பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 12, 2007

சுத்த பைத்தியகாரத்தனமா இருக்கே!!!

அது நல்ல பிரபலமான நிறுவனம் தான். ஒத்துக்கறேன். கார் வாடகைக்கு விடும் நிறுவனம். சரி மின்னல் பிரியாணி போடறேன் வாங்கன்னு கூப்பிட்டதால எல்லாரும் போகலாம் என காரை வாடகைக்கு எடுக்கலாம்ன்னு பேசினா நம்ம அதிஷ்டம் கிடச்சுடுச்சு! சரி காலைல வந்து எடுத்துக்கலாம்ன்னு அந்த கபெனில புக் பண்ணிட்டேன்.

"சார் வரும் போது உங்க கிரடிட் கார்டும் கொண்டு வாங்க"ன்னு சொன்னா அந்த பொண்ணு! அதுக்கு நான் "இல்ல நான் கேஷா தாரேன்"ன்னு சொன்னேன். அதுக்கு அந்த பொண்ணு "இல்ல சார், உங்க கிரடிட் கார்டூ சும்மா ஒரு கேரண்டிக்கு தான்ன்னு சொன்னவுடனே எனக்கு பக்குன்னு ஆச்சு! சரின்னு வேற வழியில்லாம ஒத்துகிட்டேன்.

ஆனா எனக்கு என்ன டவுட்ன்னா அந்த கம்பெனி நல்ல கம்பெனியாவே இருக்கட்டும். ஆனா அந்த ஆபீஸர் அநியாய ஆபீஸரா இருந்து இப்படியே என்னய போல எல்லா சிரிச்ச மூஞ்சு அதாங்க இளிச்சவாயன்கிட்ட வாங்கின நம்பர் குறிச்சுகிட்டு கம்பெனிய விட்டு ரிசைன் பண்ணிட்டு போகும் போது ஆன் லைன்ல கிழிச்சுட்டு அவன் காசர்கோடு கிளம்பிட்டான்னா?

இப்படி கிரடிட் கார்டு அடமானம் வைப்பதை பேங்குகள் ஒத்துக்குதா? எனக்கு ஒன்னியும் பிரியலை! இந்த விஷயமா தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!

*******************************
நல்ல ஒரு கேள்வி அபிஅப்பா கேக்கப்படாதே! கொலவெறி வந்துடுமே! அதுக்குள்ள 40க்கு மேல போயிடுச்சு அதான் பதிவுக்கு சம்பந்தப்பட்ட நண்பர் ஸ்ரீதர்வெங்கட்டின் பதிலை இங்க ஒட்டி வச்சுட்டேன்! இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க! நன்றி ஸ்ரீதர்வெங்கட்!

Sridhar Venkat said...
இந்த மாதிரி கார்டு வைத்து பிஸினஸ் செய்யும் சில வலைத்தளங்களை உருவாக்கியதில் என் பங்கு இருக்கிறது. அதுனால உங்க கேள்விக்கு எனக்கு தெரிஞ்ச பதில்- கார்ட் நம்பர மட்டும் குறிச்சிக்கிட்டு பணம் எடுக்க முடியாது. பண்டங்களோ, சேவைகளோ வாங்கலாம். - உங்களுக்கு வரும் பில்லை நீங்கள் சரி பார்த்த பின் தான் கட்ட வேண்டும். நீங்கள் வாங்காத ஏதாவது பொருளுக்கு பில் பண்ணியிருந்தால் நீங்கள் பணம் கட்ட தேவையில்லை. நீங்கள் புகார் கொடுக்கலாம். உங்களை பணம் கட்ட சொல்லி அவர்கள் கட்டாய படுத்த முடியாது.- உங்கள் கார்ட் தொலைந்திராத பட்சத்தில் உங்களுக்கு தெரியாமல் யாராவது அதை ஆன்லைன் வியாபாரத்திற்க்கு பயன்படுத்தியிருந்தால் கார்ட் சேவை வழங்குபவர்கள் அந்த ஆன்லைன் நிறுவனத்திடம் நடவடிக்கை எடுப்பார்கள். - பொதுவாக ஆன்லைன் வியாபாரத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்றால் ஏதாவது கணக்கு துவங்க வேண்டும். அதற்கு ஏதாவது இமெயில் கணக்கு மற்றும் சில தகவல்கள் கொடுக்க வேண்டும். இதன் மூலம் யார் 'தவறாக' கிரடிட் கார்ட் உபயோகிக்கிறார்கள் (mal practices) என்பதை ஓரளவுக்கு கண்டு பிடிக்கலாம். இது fool proof நடவடிக்கைகள் இல்லை என்றாலும் ஓரளவுக்கு கட்டு படுத்தலாம். இதனால் கிரடிட் கார்ட் வாடிக்க்கையாளர்கள் பாதிக்கப் படுவதில்லை. அதனை வழங்கும் வங்கிகள்தான் பாதிக்கப் படுகின்றன.- தற்போது சிடி பாங்க் போன்ற வங்கிகள் வெறும் கார்ட் நம்பரை மட்டும் வைத்து இணையத்தில் எதுவும் வாங்க முடியாது என்ற நிலைப்பாடை எடுத்திருக்கிறது. இதற்கு ஒரு I-Pin தேவை. I-Pin என்பது ஒரு கடவுச் சொல் போல. virtual keypad மூலம் மட்டுமே இதை நாம் அளிக்க முடியும். இது ஒரு சிறந்த பாதுகாப்பு கவசம் வாடிக்கையாளார்களுக்கு.- சரி. இப்படி கார்டை கொடுப்பதனால் வேறு என்ன அபாயம்? கார்ட் ரீடர் என்றொரு சமாச்சாரம் இருக்கிறது. உங்கள் கார்டிலிருக்கும் மேக்நெடிக் ஸ்ட்ரிப்பை அப்படியே காபி எடுத்து போலி கார்ட் தயாரிக்கலாம். இதிலும் பணத்தை நேரடியாக திருட முடியாது. பண்டங்கள்/ சேவைகள் வாங்கலாம். ஆனால் வாடிக்கையாளர்கள் தங்கள் பில்களை சரி பார்த்து பணம் கட்டினால், இந்த மாதிரி பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.- ஒரு முறை இப்படி தவறு நிகழ்ந்தது உங்களுக்கு தெரிய வந்தால், உடனடியாக உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு கார்டை மாற்றி விடவும்.- இந்த மாதிரியான் ஆன்லைன் தில்லுமுல்லுகளினால் பெரிதும் பாதிக்கப் படுவது வங்கிகள்தான். இதை குறைக்க இன்றளவிலும் பற்ப்பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.- வாடிக்கையாளர்களான நாம் செய்ய வேண்டியவை. மூன்றாம் நபரிடம் கார்டை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ATM PIN, I-PIN போன்றவைகளை எல்லாரும் எளிதில் பார்க்கக் கூடிய இடத்தில் குறித்து வைக்கக் கூடாது. கார்டுடன் இந்த pin-களும் தொலைந்தால் ஓன்றுமே செய்ய முடியாது. ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே சம்பந்தப்பட்டு வங்கிகளை அணுகி நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனாலும் நீங்க பாவம்ப்பா... நீங்க கேட்ட கேள்விய கண்டுக்காம சிக்கனோட காலப் பத்தி கவலப் பட்டுகிட்டு இருக்காங்களே.... என்னத்த சொல்ல போங்க...
July 12, 2007 3:55 AM

53 comments:

  1. "சுத்த பைத்தியகாரத்தனமா இருக்கே!!"

    நீங்க சீரியஸா எழுதறது தானே? ஆமா.. ஆமா!!

    ReplyDelete
  2. என்னமோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது.. என்னான்னு புரியல.. இதுல எங்கியுமே அபி பாப்பா வரலியே ஏன்?
    :(

    ReplyDelete
  3. அம்மா தாயே யாரவது இருக்கீங்களா

    ReplyDelete
  4. //சரி மின்னல் பிரியாணி போடறேன் வாங்கன்னு கூப்பிட்டதால//

    அடப்பாவிகளா! இதெல்லாம் என்ன ஓரவஞ்சனை? சிக்கன் பிரியாணியா?

    ReplyDelete
  5. //
    என்னமோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது.. என்னான்னு புரியல.. இதுல எங்கியுமே அபி பாப்பா வரலியே ஏன்?
    //

    இதன் மூலம் தாங்கள் கூற விரும்பும் கருத்து

    ReplyDelete
  6. //
    அடப்பாவிகளா! இதெல்லாம் என்ன ஓரவஞ்சனை? சிக்கன் பிரியாணியா?
    //

    ஆமா அஞ்சு கால் சிக்கன் பிரியாணியாம்

    ReplyDelete
  7. மிஸ்டர் பிச்சைக்கார்.. பிரியாணி போடறது மின்னல்.. அபிஅப்பா இல்ல.. நீங்க அட்ரஸ் மாறி வந்திட்டீங்க...

    ReplyDelete
  8. ராப்பிச்சக்காரனுக்கு பகல்ல என்னயா வேலை? டே ஷிப்டா?

    ReplyDelete
  9. //ஆமா அஞ்சு கால் சிக்கன் பிரியாணியாம் //

    யாரது? தைரியமிருந்தா நேரா வாப்பா/ம்மா..

    ReplyDelete
  10. வெறும் பிரியாணி மட்டும் தானா நம்ப முடியலயே

    ReplyDelete
  11. //இதன் மூலம் தாங்கள் கூற விரும்பும் கருத்து //

    அடிங்க.. அவரு என்னா சொன்னார்னே வெளங்கல.. நான் வேற சொல்லனுமா?

    ReplyDelete
  12. மின்னல் எங்கிருந்தாலும் இங்க வந்து மின்னவும்..

    ReplyDelete
  13. //
    யாரது? தைரியமிருந்தா நேரா வாப்பா/ம்மா..
    //

    அம்மா தாயே நேர்ல எல்லாம் வரமுடியாது எனக்கு இருக்கறதே ரெண்டு கால்தான்

    ReplyDelete
  14. //வெறும் பிரியாணி மட்டும் தானா நம்ப முடியலயே //

    அபிஅப்பா சொன்னா நான் நம்புவேன்! சரிதானே அண்ணா!!

    இப்படிக்கு
    பாசமலர்!

    ReplyDelete
  15. அட யாரும் காசெடுக்காம வந்துடாதீங்க என்னோட க்ரடிட் கார்ட வச்சிதான் வண்டி எடுத்திருக்கேன்னு சூசகமா சொல்றாரு

    ReplyDelete
  16. //அம்மா தாயே நேர்ல எல்லாம் வரமுடியாது எனக்கு இருக்கறதே ரெண்டு கால்தான்//

    ஹிஹி!! நானு திருந்திட்டேன்.. என்னய நம்புங்க ப்ளீஸ்!

    ReplyDelete
  17. இன்றைய செலவு முழுவதும் குசும்பன் ஒத்துக் கொள்வதாக நேத்து ராத்திரியே கனவில சொன்னாருப்பா

    ReplyDelete
  18. //
    ராப்பிச்சக்காரனுக்கு பகல்ல என்னயா வேலை? டே ஷிப்டா
    //

    டே ஷிப்டா இல்லங்க ஓவர் டைம்ங்க
    இப்ப கஸ்டபட்டாதன பின்னால நல்ல இருக்க முடியும்

    ReplyDelete
  19. //இன்றைய செலவு முழுவதும் குசும்பன் ஒத்துக் கொள்வதாக நேத்து ராத்திரியே கனவில சொன்னாருப்பா
    //

    குசும்பன் ஹமாம்மின் அடையாளம்.. அதெல்லாம் குடுத்துடுவாரு.. பார்த்துகிட்டே இருங்க!

    ReplyDelete
  20. //
    ஹிஹி!! நானு திருந்திட்டேன்.. என்னய நம்புங்க ப்ளீஸ்!
    //

    இவங்கள நம்பாதிங்க இந்த வாரம்தான் என் தங்கச்சிய குளோஸ் பண்ணாங்க

    ReplyDelete
  21. // மகேந்திரன்.பெ said...
    இன்றைய செலவு முழுவதும் குசும்பன் ஒத்துக் கொள்வதாக நேத்து ராத்திரியே கனவில சொன்னாருப்பா //

    இதனால் சூசகமா சொல்ல வருவது என்னன்னா என் கிரடிட் கார்டை அடமானம் வச்சு தான் கார் என்பதால் மீதி உள்ள நண்பர்கள் ஜமாய்க்கனும் என்பதே உள்/வெளி நோக்கம்!

    ReplyDelete
  22. உங்க பேரு 'ஈஸ்வரன்' தான? கோலங்கள் அபி அப்பா பேரு அதானே?

    ReplyDelete
  23. //
    மின்னல் எங்கிருந்தாலும் இங்க வந்து மின்னவும்..

    //

    மின்னல் பிரியாணி வாங்கி வரச் சென்றுந்துள்ளாதால் அவர் வரும் வரை அனைவரும் அமைதி காத்து தருமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete
  24. எல்லா செலவையும்குசும்பனே ஏற்றுக் கொண்டால் நான் என்ன சும்மா வருவாதா எல்லாரோட பயணப்படியும் நான் பார்த்துக் கொள்வேன் உத்தரவாதம்கொடுத்தார் தம்பி

    ReplyDelete
  25. // மகேந்திரன்.பெ said...
    இன்றைய செலவு முழுவதும் குசும்பன் ஒத்துக் கொள்வதாக நேத்து ராத்திரியே கனவில சொன்னாருப்பா //

    க்கூம், கூட்டாஞ்சோறு செய்யலாம் வாய்யான்னு கூப்பிட்டா வாயோட வந்திடரேன்ன்னு சொல்றார் அவர போய் மகி நம்பிகிட்டு! நம்ம ஜார்ஜா ஜிங்கமும் அடர்கானக புலியும் இருக்குல்ல அதுக்கு!

    ReplyDelete
  26. //
    உங்க பேரு 'ஈஸ்வரன்' தான? கோலங்கள் அபி அப்பா பேரு அதானே?
    //

    ஆமாங்க கரெக்டுங்க

    ReplyDelete
  27. //குசும்பன் ஹமாம்மின் அடையாளம்.. அதெல்லாம் குடுத்துடுவாரு.. பார்த்துகிட்டே இருங்க//

    ஓ அப்ப அந்த நேர்மைன்னா குசும்பனா?

    ReplyDelete
  28. //
    குசும்பன் ஹமாம்மின் அடையாளம்.. அதெல்லாம் குடுத்துடுவாரு.. பார்த்துகிட்டே இருங்க
    //

    பெட்டி வந்துருச்சு போல...

    ReplyDelete
  29. தானே தின்னு வீணாய் போகும் நண்பர்கள் அனைவரையும் கன்னாபின்னாவென கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  30. //வாயோட வந்திடரேன்ன்னு சொல்றார் //

    குசும்பா.....
    நீர் என் இனமய்யா.........
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  31. //அடப்பாவிகளா! இதெல்லாம் என்ன ஓரவஞ்சனை? சிக்கன் பிரியாணியா? //

    அது க்ரடிட்கார்டில் காசு இருப்பதை பொருத்து. ஒரு வேளை எதுவும் ஒட்டகம்கிட்டினால் அது மின்னலின் செலவு

    ReplyDelete
  32. //இல்ல சார், உங்க கிரடிட் கார்டூ சும்மா ஒரு கேரண்டிக்கு தான்ன்னு சொன்னவுடனே //

    அப்டியே ஒரு யூடர்ன் எடுத்துடலாம்னு பாத்திருப்பீங்க

    ReplyDelete
  33. //
    உங்க பேரு 'ஈஸ்வரன்' தான? கோலங்கள் அபி அப்பா பேரு அதானே?

    //

    உங்க அறிவை பார்க்கும் போது எனக்கு புல்லறிக்கிது

    கொஞ்சம் சொறிஞ்சு விடுறிங்களா

    ReplyDelete
  34. இந்த மாதிரி கார்டு வைத்து பிஸினஸ் செய்யும் சில வலைத்தளங்களை உருவாக்கியதில் என் பங்கு இருக்கிறது. அதுனால உங்க கேள்விக்கு எனக்கு தெரிஞ்ச பதில்

    - கார்ட் நம்பர மட்டும் குறிச்சிக்கிட்டு பணம் எடுக்க முடியாது. பண்டங்களோ, சேவைகளோ வாங்கலாம்.

    - உங்களுக்கு வரும் பில்லை நீங்கள் சரி பார்த்த பின் தான் கட்ட வேண்டும். நீங்கள் வாங்காத ஏதாவது பொருளுக்கு பில் பண்ணியிருந்தால் நீங்கள் பணம் கட்ட தேவையில்லை. நீங்கள் புகார் கொடுக்கலாம். உங்களை பணம் கட்ட சொல்லி அவர்கள் கட்டாய படுத்த முடியாது.

    - உங்கள் கார்ட் தொலைந்திராத பட்சத்தில் உங்களுக்கு தெரியாமல் யாராவது அதை ஆன்லைன் வியாபாரத்திற்க்கு பயன்படுத்தியிருந்தால் கார்ட் சேவை வழங்குபவர்கள் அந்த ஆன்லைன் நிறுவனத்திடம் நடவடிக்கை எடுப்பார்கள்.

    - பொதுவாக ஆன்லைன் வியாபாரத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்றால் ஏதாவது கணக்கு துவங்க வேண்டும். அதற்கு ஏதாவது இமெயில் கணக்கு மற்றும் சில தகவல்கள் கொடுக்க வேண்டும். இதன் மூலம் யார் 'தவறாக' கிரடிட் கார்ட் உபயோகிக்கிறார்கள் (mal practices) என்பதை ஓரளவுக்கு கண்டு பிடிக்கலாம். இது fool proof நடவடிக்கைகள் இல்லை என்றாலும் ஓரளவுக்கு கட்டு படுத்தலாம். இதனால் கிரடிட் கார்ட் வாடிக்க்கையாளர்கள் பாதிக்கப் படுவதில்லை. அதனை வழங்கும் வங்கிகள்தான் பாதிக்கப் படுகின்றன.

    - தற்போது சிடி பாங்க் போன்ற வங்கிகள் வெறும் கார்ட் நம்பரை மட்டும் வைத்து இணையத்தில் எதுவும் வாங்க முடியாது என்ற நிலைப்பாடை எடுத்திருக்கிறது. இதற்கு ஒரு I-Pin தேவை. I-Pin என்பது ஒரு கடவுச் சொல் போல. virtual keypad மூலம் மட்டுமே இதை நாம் அளிக்க முடியும். இது ஒரு சிறந்த பாதுகாப்பு கவசம் வாடிக்கையாளார்களுக்கு.

    - சரி. இப்படி கார்டை கொடுப்பதனால் வேறு என்ன அபாயம்? கார்ட் ரீடர் என்றொரு சமாச்சாரம் இருக்கிறது. உங்கள் கார்டிலிருக்கும் மேக்நெடிக் ஸ்ட்ரிப்பை அப்படியே காபி எடுத்து போலி கார்ட் தயாரிக்கலாம். இதிலும் பணத்தை நேரடியாக திருட முடியாது. பண்டங்கள்/ சேவைகள் வாங்கலாம். ஆனால் வாடிக்கையாளர்கள் தங்கள் பில்களை சரி பார்த்து பணம் கட்டினால், இந்த மாதிரி பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

    - ஒரு முறை இப்படி தவறு நிகழ்ந்தது உங்களுக்கு தெரிய வந்தால், உடனடியாக உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு கார்டை மாற்றி விடவும்.

    - இந்த மாதிரியான் ஆன்லைன் தில்லுமுல்லுகளினால் பெரிதும் பாதிக்கப் படுவது வங்கிகள்தான். இதை குறைக்க இன்றளவிலும் பற்ப்பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

    - வாடிக்கையாளர்களான நாம் செய்ய வேண்டியவை. மூன்றாம் நபரிடம் கார்டை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ATM PIN, I-PIN போன்றவைகளை எல்லாரும் எளிதில் பார்க்கக் கூடிய இடத்தில் குறித்து வைக்கக் கூடாது. கார்டுடன் இந்த pin-களும் தொலைந்தால் ஓன்றுமே செய்ய முடியாது. ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே சம்பந்தப்பட்டு வங்கிகளை அணுகி நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    ஆனாலும் நீங்க பாவம்ப்பா... நீங்க கேட்ட கேள்விய கண்டுக்காம சிக்கனோட காலப் பத்தி கவலப் பட்டுகிட்டு இருக்காங்களே.... என்னத்த சொல்ல போங்க...

    ReplyDelete
  35. என்னது இது சின்ன புள்ள தன்மா...
    கொஞ்சநேரம் சாப்பிட போய் வரதுக்குல்ல...

    ReplyDelete
  36. மகேந்திரன்.பெ said...
    இன்றைய செலவு முழுவதும் குசும்பன் ஒத்துக் கொள்வதாக நேத்து ராத்திரியே கனவில சொன்னாருப்பா


    நல்லா பார்த்துகுங்க கணவுலப்பா...

    ReplyDelete
  37. காலை நான் கிளம்பும் போதே தலை கீழ நின்னு பார்த்துட்டேன், ஒரு 25 fils கூட கீழ விழல, ஏன்னா அபி அப்பா நேற்றே என்கிட்ட சொல்லிட்டார், பெரியவுங்க இருக்கும் பொழுது சின்னவுங்க செலவு செஞ்சா அது பெரியவுங்களுக்கு அவமானமாம்...so...புல் செக்கப் செஞ்சுட்டேன்...பை சா நகி ஹே!!!!

    ReplyDelete
  38. //
    மின்னல் பிரியாணி போடறேன் வாங்கன்னு கூப்பிட்டதால
    //

    அபிஅப்பா உங்களுக்குதான் ஓசில கிடைச்சா பினாயில கூட விடமாட்டிங்களே

    ReplyDelete
  39. நேற்று போண் போட்டு கழுத்தில் கத்தி வைத்து குசும்பா எல்லார் கிட்டேயும் சொல்லிடு...இது குட்டி பையன் பிறந்ததுக்காண
    ...இது குட்டி பையன் பிறந்ததுக்காண
    ...இது குட்டி பையன் பிறந்ததுக்காணகொண்டாட்டம் யாரும் என்ன தடுக்க கூடாது எல்லாம் என் செலவு என்று.

    மறந்து போனவுங்க எல்லாம் ஞாபக படுத்திக்குங்கோ....டும் டும் டும் இன்னையில் இருந்து சாப்பிடாதீங்கோ...
    நாளை அபி அப்பா டீரிட்

    ReplyDelete
  40. ஐ!! மீ த ஃபர்ஸ்ட்டு!!

    பதிவுக்கு சம்பந்தமா பின்னூட்டம் போட்டதில :-))))

    ReplyDelete
  41. நல்ல ஒரு கேள்வி அபிஅப்பா கேக்கப்படாதே! கொலவெறி வந்துடுமே! அதுக்குள்ள 40க்கு மேல போயிடுச்சு அதான் பதிவுக்கு சம்பந்தப்பட்ட நண்பர் ஸ்ரீதர்வெங்கட்டின் பதிலை பதிவில ஒட்டி வச்சுட்டேன்! இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க! நன்றி ஸ்ரீதர்வெங்கட்!

    ReplyDelete
  42. அபி அப்பா சொன்ன பல உண்மைகளை நான் இங்கு பொதுவில் சொல்வதால் என் பின்னூட்டங்கள் வெளியிடபடவில்லை, இதை வண்மையாக கண்டிக்கிறேன்.

    அவர் வெளியிடாத பின்னூட்டத்தில் அவர் சொன்ன கிரடிட் கார் இன்னும் மூன்று வைத்து இருக்கிறேன் என்றதும் அடக்கம்.

    ReplyDelete
  43. அத பதிவுல போட்டுட்டிங்களா? பின்னூட்டம் மட்டும்தான் போடுவேன்னு வீறாப்பா இருந்த என்னை உங்க பதிவு மூலம் பிரமோஷன் கொடுத்திட்டிங்க. நன்றி!

    பதிவோட format கொஞ்சம் மாறிட்ட மாதிரி இருக்கே. நீங்க காபி பேஸ்ட் செய்ததில enter key எல்லாம் காணாம போயிடுச்சி போல. உங்க ரெகுலர் வாசகர்கள் படிக்க கஷ்டப் படப் போறாங்க.

    ReplyDelete
  44. //அவர் சொன்ன கிரடிட் கார் இன்னும் மூன்று வைத்து இருக்கிறேன் என்றதும் அடக்கம். //

    இதுல அபி அம்மாக்கு தெரியாம் ரெண்டு கார்ட் இருக்காம். :-))

    அப்பாடா... நாமளும் ஜோதில ஐக்கியாமாயாச்சு.

    ReplyDelete
  45. அபி அப்பா அபி அப்பா ஏன் அழுவுறீங்க....

    இல்ல நானே நாலு வரிக்கு பதிவு போட்டு இருக்கேன், என்னையும் மதிச்சு ஒரு ஆள் ஒரு பக்கத்துக்கு பின்னூட்டம் போட்டு இருக்காரே அத நினைச்சேன்...அழுகை அழுகையா வருது.

    நான இருந்தா அத மூனு கட்டிங்கா போட்டு மூனு பதிவு போட்டு இருப்பேனே...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  46. delphine said...
    "துபையில உங்களுக்கு வேலை பெர்மிட் உண்டா? எப்படீங்க இவ்வளவு நேரம் கிடைக்குது? உண்மையிலே துபாயிலத்தான் இருக்கிறீங்களா... "

    அம்மா நீங்க வேற அவர பார்க்க போனா என்னமா பிஸியா இருக்குற மாதிரி ஆக்ட் குடுக்கிறாரு....நானும் நிஜம் என்று நம்பிவிட்டேன். அப்புறம் கேட்டா தம்பி, அய்யனார், கோபி, மகி,லொடுக்கு எல்லாம் அவரு அப்படிதான் பிஸியா இருக்குற மாதிரி நடிப்பாருன்னு சொன்னாங்க.(அப்பா டா எல்லார் பேரையும் கோத்துவிட்டாச்சு)

    ReplyDelete
  47. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான், ஏ ஏ மகியே கலங்காதே....

    கார் புக் பண்ணியவர் எல்லாம் பார்த்துப்பார் ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம்

    ReplyDelete
  48. அபி அப்பா நீங்க கொடுத்த காசுக்கும் 30 கோழி, 60 முட்டை, 20 கிலோ ஐஸ் கிரீம், 100 குலோப் ஜாமுன்,
    2 கிலோ முந்திரி, 2 பிஸ்தா, ஆப்பிள் 24, ஆரஞ்சு 24, திராச்சை 5 கிலோ எல்லாம் + .... வாங்கி மின்னல் வீட்டுல வச்சு இருக்கேன்.

    ReplyDelete
  49. \\delphine said...
    துபையில உங்களுக்கு வேலை பெர்மிட் உண்டா? எப்படீங்க இவ்வளவு நேரம் கிடைக்குது? உண்மையிலே துபாயிலத்தான் இருக்கிறீங்களா...\\

    அய்யோ.....அய்யோ....நாங்க எல்லா இடத்திலும் இருப்போம் ;))))

    ReplyDelete
  50. \\குசும்பன் said...
    delphine said...
    "துபையில உங்களுக்கு வேலை பெர்மிட் உண்டா? எப்படீங்க இவ்வளவு நேரம் கிடைக்குது? உண்மையிலே துபாயிலத்தான் இருக்கிறீங்களா... "

    அம்மா நீங்க வேற அவர பார்க்க போனா என்னமா பிஸியா இருக்குற மாதிரி ஆக்ட் குடுக்கிறாரு....நானும் நிஜம் என்று நம்பிவிட்டேன். அப்புறம் கேட்டா தம்பி, அய்யனார், கோபி, மகி,லொடுக்கு எல்லாம் அவரு அப்படிதான் பிஸியா இருக்குற மாதிரி நடிப்பாருன்னு சொன்னாங்க.(அப்பா டா எல்லார் பேரையும் கோத்துவிட்டாச்சு)\\

    இன்னிக்கு உங்களுக்கு நல்லா தூக்கம் வருமே ;))

    ReplyDelete
  51. \\காயத்ரி said...
    என்னமோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது.. என்னான்னு புரியல..\\

    முதல்ல புரியும் படி கவிதை எழுதுங்க...அப்புறம் இதெல்லாம் புரியும்

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))