பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 27, 2007

அபிஅப்பாவும் அபுதாபியும்!!! பாகம் # 2

இப்படியாக...... அபிஅப்பாவின் இரண்டாம் ஆண்டு இந்த வலைப்பூவில் ஆ"ரம்'பிக்கிறது இன்று முதல்! இந்த பதிவின் முதல் பாகத்தை இங்கே பாருங்க!

அப்படியாக நாங்க நடுங்கி கொண்டிருந்த போது முதல் சீன்ல வந்து ஒன்பது வார்த்தை டயலாக் பேசும் ஆடிட்டர் நண்பர் மாத்திரம் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கவே எங்க டைரக்டர் அவரிடம் போய் "என்ன ஓய் எப்படி டயலாக் டெலிவரி எல்லாம் ஒழுங்கா இருக்குமா தொல்ஸ் எழுதி கொடுத்த டயலாக் எல்லாம் படிச்சாச்சா?"ன்னு கேக்க அவரோ "சி ஏ சிங்கிள் அட்டெம்ட்... "ன்னு சொல்லி மணி ஆட்டி காமிக்க அவர் மேல் நம்பிக்கை வந்துடுச்சு எல்லாருக்கும்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அறிவிப்பு எங்க நாடகத்துக்கு! ஏகப்பட்ட கைத்தட்டல், எனக்கு அந்த நிகழ்ச்சிக்கு பின்ன கிட்டதட்ட கைதட்டல்ன்னாவே 1 வருடத்துக்குஅலர்ஜி ஆகியதுன்னா பார்த்து கோங்க எந்த அளவு நடுங்கியிருப்பேன்ன்னு. முதல் காட்சி திரை விலகியது. நம்ம ஆடிட்டர் மணியை தூக்கிட்டு கிளம்பிட்டார் குருக்கள் வேஷத்துல. நான் எட்டிகூட பார்க்கலை பயத்துல! அப்படியே கண்ணை மூடிகிட்டேன். விசில் சத்தமும், சிரிப்பும் என் காதை கிழித்து குடையவே "ஆஹா நம்ம ஆடிட்டர் அசத்திட்டார்"ன்னு நெனச்சுகிட்டேன். பின்ன நானே "அப்படி ஒன்னும் இல்லியே அந்த சீன்ல கைதட்டி விசில் அடிக்கும் அளவு என நினைப்பு வரவே கொஞ்சம் பயம் வந்தது.

பாரத போரில் திருதிராஷ்டிரனுக்கு லைவ் ரிலே கொடுக்கப்பட்டது போல எனக்கு பிளேடு பக்கிரி "ஆடிட்டர் மணி அடிக்கிறார், வசனம் பேச போரார்"ன்னு லைவ் ரிலே வேற இந்த லெட்சனத்துல. விசில் சத்தம் முடிந்ததும் பிளேடு பக்கிரி வந்தார். முகமே பேயடிச்ச மாதிரி இருக்கு. என்னன்னு கேட்டேன் "ஆடிட்டர் ஆடிட்டார்"ன்னு சிம்ப்பிளா சொன்னார். என்னதான் நடந்தது சொல்லுய்யான்னு சொன்னதுக்கு அவர் பேசின வசனத்தை அப்படியே சொன்னார் பிளேடு பக்கிரி!

//''(மணியடிச்சுகிட்டே வந்து) நன்னா இருங்கோ,
ஷேமமா இருங்கோ,
இந்த உலகமே சுபிட்ஷமா வையிடா ஆண்டவா
(அப்போது மணியடிப்பதை நிறுத்தி விடனும்) ....'' //

நான் எழுதி கொடுத்ததை எல்லாத்தையும் எல்லாத்தையுமே மணல்கயிறு செவிட்டு அப்பா கேரக்டர் மாதிரி கொஞ்சம் கூட ஏத்தம் இறக்கம் இல்லாம சொல்லி நாங்கள் போட இருந்த சமூக நாடகத்தை காமடி நாடகமாக ஆக்க விதை போட்டுட்டார் ஆடிட்டர்.மனப்பாடம் செய்யலாம் தப்பில்லை அதுக்காக இப்படியா?

நாடகத்தின் கதை என்னவோ இது தான். அதாவது ஒரு சேட்டுகிட்ட ஒருத்தன் வட்டிக்கு பணம் வாங்கி அவஸ்தை படுவது போலவும், சேட்டு ஒரு தமிழனை மிரட்ட இன்னுமொரு தமிழனான பிளேடு பக்கிரியை வைத்து மிரட்டுவதாகவும் இப்படியாக போகும் கதை!

ஆடிட்டர் பண்ணின காரியத்துக்கு டைரக்டர் கிட்ட எனக்கும் பக்கிரிக்கும் திட்டு விழுகுது. அடுத்தது என் சீன். எப்படி ஒன்னாம் வகுப்பு போக மாட்டேன்னு அடம் பிடிச்சனோ அப்படி கெஞ்ச ஆரம்பிச்சுட்டேன். அடுத்த சீனுக்கு வாரேன்ன்னு. ஒரு வழியா மேடைக்கு அழைத்து வரப்பட்டேன்ன்னு சொல்லுவதை விட மனோகரா மாதிரி இழுத்து வரப்பட்டேன். இப்போ உதறல் இன்னும் ஜாஸ்தியா போச்சு. என்னிடம் கடன் வாங்கியவராக நடிப்பவர் டைரக்டர் தான். சீன் படி நான் கோவமா இருக்கனும், என்னை பார்த்து கடன் வாங்கிய கேரக்டர் நடுங்கனும். ஆனா நடந்தது வேற!

நான் கட கடன்னு நடுங்கிகிட்டு இருக்கேன். முதம் முதலா பைக் ஓட்டிட்டு கீழே இறங்கியதும் கால் ரெண்டும் நடுங்குமே அது மாதிரி நடுங்க டைரக்டர் கடுப்பாகிட்டார். என்ன நெனச்சாரோ தெரியலை மேடைன்னு பார்க்காம திட்ட ஆரம்பிச்சுட்டார்!

கடன் வாங்கிய கேரக்டரில் இருந்த டைரக்டர்: "என்னய்யா எத்தனை தடவ சொன்னேன் நடுங்காதே நடுங்காதே, அதுவும் என்னை பார்த்தா ஏன் இப்படி நடுங்கி சாகறே"

சேட்டாகிய நான்: "நானாவா நடுங்கறேன், உங்களை பார்த்தவுடன் தானா உதறல் எடுக்குது"

நாங்கள் இருவரும் நாடக மேடை என்பதை மறந்து (நாடகம் தான் ஊத்திகிச்சேன்ற நினைப்பிலே) தனிப்பட்ட முறையில் பேசிகிட்டோம் மைக்கில்:-))

அப்போது ஒரு பார்வையாளர் பகுதியில் இருந்து ஒரு கிரீன் தமிழன் எழுந்து " சபாஷ், முதன் முறையா ஒரு சேட்டு தமிழன் கிட்ட கடன் வாங்கிட்டு பயப்படராண்டா"ன்னு குரல் கொடுக்க டைரக்டர் தலையிலே பல்பு எரிய, நான் அப்பவும் டியூப் லைட்டாகவே இருக்க டயலாக் எல்லாம் மாறிடுச்சு!

டைரக்டர்: யோவ் சேட்டு என் கிட்ட வாங்கின பணத்துக்கு வட்டியும் கட்டலை அசலும் தரலை, ஆனா என்ன பார்த்தா மட்டும் கை கால் உதறுதா நடிக்கிறயா?

அப்பவும் எனக்கு கதை மாறியது எல்லாம் தெரியாது!

நான்: இல்ல ஜி, நெசமாவே கை கால் நடுங்குது நடிக்கலை!

டைரக்டர்: ஒரு சேட்டு தமிழனை பார்த்து ஜி ன்னு சொல்ல வச்சேன் பாருய்யா அதான் தமிழன், சரி நீ வாங்கின பணம் எப்ப தருவ!

நான்: என்ன (வசனத்தை) மாத்தி மாத்தி பேசறீங்க ஜி! (மனசுகுள்ள அய்யய்ய டைரக்டரும் உளற ஆரம்பிச்சுட்டார், என் வசனத்தை பேசறார்ன்னு நெனச்சு கிட்டேன்.

டைரக்டர்: நானா சேட்டு மாத்தி மாத்தி பேசறேன், நீ தான்யா, இப்ப தாரேன் அப்ப தாரேன்ன்னு மாத்தி மாத்தி பேசற, இரு உன்னை நல்லா கவனிக்க ஒரு பார்ட்டி வருது.

ஆக்சுவலி அந்த வசனம் நான் பேசனும், அப்போ பிளேடு பக்கிரி வந்து குதிக்கனும், ஆனா பிளேடு பக்கிரி வந்து குதிக்காமல் யாரோ தள்ளி விட வந்து விழுந்தார். கூட்டத்தில் ஒரே சிரிப்பு, செம காமடி டிராமாவா ஆகிடுச்சு! அப்போ பக்கிரிக்கு எழுதி கொடுத்த வசனம் "பேமானி, கய்த" இப்படியாக போகும்.

ஆனா வந்து விழுந்த பக்கிரிய பார்த்தா ரவுடி மாதிரி இல்ல முகம் முழுக்க ஒழுகிய அத்தரை துடைத்து துடைத்து பேய் மாதிரி இருந்தார்.

எனக்கு அப்பவும் நடுக்கம் நிற்கலை. டைரக்டர் பக்கிரிகிட்ட முனு முனுன்னு "வசனம் பேசுங்க" ன்னு சொல்ல பக்கிரி "பே பே பே"ன்னு சொல்றாரெ தவிர "பேமானி"ன்னு முழுசா சொல்ல மாட்டேன்ன்னு அடம் பிடிக்கிறார்.

இப்பவும் கூட்டத்தில் சிரிப்பு. எனக்கு பயத்திலும் மானம் போகுது. அப்பவும் டைரக்டர் சமாளிச்சு கிட்டே "பத்தியா சேட்டு உன்னை மனுஷலால பயமுறுத்த முடியாதுன்னு தெரியும் அதான் புளிய மரத்துல இருந்து பேயை கூட்டி கிட்டு வந்துட்டேன்"ன்னு என்னன்னவோ சொல்ரார். எனக்கும் பக்கிரிக்கும் என்ன நடக்குதுன்னே புரியலை.

அப்போ டைரக்டர் "சரிய்யா சேட்டு நீ ரொம்ப நாளா தமிழ் நாட்டுல இருந்து ஹிந்திய மறந்து போயிருப்பே, அதனால "மேரா நாம் ரங்லால்"ன்னு சரியா சொல்லு, பின்ன நான் வட்டியும் அசலும் தள்ளுபடி செஞ்சுடறேன்"ன்னு சொல்ல நான் கடுப்பாகிட்டேன். என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல கூட்டமோ சிரிச்சு கிட்டே இருக்கு...நடுக்கமோ இன்னும் நிக்கலை.. கடுப்பாகி சொன்னேன் " மேரா நாமம் ரங்கநாதரோடது" .. கூட்டம் இப்படியா சிரிக்க பின்ன என் சீன் முடிஞ்சு உள்ளே போன பின்ன தான் கதை மாறிய விஷயம் தெரியும்.

ஒரு வழியா நாடகம் முடிஞ்சு, தலைவர் ரொம்ப பாராட்டினார் மைக்கிலே!

".... நாடகத்தில் "கோபுரங்கள் சாய்வதில்லை" படத்தின் வினு சக்கரவர்த்தியின் நகைச்சுவை சாயல் தெரிஞ்சாலும் இது நல்ல காமடியா இருந்துச்சு, அதிலும் அந்த படத்தில் வரும் ஈட்டிகாரனை விட தொல்ஸின் நடுக்கம் அதிகமா "நேச்சுரலா" இருந்துச்சு!(அடபாவமே நேச்சுரல் தானே) ...." இப்படியாக பேசி கிட்டு இருந்தார்.

நான் மட்டும் பேட்டி கொடுத்து கொண்டிருந்தேன்)

எப்படிங்க தொல்ஸ் இப்படியெல்லாம், சரி அடுத்த நிகழ்ச்சியில என்ன கேரக்டர்ல நடிக்க போறீங்கன்னு கேட்டவங்களுக்கு “இமயமலை சாமியார் குளிரில் நடுங்கும் கேரக்டர் பண்றேன்”ன்னு சொல்லிகிட்டு இருந்தேன். எங்க டைரக்டர் என்னை சுடுவது போல பார்த்து கொண்டிருந்தார்!

இப்படியாக ஜாலியா இருந்த அபுதாபி தமிழ் சங்கத்தின் எல்லா உருப்பினர்களுக்குமே தலைவர் ஆகிடனும்னு ஆசை வந்து பின்ன “ஆனைக்கு அல்வா வாங்கிய வகையில்” செலவு கணக்கு எல்லாம் ஆகி ஒரு வழியா முடிஞ்சு போச்சு எல்லாம். பின்ன எல்லாரும் 1 வருஷத்துக்கு அமைதியா அவங்க அவங்க வேலையை பார்க்க ஆரம்பிச்சுட்டோம். நானும் அதன் பின் 2000 வாக்கிலே துபாய் வந்துட்டேன்.

12 comments:

  1. மேரா நாம் ஜோக்கர்னு சொல்லியிருக்கலாம்.... பின்னிட்டீங்க..

    ReplyDelete
  2. மொத்தத்துல சொதப்பல்!!!

    ReplyDelete
  3. ஆனா அதை சொன்ன விதம் சூப்பர்

    ReplyDelete
  4. //ஆனைக்கு அல்வா வாங்கிய வகையில்//

    அண்ணாத்தே உங்களுக்கு ஆனை கிடைச்சுதா இல்ல அல்வா கொடுத்துட்டாங்களா :))))))))))

    ReplyDelete
  5. //மங்களூர் சிவா said...
    மொத்தத்துல சொதப்பல்!!!
    //
    சிவா! நீங்க அதைத்தானே சொல்றீங்க...?!?!

    ReplyDelete
  6. //மங்களூர் சிவா said...
    ஆனா அதை சொன்ன விதம் சூப்பர்
    //.

    அதானே பார்த்தேன் :)

    ReplyDelete
  7. ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்..
    :)

    ReplyDelete
  8. எர்ரர் னு வருது, வம்பு, ஏற்கெனவே, உங்க "பொங்க"ள்" படிச்சதிலே இருந்து பயமா இருக்கு, நல்ல பதிவு, அப்புறமா வந்து படிக்கிறேன், பின்னூட்டம் போடறதுன்னா முதலில் கண்ணாடியை பத்திரமா வைக்கணும்!:P அப்புறம் இந்த இணைய இணைப்பு வேறே! வரேன் மெதுவா!

    ReplyDelete
  9. Hi Abi Appa,

    Unga blog lam office la padikka koodathunu intha pathivu moola nalla kamichitinga... Enaku sripa adaka mudiyama enga PM kitta mattikitathaiye thani pathi va podalam..Unga style a. Keep on kalakungo...

    Vanitha

    ReplyDelete
  10. //நான் கட கடன்னு நடுங்கிகிட்டு இருக்கேன். முதம் முதலா பைக் ஓட்டிட்டு கீழே இறங்கியதும் கால் ரெண்டும் நடுங்குமே அது மாதிரி நடுங்க டைரக்டர் கடுப்பாகிட்டார். என்ன நெனச்சாரோ தெரியலை மேடைன்னு பார்க்காம திட்ட ஆரம்பிச்சுட்டார்!

    கடன் வாங்கிய கேரக்டரில் இருந்த டைரக்டர்: "என்னய்யா எத்தனை தடவ சொன்னேன் நடுங்காதே நடுங்காதே, அதுவும் என்னை பார்த்தா ஏன் இப்படி நடுங்கி சாகறே"

    சேட்டாகிய நான்: "நானாவா நடுங்கறேன், உங்களை பார்த்தவுடன் தானா உதறல் எடுக்குது"//

    அன்னிக்குப் படிக்க முடியலை, திரும்பிட்டேன், பின்னூட்டம் கூட வராதுன்னு நினைச்சால் வந்திருக்கு, இப்போத் தான் படிச்சேன், அது சரி, துபாயிலும் தமிழ்ச்சங்கம் உண்டே? அங்கே நாடகம் போடலையா? சமையல் கலை, நாடகக் கலை, ஒண்ணு விடலை, சகலகலா வல்லவனா ஆயிடப் பார்க்கிறீங்க போல! :P

    ReplyDelete
  11. //அதன் பின் 2000 வாக்கிலே துபாய் வந்துட்டேன்.
    //

    'வாக்'கிலேயே வந்தீங்களா அம்புட்டு தூரமும்... :-))


    உங்களை விட அந்த டைரக்டருக்கு டைமிங் சென்ஸ் ஜாஸ்தி போல :-))

    ReplyDelete
  12. பேசாம நீங்களே டைரடக்கரா ஆகிருக்கலாம்.


    //'வாக்'கிலேயே வந்தீங்களா அம்புட்டு தூரமும்... :-))//

    இதுக்குதான் பயங்கரமா சிரிச்சேன். :))

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))