பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 5, 2009

வீரசேகர விலாஸ்!!! பாகம் # 6

"வீரசேகரவிலாஸும், மாமாவ்வும், சீட்டு கச்சேஎரியும் கூடவே ஒரு கல்யாணமும்" பாகம் # 5 ஐ இங்க போய் படிச்சா இப்ப படிக்க போகும் பாகம் # 6 புரியும்!

**********************************


இப்படி ஒரு வழியாக பக்கிரியின் கச்சேரி முடிந்து களைந்த பின் மாமாவின் கச்சேரி திரும்பவும் களை கட்ட தொடங்கியது. அந்த இரவு பண்ணிரண்டு மணிக்கு வீரசேகர விலாஸ் மாத்திரம் தூங்காமல் தன் அடுத்த நாள் வைபோகத்துக்காக தயாராகி கொண்டிருந்தது.

அந்த சத்திரத்தின் நாலாம் கட்டில் தான் கோட்டு அடுப்பு நீளமாக இருக்கும் மேற்கு பக்கமாக. ஆனால் கிழக்கு பக்கமாக எட்டு ஆட்டுகல்லும், எட்டு அம்மி கல்லும் வரிசையாக இருக்கும். அடுத்த நாள் இட்லிக்காக எட்டு ஆட்டுகல்லிலும் மணி அய்யர் அழைத்து வந்திருந்த பெண்கள் சிலரும், அவரிடம் அப்போது இருந்த சில புதிதாய் சேர்ந்த சப்ளை பாலகர்களும் மாவாட்டி கொண்டிருந்தனர். அரிசி மாவு ஆட்டும் ஆட்டு கல்லில் சத்தம் இல்லாமலும், உளுந்து மாவு ஆட்டும் ஆட்டு கல் பொலக் பொலக் என சலம்பிகிட்டும் இருந்தது. திண்ணை வரை அந்த சத்தம் கேட்டது. கச்சேரியில் இருந்த மணி அய்யர் "டேய் உளுந்து பூத்துடுச்சு போலருக்கு" என அதன் சத்தத்தை வைத்தே கத்தி கொண்டிருந்தார்.

சில வயசானவங்க ஆண்கள் ஹாலிலும், பெண்கள் அந்த கல்யாண முற்றத்தின் சுற்றியும் இருந்த கூடம், தாழ்வாரத்திலும் படுத்து உறங்கினர்.
அதல்லாம் போகட்டும். சினிமாவுக்கு போனாங்களே பெண்கள் எல்லோரும். அவங்க என்ன ஆனாங்கன்னு பார்ப்போம்.பிரிந்து பிரிந்து சத்திரத்தை விட்டு வந்தவர்கள் எல்லோரும் அத்தை சொன்ன மாதிரியே கச்சேரி பிள்ளையார் கோவிலில் சேர்ந்து புடவை முந்தியை எடுத்து கழுத்தை சுற்றி கொண்டு ஏதோ ஒரு பெரியம்மா கதை முழுக்க சொல்லி கொண்டே வர சில இள வட்ட சித்திகள் "அய்யோ வாங்கடி முன்னால போவோம், அக்கா வுட்டா வணக்கம் போட்ட பின்ன தான் கதையை நிப்பாட்டும்" என சொல்லி நடையை எட்டி போட இதோ கேர்ள்ஸ் ஹை ஸ்கூல் பிள்ளையார் வந்தாச்சு. மீனாட்சி அத்தை ஓடிப்போய் பத்து பைசா உண்டியலில் போட்டு விட்டு"எப்புடியாவது டிக்கெட் கடக்கினும் புள்ளயாரே"ன்னு வேண்டிகிட்டு வர மற்றவர்கள் சிரித்து கொண்டே பியர்லெஸ் தியேட்டரை அடைந்தனர்.
இரண்டாம் கிளாஸ் டிக்கெட் வாங்க பூபதியை (பியர்லெஸ் தியேட்டர் ஊழியர்) காக்கா பிடிக்க அனுப்பப்பட்ட சிவாஜி அண்ணன் எங்கும் தென்படவில்லையாதலால் நம் பெண்கள் கியூவில் நிற்க வேண்டியதா போச்சு. அங்கே போய் பார்த்தால் தான் தெரியுது கல்யாண மண்டபமே அங்கே தான் நிற்கின்றது. அதிலே ஒரு பெரியம்மா "அட நாம ஜம்முன்னு சத்தரத்துல இருந்தே தைரியமா வந்துருக்கலாம். இங்க பாரு பொண்ணு வீட்டுகாரிங்க எல்லாம் இங்க தான் நிக்கிறாங்க"ன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே ஒரு அத்தை "அய்யய்யோ அந்த வெளிநாட்டுகாரி மாடி டிக்கெட்டுக்கு நிக்கிறா பாரு, எனக்கு மானமே போவுது அத்தாச்சி, பேசாம நா எங்க அத்தான் அங்க நிக்கிறாங்க பாருங்க அவங்க கூட போயி மாடி டிக்கெட் எடுத்து சோபாவுல குந்திகிட்டு படம் பாத்துட்டு வாரேன். போம்போது என்னையும் கூட்டிகிட்டு போங்க" என சொன்னதும் மத்த எல்லாரும் அந்த அத்தையை பிடித்து கொள்ள ஒரு வழியாக தோளில் போத்திகிட்டு இருந்த முந்தானை இப்போ தலைக்கும் சேர்த்து போடப்பட்டது. அந்த மாடிடிக்கெட் கியூவிலே நின்ன பெங்களூர்காரம்மா அங்கிருந்து இவர்களையே பார்த்து கொண்டிருந்தது.

"ந்தா அவ இங்கயே பாக்குறா பாரு, நீ இந்த பக்கம் திரும்பு" என பெரிய பெரியம்மாவால் ஒரு அத்தை அதட்டப்பட கடைசி நேரத்தில் தியேட்டரின் உள்ளே இருந்து அந்த பெரிய இரும்பு கேட் உள்ளே இடுக்கில் இருந்து சிவாஜி அண்ணன் குரல் கேட்டது. "பெரீம்மாமாமா, சித்தீஈஈஈ," "ஆஹா நம்ம பய கொரல் கேக்குதுடீ"ன்னு பெரியம்மா ஓடி போய் அந்த இடுக்கில் இருந்து டிக்கெட்டை வாங்கி திரும்பும் போது அந்த பெங்களூர்காரம்மா மாடி டிக்கெட் எடுத்து கொண்டு திரும்ப இரண்டு பேரும் இடித்து கொள்ள "ஆஹா அந்த பெங்களூர் ரமணியம்மா இடிச்சுட்டாடீ நம்ம அக்காவ" என ஒரு சித்தி நக்கல் விட எல்லோரும் உள்ளே போயாச்சு.

நாம இப்போ சத்திரத்துக்கு போவோம். மாமா, மொதலியார், தெட்ஷா, கும்மோணம் ஜெயராமன், திருக்கடையூர் முரளி, சுப்புனி எல்லோரும் ஜெக ஜோதியாக ஆட்டத்தில் இருக்க சுத்தமாக கோவணத்தை உருவிவிடப்பட்ட மணிஅய்யர் பாவமாக உட்கார்ந்து இருந்தார்.

இப்படியாக படம் விடும் நேரம் ஆச்சு. அப்போது ஒரு குதிரை வண்டி வந்து நிற்க அதிலிருந்து மெத்தை, தலையனை சகிதமாக மூன்று பெண்களும், ஒரு ஆணும்,(ஒரு பெண் இடுப்பில் வாயில் விரல் வைத்த ஒரு குழந்தையும்) வந்து இறங்கி யார் கண்ணும் படாமல் மெத்தையை உள்ளே போனார்கள். கொஞ்ச நேரத்திலேயே கதிராமங்கலத்தில் இருந்து கட்டை வண்டியில் பூவம் வாழைத்தாரும், ஆள் உயர இலைக்கட்டும் வந்தது. அப்போது மணி இரவு 12.30 ஆகியிருந்தது.

அப்போது மஞ்சள் பையை கக்கத்தில் வைத்த திருப்புங்கூர் முத்தையா வர மாமா "அடடே முத்தையாபுள்ள எப்புடி இருக்கீங்க, ஒடம்புக்கு சரியில்லன்னு சொன்னாங்களே, ஆமா சாணிய்யா மிறிச்சுட்டீங்களா?" என கேட்டது முத்தையாவுக்கு மாமாவின் அந்த தொணி கொஞ்சம் நக்கலாக பட்டிருக்கும் என நினைக்கிறேன். பதிலுக்கு அவர் "ஆமா புள்ள நடந்தா கூட கூட வருது, ஆனா நல்ல வேள எனக்கு ஒங்கள மாதிரி மூலம் தள்ளல, அங்க மட்டும் என்ன வாழுதாம் புதுசா பெரிய கோவிலுக்கு வந்த குட்டி யான லத்தி போடுற மாதிரி தானே நடையழகு இருக்கு" என கூற சீட்டு கோஷ்டியில் மொதலியார் வாய் விட்டு சிரிக்க தெட்ஷா தன் துண்டால் வாயை மூடிகிட்டு சிரிப்பை அடக்கி கொண்டு அதுவும் முடியாமல் எச்சில் துப்பும் சாக்கில் வாசல் படிக்கு போய் தனியா சிரிச்சு கிட்டு இருக்கும் போது சினிமாவுக்கு போன பெண்கள் வந்து கொண்டிருந்தனர். அதிலே ஒரு சித்தி "அந்த பெங்களூர் ரமணியம்மா பத்தியாக்கா கேயார்விஜயா மாதிரியே கோண வாக்கு எடுத்துருக்கா" என சொல்ல அதுக்கு ஒரு பெரியம்மா " போடீ நம்ம பிரேமா டெல்லியிலே இருந்து வந்தான்னா அவ கால்ல கட்டி இவளை அடிக்கனும், அவ கூடத்தான் அவ அத்தாங்கிட்ட இங்கிலீஸ்லயே பேசுறா" என சொல்ல அதுக்கு ஒரு அத்தை "அய்யோ அது இந்திக்கா" என்றார்கள். இவர்கள் நடந்து வரும் போதே ஒத்தை மாட்டு வண்டியிலே அந்த பெங்களூர் ரமணியம்மாவும் வர (அட நன் கூட ரமணியம்மான்னு சொல்ல ஆரம்பிச்சுட்டனே) எல்லாருக்கும் காதிலே புகை.

"பத்தியா இங்க கிட்டத்துல இருக்குற சத்தரத்துக்கு வண்டி கேக்குது" என சொல்லியது அந்த பிளசர் காரில் ஏத்திக்காம போனதால் கோவிச்சுகிட்ட விளநகர் பெரியம்மா. என்னவோ தெரியலை அந்த பெங்களூர் பார்ட்டிய யாருக்குமே பிடிக்கலை. இத்தனைக்கும் அவங்க யார்கிட்டயும் எந்த வம்பும் பண்ணலை.

இங்கே திண்ணையில் மாமாவை பார்த்து முதலியார் "என்ன புள்ள ஒங்க வாயையே அடச்சுட்டாரே அந்த ஆளு" என கூற மாமா அதற்கு "ஆமா மொதலியாரே எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன் பார்த்துகிட்டு இருக்கான். கூடிய சீக்கிரம் திருப்பி கொடுப்பான், ஆனா பாருங்க எனக்கு நீங்க சிரிச்சது கூட பெருசா தோனல, இந்த தெட்ஷா பய எச்சி துப்புற மாதிரி போய் சிரிச்சான் பாருங்க அதான் பிரசரு ஏறுது" என சொல்லிகிட்டே அந்த ஆட்டத்தில் டிக் அடிச்சார்.

ஆனா அந்த திருப்புங்கூர் முத்தையா மாத்திரம் ஏதோ குட்டி போட்ட பூனை மாதிரி படுக்க இடம் தேடி அலைந்தார். பின்னே ஒரு இடமும் தோதுபடாமல் மாமா கச்சேரி நடத்தும் திண்ணைக்கு எதிர் திண்ணையில் கடைசியாக பத்தோடு பதினொண்றாக கடைசியாக போய் மஞ்சள் பையை தலைக்கு வைத்து படுத்து தூங்கி போனார்.

அங்கே உள்ளே எம்குல பெண்டிர் எல்லாம் ஊட்டிவரை உறவு படத்தை பிரித்து மேய்ந்து கொண்டே என்ன இருந்தாலும் அண்ணன், தங்கச்சின்னு ஆகி எம்மார்ராதா பாடு திண்டாட்டத்துல உட்டாங்க பாரு, ஆனா எனக்கு மட்டும் அப்பவே தெரியும் அப்புடி இருக்காதுன்னு" என ஏதேதோ சொல்லிக்கொண்டே "எங்க சுத்தியும் ரங்கனை சேவி" என்பது போல பெங்களூர் ரமணியம்மா கிட்டயே வந்து முடித்தார்கள்.

"சரி தூங்கலாம், டேய் சிவாஜிப்பையா யார் யாரல்லாம் தூங்கிட்டாங்களோ அவங்க தலையிலே இருந்து தலவானிய உருவிகிட்டு வாடா"ன்னு அம்புஜா சித்தி சொல்ல தலையணை வேட்டைக்கு சிவாஜி அண்ணன் கோஷ்டி புறப்பட்டது.

அப்படியாக ஒரு ஏழு தலையணை தேறியும் பத்தாமல் திரும்ப திரும்ப பெண்கள் கோஷ்டி அண்ணனை தொல்லை கொடுக்க இப்போ அண்ணன் வந்த இடம் திண்ணை.

மாமா சிவாஜி அண்ணன் வந்த நோக்கத்தை புரிந்து கொண்டு "என்னடா தலவானி புடுங்கிட்டு வர சொல்லி அனுப்பிசாலுங்களா?" என கேட்க "ஆமாம் மாமா, எல்லத்தையும் புடுங்கிட்டேன். செல பேரு தலைய தலவானியோட துண்டை வச்சி கட்டியிருக்காங்க"ன்னு சொன்னது.

அதற்கு மாமா " டேய் மாப்ள இந்த கல்யாண வீட்டிலே அவனவன் தலைக்கே இல்லாம தூங்குறான், அந்தா கடேசில ஒருத்தரு கால் இடுக்கிலே தலவானி வச்சுகிட்டு தூங்குறாரு"

"அட ஆமா மாமா, நா போய் அதை புடுங்கவா"

"சரிடா மாப்ள, ஆனா அந்த ஆளு ரொம்ப குசும்பு புடிச்சவன், அழுத்தகாரன் அதனால வெடுக்குன்னு புடுங்கு"

மாமா இருக்கும் தைரியத்தில் சிவாஜி அண்ணன் மெதுவா போய் அவர் கால் இடுக்கில் இருக்கும் தலையனையை வெடுக்குன்னு புடுங்க........
"அய்யய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ டாக்டரு எனக்கு ஆபரேசனுக்கு தேதி வச்சாரு, பாவிப்பய நீ எனக்கே தேதி வச்சுட்டியே"ன்னு அலறி எழுந்திருக்க, சத்தரத்தில் தூங்கின மொத்த கூட்டமும் திண்ணைக்கு ஓடி வந்தது.

மாமா மாத்திரம் மெதுவாக "இனி நடந்தா கூட கூட வராது"ன்னு முதலியார்கிட்டே சொல்ல தன் வாய் வெற்றிலை எச்சில் முழுக்க எதிரே இருந்த தூணில் ஸ்ப்ரே பண்ணினார் முதலியார்.

"யோவ், புள்ள முடியலைய்யா, எனக்கு இதுக்கு மேல உம்ம அழிச்சாட்டியம் தாங்க முடியாதுய்யா, ஆண்டவன் பார்த்துகிட்டு இருக்கான்ன்னு நீ சொன்ன போதே நான் நெனச்சேன் இப்புடி ஏடாகூடமா செய்வேன்னு, நான் கிளம்பறேன்"ன்னு சொல்லிட்டு கிளம்பி போனார்.

எல்லாரும் சுத்தி நின்னுகிட்டு சிவாஜி அண்ணனை கேள்வி கேட்க "நான் அவரு தலவானி தான் கால் இடுக்கிலே வச்சிருக்கார்ன்னு நெனச்சேன்"ன்னு அப்பாவியா சொல்லிட்டு பத்து விரலையும் பிரிச்சு வச்சுகிட்டு அச்சூசையா நிற்க, பெண்கள் வெட்கப்பட்டு உள்ளே போக முத்தையாபிள்ளை"ஏன்டா கல்யாண வீட்டுல தலைக்கே தவானி கிடைக்காத போது எவனாவது கால் இடுக்கிலே வச்சு கிட்டு படுப்பானா, எவனும் இடிக்காம இருக்கத்தானே ஓரத்திலே வந்து படுத்தேன்.........." என புலம்பிகிட்டே இருக்கும் போது ராத்திரி மணி ரெண்டு.

தொடரும்...........
இனி, காலை நிகழ்சிகள், கல்யாணம் எல்லாம் அடுத்த பாகத்தில்..............

11 comments:

  1. இன்னும் இந்த கல்யாணம் முடியலையா

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. மீ த பர்ஸ்ட்டூ :))))

    ReplyDelete
  3. அய்யர் ஆத்து கல்யாணம் கூட 3 நாள் தான் இவரு மூணு மாசமா நடத்துறாரே!

    ReplyDelete
  4. யாராவது வாங்கப்பு இதை கொஞ்சம் என்னான்னு கேளுங்கப்பு

    ReplyDelete
  5. //கடைசி நேரத்தில் தியேட்டரின் உள்ளே இருந்து அந்த பெரிய இரும்பு கேட் உள்ளே இடுக்கில் இருந்து சிவாஜி அண்ணன் குரல் கேட்டது.//

    அண்ணே சான்ஸே இல்ல :))

    நிறையவே ரசிக்கிறேன் :)))))

    ReplyDelete
  6. //"சரி தூங்கலாம், டேய் சிவாஜிப்பையா யார் யாரல்லாம் தூங்கிட்டாங்களோ அவங்க தலையிலே இருந்து தலவானிய உருவிகிட்டு வாடா"ன்னு//

    மீ ஆல்ஸோ டிட் தி சேம் ஒர்க் :)))

    ReplyDelete
  7. //எல்லாரும் சுத்தி நின்னுகிட்டு சிவாஜி அண்ணனை கேள்வி கேட்க "நான் அவரு தலவானி தான் கால் இடுக்கிலே வச்சிருக்கார்ன்னு நெனச்சேன்"ன்னு அப்பாவியா சொல்லிட்டு பத்து விரலையும் பிரிச்சு வச்சுகிட்டு அச்சூசையா நிற்க, பெண்கள் வெட்கப்பட்டு உள்ளே போக முத்தையாபிள்ளை"ஏன்டா கல்யாண வீட்டுல தலைக்கே தவானி கிடைக்காத போது எவனாவது கால் இடுக்கிலே வச்சு கிட்டு படுப்பானா, எவனும் இடிக்காம இருக்கத்தானே ஓரத்திலே வந்து படுத்தேன்.........." என புலம்பிகிட்டே இருக்கும் போது ராத்திரி மணி ரெண்டு.//

    உண்மையா சொல்லுங்கண்ணே

    ரியாக்‌ஷன் இப்படி இருந்திருக்காதே!!!!

    ஒல்லிப்பிச்சான் மாதிரி இருந்துக்கிட்டு இது செஞ்ச வேலையப்பார்த்தீங்களான்னு தானே????


    :))))

    ReplyDelete
  8. அபி அப்பா,
    தம்பி கல்யாணத்துக்கு ஊருக்கு போக முடியலன்ற குறை, இந்த கல்யாணத்தில முகூர்த்தம் முடியும் முன்னாலேயே தீர்ந்திடுச்சி...
    ஒவ்வோரு character-ரும் என் சொந்தங்களை கண்முன்னே கொண்டு வந்துடுச்சி...
    உங்களோட observation பிரமாதம்...

    ReplyDelete
  9. அருமை அபிஅப்பா
    இந்த காலத்து மணிரத்னம் வசனம்

    "ஏன்"

    "யார்"

    "எப்படி"

    போல இல்லாம நல்ல வசன நடையில் விவரித்திருக்கும் விதம் அருமை.
    அதைவிட சொல்லாடல்கள் யதார்த்தம்.
    நல்ல எழுத்தாளருக்கான தகுதி இருக்கு.
    மொக்கையை விட்டுட்டு கதை எழுதலாம்.

    ஹூம்...ஆனா இந்த வல்லின,மெல்லின அச்சுப்பிழை...சரி டைப்பும் அவசரம்.மன்னித்தோம்.

    ReplyDelete
  10. பிரமாதம் பிரமாதம்

    நாம்பளும் சின்னவயசில இந்த மாதிரி நிறையக் கல்யாணம் பாத்திருக்கோம். இப்படி எழுதத்தான் வராது.ஒரு 20,25 வருஷத்துக்கு முந்திய காலத்துக்கே கூட்டிட்டுப் போயிட்டீங்களே. ஓண்ணு விடாம மிச்சத்தையும் எழுதுங்க.

    ReplyDelete
  11. ஐய்யோ பாவம் அந்த சித்தப்போ பெரியப்போ:))))
    ஆனாலும் மோசம்.


    கல்யாணத்தில சகஜம்தான்.

    படு சுவாரசியமாகப் போகிறது லூட்டிகள்.
    அடுத்த பாகத்துக்கு வாங்கப்பா.:)

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))