 61 பேருக்கு செல்போன் வசதி கிடைத் துள்ளது). தற்போது மொத்தம் உள்ள தொலை பேசிகளின் எண் ணிக்கை 72.3 கோடி ஆகும். இது 11வது ஐந்தாண்டுத் திட் டத்தின் இலக்கான 60 கோடிக்கும் அதிகமாகும்.
மேலும், அரசின் மிக அதிகமான வரி இல்லாத வருவாய் இத்துறையில் வருடாந்திர உரிமக் கட் டணமும், அலைக்கற்றை கட்டணமும் ஆகும். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அரசு வருவாய்ப் பங்கீட்டு முறை மூலமாக ரூ.77,038 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
6.2 மெகா ஹட்ஸ்க்கு மேலானஅலைக்கற்றை ஒதுக்கீட்டில், இதன் காரணமாக அரசுக்கு ரூ.36,729 கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. என்னு டைய அமைச்சரவையில் உள்ள விவரங்களின்படி, ஒட்டுமொத்த வருவாயில் ஒரு சதவித வருவாய் பங்கீடு என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட சந்தாதாரர் அடித் தளத்தை அடைந்த தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 6.2 மெகா ஹட்ஸ்க்கு மேல் 10 மெகா ஹட்ஸ் வரை கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் முடிவை அப்போதைய அமைச்சர் பிரமோத் மகாஜன் 2002 ஜன வரி 31 அன்று எடுத்தார்.
அடுத்த அமைச்சர் அருண்ஷோரி 6.2க்கு மேல் 21 மெகா ஹட்ஸ் ஒதுக்கீடு செய்தார். தயாநிதிமாறன் 38.8-ம் நான் 12.6 மெகா ஹட்சும் ஒதுக்கீடு செய்தோம். நான் ஒதுக்கீடு செய்தபோது, 6.2 மெகாஹட்ஸ் என்பது ஒப்பந்த கலவை மிஞ்சி இருப்பதால் 6.2 மெகா ஹட்சுக்கு மேலான அலைக்கற்றைக்கு அர சால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப் படும் என்று ஒரு விதியை வகுத்தேன்.
இது நான் எனக்கு முன் இருந்தவர்கள் மீது குற்றம் சுமத்துகிறேன் என்றோ, அவர்கள் மீது பொறுப்பை சுமத்து கிறேன் என்றோ அர்த்த மாகாது, 1999 முதல் நடைமுறை முழுவதும் தொடர்ந்து வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காதது ஏன்?
இழப்பு என்று கருதப் படுவதற்கு எந்தவிதமான தர்க்க ரீதியிலான அடிப் படையும் கிடையாது. அது பொருத்தமான கணக்கீட்டு முறையும் ஆகாது. கொள்கை மற்றும் செயல் முறையில் ஏற்பட்டிருக்கலாம், வந் திருக்கலாம் என்றெல் லாம் வழிகிடையாது என்பதால் ஊடகங்களின் அடிப்படையில் இழப்பை கணக்கிட முடியாது.
எதிர்க் கட்சிகள் விவாதத்தில் பங்கேற்றால் அவை அம்பலமாகிவிடும் என்பதால், அவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்.
கேள்வி :- ஆனால் நீங்கள் அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டீர்கள் என்பது குற்றச் சாட்டு . . . . ?
அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் ஒரு ஏகபோக சுயநல கும்பலை (உயசவநட) நான் உடைத்து விட்டேன் என்பதால் இந்தக் குற்றச் சாட்டுகள் கூறப்படு கின்றன என்று நம்புவ தற்கு எனக்கு உறுதியான காரணங்கள் உள்ளன. 1999 முதல் நான் பொறுப்பு ஏற்பதற்குச் சில நாட் களுக்கு முன்பு வரை இந்த ஏகபோக சுயநல கும்பலுக்குள் இதே கொள்கை நடை முறைப் படுத்தப்பட்டு வந்த வரை யில், எந்த அமைச் சரும் விமர்சிக்கப்பட வில்லை. 1998-99 ஆம் ஆண்டுக் கான தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை யைப் பாருங் கள்; அது அப்போதிருந்த உரி மங்களை நிர்ணயிக் கப்பட்ட கட்டண முறை யிலிருந்து வருவாய்ப் பங் கீட்டு முறைக்கு மாற்றிய கொள்கையைக் கடுமை யாக விமர்சித்தது. அதில் பல கடுமையான கண்ட னங்கள் இருந்தன. ஆனால் தலைமைத் தணிக்கை அமைப்புக்கே தெரிந்த காரணங்களை 2000-ம் ஆண்டு முதல் அது மவுன காட்சியாக விளங்கி, அடுத்தடுத்து அளித்த அறிக்கைகளில் அது அமைச்சகத்தை எப்போதும் கேள்வி கேட்டதில்லை.
உரங்கள், பெட்ரோ லியப் பொருட்கள், பொது விநியோக முறை யின் கீழ் வழங்கப்படும் அரிசி போன்றவற்றிற்கு அரசு மானியங்கள் தரும் உதாரணத்தைப் பயன் படுத்தி, இந்த இழப்பு கருத்தியலானது, உண்மை நிலையை அடிப்படை யாகக் கொண்டது அல்ல (nடிவiடியேட) என்பதை நான் விளக்குகிறேன். இந்தப் பொருட்களின் சந்தை விலைகளை எடுத்துக் கொண்டு, அவை மிகக் குறைந்த விலைகளில் (அரசு மானி யத்தால்) விற்கப்படுவதால் அரசுக்கு இவ்வளவு ஆயிரம் கோடி இழப்பு என்று சொன்னால், அதை ஏற்க முடியுமா?
அறிவார்ந்த காரணங் களின் அடிப்படையில் ஒரு கொள்கை இருக் கிறது. அவ்வப்போது மாறிவிடும் பிரச்சினை களை முடிவு செய்ய சட்ட ரீதியிலான ஒரு அமைப்பு உள்ளது. எனவே தொலைத் தொடர்புக் கொள்கை தீர்ப்பின்படி, வருவாய்ப் பங்கீட்டு முறைதான் எங்களுக்கு உள்ளது.
கேள்வி:- அலைக் கற்றைப் பிரச்சினையில் நீங்கள் ஏன் சட்ட அமைச் சகம் நிதி அமைச்சகம் ஆகியவற்றின் சேவை களைப் பயன்படுத்த வில்லை? நீங்கள் பிரதம ரின் ஆலோச னையையும் பொருட் படுத்த வில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
அமைச்சர் ஆ. இராசா:- சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை தானாக வருவதில்லை. இருப்பில் உள்ள அலைவரிசை மிகக் குறைவாக இருப்பதால், வந்த ஏராளமான விண் ணப்பங்களை எப்படிக் கையாள்வது என்ற குறிப் பிட்ட பிரச்சினையில் எங்கள் அமைச்சகம் சட்ட அமைச்சகத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பியது. அந்தக் குறிப்பிலேயே நாங்களும் சில வழி முறை களைக் குறிப் பிட்டிருக்கி றோம். இதன்மீது அபிப்பி ராயத்தைக் கூறுவதற்கு மாறாக, சட்ட அமைச்ச கம் இதை அமைச்சர்கள் குழுவிற்கு அனுப்புமாறு ஆலோசனைக் கூறியது. இந்த ஆலோசனை அலைக்கற்றை விலை நிர்ணயிப்பு டனோ அல்லது வருவாய்ப் பங்கீட்டு அளவிலேயோ தொடர்புடை யது அல்ல. அலைக் கற்றை இருப் பைப் பொறுத்து முதலில் வந்த வர்களுக்கு முதலில் சேவை என்று இப் போதுள்ள கொள்கை அடிப்படையில் எங்கள் துறை செல்ல விரும்பிய தால் இது பிரதமரிடம் விளக்கப் பட்டது.
2001 ஆம் ஆண்டு நிர் ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று தொலைத் தொடர்புத் துறை செயலாளருக்கு நிதித்துறை செயலாளர் ஒரு கடிதம் எழுதினார். நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் திடம் (டிராய்) தான் உள்ளது. 2007 -ம் ஆண்டு டிராய் நுழைவுக் கட்ட ணத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மிக உறுதியாக, அறுதி யிட்ட பரிந்துரையை அளித்ததாலும், ஏற் கனவே அந்தக் கட்ட ணத்துக்கு நிதித்துறை அமைச்சகத்தின் பிரதி நிதியும் உறுப்பினராக உள்ள தொலைத் தொடர்பு கமிஷன் ஒப்பு தல் அளித்துள்ள தாலும், டிராய் பரிந்துரையை மேற்கோள் காட்டி தொலைத் தொடர்புத் துறை செயலாளர் நிதித் துறை செயலாளருக்கு பதில் அனுப்பினார் - அத் துடன் அந்த சுற்று முடிந்தது.
அதுபோலவே, அலைக் கற்றை ஒதுக்கீடு மற்றும் சந்தாதாரர் விதி முறை தொடர்பாக பிரத மர் சில குறிப்புகளை அனுப்பி னார். உத்தேசிக்கப்பட் டிருந்த அனைத்துப் பிரச் சினைகள் மற்றும் விதி முறைகள் ஆகியவை பிரத மருக்கு அனுப்பப்பட்டு அது வந்து சேர்ந்ததற் கான பதிலும் வந்தது. கேபினட் அமைச்சர்கள் ஒருவருக் கொருவர் கடி தங்கள் எழுதிக்கொள் வது, கேபினட் அமைச்சர் கள் பிரதமருக்கு கடிதங் கள் அனுப்புவதும் சாதா ரண வழக்கம் தான். எனக்கும் பிரதமருக்கும் இடையில் கடிதப் போக்கு வரத்து இருந்தது என் பதை மட்டும் அடிப்படை யாக வைத்து நான் பிரதமரின் ஆலோசனை யைப் பொருட்படுத்த வில்லை என்று ஊகிக்க முடியாது.
கடைசி தேதி என்பது அர்த்தமற்றது
கேள்வி :- உரிமங்கள் பெறுவதற்கான கடைசி தேதியை நீங்கள் ஏன் அப்பட்டமாக மாற்றினீர்கள்?
அமைச்சர் ஆ.இராசா:- முதலில் விண்ணப்பித்த வர் முதலில் பரிசீலிக்கப் படுவதால், முதலில் வந்த வருக்கு முதலில் சேவை என்ற கொள்கை கடை பிடிக்கப்படும் வரை, கடைசி தேதி என்பது அர்த்தமற்றது. அலைக் கற்றை இருப்பின் தோராய மதிப்பீடு மற்றும் 2009 செப்டம்பர் 25 அன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட வரை யில் பெறப்பட்ட விண் ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அந்தத் தேதி வரையில் பெறப் பட்ட விண்ணப்பங்களின் முதல் தொகுதி பரிசீலிக் கப்பட்டது. ஏதாவது விண்ணப்பம் புறக்கணிக் கப்பட்டதா அல்லது பின் னுக்குத் தள்ளப்பட்டதா என்பதுதான் கேள்வி.
மீதமுள்ள விண்ணப் பங்கள் அலைக்கற்றை இருப்பைப் பொறுத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மீத முள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்பது ஊட கத்துறையில் உள்ள சில தவறான கருத் தாகும்.
பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்
கேள்வி :- நீங்கள் இலக்கிடப்பட்டுள்ளீர் கள் என்று நினைக்கிறீர் களா?
அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் மாற்றங்கள் கூடாது என்று விரும்பும் ஒரு பெரிய (ஆதரவு திரட் டும்) கும்பல் இருப்ப தாக நினைக்க நான் நிர்ப்பந் தக்கப்படுகிறேன். உதா ரணமாக (செல் போன் சேவையை எண்கள் மாறா மல் ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாற்றிக் கொள்ளும்) எண் சேவை மாற்ற முறைக்கு எதிரானவர்கள் சிலர் உள்ளனர். என்னைக் குறி வைத்து பிரகடனப்படுத்தி யுள்ள ஏகபோக சுயநல கும்பல் (ஊயசவநட) ஒன்று உள்ளது. அதற்கு ஊடகத் துறையின் மீது செல் வாக்கு உள்ளது. அதனி டம் மிகப் பெருமளவு நிதி ஆதாரங்களும், பணமும் உள்ளன. இந்த நிகழ்வுகள் சில அரசியல் கட்சிகளால் தி.மு.க.வுக்கு கெட்ட பெயரைத் தேடித் தரப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மக்கள் பயன டைந்துள்ளனர் என்ற உண்மை உள்ளது. அது என்னாலும் அரசாலும் நிர்ணயிக்கப்பட்ட கொள் கைகளாலும், எடுக்கப் பட்ட முயற்சிகளாலும் ஆகும்.
கேள்வி:- கொடுக்கப் பட்ட 122 உரிமங்களில் 85 தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத நிறு வனங்களுக்குச் கொடுக் கப்பட்டுள்ளது ஏன்?
அமைச்சர் ஆ.இராசா:- இதுவும் தெளிவற்ற கருத்து, தலைமை தணிக்கை அதிகாரி அரசி யல் சட்ட ஷரத்து 149 க்கு அப்பால் அதி காரங்களை அபகரிக்க முயலவோ, அரசியல் சட்ட ரீதியில் உச்சநீதி மன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் முறையே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள 32 மற்றும் 226வது பிரிவு களின் கீழ் பிரச்சினை களை முடிவு செய்யவோ முயலக்கூடாது. விண் ணப்ப தேதியில் கம்பெனி கள் பதிவாளரிடம் குறிக் கோள் மாற்றப் பிரிவு, நிகர மதிப்பு, கம்பெனியின் பெயர் ஆகியவை காண் பித்தால் அது தொடர் பாக தணிக்கை அதிகாரி அறிக் கையில் தகுதி யின்மை என்று கூறப்பட் டுள்ளது என்பதை விளக்க வேண்டும். நாங்கள் சுய மாக அளிக்கப்படும் சான்றை அடிப்படை யாகக் கொள்கிறோம். கம்பெனிகள் பதிவாளர் பதிவேட்டில் பதிவு செய் வது என்பது ஒரு நடை முறை. அந்தப் பதிவாள ரிடம் முந்தைய தேதியில் பதிவு செய்யப்படுவது, அதற்கான தீர்மானம் முறையாக நிறை வேற்றப் பட்டு கம்பெனி செயலா ளரால் சான்றிதழ் அளிக் கப்பட்டிருந்தால், எந்தவிதமான சட்ட சிக்க லும் இல்லை என்று சட்ட அமைச்சகம் தற் போது கருத்து தெரிவித் துள்ளது.
கேள்வி : 99 ஆம் ஆண்டு புதிய தொலைத் தொடர்புக் கொள்கை தவறான கொள்கை என்று ஏற்றுக் கொள் வீர்களா?
அமைச்சர் ஆ.இராசா:- இல்லை. அந்தக் கொள்கையின் தீர்ப்பினுடைய வடிவமும், உணர்வும், நிகழ்ந்து வருகிறது. அரசில் கட்சி நிலைமை மாறுவதால் கொள்கைகள் மாற்றப்படக் கூடாது. 99ஆம் ஆண்டு கொள்கை தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசால் உருவாக் கப்பட்டது. இதை பா.ஜ.க. தலைமையிலான அரசு வடிவ மைத்தது என்ப தால் மட்டும் அதை நான் மாற்ற விரும்பவில்லை. அப்போதைய அரசின் தொலைநோக்குப் பார்வை சரியானது என்று நான் நாடாளுமன் றத்திலேயே பேசியிருக் கிறேன்.
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்
கேள்வி : தணிக்கை அதிகாரியின் எதிரான கருத்தைத் தொடர்ந்து என்ன நடக்கிறது? நீங்கள் ராஜிமானா செய்வீர் களா?
அமைச்சர் ஆ.இராசா : அரசியல் சட்டத்தின் கீழ் தணிக்கைக் கான ஒரு நிறுவனமான தலைமை தணிக்கை அதிகாரியை நான் மதிக்கிறேன். இருப் பினும், முறையான நடை முறை தீர்க்கப்படும் வரை யில், ஒரு தணிக்கையரைத் தண்டிக்கவோ அல்லது அரசின் கொள்கை களைப் பற்றி முடிவுக்கு வரவோ தணிக்கை அதிகாரி அறிக்கையை நீதிமன்ற தீர்ப்பாக எடுத் துக் கொள்ள முடியாது.
மேலும், நாடாளு மன்றத்தின் மூலம் 2000 ஆம் ஆண்டில் வைக்கப் பட்ட தலைமை தணிக்கை அதிகாரியின் 1998 - 99 ஆம் ஆண்டுக்கான அறிக் கையிலும் இதுபோன்ற கருத் துக்கள் கூறப்பட்டி ருந்தன. பொதுக்கணக்கு குழுவோ, நாடாளு மன்றமோ, கொள்கையை மாற்ற முடிவு எதுவும் செய்ய வில்லை. பொதுக் கணக்கு குழுவிடமிருந்து எந்த விதமான ஆலோ சனையும், நடவடிக் கையும் வராத நிலையில், அதற்குப் பின்னர், 2010 ஆம் ஆண்டு வரையில் தலைமைத் தணிக்கை அதிகாரி எந்தத் தவறை யும் கண்டுபிடிக்க வில்லை. இதை தணிக்கை அதிகாரிதான் விளக்க வேண்டும்.
*************************
மேலே இருக்கும் திரு ஆ.ராசா அவர்களின் நவம்பர் 14, 2010 தேதி "தி ஹிண்டு" பேட்டியை ஒட்டியே இப்போதைய அவரது வாதங்கள் நீதி மன்றத்திலும் போய்க்கொண்டு இருக்கின்றது.
இதோ சிறிது நேரம் முன்னர் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா அவர்கள் இரு நபர் மற்றும் 20 லட்ச ரூபாய் பிணைத்தொகை, செலுத்த வேண்டும் என்றும், சென்னைக்கு செல்வதாக இருப்பின் நீதிமன்ற உத்தரவு வாங்கி மட்டுமே செல்ல வேண்டும் என்றும் சில நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரங்கள் , ஆரிய அடாவடித்தனங்கள் எல்லாவற்றையும் முறியடித்துவிட்டு பொய் மேகக்கூட்டங்களில் இருந்து தகதகத்தாய சூரியனாக வெளி வந்துவிட்டார். இவரை "உள்ளே" அனுப்பிய கூட்டங்கள் இனி கைகூப்பி தொழுது வரவேற்றாக வேண்டும். அது காலத்தின் கட்டாயம். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!!!
May 13, 2012
அம்மா என்பது ஒரு அவஸ்தையான பதவி போலிருக்கு!!!
முதல்ல இதை படியுங்க மக்கா! http://ultoo.com/login.php?refererCode=2892467E&flag=hide
===================================================================
நல்ல அக்னி நட்சத்திர மதிய மூன்று மணி வெய்யில். காற்றுக்காக வாசல் கதவில் ஒரு கதவும், கொல்லை கதவில் இரு கதவுகளையும் திறந்து விட்டு ஒரு பலகைக்கட்டையை ஹாலின் நடுவே போடும் மனைவியை என் கம்பியூட்டரில் இருந்து கண் அகலாமல் கவனித்து கொண்டு தான் இருந்தேன். அனேகமாக மதிய தூக்கத்துக்கான முஸ்தீபுகள். பாவம்! விடிகாலை மூன்று மணிக்கு எழுந்து வீட்டை சுத்தம் செய்து பூஜை எல்லாம் முடித்து அன்றைய பொழுதில் பாதிக்கு மேல் வேலை வேலை என கழித்து விட்டு கண் அசந்து போகும் நேரம்.
என் மனைவி என் நான்கு வயது மகனை கூப்பிட்டு "தம்பி, தோ பாரு. அம்மாவுக்கு கண் எல்லாம் எரியுது. கொஞ்ச நேரம் தூங்கப்போறேன். அம்மாவை டிஸ்டப் பண்ணக்கூடாது" என சொல்லி ஒருக்களித்து படுத்து கண் அசரும் வரை பவ்யம் காட்டினான்.கண் அசரும் நேரம்....
"அம்மா, அம்மா, அம்மாவ், அம்மாவ்வ் "
கொஞ்சம் திடுக்கிட்டு விழித்து "என்னப்பா செல்லம்"
"தூங்கிட்டியான்னு பார்த்தேன்"
"ம்" மீண்டும் தூக்கம் வரவழைக்கும் முயற்சியில் கண் மூட...
"ம் ன்னு பதில் சொல்றே. அப்டீன்னா தூங்கலையா. அம்மாவ் அம்மாவ்.."
பதிலே சொல்லாமல் கொஞ்சம் அமைதி. அவன் தன் அம்மாவின் கிட்டே போய் இடுப்பின் மீதமர்ந்து முகம் கிட்டே உற்று பார்க்கிறான். அவன் அம்மாவிடம் இருந்து சின்னதாய் குரல் "பரவாயில்ல. அப்டியே படுத்துக்கோ. நீயும் தூங்கு"
மெதுவாய் கண்கள் இமையை புட்டு பார்க்கிறான். திடீரென உணர்ந்த அசூசையான வலியால் அவனை உதறிவிட்டு "தம்பி, இங்க பாரு... அம்மா காலைல மூணு மணிக்கு எந்திருச்சனா... ரொம்ப தூக்கம் வருது. அம்மாவை டிஸ்டப் பண்ணக்கூடாது என்ன சரியா? நான் உன் பர்த் டேக்கு புது ட்ரஸ் எல்லாம் வாங்கி தருவனாம்". அம்மா மெல்ல தன்னையறியாமல் தள்ளிவிட்டதில் அவள் மேலேயே சரிந்த அவன் கொஞ்சம் தள்ளி வந்து...
"அம்மா அம்மா அம்மாவ்... இங்க பாரேன்"
"என்னப்பா?" கண்ணை மூடிக்கொண்டே கேட்க,
"எனக்கு ஜூன் மாசம் தான பர்த் டே"
"ஆமா"
"சவண்டீன் தான"
"ஆமா"
"இப்ப என்ன மாசம்?
"மே"
"அம்மாவ் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மேதான? அப்பன்னா மேக்கு அடுத்ததா ஜூன் மாசம் தான"
"ம்"
"அப்படின்னா நாளைக்கு எனக்கு பர்த் டேவா"
"இல்ல. ஜூன் மாசம்" தூங்க நினைத்து மூடிய கண்களில் மட்டுமல்ல குரலிலும் கொஞ்சம் எரிச்சல் இருந்தது.
"அம்மாவ் அம்மாவ்... இப்ப மே மாசம், நீதான மேக்கு அடுத்தது ஜூன்னு சொன்ன, அப்பன்னா நாளைக்கு தான எனக்கு ஆப்பி பர்த் டே"
"இல்ல அதுக்கு நாள் இருக்கு. பேசாம தூங்கு. இல்லாட்டி எதுனா வெள்ளாடு. அம்மா தூங்கிட்டு வந்துடுறேன்"
"அம்மா, அம்மாவ் அம்மாவ்"
"ம் சொல்லு..."
"உச்சா வருது"
"வருதுன்னா போயேன்"
"நீயும் வா... "
"போப்பா, அம்மா ஒரு பத்து நிமிஷமாவது தூங்கிடுறேன்"
"நெசமா வருதும்மா"
" அப்படின்னா டாய்லெட் கதவை திறந்துட்டு போயேன்"
"அம்மாவ் அம்மாவ் அங்க பல்லி இருக்கு. பயமா இருக்கு"
"அப்பன்னா கொல்லை பக்கம் போ"
"அங்க கருப்பு பூனை நிக்கும்"
"தெரு பக்கம் போ"
"அங்க மிளகாய் செடி இருக்கு. அங்க போக்கூடாதுன்னு அன்னிக்கு சொன்னீல்ல"
தினம் தினம் தெருபக்கம் போக கூடாது என சொன்னாலும் வீம்புக்காக போகும் பையன், இன்றைக்குன்னு பார்த்து திடீர் ஒழுக்கசீலனாக மாறியது நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது.
"அம்மாவ்... எனக்கு அவசரமா வருது.சீக்கிரம் வா"
வாரி சுருட்டி எழுந்து அவிழ்ந்த தலைமுடியை கொண்டை போட்டுக்கொண்டு ஒரு கையால் அவன் கையை தோள்பட்டை பக்கம் கொத்தாக பிடித்து அடுத்த கையால் அவன் பிடறியில் வைத்து கொண்டு தள்ளிக்கொண்டு போகாத குறையாக டாய்லெட் பக்கம் போய் பின்னர் திரும்பி வந்து "தம்பி இப்ப நிம்மதியா? நான் இனிமே தூங்கலாமா? இனிமே டிஸ்டப் பண்ணக்கூடாது" என சொல்லி மீண்டும் பலகைக்கட்டையில் தலை வைத்து படுக்க...
"அம்மாவ், அம்மா தூங்கிட்டியா"
"ஆமாம். பேசாம இரு"
"நான் படம் வரையனும். எனக்கு அக்காவோட ஸ்கெட்ச் பென் வேணும்"
"ஊகூம். நீ செவுத்திலே எழுதுவ. தரமாட்டேன். வேற வெள்ளாட்டு வெள்ளாடு"
"அம்மாவ்... ஆய் வருது"
"டேய் இப்ப தான டாய்லெட் போய் உச்சா போன? அப்ப சொல்ல வேண்டியது தானே?"
"அப்ப வர்ல"
"பொய் சொல்லாத. நான் தூங்கனும்னா உனக்கு பிடிக்காது. அதான?"
"நெசமா படிப்பு மேல சத்தியமா வருது"
"சத்தியம்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. கொஞ்ச நேரம் அடக்கிட்டு இரு. அம்மா தூங்கிட்டு வர்ரேன்"
"அம்மா, அவசரமா வருதும்மா"
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதெப்படி அம்மாக்கள் சாப்பிடும் போதும், தூங்கும் போதும் மாத்திரம் மிகச்சரியாக பசங்களுக்கு கக்கா வருது என்று.
மீண்டும் எழுந்து அதே போல கையை கொத்தாக பிடித்து அழைத்துப்போய் பின்னர் டாய்லெட் கதவு சாத்தப்பட்டது. உள்ளே என்னவோ சம்பாஷனைகள். எனக்கு அத்தனை தெளிவாக காதில் விழவில்லை. மீண்டும் வந்தார்கள். அம்மாக்காரி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. "எனக்கு தெரியும்டா... என்னை தூங்க விடாம செய்யத்தான் நீ இப்டி பொய் சொல்லியிருப்பேன்னு. இனி என்னை எழுப்பினா, உனக்கு சாயந்திரம் எதுனா செஞ்சு தரலாம்னு இருந்தேன். அது கட் தான். ஒரு பத்தே நிமிஷம். அம்மா தூங்கிட்டு வந்துடுறேன். ஓக்கே." என சொல்லிக்கொண்டே மீண்டும் படுக்கை.
"இல்லம்மா. அப்ப வந்துச்சு. ஆனா டாய்லெட் உள்ள போனதும் தான் வர்லை"
எனக்கே கொஞ்சம் பாவமாய் இருந்தது. மெல்ல லேப்டாப்பில் இருந்து தலையை தூக்கி பார்த்தேன். அதற்கு முன்ன நான் தலை தூக்கி இருந்தா "என்னங்க கொஞ்சம் அவனை பார்த்துக்கோங்களேன்" என்றோ அவன் "அம்மாவ்"க்கு பதிலா "அப்பாவ்"ன்னோ கதை மாறியிருக்கும் அபாயம் இருந்ததால் அப்போதெல்லாம் பேசாமல் தலையை லேப்டாப்பின் உள்ளே இருந்து வெளியே எடுக்கவே இல்லை.
"தம்பி இங்க வா, இந்தா ஸ்கெட்ச் பென். உள்ள ரூம்க்கு போய் இஷ்டமான சுவத்துல எதுவேணா எழுது" பையன் ஆர்வமா ஓடிவிட்டான். சுவற்றில் கிறுக்க அவன் அம்மா விடுவதில்லை. அம்மா முழிச்சுகிட்டா இந்த நல்ல சந்தர்ப்பம் அவனுக்கு கிட்டாமல் போய்விடுமே என அவன் சத்தம் போடாமல் ஓடிவிட... ஒரு இரண்டு நிமிடம் கூட ஆகியிருக்காது. பலகையில் தலை வைத்து படுத்திருந்த அம்மாக்காரி விருட்டென எழுந்து "தம்பி தம்பி... எங்க இருக்க? தம்பி... என்னங்க தம்பிய பார்தீங்களா? அய்யோ கொல்லை கதவும் திறந்து கிடக்கு. தெருகதவும் சாத்தலை. நீங்க இருக்கீங்கன்னு நம்பி தானே செத்த கண்ணசந்தேன். அய்யோ தம்பீ தம்பீ...."
"இரு இரு... அவன் இருக்கான். நீ ரெண்டு நிமிஷம் கூட தூங்கலை. அதுக்குள்ள ஏன் பதறிகிட்டு இருக்கே... அவன் இங்க தான் இருக்கான்" என நான் சொல்லிகிட்டே இருக்கும் போது தன் கையில் இருந்த ஸ்கெட்ச் பென்னை தூக்கி போட்டுவிட்டு எதுவுமே கிறுக்காதது போல "அம்மா ... நான் இங்க தான் இருக்கேன்" என சொல்லி அவன் நல்ல பிள்ளையாய் வர அவனை தூக்கி மடியில் வச்சுகிட்டு..."எங்க போயிட்ட. அம்மா கூப்பிடும் போது எங்க இருந்தாலும் "தோ இங்க தான் இருக்கேன் வந்துடுறேன்"ன்னு சொல்லிகிட்டே வந்துட வேண்டாமா? என்ன பிள்ளை போ நீ" என தூக்கம் தொலைத்த தன் சிவந்த கண்களுடன் இழுக்க வாசலில் கேட் திறக்கும் சத்தம் கேட்டது. என் அம்மா தான் வந்தாங்க. மணி அப்போது மாலை நான்கு ஆகியிருந்தது.
"என்ன ஒரே சத்தம்? மணி நாலு ஆச்சுதே. இவன் (என்னை தான்) நாலு மணிக்கு காபி குடிப்பானே? போடலையா? என்ன பிள்ளையை மடில வச்சுகிட்டு கொஞ்சிகிட்டு இருக்கே. கண்ணு வேற நல்லா சிவந்து கிடக்கு. நல்ல தூக்கம் போலிருக்கே. ஹூம் நீங்கல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்கப்பா. நாங்கல்லாம் அந்த காலத்திலே மதியம் ஒரு ரெண்டு மணி நேரம் அக்கடான்னு தூங்க முடியாது. அப்ப தான் மாமனாரோ, மாமியாரோ தண்ணி கொண்டுவா, காபி கொண்டுவான்னு ரொம்ப படித்தி எடுப்பாங்க. சரி சரி தூங்கினவரை போதும். போய் காபி போட்டு இவனுக்கு குடு. இவனுக்கு நேரத்துக்கு காபி குடிக்கலைன்னா தலைவலி வந்துடும்" என "என் அம்மா " வரிசையாக பேசிக்கொண்டே வீட்டுக்குள் வந்தாங்க.
மனைவியின் மடியில் இருந்த என் மகன் "அம்மா உன்னை டிஸ்டப் பண்ணாம தூங்கவிட்டா எதுனா செஞ்சு தரேன்னு சொன்னியே... எனக்கு எள்ளடை செஞ்சு தர்ரியா?" என கேட்க "ம் தர்ரேண்டா" என வாஞ்சையாக வந்தது வார்தைகள் அந்த "அம்மா"விடம் இருந்து!
அன்பான "அன்னையர் தின" வாழ்த்துக்கள்!
===================================================================
நல்ல அக்னி நட்சத்திர மதிய மூன்று மணி வெய்யில். காற்றுக்காக வாசல் கதவில் ஒரு கதவும், கொல்லை கதவில் இரு கதவுகளையும் திறந்து விட்டு ஒரு பலகைக்கட்டையை ஹாலின் நடுவே போடும் மனைவியை என் கம்பியூட்டரில் இருந்து கண் அகலாமல் கவனித்து கொண்டு தான் இருந்தேன். அனேகமாக மதிய தூக்கத்துக்கான முஸ்தீபுகள். பாவம்! விடிகாலை மூன்று மணிக்கு எழுந்து வீட்டை சுத்தம் செய்து பூஜை எல்லாம் முடித்து அன்றைய பொழுதில் பாதிக்கு மேல் வேலை வேலை என கழித்து விட்டு கண் அசந்து போகும் நேரம்.
என் மனைவி என் நான்கு வயது மகனை கூப்பிட்டு "தம்பி, தோ பாரு. அம்மாவுக்கு கண் எல்லாம் எரியுது. கொஞ்ச நேரம் தூங்கப்போறேன். அம்மாவை டிஸ்டப் பண்ணக்கூடாது" என சொல்லி ஒருக்களித்து படுத்து கண் அசரும் வரை பவ்யம் காட்டினான்.கண் அசரும் நேரம்....
"அம்மா, அம்மா, அம்மாவ், அம்மாவ்வ் "
கொஞ்சம் திடுக்கிட்டு விழித்து "என்னப்பா செல்லம்"
"தூங்கிட்டியான்னு பார்த்தேன்"
"ம்" மீண்டும் தூக்கம் வரவழைக்கும் முயற்சியில் கண் மூட...
"ம் ன்னு பதில் சொல்றே. அப்டீன்னா தூங்கலையா. அம்மாவ் அம்மாவ்.."
பதிலே சொல்லாமல் கொஞ்சம் அமைதி. அவன் தன் அம்மாவின் கிட்டே போய் இடுப்பின் மீதமர்ந்து முகம் கிட்டே உற்று பார்க்கிறான். அவன் அம்மாவிடம் இருந்து சின்னதாய் குரல் "பரவாயில்ல. அப்டியே படுத்துக்கோ. நீயும் தூங்கு"
மெதுவாய் கண்கள் இமையை புட்டு பார்க்கிறான். திடீரென உணர்ந்த அசூசையான வலியால் அவனை உதறிவிட்டு "தம்பி, இங்க பாரு... அம்மா காலைல மூணு மணிக்கு எந்திருச்சனா... ரொம்ப தூக்கம் வருது. அம்மாவை டிஸ்டப் பண்ணக்கூடாது என்ன சரியா? நான் உன் பர்த் டேக்கு புது ட்ரஸ் எல்லாம் வாங்கி தருவனாம்". அம்மா மெல்ல தன்னையறியாமல் தள்ளிவிட்டதில் அவள் மேலேயே சரிந்த அவன் கொஞ்சம் தள்ளி வந்து...
"அம்மா அம்மா அம்மாவ்... இங்க பாரேன்"
"என்னப்பா?" கண்ணை மூடிக்கொண்டே கேட்க,
"எனக்கு ஜூன் மாசம் தான பர்த் டே"
"ஆமா"
"சவண்டீன் தான"
"ஆமா"
"இப்ப என்ன மாசம்?
"மே"
"அம்மாவ் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மேதான? அப்பன்னா மேக்கு அடுத்ததா ஜூன் மாசம் தான"
"ம்"
"அப்படின்னா நாளைக்கு எனக்கு பர்த் டேவா"
"இல்ல. ஜூன் மாசம்" தூங்க நினைத்து மூடிய கண்களில் மட்டுமல்ல குரலிலும் கொஞ்சம் எரிச்சல் இருந்தது.
"அம்மாவ் அம்மாவ்... இப்ப மே மாசம், நீதான மேக்கு அடுத்தது ஜூன்னு சொன்ன, அப்பன்னா நாளைக்கு தான எனக்கு ஆப்பி பர்த் டே"
"இல்ல அதுக்கு நாள் இருக்கு. பேசாம தூங்கு. இல்லாட்டி எதுனா வெள்ளாடு. அம்மா தூங்கிட்டு வந்துடுறேன்"
"அம்மா, அம்மாவ் அம்மாவ்"
"ம் சொல்லு..."
"உச்சா வருது"
"வருதுன்னா போயேன்"
"நீயும் வா... "
"போப்பா, அம்மா ஒரு பத்து நிமிஷமாவது தூங்கிடுறேன்"
"நெசமா வருதும்மா"
" அப்படின்னா டாய்லெட் கதவை திறந்துட்டு போயேன்"
"அம்மாவ் அம்மாவ் அங்க பல்லி இருக்கு. பயமா இருக்கு"
"அப்பன்னா கொல்லை பக்கம் போ"
"அங்க கருப்பு பூனை நிக்கும்"
"தெரு பக்கம் போ"
"அங்க மிளகாய் செடி இருக்கு. அங்க போக்கூடாதுன்னு அன்னிக்கு சொன்னீல்ல"
தினம் தினம் தெருபக்கம் போக கூடாது என சொன்னாலும் வீம்புக்காக போகும் பையன், இன்றைக்குன்னு பார்த்து திடீர் ஒழுக்கசீலனாக மாறியது நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது.
"அம்மாவ்... எனக்கு அவசரமா வருது.சீக்கிரம் வா"
வாரி சுருட்டி எழுந்து அவிழ்ந்த தலைமுடியை கொண்டை போட்டுக்கொண்டு ஒரு கையால் அவன் கையை தோள்பட்டை பக்கம் கொத்தாக பிடித்து அடுத்த கையால் அவன் பிடறியில் வைத்து கொண்டு தள்ளிக்கொண்டு போகாத குறையாக டாய்லெட் பக்கம் போய் பின்னர் திரும்பி வந்து "தம்பி இப்ப நிம்மதியா? நான் இனிமே தூங்கலாமா? இனிமே டிஸ்டப் பண்ணக்கூடாது" என சொல்லி மீண்டும் பலகைக்கட்டையில் தலை வைத்து படுக்க...
"அம்மாவ், அம்மா தூங்கிட்டியா"
"ஆமாம். பேசாம இரு"
"நான் படம் வரையனும். எனக்கு அக்காவோட ஸ்கெட்ச் பென் வேணும்"
"ஊகூம். நீ செவுத்திலே எழுதுவ. தரமாட்டேன். வேற வெள்ளாட்டு வெள்ளாடு"
"அம்மாவ்... ஆய் வருது"
"டேய் இப்ப தான டாய்லெட் போய் உச்சா போன? அப்ப சொல்ல வேண்டியது தானே?"
"அப்ப வர்ல"
"பொய் சொல்லாத. நான் தூங்கனும்னா உனக்கு பிடிக்காது. அதான?"
"நெசமா படிப்பு மேல சத்தியமா வருது"
"சத்தியம்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. கொஞ்ச நேரம் அடக்கிட்டு இரு. அம்மா தூங்கிட்டு வர்ரேன்"
"அம்மா, அவசரமா வருதும்மா"
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதெப்படி அம்மாக்கள் சாப்பிடும் போதும், தூங்கும் போதும் மாத்திரம் மிகச்சரியாக பசங்களுக்கு கக்கா வருது என்று.
மீண்டும் எழுந்து அதே போல கையை கொத்தாக பிடித்து அழைத்துப்போய் பின்னர் டாய்லெட் கதவு சாத்தப்பட்டது. உள்ளே என்னவோ சம்பாஷனைகள். எனக்கு அத்தனை தெளிவாக காதில் விழவில்லை. மீண்டும் வந்தார்கள். அம்மாக்காரி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. "எனக்கு தெரியும்டா... என்னை தூங்க விடாம செய்யத்தான் நீ இப்டி பொய் சொல்லியிருப்பேன்னு. இனி என்னை எழுப்பினா, உனக்கு சாயந்திரம் எதுனா செஞ்சு தரலாம்னு இருந்தேன். அது கட் தான். ஒரு பத்தே நிமிஷம். அம்மா தூங்கிட்டு வந்துடுறேன். ஓக்கே." என சொல்லிக்கொண்டே மீண்டும் படுக்கை.
"இல்லம்மா. அப்ப வந்துச்சு. ஆனா டாய்லெட் உள்ள போனதும் தான் வர்லை"
எனக்கே கொஞ்சம் பாவமாய் இருந்தது. மெல்ல லேப்டாப்பில் இருந்து தலையை தூக்கி பார்த்தேன். அதற்கு முன்ன நான் தலை தூக்கி இருந்தா "என்னங்க கொஞ்சம் அவனை பார்த்துக்கோங்களேன்" என்றோ அவன் "அம்மாவ்"க்கு பதிலா "அப்பாவ்"ன்னோ கதை மாறியிருக்கும் அபாயம் இருந்ததால் அப்போதெல்லாம் பேசாமல் தலையை லேப்டாப்பின் உள்ளே இருந்து வெளியே எடுக்கவே இல்லை.
"தம்பி இங்க வா, இந்தா ஸ்கெட்ச் பென். உள்ள ரூம்க்கு போய் இஷ்டமான சுவத்துல எதுவேணா எழுது" பையன் ஆர்வமா ஓடிவிட்டான். சுவற்றில் கிறுக்க அவன் அம்மா விடுவதில்லை. அம்மா முழிச்சுகிட்டா இந்த நல்ல சந்தர்ப்பம் அவனுக்கு கிட்டாமல் போய்விடுமே என அவன் சத்தம் போடாமல் ஓடிவிட... ஒரு இரண்டு நிமிடம் கூட ஆகியிருக்காது. பலகையில் தலை வைத்து படுத்திருந்த அம்மாக்காரி விருட்டென எழுந்து "தம்பி தம்பி... எங்க இருக்க? தம்பி... என்னங்க தம்பிய பார்தீங்களா? அய்யோ கொல்லை கதவும் திறந்து கிடக்கு. தெருகதவும் சாத்தலை. நீங்க இருக்கீங்கன்னு நம்பி தானே செத்த கண்ணசந்தேன். அய்யோ தம்பீ தம்பீ...."
"இரு இரு... அவன் இருக்கான். நீ ரெண்டு நிமிஷம் கூட தூங்கலை. அதுக்குள்ள ஏன் பதறிகிட்டு இருக்கே... அவன் இங்க தான் இருக்கான்" என நான் சொல்லிகிட்டே இருக்கும் போது தன் கையில் இருந்த ஸ்கெட்ச் பென்னை தூக்கி போட்டுவிட்டு எதுவுமே கிறுக்காதது போல "அம்மா ... நான் இங்க தான் இருக்கேன்" என சொல்லி அவன் நல்ல பிள்ளையாய் வர அவனை தூக்கி மடியில் வச்சுகிட்டு..."எங்க போயிட்ட. அம்மா கூப்பிடும் போது எங்க இருந்தாலும் "தோ இங்க தான் இருக்கேன் வந்துடுறேன்"ன்னு சொல்லிகிட்டே வந்துட வேண்டாமா? என்ன பிள்ளை போ நீ" என தூக்கம் தொலைத்த தன் சிவந்த கண்களுடன் இழுக்க வாசலில் கேட் திறக்கும் சத்தம் கேட்டது. என் அம்மா தான் வந்தாங்க. மணி அப்போது மாலை நான்கு ஆகியிருந்தது.
"என்ன ஒரே சத்தம்? மணி நாலு ஆச்சுதே. இவன் (என்னை தான்) நாலு மணிக்கு காபி குடிப்பானே? போடலையா? என்ன பிள்ளையை மடில வச்சுகிட்டு கொஞ்சிகிட்டு இருக்கே. கண்ணு வேற நல்லா சிவந்து கிடக்கு. நல்ல தூக்கம் போலிருக்கே. ஹூம் நீங்கல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்கப்பா. நாங்கல்லாம் அந்த காலத்திலே மதியம் ஒரு ரெண்டு மணி நேரம் அக்கடான்னு தூங்க முடியாது. அப்ப தான் மாமனாரோ, மாமியாரோ தண்ணி கொண்டுவா, காபி கொண்டுவான்னு ரொம்ப படித்தி எடுப்பாங்க. சரி சரி தூங்கினவரை போதும். போய் காபி போட்டு இவனுக்கு குடு. இவனுக்கு நேரத்துக்கு காபி குடிக்கலைன்னா தலைவலி வந்துடும்" என "என் அம்மா " வரிசையாக பேசிக்கொண்டே வீட்டுக்குள் வந்தாங்க.
மனைவியின் மடியில் இருந்த என் மகன் "அம்மா உன்னை டிஸ்டப் பண்ணாம தூங்கவிட்டா எதுனா செஞ்சு தரேன்னு சொன்னியே... எனக்கு எள்ளடை செஞ்சு தர்ரியா?" என கேட்க "ம் தர்ரேண்டா" என வாஞ்சையாக வந்தது வார்தைகள் அந்த "அம்மா"விடம் இருந்து!
அன்பான "அன்னையர் தின" வாழ்த்துக்கள்!
May 8, 2012
புதுகை இடைத்தேர்தல்... டண்டனக்கா ஏ டணக்கனக்கா.... டி ராஜேந்தர் பொது வேட்பாளர் ஆகலாமா?
\\ புதுக்கோட்டை தேர்தல் பொது வேட்பாளராக போட்டியிட டி.ராஜேந்தர் முடிவு - செய்தி \\
புதுகை இடைத்தேர்தலில் டி ராஜேந்தரின் லட்சிய திமுக போட்டியிடுகின்றது என்ற முடிவை வேண்டுமானால் டி ராஜேந்தர் எடுக்கலாமே தவிர பொது வேட்பாளராக அவரே அவரை முடிவு செய்து கொள்ள முடியாது என்கிற விஷயம் எல்லாம் விடுங்கள். அதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் இப்போதைய சூழலில் புதுகையின் நிலை என்ன? அங்கே சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் தோழர் மறைவின் அடுத்த அடுத்த நாட்களில் அதிமுக அங்கே தனது "மெஜாரிட்டி" அரசின் புஜபல பராக்கிரமங்களை எல்லாம் கட்டவிழ்த்து அரசு இயந்திரங்கள் போர்க்கால அடிப்படையில் முடிந்த பின்னர் அவர்களின் கூட்டணி கமிஷன் தேர்தல் தேதியை அறிவிக்கட்டுமா என ஒரு முறைக்கு நான்கு முறை அம்மையாரை கேட்டுக்கொண்டு அறிவித்தது. நல்லவேளை, அவசரத்தில் அம்மையார் தேர்தல் தேதியையும், கமிஷன் அதிமுக வேட்பாளரையும் அறிவிக்கவில்லை:-))
இந்த நிலையில் அங்கே தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் என திமுக தலைமைக்கும் தெரியும். அதனால் இந்திய ஜனநாயகத்தை நோக்கி கேள்வி கேட்கும் விதமாக திமுக இந்த இடைத்தேர்தலில் பங்கு பெறாமல் புறக்கணிப்பு முடிவை எடுத்தது. இத்தனைக்கும் புதுகை மாவட்ட செயளாலர் திரு.பெரியண்ணன் அரசு அவர்கள் வெறும் 3000 ஓட்டுகள் வித்யாசத்தில் தான் வெற்றி வாய்ப்பினை கடந்த சட்ட மன்ற தேர்தலில் இழந்தார்கள். அப்படி இருப்பினும் திமுக தேர்தல் புறக்கணிப்பு செய்த காரணம் ஜெயாவின் ஹிட்லர் பாணி ஆட்சியும், அதற்கு ஒத்துப்போகும் கமிஷனும் தான்.
இப்படியான நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தது. அதில் பெரிய ஆச்சர்யமான விஷயம் எதுவும் இல்லை. தா.பாண்டியன் எப்போதுமே அதிமுகவின் துணை அமைப்பாகத்தான் தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வைத்துள்ளார் என்பது அவர்களது தேசிய தலைமைக்கே தெரிந்தும் எதுவும் செய்ய இயலாத நிலை அவர்களுக்கு. அதை விட்டுவிடலாம். ஆனால் இப்போது அதிமுகவின் ஆசியால் எதிர்கட்சியாக சட்டசபையில் அமர்ந்திருக்கும் தேமுதிக தலைமையோ தனக்கு ஒரு கோடி கொடுத்தால் போட்டி என அதன் பங்கிற்கு மேலும் ஜனநாயகத்தை கேலியாக்கியது. மாக்சிஸ்ட் தோழர்கள் இன்னும் முடிவை அறிவிக்காத நிலையில் டி. ராஜேந்தரின் லட்சிய திமுக மேற்படி அறிவிப்பை சூசகமாக பத்திரிக்கைகளுக்கு கசிய விட்டுள்ளது.பர்கூர் சட்டசபை தேர்தலில் ஜெயாவை எதிர்த்து பெற்ற வாக்குகளும் , பழனி நாடாளுமன்ற தேர்தலில் டி. ஆரின் கட்சி பெற்ற வாக்குகள் எல்லாம் கிட்டத்தட்ட திமுகவின் வாக்குகள் தான் எனினும்..... இப்போதைய புதுகை சூழலில் லட்சிய திமுக என்னும் கட்சி நடத்திவரும் டி ஆர், திமுக பங்கெடுக்காத இந்த தேர்தலை மிகச்சரியாக பயன் படுத்திக்கொள்ள நினைப்பது அருமையான முடிவு தான்.
அதிமுகவுக்கு எதிராக பணம் செலவு செய்வதாகட்டும், அருமையான தேர்தல் பிரச்சாரமாகட்டும், டி ஆர் கலக்குவார் என்பதில் எள் முனை அளவு சந்தேகமும் இல்லை. அதே போல திமுக வாக்குகளும், அதிமுகவால் பழிவாங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்குகளும் நிச்சயமாக டி ஆர் கட்சிக்கு விழ 100 சதம் வாய்ப்புகள் உள்ளன. இதில் காங்கிரஸ் (அதாவது இப்போது திருநாவுக்கரசர் காங்கிரசில் இருப்பதால்) குறுக்கே புகுந்து குட்டையை குழப்பாவிடில், தேமுதிகவுக்கு யாரும் ஒரு கோடி கொடுத்து நீயும் ஆணிபுடுங்கு என சொல்லாவிடில் டி ஆர் புதுகையில் அதிமுகவுக்கு பெரும் சவால் தான்.
சரி, டி ஆர் அவர்களின் லட்சிய திமுக இந்த இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை நிறுத்தினால் ஒன்று அவரே வேட்பாளர் அல்லது அவரது மனைவி உஷா ராஜேந்தர் தான் வேட்பாளர் என்பது ஊர் அறிந்த ரகசியம். அப்படி இருக்க அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய இன்று தமிழக சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் வைத்து இருக்கும், இப்போது எஸ்.டி.ஆர் என புதுநாமகரணம் சூட்டப்பட்ட சிம்புவும் கூட பிரச்சாரத்துக்கு வருவார். ஆக புதுகையில் தேர்தல் களம் சூடாக்க இதுவும் ஒரு காரணமாக அமையும். தேமுதிக ஒரு கோடி கொடுத்தால் தேர்தலில் நிற்பேன் என சூசகமாக சிக்னல் கொடுத்து இருப்பதால் ஒரு கோடிக்கு பதில் இரண்டு கோடி வேண்டுமானால் தருகிறேன், நிற்கவே வேண்டாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் பேரம் பேசி கொடுக்கக்கூடிய தெம்பும் திராணியும் பணபலமும் கூட டி.ஆர் அவர்களுக்கு உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. புதுகையில் கனிசமாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கூட "பொது வேட்பாளரை" ஆதரிப்போம் என அறிவிப்பு செய்து விட்டது.
மீதம் இருப்பது காங்கிரஸ் மற்றும் மாக்சிஸ்ட் கட்சி மட்டுமே. ஆனால் திமுக இப்போது திடீரென டி ஆரை ஆதரிப்பதாக சொன்னால் காங்கிரஸ் அங்கே நின்று டெபாசிட் போகும் நிலைக்கு தன்னை ஆக்கிக்கொள்ளாது. ஆகையால் டி ஆரின் லட்சிய திமுக அங்கே பொதுவேட்பாளர் ஆக வாய்ப்பு அதிகம். (அதாவது திமுக தலைமை லட்சிய திமுகவை ஆதரிப்பதாக சொன்னால்) அதில் இப்போதைக்கு முட்டுக்கட்டையாக இருக்கப்போவது மாக்சிஸ்ட் கட்சி மட்டுமே.
மாக்சிஸ்ட் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அல்லது அதிமுக என்னும் ஏதாவது ஒரு கட்சியில் கூட்டணி வைத்தால் மட்டுமே இரண்டு எம் பிக்களையாவது மத்திக்கு அனுப்ப இயலும். அப்படி அனுப்பினால் மட்டுமே தமிழக மாக்சிஸ்ட் கட்சிக்கு கொஞ்சமாவது மதிப்பு இருக்கும் அதன் தேசிய தலைமையில். மாக்சிஸ்ட் ஒன்றும் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய தலைமை போல தா.பாண்டியனிடம் கட்சியை கொடுத்து அதிமுகவின் கிளைக்கழகாம இருக்க சொல்லி வேடிக்கைப்பார்க்க! ஆக திமுகவின் ஆதரவோ அல்லது கூட்டணியோ நாடாளுமன்ற தேர்தலில் வேண்டுமானால் மாக்சிஸ்ட் "பொதுவேட்பாளருக்கு" ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். திமுக கூட்டணி என்பது ஒரு நம்பகமான கூட்டணி என்பது மாக்சிஸ்ட் தோழர்களுக்கு நன்கு தெரியும். ஏனனில் 2006ல் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்த போது நடந்த ஒரு ஒப்பந்தப்படி ஒரு ராஜ்யசபா எம் பி தருகிறேன் என சொல்லி அதையும் கொடுத்த கட்சி திமுக. ஆனால் அதிமுக என்பது அதன் பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.மகவுக்கு அது போல ஒப்பந்தம் போட்டும் பின்னர் அன்புமணிக்கு கொடுக்கவில்லை என்பதும், பாமகவினரோ "ஒப்பந்தப்படி ராஜ்யசபா சீட் எங்கே?" என போய் கேட்கவும் திராணியற்று கூட இருந்தனர் என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம்.ஆக மாக்சிஸ்ட் தோழர்கள் என்ன முடிவு செய்யப்போகின்றனர் என்பது இதை எல்லாம் வைத்தே இருக்கும். ஆனால் அதே நேரம் வரக்கூடிய ராஜ்யசபா தேர்தலில் கனிமொழி அவர்களின் பதவிக்காலம் முடியும் நேரம். அவர் மீண்டும் எம் பி ஆக வேண்டும் எனில் இப்போது திமுகவில் இருக்கும் சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை போதாது. அதற்கு மாக்சிஸ்ட் தோழர்களின் உதவியும் வேண்டும் என்கிற பகடைக்காய் மாக்சிஸ்ட் கையில் உள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது கூட்டி கழித்து மாக்சிஸ்ட் தோழர்கள் தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
டி .ஆர் அவர்களின் லட்சிய திமுகவுக்கு , திராவிட முன்னேற்ற கழகம் பொது வேட்பாளர் ஆக ஆதரவு கொடுத்தால் அதிமுகவின் பண பலத்தை டி ஆர் கட்சி சுலபமாக எதிர்கொள்ளும். ஆனால் மாக்சிஸ்ட் தோழர்கள் தேர்தலில் பொது வேட்பாளராகவோ அல்லது தனித்தோ நின்றால் அந்த அளவு பணம் செலவழிக்க முடியாது என்பதுதான் உண்மை.
ஒரு வேளை திமுக, டி ஆரின் லட்சிய திமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் திமுகவினர் டி ஆருக்கு தேர்தல் வேலை செய்யவோ, பூத் கமிட்டியில் உதவுவதோ எவ்வித சுனக்கமும் இருக்காது. ஏனனில் டி ஆர் இதே திமுகவில் எம் ஜி ஆர் உயிருடன் இருந்த போது சந்தித்த பெரிய தோல்வியான உள்ளாட்சி தேர்தல், மயிலாடுதுறை, அண்ணாநகர் இடைத்தேர்தல் ஆகியவற்றில் திமுகவுக்காக பணியாற்றியவர். திமுகவின் பூங்காநகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனி கட்சி கண்ட பின்னரும் கூட 2006 சட்ட மன்ற தேர்தலில் திமுகவுக்காக வாக்கு சேகரித்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்தவர். இந்திரா அம்மையார் கலைஞரை "இவர் ஆதரித்தாலும் தீவிரமாக ஆதரிப்பவர், எதிர்த்தாலும் தீவிரமாக எதிர்ப்பவர்" என சொன்னது போல டி ஆர் அதே போன்ற குணம் கொண்டவர். இவரது லட்சிய திமுகவுக்கு இப்போது திமுக ஆதரவு அளிக்கும் பட்சத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவரது திமுக சார்பு பிரச்சாரம் அதாவாது இப்போது பாக்கியராஜ் கூட திமுகவுக்காக இல்லாத நிலையில் உபகாரமாக இருக்கும். இவர் அடித்தட்டு மக்களிடம் அவர்கள் மொழியில் ஜெயா அரசின் அக்கிரமங்களை பேசும் போது அது சரியாக போய் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதே போல இப்போது இருக்கும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு இதில் எல்லாம் மக்கள் உண்மையிலேயே துவண்டு போய் ஒரு "மாற்றம்" வேண்டும் என நினைத்து வாக்களித்தால் டி ஆர் வெற்றி பெறக்கூட வாய்ப்பு உண்டு. அப்படி நடந்தால் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்பது இன்னும் பிரமாதமாக வெளி உலகுக்கு தெரியவரும். அதிமுகவின் வேட்பாளர் வெற்றி பெற்றால் "அம்மா" புகழ் பாட இன்னும் ஒரு கன்னுக்குட்டி. டி.ஆர் வெற்றி பெற்றால் அடங்கா மாட்டுக்கு ஒரு நல்ல "கடிவாளம்".
என்ன நடக்க போகின்றது என பார்ப்போம். ஆனால் டி ஆர் என்பவர் அரசியலில் கிண்டலுக்கும் கேலிக்கும் மட்டும் உரியவர் இல்லை ... அதையும் தாண்டி திமுகவுக்கு பயன் படுபவர்.... ஆனால் அதே நேரத்தில் அவரை அளவுக்கு அதிகமாக உயர்தியும் விடக்கூடாது என்பதிலும் திமுக கவனமாக இருக்க வேண்டும். இருக்கும்!
Labels:
ஆதரவு,
டி.ராஜேந்தர்,
திமுக,
புதுகை இடைத்தேர்தல்,
பொதுவேட்பாளர்
Subscribe to:
Posts (Atom)





.jpg)