பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 3, 2009

ஆச்சி அத்தை செத்து போச்சு!!!
ஆச்சி அத்தை எப்போ எங்க வீட்டுக்கு வேலைக்கு வந்துச்சுன்னு தெரியாது. ஆனா நான் சின்ன குழந்தையா இருக்கும் போதே வந்துடுச்சு. அத்தை எங்க வீட்டிலே மட்டும் வேலை செய்யலை. பல பேர் வீட்டிலே. பாவம் அத்தை கையை பார்த்தா அத்தனை ஒரு சொர சொரப்பு. அத்தையை பற்றி எழுதும் போதே அழுகையா வருது.

என் பெரியக்கா, சின்னக்கா, நான், என் தம்பி எல்லார் வாழ்க்கையிலும் அத்தை கலந்துவிட்டது. அக்காக்கள் பெரிய மனுஷியா ஆனது முதல் பெரியக்காவின் 3 பசங்க பிறக்கும் போதும், சின்ன அக்காவின் 1 பையன் பிறக்கும் போதும், என் அபி, நட்டு பிறக்கும் போதும், என் தம்பி பையன் பிறக்கும் போதும் ஆச்சி அத்தை தான் பிரதான ஹீரோயின்.

எங்க வீட்டு பெண்கள் பிரசவத்துக்கு ரெடியான பின்னே " அண்ணி, உன் பழைய புடவை கொடு, நான் ரெடியாகனும்" அப்படின்னு ஆரம்பிச்சிடும் அத்தை. ஒரு நாலு புடவை பின்னே கஷாயத்துக்கு தேவையான மஞ்சள், மல்லி விதை அப்படின்னு அத்தை ரெடியாகும் அழகே தனி.

வலி எடுத்த வுடன் நான் முதலில் போய் (எல்லாம் ராத்திரி தான் ) அத்தை வீட்டு வாசலில் வண்டியை நிப்பாட்டின பின்ன "தம்பி வந்துட்டேன்! நெனச்சுகிட்டே படுத்தேன் பாவம் புள்ளைக்கு சாயந்திரமே முகம் மாறி போச்சு, நீ ஓடி ராஜேந்திரன் ஆட்டோ கிட்ட சொல்லிடு"

"இல்லை அத்தை அத்தை ஆட்டோ வந்தாச்சு! நீதான் அத்தே வரனும்"

"அண்ணி பயப்படும் தம்பி! நீ வண்டி எடு நான் வரேன்! இந்த மஞ்ச பைய முன்னாடி மாட்டிக்க"

"என்ன அத்தை அதிலே இருக்கு"

"பழைய புடவை இருக்கு அதல்லாம் உனக்கு எதுக்கு நான் முதல்ல அண்ணிய பார்க்கனும், ஓட்டு"

"அத்தை பாலுத்தேவன் கிட்ட சொல்லலையா"

"அவன் கிடக்கான் காலை சாப்பாடு அவனுக்கு அண்ணி அனுப்பிடும் பாரு நீ வண்டி ஓட்டு"

வண்டி ஓடிகிட்டெ இருக்கு!

"அத்தே பாலு அவரு பேரு தேவர் அவர் படிச்சு வாங்கின பட்டமா"

"அய்யோ உனக்கு சிரிப்புக்கு இதான் நேரமா? வண்டிய ஓட்டு"

"சரி அத்தே"

"தம்பி உனக்கு பயமே இல்லியா அங்க கிருஷ்ணா கத்திகிட்டு இருக்குமே!"

"அத்தே நீ இருக்கும் போது எனக்கு என்ன பயம்"

""அதல்லாம் சரி! சில்லர காசு இருக்கா?"

"இல்லியேத்தே"

"இந்த பாரு என் கிட்ட ஒன்னேகாருவா இருக்கு வீரன் கிட்ட விட்டரிஞ்சுகிட்டு வா"
\
"சரித்தே"

அத்தே கண்கலங்கி இருந்துச்சு!

"ஏன் அத்தே"

"இல்ல தம்பி! என்னவோ அழுவ வருது! அநேகமா உன் மொவன் தான் நான் பிரசவம் பார்க்கும் கடேசி புள்ளயா?"

"அட என்ன அத்தை! கண்ணை தொடச்சிக்கோ!நான் பத்து புள்ளை பெக்குறேன்! ஏன் அழுவற?"'குழந்தை பிறந்தது! சில பல காரணத்தால் என் அம்மாவும் நானும் பேச்சு வார்த்தை இல்லாமல் போச்சு!

ஆனால் ஆச்சி அத்தை தான் நட்டுவை குளிப்பாட்டும் முக்கிய வேலை.

அம்மாவுக்கு அதிலே உடன்பாடு இல்லை.

ஆச்சி அத்தை அம்மாவின் கட்டுபாடுக்கு மட்டுமே இருக்க வேண்டும். என் அம்மாவின் பேத்தியாச்சே அபி! "அத்தை பாட்டி நீங்க நட்டுவை குளிப்பாட்ட வேண்டும்" அப்படின்னு சொல்லிட்டா!

அம்மாவுக்கும் அத்தைக்கும் இடைவெளி அதிகமாச்சு.

முடிவுக்கு வரேன்.

அத்தை நேத்து செத்து போச்சு. காலை தம்பி நட்டுவை குளிப்பாட்ட்டுசாம். அவன் அவன் "ஆச்சி"னு கூப்பிட்டப்ப "எலேய் உன் அப்பன் கூட ஆச்சின்னு கூப்பிட்டது இல்ல" அப்படின்னு சொன்னுச்சாம்.
போய் தூங்குச்சு. நிம்மதியா செத்து போச்சுங்க!

அம்மா வந்து அழுதுதுச்சுங்க! அம்மாவை நான் எப்படி சமாதானப்படுத்துவேன்!

இதுக்குமேல என்னால எழுத முடியலை!

27 comments:

 1. :((((((


  பார்த்த மாதிரி ஒரு நினைப்புண்ணே !

  ReplyDelete
 2. அய்யோ தம்பிய குளிக்க ஊத்தும் போது "ஆச்சி எங்க ஆச்சி எங்க"ன்னு கேக்கும் போது என் மனைவி அழுவதை என்னால் கேடக சகிக்கலை@!

  ReplyDelete
 3. குடும்பத்தில் ஒன்றாக கலந்துவிட்டவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாது.

  என்ன சித்தப்பா, மே மாசம் ஆரம்பிச்சு இன்னும் கெட்ட செய்தியாவே வந்துகிட்டு இருக்கு?

  ReplyDelete
 4. இல்லடா தம்பி! நான் இந்த தடவை வரும் போதே அத்தை அழுதுச்சு! அப்பவே எனக்கு மனசிலே ஒரு சந்தேகம். ""தம்பி என் போட்டோ ஒன்னு பெரிசா போட்டு கொடு"ன்னு சொன்னுச்சு. கொடுத்தேன். அதான் இப்ப கருமாதிக்கு வச்சிருக்காங்கலாம்!அய்யோ!

  ReplyDelete
 5. :(

  ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 6. நெருங்கி பழகியவர்களின் இழப்பு தாங்க முடியாத துயரம் தான்.

  ReplyDelete
 7. ராஜா,
  கேக்கவே கஷ்டமா இருக்கு.. எவ்வளவு பெரிய்ய உள்ளங்கள்.. இந்த மாதிரி “எந்தரோ மஹானுபாவுலு !!”

  அவங்க ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

  ReplyDelete
 8. ராஜா,
  அப்புறம் சொல்ல மறந்துட்டேன். என்னைப் பார்க்க வீட்டுப்பக்கம் வந்தால் எதுவும் வாங்கிட்டு வரவேணாம்... தெரிஞ்சுதா? சிங்கப்பூர் பச்ச பெல்ட், துபாய் கோல்டு மெடல், என் போட்டோ பெரிசாப் போட்டது.. இந்த மாதிரி விஷயமெல்லாம் வாங்கிட்டு வந்துராதே.. அப்புறம் நான் சொல்லும் போது பாத்துக்கலாம்... தெரிஞ்சுதா !!!

  தயவு செஞ்சு மனசுல வெச்சுக்க ராஜா.. மறந்துடாதே...

  :)

  ReplyDelete
 9. ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 10. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா.. எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல..

  இந்தத் துயரத்திலிருந்து நீங்களும், அத்தைக்கு நெருங்கிய எல்லோரும் மீண்டுவரப் பிரார்த்திக்கிறேன் !

  ReplyDelete
 11. //இதுக்குமேல என்னால எழுத முடியலை!//

  இதுக்கு மேல சொல்றதுக்கு மட்டும் என்ன இருக்கு!

  எல்லாரும் அழுதுக்கிட்டு தானே இருக்கோம்!

  :( :( :(

  ReplyDelete
 12. இழப்புகள் தாங்கமுடியாதவை. அதிலும் நாம் அவர்களை விட்டு வெகுதூரம் இருக்கும் போது வருத்தங்கள் பல மடங்கு ஆகும்.

  அத்தை அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன்.

  ReplyDelete
 13. அனுதாபங்கள் அபிஅப்பா

  ReplyDelete
 14. ஆச்சி அத்தை உங்கள் குடும்பத்தில் ஒருவராக மட்டுமின்றி உள்ளன்போடு எல்லா சமயங்களில் உறுதுணையாக இருந்திருப்பது புரிகிறது. அந்த நல்ல ஆன்மாவின் சாந்திக்காகவும் அவரது இழப்பால் வருந்தும் அனைவருக்கும் இறைவன் ஆறுதலைத் தரவும் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 15. ஆச்சி அத்தைக்கு என் அஞ்சலி.....

  நற்பெயர் பெற்று ... நீடூடி வாழ்ந்து ..

  பலர் மனதில் நீங்கா இடம் பிடத்த ஆச்சிக்கு ....

  இறையடி செல்ல என் இறை பிராத்தனைகள் ......

  ReplyDelete
 16. :(
  ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 17. //
  ""தம்பி என் போட்டோ ஒன்னு பெரிசா போட்டு கொடு"ன்னு சொன்னுச்சு. கொடுத்தேன். அதான் இப்ப கருமாதிக்கு வச்சிருக்காங்கலாம்!அய்யோ!
  //

  கடவுளே :(

  ReplyDelete
 18. என்னங்க நீங்க சிரிக்க வச்சாலும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறீங்க அழ வச்சாலும் இப்படி................ஆச்சி அத்தையின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 19. ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா..

  அத்தை அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல அந்த ஆண்டவனை வேண்டுகின்றேன்.

  ReplyDelete
 20. கண்ணன் என் சேவகன் என்ற ரீதியில் நமக்கு உதவியாளர்கள் அமைவது மிக மிக அபூர்வம்...அந்த வகையில் உங்களுக்கு வாய்த்த ஆச்சி அத்தை போன்றவர்களின் ஆசியும் வாழ்த்தும் அவர் மறைந்தாலும் நம்மோடு இருக்கும்

  கை ஒடிந்தாற் போல் கலங்கி நிற்கும் உங்கள் குடும்பத்தை அந்த ஆதமா காத்து நிற்கும்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))