பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 11, 2009

ஆளை விடுங்க சாமி!!!!

காலை 4 மணிக்கு எழுந்தேன். வழக்கம் போல குளியல் எல்லாம் முடிச்சு 5க்கு ரெடியாகியாச்சு. வழக்கம் போல கலைஞர் செய்தி பார்த்தேன். எங்க ஊர் டைம் 6.30க்கு. 3 தடவை மிஸ்கால். ராஜேஸ். தோ வந்துட்டேன்னு சொலிட்டு லாப்பியயை தூக்கிட்டு ஓடினேன்.

7 மணிக்கு கார்டை கதவில் இழுத்துட்டு ஓடினேன் உள்ளே.

7.30 வரை பேண்ட்ரி. அருமையான டீ, சம்சா!

8க்கு வந்த போது எல்லா கடையும் அதாவது கம்பனியும் திறந்தாச்சு.

8.30க்கு மீட்டிங் கால்!

மீட்டிங்!

"மிஸ்டர் குமார் எனக்கு 40 mm 12 மீட்டர் ராட் 40 டன்க்கு வேணும்"

"சாரி சார் கிடைக்காது"

"ஏன்"

""ஏற்கனவே வாங்கி வச்சாச்சு, இது உங்க போன மாச மீட்டிங்கிங் மறு பதிவு"

"ரொம்ப அதிகமா பேசற!

"சரி ஃப்ளோர் அதிகமா போய்கிட்டு இருக்கு லைட் வெயிட் பிளாக் வாங்கனும் குவைத்துல இருந்து குமார்! உடனே போன் செஞ்சு ரிசல்ட் சொல்லு"

"சார் எனக்கு கார்டு தரலை இந்த மாசம்"

"சரி என் போன்ல இருந்து பண்ணு"

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

"என்ன குமார்ஜி"

"சாயந்திரம் என்னா குழம்பு"

"மரியாதை கெட்டுடும் நீங்க தான் இன்னிக்கு டேர்ன்"

"அப்ப சாம்பார் வச்சிடலாமா"

"என்ன ஜி கடுப்பை கிளப்புறீங்க! நேத்தும் சாம்பார்தான்"

"அப்ப கோழி வச்சுடலாம்"
உடனே பிராஜக்ட் மேனேஜர் கிட்ட கொடுத்தேன்.
"சார் காதிலே கேளுங்க"

"ஓக்கே"

"குட் குமார் சப்லையர் ஓக்கேன்னு சொல்லிட்டார் நீங்க நல்ல பர்ச்செசர்"

"நன்றி சார்"

மீட்டிங் முடிஞ்சுச்சு.

காலை 11 மணி! "மணி டீ கொண்டுவா"

"தெலுகுமே செப்பு சார்"

12 மணிக்கு குசும்பன் போன்! "நான் அடுத்த 10 நிமிஷத்தில் அங்க இருப்பேன்"

குசும்பன் வந்தாச்சு!

"என்னங்க இது டெஸ்க் டாப்ல தீபா வெங்கட்"

"இரு இப்ப பிராஜக்ட் மேனேஜர் வருவாரு அப்ப அவரு போட்டோ மாத்திடுவேன்"

"மதியம் 1 மணி"

"மணி சாப்பாடு சூடு செஞ்சாச்சா"

"ஆச்சு சார் ஆம்லெட்டும் கேண்டீண்ல இருந்து வாங்கியாச்சு"

1.10

நான் தூங்கியாச்சு. காலை தூக்கி டெஸ்க் டாப் மேல போட்டுகிட்டு

2. 00மணி ஒரு எழவுகெட்ட போர்மென் வந்து "நான் கேட்ட பாலியூரித்தீன் சவுண்ட்ட் இன்சுலேஷன் போர்ம் எங்கன்னு கேக்குறான்.

3 மணிக்கு மீட்டிங் \

"சார் நீங்க இன்னிக்கு ரொம்ப ஸ்மார்ட்"

"யூ ப்ளீஸ் கெட் அவுட்"

"அப்பாடா இதுக்கு தானே அந்த வார்த்தை சொன்னேன் பாலகுமாரா"ன்னு நெனைச்சு வெளியே வந்து பழனியை கூப்பிட்டேன்.

"அவசரமா ஸ்டாஃப் கேண்டீண் வா ஒரு வேளை இருக்கு"

4.50க்கு போன் என் வண்டிக்கு!

சீக்கிரம் வா

5.20க்கு வீடு.

6,20க்கு சமையல் முடிதல்.

7க்கு சாப்பாடு.
9 வரை வரை அழுகாச்சு சீரியல்.
பின்ன தூக்கம்!

இப்படியா போய்கிட்டு இருந்த வாழ்க்கை இப்ப காலை முதல் தூக்கம் இரவு வரை. பின்ன அமரிக்கா வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கேன்! போதும் நான் சம்பாதிச்சது. ஆளை விடுங்க சாமி!!!!!!

16 comments:

  1. இப்போ நீங்க லீவுலைல இருக்கீங்க....?? இப்புடி பொலம்பாம... அத நல்லா என்ஜாய் பண்ணுங்க...!!


    அண்ணே ... நாம கொஞ்சம் அவசரப் பட்டுட்டோம் அண்ணே ....!! எல்லாரும் இப்போதான் சண்ட போட்டுக்குறாங்க ... கேட்டா இப்போ இதுதான் ட்ரெண்டாமா ...!!


    நீங்க என்னைய அப்போ திட்டுனதுக்கு பதிலா .... இப்போ திட்டீருந்தாகூட எனக்கு ஒரு நல்ல பப்ளிசிடி கெடச்சிருக்கும்...!!!


    இப்போ நான் வால் பையன் கூட சண்ட போடா ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் ..... !! பயபுள்ள மாட்ட மாட்டேங்குறான்......!!!

    ReplyDelete
  2. யோவ் லவ்டேல் மூடி வெளக்கெண்ணெய், வெங்காயம்!

    அடங்கமாட்டியா நீயி?
    பிச்சிப்பிடுவேன் பிச்சி!

    ReplyDelete
  3. ஐ... வாங்க... வாங்க .. நாமக்கல் அண்ணே....!! என்னைய எங்க பாத்தாலும் இதே மாதிரி திட்டுங்க...!! நெம்ப தேங்க்ஸ் அண்ணே.....!!!

    ReplyDelete
  4. அண்ணே..

    நல்லா ரெஸ்ட் எடுங்கண்ணே..!

    எங்களைப் பாருங்க.. வாய்க்கும், வயித்துக்கும் பத்தாமயே ரெஸ்ட்ல இருக்கோம்..

    நீங்களாச்சும்..!

    ReplyDelete
  5. அபி அப்பா என்ன ஆச்சு, நலமா இருக்கீங்களா

    ReplyDelete
  6. /ஐ... வாங்க... வாங்க .. நாமக்கல் அண்ணே....!! என்னைய எங்க பாத்தாலும் இதே மாதிரி திட்டுங்க...!! நெம்ப தேங்க்ஸ் அண்ணே.....!!!/

    ம்! நாங்க எல்லாம் இங்க வேலை வெட்டி இல்லாம விட்டத்தை பார்த்துகிட்டு உக்காந்து இருக்கமா!

    எங்க பார்த்தாலும் திட்டணுமாம்ல!

    ஆஃப் பாயில் மண்டையா! உன்னையெல்லாம் ஆசிட் பாட்டிலை உடைச்சி மூஞ்சில மேல விட்டெறியணும்!

    ReplyDelete
  7. சொலிட்டு லாப்பியயை =சொல்லிட்டு லாப்டாப்பை
    டன்க்கு =டன் அல்லது டன்னுக்கு

    மீட்டிங்கிங்=மீட்டிங்கின்
    சப்லையர்=சப்ளையர்
    பர்ச்செசர்"=பர்சேசர்
    கேண்டீண்ல = கான் டீன்//

    எப்போ வந்தீங்க ஊருக்கு??? உடம்பு தேவலையா??

    ReplyDelete
  8. ஊருக்கு வந்து குழந்தைகளோடு இருங்க. எல்லாம் சரியாகி விடும்.

    ReplyDelete
  9. நல்ல மனுஷன் ரொம்ப படிச்சா இப்படி ஆயிருமா?

    ReplyDelete
  10. ஹல்ல்ல்ல்ல்லோ நலமா?

    ReplyDelete
  11. என்னங்க இது, பதிவு போடறதும் தூக்கறதுமா இருக்கீங்க? ஆனாலும், நாங்க ரீடரில் படிச்சிடறோமே?!
    கொஞ்ச நாளா காணோமேனு பார்த்தா இப்படியா?

    என்னோட ப்ளாகில கூட ஒரு சின்ன சண்ட வந்திருச்சுங்க. ஆனாலும் சண்டைய நம்பி பொழைக்கறவங்க(பதிவு போடறவங்க) வர வர ஜாஸ்தியாயிட்டாங்க.

    ReplyDelete
  12. ராகேஷ்July 18, 2009 at 12:27 AM

    ஏங்க இப்படி ஆளாளுக்கு நரசிம்ம ஓட்டறீங்க ? பாவம் அவரு என்ன தான் பண்ணுவாரு ?

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))