பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 26, 2009

பக்கத்து வீட்டு பாடாவதி ஹிந்தி வாத்தியார்!!!


பக்கத்து வீட்டிலே இருக்கும் இந்த பாடாவதி ஹிந்தி வாத்தியாரால் நகர் முழுக்க பிரச்சனை தான். ஆனா அவரே பயப்படுவது எனக்கும் அபிக்கும் மட்டும் தான். அவரை கட்டுபடுத்த வேண்டியே தான் அபியை அவர் கிட்ட நகரின் நலம் கருதிடியூஷன் அனுப்பினோம். ஆனா பாருங்க எங்களுக்கே அவர் பல தபா தண்ணி காட்டிடுவாரு. அவரு அப்படி என்ன தான் செஞ்சாரு?


அவர் வீட்டுக்கு பின் பக்க வீட்டிலே உள்ளவங்க ஆறு மாடு வளர்கிறாங்க. அதனால இவர் வீட்டுக்கு கொசு தொல்லை அதிகம் ஆகிடுச்சு. இவர் உடனே ஜனாதிபதி அப்துல் கலாம் சமூகத்துக்குன்னு கடிதம் எழுதிட்டார். இவரோட ஒரு தூரத்து சொந்தம் ராமேஸ்வரத்தில் இருப்பதை எல்லாம் அதிலே போட்டு தாக்கி அப்ப்டீ இப்படீன்னு எல்லாம் எழுதி கடைசியா "ஏன் நீங்க அந்த மாடுகளை ஒழிக்க கூடாது?"ன்னு ஒரு கிடுக்கி பிடி கேள்வியையும் கேட்டு தொலைச்சுட்டார். அதுக்கு பேசாம நகராட்சிக்கு கொசுவை ஒழிச்சு தொலைன்னு எழுதியிருந்தாலாவது எதுனா நடந்து இருக்கும்.

ஆனா பாருங்க ஜனாதிபதிக்கு எழுதினதை அவரு படிச்சாரோ என்னவோ அதல்லாம் தெரியாது. அந்த மனுவை நாகை கலெக்டர் ஆபீஸுக்கு "ஆவன செய்யவும்"ன்னு அனுப்ப, கலெக்டர் அதை எங்க ஊர் ஆர்.டி.ஓ க்கு அனுப்ப அதை அவர் தாசில்தார்க்கு அனுப்ப, அதை அவரு டவுன் ஆர்.ஐ க்கு அனுப்பிட்டார். இதிலே என்ன கூத்துன்னா அந்த ஆர்.ஐ தான் அந்த ஆறு மாட்டுக்கும் ஓனர். அவர் தான் ஹிந்தி வாத்தியார் கிட்ட பேச மாட்டாரா? அதனால அபியை கூப்பிட்டு "இந்த மனுவை ஆவன செய்"னு கொடுத்துட்டார். அபியை ஆவன செய்ய சொன்னா இவ அந்த மனுவிலே ராக்கெட் செஞ்சு அந்த மாட்டை பார்த்து பறக்க விட்டுட்டா. கொள்ளை பசியிலே இருந்த மாடும் அதை அசை போட்டு துன்னுடுச்சு. ஏன்டி இப்படி செஞ்சேன்னு அபிஅம்மா கேட்டதுக்கு "கலாம் அங்கிள் மனுவை பார்த்ததும் எனக்கும் அவர் மாதிரி ராக்கெட் விட ஆசை வந்துடுச்சு"ன்னு பதில் சொல்றா!


இதான் போகட்டும்ன்னு பார்த்தா ஒரு நாள் எனக்கு வந்த ஒரு லெட்டரை போஸ்ட் மேன் அவர் வீட்டுல கொடுத்துட்டார். இவர் அதுக்கு என்ன செஞ்சிருக்கனும். ஒன்னு அதை வாங்கி இருக்க கூடாது. இல்லாட்டி என் கிட்ட கொடுத்து இருக்கலாம். இல்லாட்டி தூக்கி போட்டிருக்கலாம். ஆனா இவரு என்ன செஞ்சாரு தெரியுமா? அதிலே இருந்த என் பெயரில் ஏதோ ஸ்பெல்லிங் தப்பு இருந்துச்சாம்.(கடவுளே என் பெயர்ல கூட ஸ்பெல் மிஸ்டேக்கா?) அதை சிகப்பு பேனாவால் சுழிச்சு அதை திருத்தி 2 தெரு தள்ளி இருக்கும் போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டார்.


பின்ன அந்த லெட்டர் எனக்கு வருது 6 மாசம் கழிச்சு ரெண்டு ரூபாய் பைன் போட்டு. இத்தனிக்கும் அது ஒரு கருமாதி பத்திரிக்கை. அட்ரஸ்ல கை வச்சா 2 ரூபாய் பைனாம்... செத்து போனவருக்கு தெவசமே வரும் நாள் ஆகிடுச்சு. நான் அதை வாங்கி நாக்கா வழிக்க முடியும்? எதுக்கு 2 ரூபாய் தெண்டம்ன்னு விட்டுட்டேன்.


அப்படித்தான் ஒரு நாள் என் வீட்டு தென்னை மரத்தின் கீற்று அவர் வீட்டு மொட்டை மாடியிலே ஒரு 2 அடி வரை நீண்டு அவர் வீட்டுக்கு நிழல் தான் கொடுத்துச்சு. அதை ஒரு அலக்கு குச்சியால சரியா அந்த 2 அடியை மட்டும் வெட்டி விட்டுடார். அந்த 5 தென்னை கீத்தும் வால் அறுந்த கோழி மாதிரி நிக்குது. எனக்கு அப்பவும் அவர் மேல கோவம் வரலை. ஆனா அவருக்கு எதுனா செய்யனுமேன்னு மாத்திரம் நினைச்சுகிட்டேன்.


அவருக்கு இந்த LIC, POST OFFICE இதல்லாம் ரொம்ப பிடிச்ச சமாச்சாரம். அதிலே எல்லாம் எதுனா பாக்கி பணம் வரனும்ன்னா 2ரூபாயா இருந்தாலும் கூட பார்க்க மாட்டார். ஹிந்துக்கு எழுதுவார். அது பப்ளிஷ் ஆகலைன்னா ரிமைண்டர் எழுதுவார். நான் டாட்டா இண்டிகாம் நெட் எடுத்து இருந்தேன். அந்த பாடாவதியை தொலைச்சு தலை முழுகி அதுக்கு கட்டின 500 ரூபாய் டெபாசிட்டை வாங்கவே முடியலை. மெதுவா இவர் கிட்ட "சார் என்னை கண்டா பயப்பட மாட்டானுங்க, நீங்க எப்படியாவது அதை வாங்கி கொடுத்துடுங்க"ன்னு ஒரு பிட்டை போட்டேன்.


அவ்வளவு தான்! மனுஷன் தன்னையும் இந்த நகர்ல ஒருத்தன் மதிக்கிறானேன்னு சந்தோஷப்பட்டு அந்த டாட்டா இண்டிகாம் டீலர் கிட்ட நடையா நடக்க ஆரம்பிச்சு தேஞ்சு போயிட்டார். போன வாரம் கூட அபிகிட்ட இது பத்தி பேசினப்போ கேட்டேன் ஹிந்திசார் அந்த டெபாசிட்ட வாங்கிட்டாரா? எதுனா இம்புரூவ்மெண்ட் இருக்கான்னு கேட்டதுக்கு அபி சொன்னா "ஆமாப்பா நல்லா இருக்கு இவரு நடையா நடந்து ஐந்து அடி நாலு அங்குலமா இருந்தவரு இப்ப தேஞ்சி போய் நாலு அடி ஐந்து அங்குலமா ஆகிட்டாரு"ன்னு சொன்னா!

நல்ல இண்ட்ரஸ்டிங் கேரக்டர் அவரு!

February 25, 2009

மாநக்கல் சிபி! வேண்டாம் என் கிட்ட வம்பு!!!


நானும் எவ்வளவுதான் பொறுத்து பொறுத்து பார்ப்பது. உங்க ஜொல்லுக்கு எல்லையே இல்லாம போச்சு.
என்ன இப்ப நயந்தாரா கலைமாமணி வாங்கியாச்சு அதானே உங்க பிரச்சனை! ஆனா போன வருஷம் நான் தீபாவெங்கட் கலைமாமணி வாங்கிய போது நான் இப்படித்தான் போஸ்ட் போட்டு அலப்பரை கொடுத்தேனா?
இனியும் உங்க ஜொள்ளு தொடர்ந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்! தீபாவெங்கட் வாங்கின ஆஸ்கார், புக்கர், மக்கர் எல்லா விருது போட்டோவும் போடுவேன் என்பதை சொல்லி உங்களை எச்சரிக்கிறேன்!

February 23, 2009

அபியும் நானும் திரை விமர்சனம்!!!

நான் 2 நாள் முன்ன அபியும் நானும் படம் பார்த்துட்டேன். 2008 டிசம்பர் 22 க்கு டிக்கெட் எல்லாம் ஒத்தி போட்டு ஒத்தி போட்டு (அந்த படம் 21ம் தேதி ரிலீஸ் என சொன்னதால்) எங்க ஊர்ல அது ரிலீஸ் ஆகாததால் பார்க்க முடியாமையே ஆகிவிட்டது.

அதன் பின்னே லக்கி விமர்சனத்துக்கு வெயிட் பண்ணினேன். அவர் தானே எலி நமக்கெல்லாம். மனுஷன் எல்லா படத்தையும் எப்படித்தான் பார்த்து நம்மை காப்பத்துறாரோ! அதை விடுங்க! நான் பார்த்த “அபியும் நானும்” விமர்சனம் கீழே!


பிரகாஷ்ராஜ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்குது. அதன் பேர் அபி. ஒரே குழந்தை. அதான் பிரச்சனையே. அதே தம்பதிகள் நமது ஜெனரேஷனுக்கு முன்னே ஜெனரேஷன்ல இருந்திருந்தா இப்படி ஒரு படம் வந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா இப்ப எல்லா தம்பதிக்கும் ஒரு குழந்தை அதிக பட்சமா போனா ரெண்டு. அந்த காரணத்தால் குழந்தைகளுக்கு அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா போன்ற உறவு மண்ணாங்கட்டிகள் கிடையாது. வேற வழியே இல்லாம அப்பா, அம்மா தான் குழைந்தை கூட விளையாடி தொலைக்கனும்.

இதே அந்த காலமாக இருந்தா குழந்தைகளை பெரியவங்க கிட்ட படுக்க போட்டுட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிக்கலாம். (இதான் உண்மை). ஆக இப்படியாக பிறக்கும் அந்த ஒரு குழந்தை மேல அப்பா பிரகாஷ்ராஜ்க்கு உயிரோ உயிர். ஆனா அம்மா ஐஸ்வர்யாவுக்கு அப்படி இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா பிராக்டிகலா நல்ல சிந்தனை உள்ளவங்க. அப்படி வளரும் அந்த பொண்ணு ஒரு சர்தார்ஜிய லவ்ஸ் பண்ணுது.

வந்து அப்பாகிட்டே சொல்லும் போது அப்பாவுக்கு பிடிக்கலை. ஆனா அம்மாவுக்கு ஓக்கே. அதன் பிறகு அப்பா திடீர்ன்னு இல்லை கொஞ்சம் கொஞ்சமா ஓக்கேவாகி கல்யாணம்.

கதை என்னமோ சிம்பிள் தான். ஆனா அதை அழகா சொன்ன விதம் அருமை.
எடுத்த விதமும் அருமை. சரளமான அந்த காமடி வசனமும் அருமை. எல்லாரும் படம் பத்தி பிரிச்சு மேஞ்சாச்சு. ஆனா என் பார்வை கொஞ்சம் வித்யாசமா இருக்குதே என்ன பண்ண?

பிரகாஷ்ராஜ் நடிப்பில் குறையொன்றும் இல்லை கண்ணான்னு பாட வைத்தாலும் அம்மாவாக ஐஸ்வர்யா நடிப்பு அருமை.அம்மாவா வாழ்ந்துட்டாங்க! ஒரு சின்ன குழந்தை தான் பாவப்பட்ட காரணத்துக்காக ஒரு பிச்சைகாரனை வீட்டுக்கு கூப்பிட்டு கொண்டு வரும் போது காட்டும் எரிச்சல் அற்புதம்.

* அதே நேரம் அங்கே வரும் அப்பா தன் குழந்தைக்காக அந்த பிச்சைக்காரனை வீட்டில் சேர்த்து கொள்வது கொஞ்சம் அதிகம்.

*அப்படி ஒன்னும் அந்த பிச்சைகாரன் பாவப்பட்ட ஆள் இல்லை. வசந்த் அன் கோ வாசலில் 6 பந்துகளையும் 6 டிவியில் பார்க்கும் ஒரு ஷோக்காளி தான். தனக்கு சென்னை வெய்யில் தாங்க வில்லை என ஊட்டிக்கு வந்த ஒரு புண்ணியவான். அவன் பேரில் அந்த குழந்தைக்கு பாவம் ஏற்ப்பட்டது அந்த குழந்தையின் அறிவின்மையா அல்லது அதை தடுக்காதது அப்பாவின் அறிவின்மையா என தெரியவில்லை.

* எப்போ பார்த்தாலும் அந்த பிச்சைகாரர் “என் அம்மா என் அம்மா “ன்னு அபியை பார்த்து சொல்வது ஓக்கே. ஆனா அப்படி சொல்லும் போதெல்லாம் அந்த திரிஷாவின் முகபாவம் அய்யோ பாவம்.

* அபியை எல்லாருக்கும் படத்திலே பிடிக்குது. அதாவது தலைவாசல் விஜய் முதல் படம் பார்க்கும் பாமரன் வரை. என்ன காரணம்? அவ அழகா இருப்பது மட்டும் தான் அந்த படத்தில் அந்த அபியின் ஒரே சாதனை. ஆனா ஸ்கூல் முதல் மாணவியா? இல்லை ஸ்போர்ட்ஸில் பெரிய ஆளா? அது போன்ற எந்த காரணமும் இல்லாம அபியை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது! அபத்தத்தின் உச்சம்.

* அது போல அந்த சர்தார்ஜியை காதலிப்பது ஓக்கே. அந்த சர்தார்ஜி பிரதமருடன் ஜஸ்ட் லைக் தட் போன்ல பேசறார். அதுக்கு அப்பா அரண்டு போறார். அப்போது பிரகாஷ்ராஜ் நடிப்பு நல்ல காமடியா இருக்கு. அதை விடுங்க அதை அபிகிட்ட கேக்கும் போது”ஆமாப்பா அடிக்கடி பேசுவார்”ன்னு சாதாரணமா சொல்லும் போது “அய்யோ பாவம் இந்த பொண்ணு பிரதமர் மதிப்பு என்னன்னு கூட தெரியாம அப்பா வளர்துட்டாரே”ன்னு அபி மேலயும் அந்த லூசு அப்பா மேலயும் பரிதாபம் வருது.

* அபி அடிக்கடி “I know what iam doing daddy” ன்னு சொல்லும் போது எரிச்சல் அதிகமா வருது.

பிரகாஷ்ராஜ் கிட்டதட்ட ஒரு சைக்கோ கேரக்டர் இந்த படத்திலே. ஆமா அம்மா மேல கொட்டின வென்னீருக்காக அபியை தூக்கிகிட்டு ஆஸ்பத்திரி போக நினைப்பது முதல் அவ சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்கும் போது கூட …அவர் ஒரு சைக்கோவா தான் சித்தரிக்கப்பட்டிருக்கார். எத்தனை அப்பன் இது போல சைக்கோவா இருக்கானுங்களோ!

ஆனா அந்த அம்மா கேரக்டர்ல ஐஸ்வர்யா சூப்பரோ சூப்பர். அபி கல்யாணம் ஆகி போகும் போது ஏர்போர்ட்டிலே கலங்குவது அருமை. ஆனா அப்ப கூட லூசு அப்பா தன் நடிப்பை காமிக்க முயற்சிப்பது எல்லாம் ஐஸ்வர்யா நடிப்பிலே அடிபட்டு போகுது.

* ஆனா இதை எல்லாம் தாண்டி படம் அருமையா இருக்கு!

February 21, 2009

இம்சை வெங்கிக்கு என் கண்டனங்கள்!!!


இம்சை வெங்கி அவர்களே! உங்களுக்கு என் கண்டனம்! பார்த்திடுவோம் நீக்களா, நானா, சிபியான்னு!இன்னும் சில ஆதாரங்கள் மங்களூர் சிவா அவர்களிடம் இருக்கு! தேவைப்பட்டால் வெளியிடுவோம்!

குறிப்பு: இதல்லா புரியாதவங்க "mokkaimails''குரூப்ல் சேர்ந்தா தெரியும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஆனந்த விகடனுக்கு வாழ்த்துக்கள்!!!

நான் சின்ன பதிவையே எழுதுவது இல்லியே என ஏக்கப்படும் அன்பர்களே! ரொம்ப சின்ன பதிவா எழுதவா?

என் பிரண்ட், ராமலெஷ்மியும் ஆனந்த விகடனில் வந்தாச்சு! வாழ்த்துக்கள்! (இது ஆனந்த விகடனுக்கு)

நீங்க வாழ்த்து சொல்வதா இருந்தா என் பிரண்ட் கவிதையை வெளியிட்டு தனக்கு பெருமை சேர்த்து கொண்ட ஆனந்த விகடனுக்கு வாழ்த்து சொல்லுங்க!!!

லிங் இங்க இருக்கு

அது போலவே மற்ற 6 நண்பர்களையும் வாழ்த்துங்கள்!!

February 20, 2009

என் பிராஜட் டைரக்டருக்கு 10 கேள்விகள்!!

நான் என்ன பண்ணட்டும் மக்கா! இந்த ஃபீவர்ல நானும் மாட்டிகிட்டேன்:-)) வேற வழியே இல்லை கேள்வி கேக்கனும்ன்னா நான் இவர் கிட்டதான் கேக்கனும்!

1. ஏன் சார் ஏன் சார் நீங்க ஷார்ஜாவிலே இருந்து வரனும் ஆஃபீஸ்க்கு. உங்க டிராபிக் பிரச்சனையால் 8-5 ஆபீஸுக்கு 7.30க்கே வந்துடுடரீங்க, காலை 5 க்கே கிளம்பி! ஆனா நான் 15 நிமிஷத்திலே ஆபீஸ் வந்திடலாம். ஆனா நான் 7.50க்கு வந்தாகூட நீங்க செக்யூரிட்டி பக்கமா நின்னுகிட்டு உங்க கேபினுக்கு போகாம தம் அடிச்சுகிட்டு "ஹாய் மேன் குட் மார்னிங் 7.50 என சொல்கிறீர்களே! ஏன்? கொஞ்சம் லேட்டா தமிழ்மணம் ஓப்பன் பண்ணினா ஓப்பன் ஆகாதா???

2. காலை 9.30க்கு மட்டும் உங்களுக்கு மூக்கிலே வேர்க்கும் ரகசியம் என்ன? என் பிரேக்பாஸ்ட் நேரம் அதுதான் என நீங்க அனுப்பிய மெமோவை மறந்து போன செலக்டிவ் அம்னீஷியா பேஷண்ட்டா நீங்க? (நீங்க செலக்டிவ் அம்னீஷியா என்பது எனக்கு நல்லா தெரியும்!என் அப்ரைசல் மாத்திரம் ஆப்பு வைக்கும் ஆசாமி நீங்க போங்க சார்)

3. நான் முக்கியமான பதிவை படிச்சுகிட்டு இருக்கும் போது என்னை "உடனே கேபினுக்கு வா"ன்னு கூப்பிட்டு விட்டு எவனோ இத்து போன சப்ளையர் கிட்ட "due to financial crises" ன்னு மொக்கை போட்டுகிட்டே என்னை பார்த்து "I will catch you latteron" ன்னு அனுப்புவீங்களே! என்ன கொடுமை சார் இது? ஒரு பதிவை படிச்சா ஆழ்ந்து படிக்க வேண்டாமா?

4. உங்களுக்கு காலை 11 மணிக்கு பொழுது போகலைன்னா என் கேபினுக்கு வந்து "ஹாய் மேன்!" one important issue is going on ... i need your suggession"ன்னு என் தோளில் கை போட்டு கூட்டிகிட்டே போய் "sorry man i foget it, you can go and do your valuable duty" என சொல்லும் போது எனக்கு எந்த அளவு கோவம் வரும் என நினைத்து பார்த்ததுண்டா?

5. சரி அதுதான் போகட்டும் என நினைத்து வந்து சீட்டில் உட்காந்த்து பார்த்தா ச்சேட் பன்ணிய 8 பேரில் 2 பேர் காணாமல் போயும் மீதி 6 பேர் (டிங்) (டிங்)என கதறியும் இருக்கும் கொடுமையை நீங்க என்றைக்காவது உணர்ந்ததுண்டா?

6. மதியம் 1 மணிக்கு மீட்டிங் கால் நீங்க கொடுக்கும் போது நான் ச்சேட்டிய்வர்களிடம் "மீட்டிங் கால்" என சொல்லும் போது யாருமே நம்பாம இளக்காரமாக சிரிக்கின்றனரே அது உங்களுக்கு தெரியுமா?

7. அது தான் போகட்டும் என நினைத்து நான் கொண்டு வரும் சாம்பார் சாதம், மீன் வறுவல் எல்லாம் முழுங்கிய பின்னே "மேன் ஷேர் திஸ் KFC ன்னு சொல்லும் போது என் குருதி அழுத்தம் அதிகமாகுதே அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா இல்லை தெரியாதது மாதிரி நடிக்கின்றீரா?

8. ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆத்துவது போல் என் கேபினுக்கு வந்து "ஒரு 80 ஸ்டோரி பில்டிங் நமக்கு கிடைச்சிருக்கு, கன்சல்டண்ட் குப்பன், கிளையண்ட் சுப்பன்ன்னு பீலா விடிறீங்களே ஏன் சார் ஏன் சார் என்னை நம்பி ச்சேட் பண்ணும் புண்ணியவான்களுக்கு நான் என்ன கண்டின்யூட்டி கொடுக்க முடியும்? சொல்லுங்க, இதனால் என்ன என்ன பிரச்சனை வருது தெரியுமா உங்களுக்கு?

9. " மதியம் 3 மணிக்கு எனக்கு இண்டர்காமிலே கூப்பிட்டு " நான் ரொம்ப பிசி என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்" என நீங்க சொன்ன போது தான் சார் தெரிஞ்சுது நீங்க கூட பிளாக்கர்ன்னு! அது உண்மையா?

10. ஆனா பாருங்க சாயந்திரம் 4 மணிக்கு வந்து என் கேபின்ல உட்காந்து அமரிக்க பொருளாதார வீழ்ச்சியை நீங்க அதன் ஆணி வேர்ல இருந்து கிண்டி கிழங்கு எடுக்கும் போது நான் எவ்வளவு நேரம் தான் புரிஞ்ச மாதிரியே நடிக்கிறது? சொல்லுங்க சார் சொல்லுங்க! அதை விட கொடுமை என்னன்னா அந்த நேரம் பார்த்து நான் "மொக்கை மெயில்ஸ் குரூப்பிலோ அல்லது பண்புடன்லயோ யார் கிட்டயாவது சண்டை போட்டிருப்பேன். பதில் சொல்ல லேட் ஆச்சுன்னா "ஆஹா அபிஅப்பா தோத்துட்டார்"ன்னு கை கொட்டி சிரிப்பாங்களே, அந்த பாவம் உங்களை சும்மா விடுமா சார்?????????????????

ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாது!

February 18, 2009

"வேப்பங்கஞ்சி வித் அபிஅப்பா & இந்திய ஜனாதிபதி!!!

எனக்கு எப்பவுமே நம்ம ஜனாதிபதி மேல ஒரு கோவம் இருந்துகிட்டே இருக்கும். நேத்து ராத்திரி கூட ரொம்ப வருத்தப்பட்டுகிட்டு இருந்தேன் நம்ம நண்பர்கள் கிட்ட! இந்த பத்ம அவார்டு எல்லாம் சும்மா ஏனா தானோன்னு தர்ராங்க. நானும் ஒரு இந்திய குடிமகன் தான, என்னை ஒரு வார்த்தை கேட்டா என்னமா ஐடியா சொல்லுவேன்ன்னு புலம்பிகிட்டே தூங்கிட்டேன்.
பாருங்க நம்ம ஜனாதிபதிக்கு எப்படித்தான் இந்த விஷயம் தெரிஞ்சுதோ.ஒரு வேளை யாரு மானசுல யாரு நிகழ்சி பார்ப்பாங்க போல இருக்கு. கபால்ன்னு ரெண்டு கிங்காரகன் மாதிரி ஆளை விட்டு என்னை துபாய்ல இருந்து டெல்லி தூக்கிட்டு வந்துட்டாங்க. அப்ப விடிகாலை 4 இருக்கும்.
ஓவர் டு டெல்லி.............ஜனாதிபதி மாளிகை!

ஜனாதிபதி: வாங்க அபிஅப்பா வாங்க, இந்த தடவை 'பத்ம" விருது எல்லாம் உங்க கிட்ட கேட்டு குடுக்கலாம்ன்னு பார்க்கிறேன். முதல்ல என்ன சாப்பிடுறீங்க?

அபிஅப்பா: வேப்பங்கஞ்சி

ஜனாதிபதி: ஓ குட் அப்ப "வேப்பங்கஞ்சி வித் அபிஅப்பா"ன்னு மீடியாவுக்கு சொல்லிடலாம். சரி முதல்ல குழந்தைகள் விருது. சிறந்த வீர குழந்தை விருது யாருக்கு தரலாம்ன்னு நெனைக்கிறீங்க?

அபிஅப்பா: சமீபத்துல ஒரு பாட்டு பார்த்தேன் அ ஆ ன்னு ஒரு படம்.அப்படியே ஆன்னு வாயை பொளந்துட்டேன். அதிலே எஸ்.ஏ.சூர்யா ஒரு டைட்டில் சாங் பாடுவாரு. அப்ப ஒரு கட்டத்துல எம்சியார் மாதிரி நெனச்சுகிட்டு ரெண்டு சின்ன பசங்களை தூக்கி கிட்டு ஏகப்பட்ட எக்ஸ்பிரஷனை மூஞ்சில காமிச்சுகிட்டு பாடுவார் என்னவோ ஆறரை கோடி தமிழன் அப்புடி இப்புடின்னு, தூரமா இருந்து பார்க்கும் நமக்கே இப்படி இருக்கே அந்த 2 குழந்தைகள் பத்தி நெனச்சு பாருங்க. இதோ அந்த போட்டோ கூட இருக்குது.அதனால அவங்களுக்கே "வீரதீரர் செயல் புரிந்த குழந்தகள் அவார்டு தரலாம் என்பது அடியேனின் கருத்து.

ஜனாதிபதி: மை காட், பசங்க இப்ப எப்புடி இருக்காங்க. ஏன் இந்த ஆளை வன்கொடுமை சட்டத்துல உள்ளே தூக்கி போட கூடாது?

அபிஅப்பா: போடலாம் ஆனா சிறைக்கைதிகளை கொடுமை படுத்துனதா மனித உரிமை கமிஷன்ல உங்களை தூக்கி உள்ளே போடுவாங்க பர்வால்லயா?

ஜனாதிபதி: ஓ நோ, சரி இப்ப குழந்தைகள் இப்ப எப்படி இருக்காங்க?
அபிஅப்பா: இப்ப ஓக்கே ஆனா படம் வந்த கொஞ்ச நாள் பேஸ்தடிச்ச மாதிரியே இருந்தாங்க. எதை பார்த்தாலும் தெனாலி கமல் மாதிரி அலறி அலறி அழுதாங்க. பின்ன சிம்புதான் சரி பண்ணினார்.

ஜனாதிபதி: வாட், சிம்புவா? அவரும் விஜய் மாதிரி டாக்டரா ஆகிட்டாரா? ஓ காட்!
அபிஅப்பா: இல்லை சிம்பு நேரிடையா உதவி செய்யலை. கடவுள் எந்த காலத்துல நேர்ல வந்து உதவி செஞ்சிருக்கார். ஒரு மனோதத்துவ டாக்டர் அந்த பசங்களுக்கு ட்ரீட் பண்ணினார். தினமும் ஒரு சிம்பு படமா போட்டு காட்டினார். பசங்களுக்கு ஒரு தைரியம் வந்துடுச்சு. "ஆறிலும் சாவு நூறிலும் சாவுடா, இனி இந்த மனசு குஷ்பு வில்லு படத்தில டான்ஸ் ஆடினா கூட பயப்படாதுடா"ன்ற ரேஞ்சுல தேறிட்டாங்க மேடம்.

ஜனாதிபதி: ஓ வெரி குட். அப்ப அந்த பசங்களுக்கும் வீரதீர அவார்டு கொடுத்திடலாம். அது போல அந்த டாக்டருக்கும் ஒரு பத்மஸ்ரீ அவார்டை அள்ளி விடலாம் என்ன சொல்றீங்க அபிஅப்பா.

அபிஅப்பா: டாக்டர்ஸ்க்கு எதுக்கு டாக்டர் பத்மஸ்ரீ தரனும்?

ஜனாதிபதி: அது ஒரு வழக்கம் அபிஅப்பா! போன பிரியட்ல முட்டிகால் ஸ்பெஷலிஸ்ட்க்கு கொடுத்தோம். அது போலத்தான். கொஞ்சம் இருங்க ஒரு போன் வருது, மேடம்ஜி பேசறாங்க ..."ஹல்லோ....மேடம்ஜி ,ஆங்ஜி, ஜிஹாங்...என்னது முதுகு முன்னாடி இதயம் பின்னாடியா ஓக்கே மேடம் ஜி"(போனை வைத்துவிட்டு) ஸாரி அபிஅப்பா முதுகு முன்னாடி, இதயம் பின்னாடி, மனசு கட்ட கடேசிதான்.

அபிஅப்பா: என்ன மேடம் நீங்க என்னவோ வேப்பங்கஞ்சி குடிச்ச மாதிரி பேசறீங்க, சரி விடுங்க அந்த டாக்டருக்கு இப்ப வேண்டாம், சிம்புவை அவர் சரி பண்ணிட்டாருன்னா அப்ப கொடுக்கலாம்.

ஜனாதிபதி: சிம்புவையே அந்த டாக்டர் குணப்படுத்திடுவாரா, அப்ப அவருக்கு "மரணத்துக்கு பிந்தைய விருது"தான்னு சொல்லுங்க. சரி! இப்ப நாம் ஸ்போர்ட்ஸ்க்கு போவோம். சரி உங்க அபிப்ராயம் என்ன?

அபிஅப்பா: இதுவும் வழக்கம் தானே மேடம் நாம எப்போதும் டெண்டுல்கருக்கு தானே கொடுக்கனும். அதானே நம்ம அரசியல் சாசனத்திலே அம்பேத்கார் எழுதி வச்சிருக்கார். தவிர இப்ப ஸ்ரீலங்கா சீரீஸ்ல கூட அவர் பர்பார்மென்ஸ்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தெரிஞ்சுது. முதல்ல 5 அடுத்து 6 அடுத்து 7ரன் இப்படி நல்ல முன்னேற்றம் இருந்துச்சே

.ஜனாதிபதி: நோ நோ அபிஅப்பா, நான் ஒரு பெண், அதனால ஒரு பெண்ணுக்கு தான் கொடுப்பேன். கர்னம் மல்லேஸ்வரிக்கே கொடுக்கலாம்ன்னு இருக்கேன். நல்ல பளு தூக்கும் பெண் அவங்க. என்ன ஓக்கேவா அபிஅப்பா?

அபிஅப்பா: மேடம் ஒரு பெண்ணுக்கு தான் அந்த அவார்டுன்னு முடிவாகி போச்சு, அப்ப இந்த போட்டோவை பாருங்க. முடிவை நீங்களே எடுங்க.


ஜனாதிபதி: வாவ், கொழந்த அழகா இருக்கா, பாருங்களேன் என அசால்ட்டா அந்த கழுத்து மணிய தூக்கிகிட்டு இருக்கா முகத்திலே அந்த கஷ்டத்தை காமிச்சுக்காம, அப்பீலே இல்லை இவளுக்கு தான் "பத்மஸ்ரீ" பளு தூக்கும் போட்டியிலே.

அபிஅப்பா: அதிலே ஒரு சிக்கல் மேடம்.

ஜனாதிபதி: மணியிலயா, நோ பிராப்ளம் கண்டிப்பா இந்த குழந்தைக்கு தான் "பத்மஸ்ரீ"
அபிஅப்பா: இல்ல மேடம் அவ குழந்தை தானே, அவ பிரண்டு ஒருத்தி இருக்கா அவளுக்கும் பத்மஸ்ரீ அவார்டு கொடுக்கனும்ன்னு இவ அழுவா, அதான் யோசிக்கிறேன்

ஜனாதிபதி: ஓ அவளுக்கு என்ன தனி திறமை இருக்கு?
அபிஅப்பா: ஒன்னு இல்லை மேடம் ரெண்டு திறமை இருக்கு. 1. அவ பேரே பத்மா, 2. அவ இருப்பது இப்ப இத்தாலில!

ஜனாதிபதி: மை காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆட் இந்த திறமை ஒன்னே போதுமே அப்ப ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ரெண்டா கொடுத்திடலாம்!
தொரரும்.....

அடுத்து சிறந்த ஓட்ட பந்தய வீரர் பத்ம அவார்டு, சிறந்த நகைச்சுவையாளர் பத்மஸ்ரீ விருது எல்லாம் இருக்கு. பதிவு பெருசா ஆகிடுச்சு அதான்....வர்ட்டா