பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 21, 2009

உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்துச்சு?

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் பெயர் தொல்காப்பியன். பெயரின் காரணம் பல பதிவர்களுக்கு தெரியும். இதை இப்ப இங்க சொன்னா அரசியல் பதிவா ஆகிவிடும். "அபிஅப்பா" என்கிற என் பெயர் எனக்கு வந்த காரணம் அபியால் தான். "ஏங்க, இந்தாங்க" இப்படியே கூப்ப்பிட்டுகிட்டு இருந்த என் மனைவி தான் முதல்ல "அபிஅப்பா இங்க பாருங்க"ன்னு ஆரம்பிச்சு வச்சாங்க.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இன்று காலை. அபியிடம் இருந்து வந்த ஒரு மெயில். தந்தையர் தின பரிசு எனக்கு. இருங்க காபி பேஸ்ட் செய்றேன்.

\\
அப்பா உன்னை ஏன் பிடிக்க வில்லை?
1.அப்பா ஒரு மே மாதம் 3ம் தேதி இரவு 11.30க்கு என்னை ஏன் கையில் ஏந்தினாய்? அப்போது முதலே என் தனி தண்மையும் உன் தனி தண்மையும் போயிடுச்சே? அபிஅப்பாவின் பொண்ணா நீ என என்னையும் அபிஅப்பாவா நீங்கன்னு உன்னையும் உலகம் கேட்குதே?


2. நான் ராக்கெட்டில் பறக்க ஆசை! நீ என்னை சைக்கிள் ல போனா கூட பின்னாடி வண்டி எடுத்துகிட்டு வந்து டார்ச்சர் பண்றே. நம்மை பார்த்து தான் "அபியும் நானும்" எடுத்த மாதிரி இருக்கே.


3. ஆட்டோகாரர் கூடத்தான் நான் ஸ்கூல்கு போறேன். செங்கனிசெல்வி தினமும் அவ அப்பா கூட சைக்கிள்ல வரா. எனக்கு அவளை பார்க்க பொறாமையா இருக்கு. ஒரே ஒரு தடவை என்னை நடந்தாவது ஸ்கூல்க்கு அழைச்சிட்டு வந்து விடுப்பா


4. அப்பா நீ ஒரு சுயநலக்காரன் அப்பா. பாசம் வைத்து மோசம் செய்பவன்.


5.உன்னை ஆசை ஆசையா திட்ட மனசிலே இருக்கு. வார்த்தை தான் காணும். மீதியை நீயே திட்டிக்கோ.
மறந்துடேனே. இன்றைக்கு தந்தையர் தினமாமே. பிடிச்சுக்கோ என் வாழ்த்தை.\\

இதை படித்த எந்த அப்பனும் அழுவான். அதை தான் நானும் செஞ்சேன்.

3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்காது. ஆனா ரொம்ப அழகா முத்து முத்தா இருக்கும். நான் எழுதி பலவருஷம் ஆச்சு. இப்போது தினமும் 200 கையெழுத்து போடுவது தான் நான் பேனா பிடிக்கும் தருணம்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

இதிலே 3 வகை இருக்கு.

1. நல்ல பொன்னி பச்சரிசி குழைய வடித்து அதிலே எறுமை கெட்டி தயிர் போட்டு (நல்லா கவனிக்கவும் மிக்சி இல்லை) அம்மியில் அரைத்து பின்னே அதுலே கறிவேப்பிலை கடுகு வெள்ளை ஊசி மிளகாய் தாளிச்சு(ரொம்ப எண்ணெய் விட கூடாது) அதை சரியான அளவு உப்பு போட்டு அழகா ஒரு பீங்கான் தட்டிலே வச்சு அதன் தலையில் இரண்டு பெரு நெள்ளிகாய் ஊருகாய் வச்சு அதிலே ஒரு ஸ்பூன் குத்தி குளித்து முடித்து மடியாக அபிராமி அந்தாதி சொல்லிகிட்டே ஒற்றை நாணய பொட்டும், காட்டன் புடவையும்,காதில் ஆடும் ஜிமிக்கியும், வைர மூக்குத்தியும்,மெல்லிசா சத்தம் போடும் கொலுசுவும், கிச்சன்ல இருந்து வரும் போது தரையும் கால் விரலும் மெதுவா சண்டை போடுவதால் வரும் மெட்டி சத்தமும், கிட்டே வரும் போது நேற்று இரவு போட்ட மருதாணியால் சிவந்த கையும் சகிதமாக வரும் அந்த சாப்பாடு எனக்கு பிடிக்கும்.

2. சின்ன சின்ன செங்கால மீன் வாங்கி அழகா சுத்தம் செஞ்சு அழகாக மீன் குழம்பு(கொஞ்சம் புளி அதிகம் விட்டு) அதிலே மாங்காய் 2 துண்டு விட்டு சுட சுட பொன்னி சாதம் கூட கெட்டி தயிர் எடுத்துட்டு வரும் நைட்டி பொண்டாட்டி உணவும் பிடிக்கும்.

3. "எனக்கு முடியலே இன்னிக்கு. ஹோட்டல்ல சாப்பிடுவோமே"ன்னு சொன்ன பின்னே அதுவும் பிடிக்கும்.

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

பாஸ்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி என்னவோ தலையிலே குட்டுவது போல என்னை இம்சிப்பது போல இருக்கும். கடல் அதுவும் துபாய் கடல் ஆர்பரிக்காம ராமேஸ்வரம் கடல் மாதிரி நம்ம வீட்டு படுமாடு மாதிரி அத்தனை ஒரு சுகம். இங்க ஜுமைரா பெய்டு பீச்சிலே வெள்ளி காலை மெல்லிசா ரொம்ப மெல்லிசா ஒரு பெக் அடிச்சிட்டு போகனும். காரை மெதுவா ஓட்டனும். ஏசி பேட கூடாது. "நீ காற்று நான் மரம் என்ன சொன்னாஅலும் தலையாட்டுவேன்"ன்னு ஒரு கேசட் போடனும். 3 அல்லகை கூட்டிக்கனும். கார் பார்க்கில் அடுத்த பெக் அடிக்கனும்.

ஒரு படுக்கை குடை வாங்கிகனும். பின்ன என்ன போட்டோ பாருங்க!

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?.

உடல் மொழி! எனக்கு 3 நிமிடம் போதும். மொத்த ஜாதகம் கணிக்க. முதலில் உட்கார சொல்லுவேன். அட்டாணிகால் போடும் வலமா இடமான்னு பார்ப்பேன். அப்பவே கிட்ட தட்ட அவங்க கிட்ட பேச போவது பற்றி முடிவெடுத்து விடுவேன். நான் கணிக்க முடியாத ஒருத்தர் ஆசீப் மீரான். அடுத்து இதை தான் சொல்லுவார்ன்னு நினைப்பேன். ஆனா சரியா 100 சதம் மாற்றி பேசுவார்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?.

என் கீழ் வேலை செய்பவர்களை திட்டுவது எனக்கே பிடிக்காது. "சார் திட்டினா என்ன இந்த மாசமும் காலீத் பிரியாணி உண்டு"ன்னு என் காதுபடவே அவங்க பேசிகிட்டு போவதும் நானும் அது போல செய்வதும் பிடிக்கும்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

அட! நான் இதுக்கு தனி பதிவே போடலாம். கோபத்தை மௌன மொழியில் சொல்வது பிடிக்காது.ஏதாவது கத்தி திட்டு என்பேன். அதுக்கும் மௌனமா இருக்கும்.

அது போல பிடித்ததுன்னு சொன்னா எதை சொல்வது. கிட்ட தட்ட எல்லா பதிவர்களுக்கும் தெரியும். நான் கொடுத்து வச்சவன்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

உலகம் அறிந்த விஷயம்

14.பிடித்த மணம்?

வயலில் நாத்து நடும் போது வருமே ஒரு சேத்து வாசனை அது பிடிக்கும். அது போல கரும்பு வெட்டின பின்னே இரவு போய் அந்த கழிவுகள் கொளுத்துவோம். அடுத்த நாள் காலை அங்கேகிடைக்கும் வாசம் பிடிக்கும்.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

நான் அழைக்கபோவது முதலில் என் நண்பி என் கூட படிச்ச குறத்தி மாலா, அடுத்து ராமலெஷ்மி என்னும் என் பிரண்ட், அடுத்து என் மகள் அபி.

16.பிடித்த விளையாட்டு?

எனக்கு அப்பப்ப எதுனா பிடிக்கும். சமீபத்துல பிடிச்சது "வாந்திய தேவன் " படிங்க புரியும். வாந்தி முடுஞ்ச பின்னே அடுத்த விளையாட்டுக்கு ஆரம்பிச்சுட்டேன். என் தங்கமணி "நீங்க கால்ல மாட்டிகிட்டு பங்கி ஜம்ப் செஞ்சா நான் ஆணில மாட்ட வேண்டி இருக்கும் தாலியை"

இதுக்கு என் பிரண்டு வேற சப்போட்டு சப்போட்டு சப்போட்டு

சரி போ உன் கழுத்திலே மாட்டிகிட்டு இருன்னு விட்டுட்டேன்

17.கண்ணாடி அணிபவரா?

பாஸ்

24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா

இருக்கு! ஒரு சிகரட்ல 300 ரவுண்டு விடும் கின்னஸ் சாதனை மிறியடிக்கும் திறமை இருக்கே. கின்னஸ் சாதனை 249 ரவுண்டு!(கேவலம் தான் சொல்லி தானே ஆகனும்)

அய்யோ போதுமே வல்லிம்மா, சூரிசார், ஷை எல்லாரும் மன்னிகனும்.போட்டோ எல்லாம் கூட போடலை.


35 comments:

 1. மீ த பர்ஸ்ட்ட்ட்! :)

  ReplyDelete
 2. //உன்னை ஆசை ஆசையா திட்ட மனசிலே இருக்கு. வார்த்தை தான் காணும். மீதியை நீயே திட்டிக்கோ.
  மறந்துடேனே. இன்றைக்கு தந்தையர் தினமாமே. பிடிச்சுக்கோ என் வாழ்த்தை.\\//

  திட்டிலும் ஒரு இனிமை இருக்கிறது !

  அபி பாப்பா ஸ்பெஷல் :)

  ReplyDelete
 3. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 4. //அட! நான் இதுக்கு தனி பதிவே போடலாம். கோபத்தை மௌன மொழியில் சொல்வது பிடிக்காது.ஏதாவது கத்தி திட்டு என்பேன். அதுக்கும் மௌனமா இருக்கும்//

  :)))

  ReplyDelete
 5. //யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

  உலகம் அறிந்த விஷயம்//

  ஆஹா செம எஸ்கேப் ! :)))

  ReplyDelete
 6. //நான் அழைக்கபோவது முதலில் என் நண்பி என் கூட படிச்ச குறத்தி மாலா,//

  அது ஆரு ????

  ReplyDelete
 7. //வயலில் நாத்து நடும் போது வருமே ஒரு சேத்து வாசனை அது பிடிக்கும். அது போல கரும்பு வெட்டின பின்னே இரவு போய் அந்த கழிவுகள் கொளுத்துவோம். அடுத்த நாள் காலை அங்கேகிடைக்கும் வாசம் பிடிக்கும்.//

  சூப்பர்

  ReplyDelete
 8. மீதி கேள்வி எல்லாம் எங்க !??

  \\இதை படித்த எந்த அப்பனும் அழுவான். அதை தான் நானும் செஞ்சேன்.\\

  போங்கய்யா...போங்க முதல்ல கிளம்புங்க.

  ReplyDelete
 9. சிறப்பான பதில்கள்
  அதிலும் அந்த இரண்டாவது கேள்விக்கு நீங்க சொன்ன பதில் ரொம்ப டச்சிங்.

  ReplyDelete
 10. "துபாய் கடல் ஆர்பரிக்காம ராமேஸ்வரம் கடல் மாதிரி நம்ம வீட்டு படுமாடு மாதிரி அத்தனை ஒரு சுகம். இங்க ஜுமைரா பெய்டு பீச்சிலே வெள்ளி காலை மெல்லிசா ரொம்ப மெல்லிசா ஒரு பெக் அடிச்சிட்டு போகனும். காரை மெதுவா ஓட்டனும். ஏசி பேட கூடாது. "நீ காற்று நான் மரம் என்ன சொன்னாஅலும் தலையாட்டுவேன்"ன்னு ஒரு கேசட் போடனும். 3 அல்லகை கூட்டிக்கனும். கார் பார்க்கில் அடுத்த பெக் அடிக்கனும்.

  ஒரு படுக்கை குடை வாங்கிகனும். பின்ன என்ன போட்டோ பாருங்க!"

  ம்ம்ம்ம்ம்ம்ம் !பழைய நினைப்பெல்லாம்
  கிளப்பி விட்டீர்கள்.இரானியன் ஹாஸ்பிட்டலுக்கும் ஸ்பின்னிஸ்க்கும் இடையில ஜுமைரா பீச் பக்கத்தில் தான் நம்ம வில்லா இருந்தது.

  ReplyDelete
 11. அண்ணே, அபியும் நானும் பார்ட் 2 பார்தது போல் இருக்குண்ணே.

  ReplyDelete
 12. இது போங்காட்டம்...எங்க மீதி கேள்வி?

  ReplyDelete
 13. அபி அப்பா.
  போனாப் போறதுன்னு விடறேன். உடம்பு சரியாயில்ல. ஆனாலும் சொன்ன வுடன் பதிவு போட்டாச்சு.

  அடுத்தாப்பில தண்ணீர்.....மீனிங் வாட்டர் அதைத் தவிர வேற எதையும் மனசால் கூட நினைக்கக் கூடாது. இங்க யாருக்கும் கவலைப் படத் தெம்பு இல்ல.
  நல்லா இருங்க.
  நன்றி..

  ReplyDelete
 14. //நான் கணிக்க முடியாத ஒருத்தர் ஆசீப் மீரான். அடுத்து இதை தான் சொல்லுவார்ன்னு நினைப்பேன். ஆனா சரியா 100 சதம் மாற்றி பேசுவார்.//

  யோவ அபி அப்பா

  என்னாலயே என்னை கணிக்கமுடியாமத்தான் நானே கொழம்பிப் போய் கெடக்கேன் நீரு வேறயா? வெளங்கும்

  நான் வெளங்குற மாதிரி பேசுவென்னு நீரு நெனச்சா அது மட்டும் ஒருக்காலும் நடக்காது :-)

  ReplyDelete
 15. பதில் 2: சீக்கிரமாய் ஊர் போகிற வழியைப் பாருங்கள்.

  பதில் 6 & 24: இதற்குத்தான் திகழ்மிளிர் அப்படிப் பின்னூட்டம் போட்டிருக்கிறார், ம்ம்ம்ம் என. கடைசியில் பெரியவர்களிடம் மன்னிப்பு வேறா?

  மற்றபடி ரசனையோடு உள்ளன பதில்கள் எல்லாம். என்னையும் மாட்டி விட்டிருக்கிறீர்கள். ஏற்கனவே அழைக்கலாமா எனக் கேட்ட தமிழ் பிரியன், கவிநயா, ஷைலஜா ஆகியோருக்கு வேண்டாமே என சொல்லி விட்டு அப்பாடி என இருந்தேன். இன்று ஒரே நாளில் இருவரிடமிருந்து அழைப்பு:)! காலையில்தான் சகாதேவன் அழைத்திருந்தார். முயற்சிக்கிறேன் என சொல்லியிருக்கிறேன்:)! உங்கள் அன்பான அழைப்புக்கும் நன்றி.

  பரீட்சையில் தெரியாத கேள்விகளை விட்டு விடுவது போல இங்கே பதில் சொல்ல விருப்பமில்லாத கேள்விகளை விட்டு விட்டீர்களா:))?

  ReplyDelete
 16. ஆயில்யன் said...

  *** //நான் அழைக்கபோவது முதலில் என் நண்பி என் கூட படிச்ச குறத்தி மாலா,//

  அது ஆரு ????//***

  ஆயில்யன் அவர்களும் பெங்களூரில்தான் இருக்கிறார்கள். அபி அப்பாவுடன் படித்தவர்களுக்கும் நகைச்சுவை உணர்வுக்குக் கேட்கணுமா என்ன? கல்லூரி காலத்தில், எப்போதும் நண்பர் ஓட்டி வர சைக்கிளில் பின்னால் அமர்ந்துதான் வருவாராம் அபி அப்பா. சைக்கிளுக்கும் ட்ரைவர் வைத்து வரும் ஒரே ஆசாமி அவர்தான் என்றார்கள்:)))!

  ReplyDelete
 17. நல்லாயிருந்திச்சி..

  தந்தையர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. ##பிடித்த மணம்?

  வயலில் நாத்து நடும் போது வருமே ஒரு சேத்து வாசனை அது பிடிக்கும். அது போல கரும்பு வெட்டின பின்னே இரவு போய் அந்த கழிவுகள் கொளுத்துவோம். அடுத்த நாள் காலை அங்கேகிடைக்கும் வாசம் பிடிக்கும்.###

  அப்படியே கண்ணுல தண்ணி வர வச்சிட்டிங்க அபி அப்பா !!!!!!!!!

  ReplyDelete
 19. எடையில ஒன்னு... ரெண்டு கொஷ்டீனுக்கு நீங்க ஆன்சர் பண்ணவே இல்லைன்னு நெனைக்குறேன்.....!!!!!


  சாய்ஸ்ல உட்டுடீங்களா....???

  ReplyDelete
 20. சாய்ஸில் சில கேள்விகலை விட்டுடீங்க போல.

  அபி எழுதியன் லெட்டரை ரசிச்சேன்

  ReplyDelete
 21. /ராமலக்ஷ்மி said...

  ஆயில்யன் said...

  *** //நான் அழைக்கபோவது முதலில் என் நண்பி என் கூட படிச்ச குறத்தி மாலா,//

  அது ஆரு ????//***

  ஆயில்யன் அவர்களும் பெங்களூரில்தான் இருக்கிறார்கள். அபி அப்பாவுடன் படித்தவர்களுக்கும் நகைச்சுவை உணர்வுக்குக் கேட்கணுமா என்ன? கல்லூரி காலத்தில், எப்போதும் நண்பர் ஓட்டி வர சைக்கிளில் பின்னால் அமர்ந்துதான் வருவாராம் அபி அப்பா. சைக்கிளுக்கும் ட்ரைவர் வைத்து வரும் ஒரே ஆசாமி அவர்தான் என்றார்கள்)!
  ///

  ஹைய்ய்ய்ய் அப்ப எங்க ஊர்லேர்ந்து இன்னொருத்தவங்க தமிழ் பதிவுலக அட்டாக் பண்ண ரெடியாகிகிட்டிருக்காங்களா சூப்பரேய்ய்ய்ய்! :))

  ReplyDelete
 22. அபி பாப்பாவின் வாழ்த்து நல்லாயிருக்கு..

  அடுத்த எழுத்தாளர் உருவாகிவிட்டார் என்று நினைக்கிறேன்.

  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 23. ஆயில்ஸ் வாப்பா!நீ தான் பஸ்ட்!

  |திட்டிலும் ஒரு இனிமை இருக்கிறது !

  அபி பாப்பா ஸ்பெஷல் :)
  \\

  என்னை திட்டினா இத்தனை இனிமையா தம்பு உனக்கு:-))

  ReplyDelete
 24. \\ திகழ்மிளிர் said...
  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  June 21, 2009 4:31 PM

  \\

  என்ன திகழ்மிளிர் எதுக்கு இத்தனை ம்ம்ம்ம்ம் ஒரு வேளை ராமலெஷ்மி சொன்ன மாதிரியா இந்த ம்ம்ம்ம்ம்:-))

  ReplyDelete
 25. அபி அப்பா முதல்ல நன்றி
  என்பதிவுல நான் உங்களை அழைச்சதை ஏற்று உடல்நிலை முழுக்க சரியாகாத இந்த நிலையிலும் வந்து பதிவிட்டதுக்கு.

  எல்லாபதில்களும் நன்றாக இருக்கு. ஆனா நீங்க ஊருக்கு சீக்கிரமா போறது நல்லதுன்னு தெரியுது
  மறுபடி நன்றி.

  ReplyDelete
 26. Unghaluku APPI appa nu peyar vaithuvittomeyyy!!!

  ReplyDelete
 27. Ennku enn manaivi viyarvai mannam thaaney pidukum !!!

  ReplyDelete
 28. உண்மையிலேயே அந்த சிகரெட் ரவுண்டு கிண்ணஸ் சாதனை இருக்கா ?

  ReplyDelete
 29. i AM A NEW READER TO TAMIL BLOGS.
  I AM FOLLOWING YOUR BLOG FOR LAST 3 MONTHS.
  IT IS REALLY INTERESTING.
  I ENJOYED THIS POST.
  ABI PERIYA AALA VARUVA. :)

  ReplyDelete
 30. Aha.. Classic

  // உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா

  இருக்கு! ஒரு சிகரட்ல 300 ரவுண்டு விடும் கின்னஸ் சாதனை மிறியடிக்கும் திறமை இருக்கே. கின்னஸ் சாதனை 249 ரவுண்டு!(கேவலம் தான் சொல்லி தானே ஆகனும்)

  ReplyDelete
 31. அண்ணே, அபி பதில் போட்டாச்சா ?

  ReplyDelete
 32. தங்களுக்கு மஞ்சள் காமாலை என்று கேள்விப்பட்டேன். பரவாயில்லையா?

  அது யாருங்க குறத்தி மாலா?

  மீதி கேள்விகளும் மிஸ்ஸிங்??

  ReplyDelete
 33. அன்புள்ள அபிஅப்பா உங்களுடைய ஒவ்வொரு படைப்புகளும் அருமை. உங்கள் கட்டுரைகளை படித்தவுடன் மாயூரம் நினைவுகள் அலை மோதியது. என்ன ஒரு நினைவாற்றல். நன்றி

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))