பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 14, 2009

என் மூஞ்சி அவனுக்கு நியாபகம் வரக்கூடாது ஆண்டவா!!!


மூன்று நாள் முன்ன ஒருத்தனை (மீண்டும்) சந்திச்சேன். என் கம்பனியிலே சப்காண்டிராக்ட் கம்பனில ஒரு இஞினர். அவன் ஒரு மலையாளி. என்னை அவன் பார்த்ததுமே அவன் கண்ணில் ஒரு பிரகாசம்.


"சாரே நீங்க தானே அது நான் தான் பைஜு நியாபகம் இருக்கா என்னை? உங்களை என்னால மறக்க முடியாது சாரே "


எனக்கு தலையும் புரியலை. காலும் புரியலை. நான் உடனே " அட என்னங்க என்னை நீங்க எப்ப பார்தீங்க"ன்னு கேட்டேன்.


"சார் ஒரு ரெண்டு வருஷம் இருக்கும் நானும் நீங்களும் துபாய்ல இருந்து டாக்ஸில அபுதாபி போனோம். என்னை தெரியுதா/"


இதை அவன் கேக்கும் போதே கண்ணில் ஒரு கொலவெறி இருந்துச்சு. எனக்கு சொரேர்ன்னு ஆகிடுச்சு. ஆஹா அவனா இவன்ன்னு நெனைச்சு என் மனசு கொசு வத்தி சுத்த ஆரம்பிச்சுது

*************************
ஒரு நாள் காலை நான் வேலைக்கு போன பின்னே ஒரு மாஸ் கான்கிரீட் இருந்துச்சு. ஆரம்பிச்சா 36 மணி நேரம் தொடர்ந்து கான்கிரீட். ஒரு உலக சாதனையா செய்ய போவதா மீடிங்ல சொன்னாங்க. வேற வழி இல்லை. தூக்கம் இல்லாம தொடர்ந்து செய்யனும். அதுக்கு அடுத்த நாள் அபுதாபி தமிழ் சங்கத்திலே பட்டிமன்ற புகழ் ராஜா வின் நிகழ்சி. அதுக்கு போன் மேல போன். சரின்னு எல்லாம் முடிச்சுட்டு அடுத்த நாள் மாலை 6க்கு வீட்டுக்கு வந்து படுத்தா செம தூக்கம்.

அப்பன்னு பார்த்து போன் "அபி அப்பா உடனே வாங்க உங்களுக்காக வெயிட்டிங்" அப்படின்னு திரும்ப திரும்ப போன்.


சரி நடப்பது நடக்கட்டும்ன்னு டாக்ஸி ஸ்டாண்டுக்கு போனேன். போய் டிரைவர் பக்கத்து முன் சீட்டுல உக்காந்த அடுத்த நிமிஷம் தூங்கினேன். அப்ப தான் அந்த பைஜு பின் சீட்டிலே இருந்து என்னை தட்டி " சாரே வந்து பின்னால என் பக்கத்திலே உட்காருங்க. நீங்க தூங்கி அதனால டிரைவரும் தூங்கி என்களை நிம்மதியா தூங்க வச்சிடாதீங்க"ன்னு சொன்னார்.


சரின்னு நானும் பின்னால வந்து உட்காந்தேன். அப்பவே அவர் கிட்ட சொன்னேன். "சாரே நான் ரொம்ப டயர்டு அதனால தூங்குவேன் பரவாயில்லயா"ன்னு கேட்டதுக்கு, அவர் 'அட சாரே நல்லா தூங்குங்க அதுனால என்ன பிரச்சனை"ன்னு சொன்னாரு.


நான் அப்ப கூட அவர் கிட்ட சொல்லியிருக்கலாம். நான் தூங்கும் போது மத்தவங்களுக்கு என்ன பிரச்சனை வரும்ன்னு. நானும் நல்ல பிள்ளையா வந்து அவர் கிட்ட பக்கத்துல உக்காந்து கிட்டேன்.


எனக்கு ஒரு கெட்ட பழக்கம். நான் மாயவரத்தில் இருந்து சென்னைக்கு பஸ்ஸில் வந்தா கூட மாயவரத்தின் புறநகர் எல்லாம் பார்த்ததில்லை. பஸ்ட்டாண்டு திரும்பி காவிரி வந்துச்சுன்னா பார்பேன். அத்தோட அவுட். பின்ன தாம்பரம் தான் கண்ணுக்கு தெரியும்.


சரின்னு வந்து அவன் பக்கத்திலே உட்காந்து தூங்க ஆரம்பிச்சேன். வண்டி போகும் வேகத்திலே நான் முன் சீட்டிலே முட்டி முட்டி நெத்தி புடைச்சு போனதை பார்க்க சகிக்காமல் ' சாரே என் மேல சாஞ்சுகுங்க"ன்னு சொல்லி சனியை இழுத்து பாக்கெட்ல போட்டுகிட்டான்.


ஆச்சு எனக்கு என்ன? அப்படியே தூங்க ஆரம்பிச்சேன். ஆனா நான் தூங்கினாலும் என் போன் தூங்குமா? அது வைப்ரேஷன் வேற. என் பாகெட்ல வச்சது நேரா அவன் இதயத்தை துளைக்க அவன் எடுத்து எடுத்து என்னவோ ப்பதில் சொல்ரான். கிட்ட தட்ட அரை மணி நேரத்தில் 25 போன். கான்கிரீட் என்ன ஆச்சு? இன்னும் பங்ஷனுக்கு வரலியா அப்படின்னு. பாவம் மனுஷன் நொந்துட்டான்.


ஒரு கட்டத்திலே அவன் என்னை பிடிச்சு நேரா உட்கார வச்சு ரெண்டு கையாலயும் பிடிச்சு சாத்தி கிட்டே தூங்க ஆரம்பிச்சான். அப்பவும் டமார் டமார்ன்னு அவன் தலையை குறி வச்சே முட்டினேன். சரின்னு அவன் தூங்குவதை விட்டுட்டு என்னை பிடிச்சுப்பதிலேயே தன் முழு கவனமும் செலுத்தினான்.அப்படியே 10 நிமிஷம் போச்சு. அவனும் லைட்டா தூங்க ஆரம்பிச்சான்.


எனக்கு அடுத்து ஒரு கெட்ட பழக்கம். அசந்து தூங்கினா பல்லை கடிப்பேன். கடின்னா சும்மா உங்க வீட்டு கடி என் வீட்டுகடி இல்லை. திடீர்ன்னு கர்முர்ன்னு சந்தம் கேட்ட பின்ன ஏதோ சைலன்சர் தான் புட்டுகிச்சோன்னு டிரைவர் வண்டிய நிப்பாட்ட, நம்ம மலையாளி 'சார் தான் அது"ன்னு வெளக்கி சொல்லி வண்டிய எடுத்துட்டங்க.


அவன் என்னை எழுப்பி " சாரே எதுனா ஹாஸ்பிட்டல் போயிடலாமா"ன்னு கேட்க நான் "இல்ல சாரே தூங்கனும்ன்னா எதுக்கு ஹாஸ்பிட்டல் எல்லாம் டாக்சியே போதும்"ன்னு சொல்லிட்டு அவன் மேலயே தூங்கிட்டேன்.
அவனும் அவன் விதியை நொந்துகிட்டே என் போனுக்கும் ஆன்சர் பண்ணிகிட்டு லைட்டா தூங்கிட்டான். ஆனா மக்கா என் அடுத்த கெட்ட பழக்கம் இப்ப சொல்லியே ஆனனும். நல்லா அசந்து தூங்கினா எனக்கு வாணி ஒழுகும். அதாங்க ஜொள்ளு ஊத்தும். அவனோ எதுனோ பங்கஷன் போறத்துக்காக லூயி பிளிப் சட்டை எல்லாம் போட்டு இருந்தான். அப்படியே அவன் சட்டை முழுக்க ரெண்டு உள்ளம் கை அள்விலே ஜொள் வடிச்சு வடிஞ்சு அந்த ஈரம் பட்டு எனக்கே தூக்கம் போயிடுச்சுன்னா பார்த்துகோங்க. முழிச்சு பார்த்தா அவன் சட்டை தொப்பரையா இருக்கு. எனக்கு பயம் வந்துடுச்சு. அந்த இடம் உமல்நார்ன்னு பேர். அங்க இருந்து அபுதாபிக்கு 3 திர்காம் தான் டாக்ஸிக்கு. வண்டி நின்னுச்சு.


மெதுவா நான் அவன் தூக்கம் கலைக்காமல் இறங்கிட்டேன். அவன் முழிச்சு பார்த்தா கொலை தான் விழும்.


மெதுவா இறங்கி 'ஆண்டவா என் முகம் அவன் நியாபகத்திலே இருந்து மறையட்டும்"ன்னு வேண்டிகிட்டே நின்னேன். அந்த டாக்ஸி கிளம்பிடுச்சு. பார்த்தா அந்த லூசு ஜன்னல் வழியே முழிச்சுகிட்டு எட்டி பார்த்து என்னை ஏதோ திட்டுது. என் காதில் அதல்லாம் விழலை! நான் வேற டாக்ஸி பிடிச்சு அபுதாபி போயிட்டேன்.
*********************************
அதல்லாம் விடுங்க. இப்ப 3 நாளா அந்த லூசு வந்து "சாரே நீங்க தானே அது நீங்க தானே அதுன்னு கேக்க "அய்யா நான் துபாய் வந்து 3 மாசம் தான் ஆகுது, ரொம்ப புதுசு. தவிர அபுதாபி எல்லாம் நான் பார்த்ததே இல்லை. இது விசயகாந்து மேல சத்தியம்"ன்னு சொல்லிகிட்டு இருக்கேன். என்ன பண்ணலாம் அவனை????


65 comments:

 1. முதலில் வந்தது நானா?

  ReplyDelete
 2. பதிவை படித்து விட்டு வருகிறேன்...!

  ReplyDelete
 3. /மூன்று நாள் முன்ன ஒருத்தனை (மீண்டும்) சந்திச்சேன்./

  ரைட்டு

  ReplyDelete
 4. /என் கம்பனியிலே சப்காண்டிராக்ட் கம்பனில ஒரு இஞினர்./

  இது என்ன புது போஸ்ட்டிங்கா இருக்கே....:)

  ReplyDelete
 5. //அய்யா நான் துபாய் வந்து 3 மாசம் தான் ஆகுது, ரொம்ப புதுசு. தவிர அபுதாபி எல்லாம் நான் பார்த்ததே இல்லை. இது விசயகாந்து மேல சத்தியம்"ன்னு சொல்லிகிட்டு இருக்கேன். என்ன பண்ணலாம் அவனை????///

  1ம் பண்ண முடியாது விதி வலியது !

  திரும்ப அந்த ஜொள்ள ரிடர்ன் எடுத்துக்க வேண்டியதுதான் நீங்க :))))))

  ReplyDelete
 6. //கெட்ட பழக்கம். அசந்து தூங்கினா பல்லை கடிப்பேன். கடின்னா சும்மா உங்க வீட்டு கடி என் வீட்டுகடி இல்லை. திடீர்ன்னு கர்முர்ன்னு சந்தம் //

  ஜுராசிக் பார்க்கில் டைனோசர் மரத்தை முறிக்கும் பொழுது வரும் சத்தம் போல இருந்தது எனக்கு,முதல் முறை உங்கள் அறைக்கு வந்து தூங்கிய பொழுது!

  ReplyDelete
 7. /அவன் ஒரு மலையாளி. என்னை அவன் பார்த்ததுமே அவன் கண்ணில் ஒரு பிரகாசம். /

  கொலைவெறின்னு இல்ல இருக்கணும்...:))

  ReplyDelete
 8. /எனக்கு தலையும் புரியலை./

  அண்ணே நமக்கெல்லாம் இது எப்பவுமே புரியாது....:)

  ReplyDelete
 9. //ஆனா மக்கா என் அடுத்த கெட்ட பழக்கம் இப்ப சொல்லியே ஆனனும். நல்லா அசந்து தூங்கினா எனக்கு வாணி ஒழுகும். அதாங்க ஜொள்ளு ஊத்தும். //

  ஒ அப்ப அதுக்கு பிறகுலேர்ந்துதான் நீங்க ஜொள்ஸ் குமார் ஆனீங்க அண்ணே :)))))))))))

  ReplyDelete
 10. /இதை அவன் கேக்கும் போதே கண்ணில் ஒரு கொலவெறி இருந்துச்சு./


  இது மேட்டரு...மேல படிச்சா செம விறுவிறுப்பா இருக்கும் போல...:)

  ReplyDelete
 11. //குசும்பன் said...
  //கெட்ட பழக்கம். அசந்து தூங்கினா பல்லை கடிப்பேன். கடின்னா சும்மா உங்க வீட்டு கடி என் வீட்டுகடி இல்லை. திடீர்ன்னு கர்முர்ன்னு சந்தம் //

  ஜுராசிக் பார்க்கில் டைனோசர் மரத்தை முறிக்கும் பொழுது வரும் சத்தம் போல இருந்தது எனக்கு,முதல் முறை உங்கள் அறைக்கு வந்து தூங்கிய பொழுது!
  ///

  அய்யோ:((((

  குசும்பன் கண்ணுவைச்சிட்டாருண்ணே போய் முதல்ல திருஷ்டி சுத்தி போடுங்க !

  ReplyDelete
 12. /ஆஹா அவனா இவன்ன்னு நெனைச்சு என் மனசு கொசு வத்தி சுத்த ஆரம்பிச்சுது/

  சுத்துங்க எஜமான்...சுத்துங்க...:)

  ReplyDelete
 13. //நிஜமா நல்லவன் said...
  /எனக்கு தலையும் புரியலை./

  அண்ணே நமக்கெல்லாம் இது எப்பவுமே புரியாது....:)
  //

  அட இங்க பாருங்கண்ணே இவருக்குமாம் :)))))))))))

  ReplyDelete
 14. /ஒரு நாள் காலை நான் வேலைக்கு போன பின்னே ஒரு மாஸ் கான்கிரீட் இருந்துச்சு./


  அட...காலைல வேலைக்கு போற பழக்கம் எல்லாம் இருக்கா....என்ன கொடுமை அண்ணே இது????

  ReplyDelete
 15. /./அவன் ஒரு மலையாளி. என்னை அவன் பார்த்ததுமே அவன் கண்ணில் ஒரு பிரகாசம்.
  //

  ம்ம்

  இதுவே அவன் - அவளாக இருந்திருந்தால்.......

  அவளை பார்த்ததுமே என் கண்ணில் ஒரு பிரகாசம்ன்னு வார்த்தை மாத்தி போடவேண்டியிருந்திருக்கும்ன்னு சொல்லவந்தேன் :)))))))))))))

  ReplyDelete
 16. /அதுக்கு அடுத்த நாள் அபுதாபி தமிழ் சங்கத்திலே பட்டிமன்ற புகழ் ராஜா வின் நிகழ்சி./


  மெட்டி ஒலிக்கு அப்புறம் தான் ரொட்டி ஒலி ன்னு சொன்ன ராஜாவா???

  ReplyDelete
 17. ஹய்யய்யோ இங்கன கும்மி ஓடிக்கிட்டிருக்கா !

  ReplyDelete
 18. /அதுக்கு போன் மேல போன்/

  அடுக்கி வச்சா எத்தனை போன் தேறும்....:)

  ReplyDelete
 19. /போய் டிரைவர் சீட்டுல உக்காந்த அடுத்த நிமிஷம் தூங்கினேன்./

  என்னது...நீங்க போய் டிரைவர் சீட்ல உக்காந்தீங்களா????

  ReplyDelete
 20. /எனக்கு அடுத்து ஒரு கெட்ட பழக்கம். அசந்து தூங்கினா பல்லை கடிப்பேன். கடின்னா சும்மா உங்க வீட்டு கடி என் வீட்டுகடி இல்லை. திடீர்ன்னு கர்முர்ன்னு சந்தம் கேட்ட பின்ன ஏதோ சைலன்சர் தான் புட்டுகிச்சோன்னு டிரைவர் வண்டிய நிப்பாட்ட, நம்ம மலையாளி 'சார் தான் அது"ன்னு வெளக்கி சொல்லி வண்டிய எடுத்துட்டங்க./


  ஹா...ஹா...ஹா...

  ReplyDelete
 21. ஹய்ய்ய்ய் மீ த டெவெண்டி :)))

  ReplyDelete
 22. /ஆனா மக்கா என் அடுத்த கெட்ட பழக்கம் இப்ப சொல்லியே ஆனனும். நல்லா அசந்து தூங்கினா எனக்கு வாணி ஒழுகும். அதாங்க ஜொள்ளு ஊத்தும்./


  ஹையோ...ஹையோ....

  ReplyDelete
 23. /அந்த இடம் உமல்நார்ன்னு பேர்/

  உங்களை நார் நாரா கிழக்க போற இடம் போல...:)

  ReplyDelete
 24. /என்ன பண்ணலாம் அவனை????/


  இந்த கேள்வி அந்த மலையாளி கேக்க வேண்டியது சாரே...:)

  ReplyDelete
 25. ஒரு க்ரூப்பத்தான்யா கிளம்பியிருக்காங்கனு வடிவேலு ஒரு படத்துல சொன்னாப்பல அபிஅப்பா பத்தி சொல்லனும்னா "ஒரு குடும்பமாதான்யா கிளம்பியிருகாங்க அடுத்தவங்களை அரள...மிரள வைக்க!!!" என்னத்த சொல்ல?உஷாரா இருங்கப்பா ஊர்ல இருக்கறவங்க எல்லாரும்.

  ReplyDelete
 26. /
  "அய்யா நான் துபாய் வந்து 3 மாசம் தான் ஆகுது, ரொம்ப புதுசு. தவிர அபுதாபி எல்லாம் நான் பார்த்ததே இல்லை. இது விசயகாந்து மேல சத்தியம்"
  /

  :))))
  nice

  ReplyDelete
 27. "என் மூஞ்சி அவனுக்கு நியாபகம் வரக்கூடாது ஆண்டவா!!!"
  //

  சான்ஸே இல்லை
  உங்களாயே

  மறக்க முடியல அவனால
  மறக்க முடியுமா ??

  ReplyDelete
 28. /என்ன பண்ணலாம் அவனை????/

  அடுத்த ஆளு தயாரா ஆகிட்டு இருக்கான். கவலை படாதீங்க. ("நாஆஆன் என்னச்சொன்னேன்", வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

  ReplyDelete
 29. நீங்களும் நம்மாளுதானா?
  பாவம் அதுக்கு ஏங்க விஜயகாந்த இழுக்கணும்.

  //டைனோசர் மரத்தை முறிக்கும் பொழுது வரும் சத்தம் போல இருந்தது எனக்கு,முதல் முறை உங்கள் அறைக்கு வந்து தூங்கிய பொழுது!//
  குசம்பரே. எலும்புக்கூடே தெரியுமளவுக்கு இருக்கிற அபிஅப்பாவால என்ன முடியும். ஒரு நாளு நம்ம வீட்டுக்கு வந்து அனுபவிச்சு பாருங்க. என் தங்கமணி மற்றும் என் ரூம் மேட் எல்லாம் தூக்கத்தில் எவ்வளவு பெரிய மன்னர்கள் என்று. இவ்வளவு சத்தத்திலயும் பெரிசா ஒன்னும் தெரியிலன்னுவாங்க.
  புது ஆள் வந்தா ஒழிஞ்சான்.

  ReplyDelete
 30. இன்னொரு வாட்டி அவரு கூட டாக்சில போயிடுங்க... :)

  ReplyDelete
 31. பார்த்து பார்த்து, இதைப் படித்தால் நல்லாருக்கேன்னு அடுத்த பார்த்திபன் வடிவேலு கலாட்டா காமெடி ட்ராக்குக்கு யாராவது லவட்டிக் கொண்டுப் போயிடப் போறாங்க:)!

  ReplyDelete
 32. //போய் டிரைவர் சீட்டுல உக்காந்த அடுத்த நிமிஷம் தூங்கினேன்//

  அப்ப டிரைவர் எங்கண்ணே உக்காந்தாரு.......

  :))))

  ReplyDelete
 33. அடடே, கதிரின் கேள்வி எனக்கும் தோணியதே, கேட்க விட்டுட்டனே:(!

  ReplyDelete
 34. ஏண்ணே,அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாதில்ல?
  இங்க நீங்களே வாக்குமூலம் வேற கொடுத்து இருக்கீங்க.....

  :))

  ReplyDelete
 35. வாங்க நிஜமா நல்லவன்,ஆயில்யன், குசும்பன்,டவுடக்கா, மங்களூர் சிவா,கிகிகி, விஜய், சுல்தான்பாய், தமிழன் கருப்பி, பிரண்ட் ராமலெஷ்மி, கதிர்,இயற்கை எல்லோருக்கும் நன்றி!

  டிரைவருக்கு பக்கத்து முன் சீட்ட்லன்னு இருக்கனும். இப்ப சரி பண்ணியாச்சு!!

  ReplyDelete
 36. :)))))))))))
  சிரிச்சு முடியலிங்ண்ணா... கலக்கல்!

  ReplyDelete
 37. ஐயோ பாவம் அந்த மலையாளி ! வேணா கொஞ்ச நாள் மாறு வேஷம் ட்ரை பண்ணுங்களேன்.

  அன்புடன்
  மாசற்ற கொடி

  ReplyDelete
 38. //சனியை இழுத்து பாக்கெட்ல போட்டுகிட்டான்.//

  அவன் மட்டுமா!
  நிறைய பேரு அப்படி தான் பேசிக்கிறாங்க!

  ReplyDelete
 39. என்னாது???
  அப்ப நீங்க துபாய்லயா இருக்கீக????

  :-))

  <<>>

  அதுசரி, துபாய்ல இருந்து அபுதாபிக்கு டாக்ஸில போகலாமா??

  எம்புட்டு தூரம்?? எவ்ளோ நேரமாகும்?? எவ்ளோ செலவாகும்??

  <<>>

  ////சனியை இழுத்து பாக்கெட்ல போட்டுகிட்டான்.//

  இது என்ன? உங்க ப்ளாக்கை படிக்க வந்த எங்கள சொல்றீயளா???

  ReplyDelete
 40. mmm .....ponga vetkama irukku

  ReplyDelete
 41. "சார் ஒரு ரெண்டு வருஷம் இருக்கும் நானும் நீங்களும் துபாய்ல இருந்து டாக்ஸில அபுதாபி போனோம். என்னை தெரியுதா/"


  ஏன் அண்ணா தெரியுதான்னு கேக்கறாரு??

  எனக்கு பயந்து வருதே!!

  ReplyDelete
 42. //
  இதை அவன் கேக்கும் போதே கண்ணில் ஒரு கொலவெறி இருந்துச்சு. எனக்கு சொரேர்ன்னு ஆகிடுச்சு. ஆஹா அவனா இவன்ன்னு நெனைச்சு என் மனசு கொசு வத்தி சுத்த ஆரம்பிச்சுது
  //

  அவனே தான் இவன் தெரிஞ்சி இருந்தா நீங்க அவ்வளவுதான் மயக்கம் போட்டு விளுந்திருப்பீன்களே.

  நல்ல வேலை நினைவில் இல்லை. தப்பிச்சீங்க.

  ReplyDelete
 43. //
  சரி நடப்பது நடக்கட்டும்ன்னு டாக்ஸி ஸ்டாண்டுக்கு போனேன். போய் டிரைவர் பக்கத்து முன் சீட்டுல உக்காந்த அடுத்த நிமிஷம் தூங்கினேன். அப்ப தான் அந்த பைஜு பின் சீட்டிலே இருந்து என்னை தட்டி " சாரே வந்து பின்னால என் பக்கத்திலே உட்காருங்க.
  //

  இது சரிதான் அண்ணா, எப்போதும் முன்னாடி உக்காந்து இருக்கறவங்க தூங்க கூடாது.

  //
  நீங்க தூங்கி அதனால டிரைவரும் தூங்கி என்களை நிம்மதியா தூங்க வச்சிடாதீங்க"ன்னு சொன்னார்.
  //

  இது சூப்பர் காமெடி!!

  ReplyDelete
 44. //
  சரின்னு நானும் பின்னால வந்து உட்காந்தேன். அப்பவே அவர் கிட்ட சொன்னேன். "சாரே நான் ரொம்ப டயர்டு அதனால தூங்குவேன் பரவாயில்லயா"ன்னு கேட்டதுக்கு, அவர் 'அட சாரே நல்லா தூங்குங்க அதுனால என்ன பிரச்சனை"ன்னு சொன்னாரு.
  //


  இது சூப்பர்!! உண்மையை வெளிப்படையா சொல்லி இருக்கீங்க
  அங்கே தான் அண்ணா நீங்க நிக்கறீங்க!!

  ReplyDelete
 45. //
  சரின்னு வந்து அவன் பக்கத்திலே உட்காந்து தூங்க ஆரம்பிச்சேன். வண்டி போகும் வேகத்திலே நான் முன் சீட்டிலே முட்டி முட்டி நெத்தி புடைச்சு போனதை பார்க்க சகிக்காமல் ' சாரே என் மேல சாஞ்சுகுங்க"ன்னு சொல்லி சனியை இழுத்து பாக்கெட்ல போட்டுகிட்டான்.
  //

  பாவம் அவர், அவருக்கு நேரம் சரியா இல்லேன்னு நினைக்கின்றேன்.

  அங்கே தான் அந்த ஏழரை விளையாடி விட்டது.

  ReplyDelete
 46. //

  ஒரு கட்டத்திலே அவன் என்னை பிடிச்சு நேரா உட்கார வச்சு ரெண்டு கையாலயும் பிடிச்சு சாத்தி கிட்டே தூங்க ஆரம்பிச்சான். அப்பவும் டமார் டமார்ன்னு அவன் தலையை குறி வச்சே முட்டினேன். சரின்னு அவன் தூங்குவதை விட்டுட்டு என்னை பிடிச்சுப்பதிலேயே தன் முழு கவனமும் செலுத்தினான்.அப்படியே 10 நிமிஷம் போச்சு. அவனும் லைட்டா தூங்க ஆரம்பிச்சான்.
  //

  சிரிச்சு சிரிச்சு வயிறு ஒரே வலி அண்ணா!!

  சிரிப்பை அடக்கவே முடியலை
  நீங்க ரொம்பதான் அவரை நோக வச்சு இருக்கீங்க.

  ReplyDelete
 47. //
  எனக்கு அடுத்து ஒரு கெட்ட பழக்கம். அசந்து தூங்கினா பல்லை கடிப்பேன். கடின்னா சும்மா உங்க வீட்டு கடி என் வீட்டுகடி இல்லை. திடீர்ன்னு கர்முர்ன்னு சந்தம் கேட்ட பின்ன ஏதோ சைலன்சர் தான் புட்டுகிச்சோன்னு டிரைவர் வண்டிய நிப்பாட்ட, நம்ம மலையாளி 'சார் தான் அது"ன்னு வெளக்கி சொல்லி வண்டிய எடுத்துட்டங்க.
  //

  இவ்வளவு ப்ரிச்சனையிலும் அவரு எம்புட்டு நல்லவரா இருந்திருந்த உங்களை
  டிரைவர் கிட்டே இருந்து காப்பற்றி இருப்பாரு.

  இல்லேன்னா பதியிலே இறக்கி விட்டுட்டு நல்லா தூங்கிட்டு வான்னு போய் இருப்பாங்க. தப்பிச்சீங்க அண்ணா!!

  அது சரி இப்போ இருக்கிறது ஒரிஜினல் பல்லா இல்லே.....

  ReplyDelete
 48. //
  அவன் என்னை எழுப்பி " சாரே எதுனா ஹாஸ்பிட்டல் போயிடலாமா"ன்னு கேட்க நான் "இல்ல சாரே தூங்கனும்ன்னா எதுக்கு ஹாஸ்பிட்டல் எல்லாம் டாக்சியே போதும்"ன்னு சொல்லிட்டு அவன் மேலயே தூங்கிட்டேன்.
  அவனும் அவன் விதியை நொந்துகிட்டே என் போனுக்கும் ஆன்சர் பண்ணிகிட்டு லைட்டா தூங்கிட்டான்
  //


  நிஜம்மாவாவே அவருக்கு ஒரு கோவில்தான் கட்டனும்
  ரொம்ப நொந்து போய்ட்டாரு போல.

  உங்க அராஜகம் தாங்கலை போங்க !!

  ReplyDelete
 49. //
  ஆனா மக்கா என் அடுத்த கெட்ட பழக்கம் இப்ப சொல்லியே ஆனனும். நல்லா அசந்து தூங்கினா எனக்கு வாணி ஒழுகும். அதாங்க ஜொள்ளு ஊத்தும். அவனோ எதுனோ பங்கஷன் போறத்துக்காக லூயி பிளிப் சட்டை எல்லாம் போட்டு இருந்தான். அப்படியே அவன் சட்டை முழுக்க ரெண்டு உள்ளம் கை அள்விலே ஜொள் வடிச்சு வடிஞ்சு அந்த ஈரம் பட்டு எனக்கே தூக்கம் போயிடுச்சுன்னா பார்த்துகோங்க. முழிச்சு பார்த்தா அவன் சட்டை தொப்பரையா இருக்கு. எனக்கு பயம் வந்துடுச்சு. அந்த இடம் உமல்நார்ன்னு பேர். அங்க இருந்து அபுதாபிக்கு 3 திர்காம் தான் டாக்ஸிக்கு. வண்டி நின்னுச்சு.
  //


  ஹையோ ஹையோ!!

  இதெல்லாம் வேறேயா?? வண்டி நின்னு உங்களை பிடிச்சி அப்படியே தள்ளிட்டாங்களா??

  ReplyDelete
 50. //
  மெதுவா நான் அவன் தூக்கம் கலைக்காமல் இறங்கிட்டேன். அவன் முழிச்சு பார்த்தா கொலை தான் விழும்.
  //

  அப்பா தப்பிச்சீங்க, கண்டிப்பா நல்லா ஏதாவது கிடைக்கும்ன்னு நினைச்சேன்
  ஜஸ்ட் மிஸ்!!

  ReplyDelete
 51. //
  மெதுவா இறங்கி 'ஆண்டவா என் முகம் அவன் நியாபகத்திலே இருந்து மறையட்டும்"ன்னு வேண்டிகிட்டே நின்னேன். அந்த டாக்ஸி கிளம்பிடுச்சு. பார்த்தா அந்த லூசு ஜன்னல் வழியே முழிச்சுகிட்டு எட்டி பார்த்து என்னை ஏதோ திட்டுது. என் காதில் அதல்லாம் விழலை! நான் வேற டாக்ஸி பிடிச்சு அபுதாபி போயிட்டேன்.
  //

  திட்டுச்சா எறங்கி வந்து அடிக்காமே விட்டாரே, நீங்க பண்ணின காரியத்திற்கு.

  ம்ம்ம், எங்க அம்மா பண்ண மற்றும் கிருஷ்ணா அண்ணி பண்ணின புண்ணியம்தான் தப்பிச்சீங்க.

  ReplyDelete
 52. வாங்க முரளிகண்ணன், தமிழ்ப்பிரிய்யன், மாசற்றகொஇ, வாலு, பழூர் கார்த்தி, ரம்யா பொண்ணு எல்லாருக்கும் நன்னி நன்னி!

  பழூர்கார்த்தி, "ஐக்கிய அரபு அமீரகம்" என்பது தான் நாட்டின் பெயர். அதுக்கு அபுதாபி தான் தலைநகரம். அபுதாபி, துபாய், ஷார்ஜா, இப்படி 7 ஸ்டேட் இருக்கு. எல்லாத்துக்கும் தனி தனி சட்டதிட்டம். ஆனா பணம் போன்ற விஷயங்கள் எல்லாத்துக்கும்ம் ஒரே சட்ட திட்டம். அதாவது நம்ம இந்தியாமாதிரி தான்.இதில் ஒரு ஸ்டேட்டில இருந்து வேற ஸ்டேட்டுக்கு போக விசா எல்லாம் வேண்டாம். டாக்சில என்ன தெம்பு இருந்தா நடந்தும் கூட போகலாம்.

  ரம்யா! வாப்பா வந்து கும்மு கும்முன்னு கும்மிட்டு போயிட்டியேப்பா! மிக்க நன்னி நன்னி!

  ReplyDelete
 53. நானா இருந்திருந்தா கொலையே பண்ணிருப்பேன்..

  செய்றதையெல்லாம் செஞ்சுப்புட்டு அவனையே கிண்டல் வேற பண்றீங்க..?!

  அங்கனகூட போயி மலையாளிக இப்படி இளிச்சவாயனாத்தான் இருப்பாங்களா..? ஐயோ பாவம்..!

  ReplyDelete
 54. எச்சூஸ்மி... ஹிஸ் மொபைல் நம்பர் ப்ளீஸ்....

  ReplyDelete
 55. ஆமாம் நம்மளுது எல்லாம் மறக்கற மூஞ்சியா என்ன :)

  ReplyDelete
 56. //
  பரிசல்காரன் said...
  எச்சூஸ்மி... ஹிஸ் மொபைல் நம்பர் ப்ளீஸ்....
  //

  REPEEEEEEEETTAAAAAAAAAAAAAAII

  ReplyDelete
 57. ஆயாளு பாவம். என்னோட்டுச் சோதிச்சால். ஞான் காணிச்சுக் கொடுக்கும். சத்தியம்.

  ReplyDelete
 58. இருந்தாலும் கொஞ்சம் ஓவர்தான் இல்ல..

  ReplyDelete
 59. வாங்கோ அபி நைனா.......!!!!  //என் மூஞ்சி அவனுக்கு நியாபகம் வரக்கூடாது ஆண்டவா!!! //


  தேனுங் ... அவுனுக்கு உங்க மூஞ்சி நெனப்பில்லீனாலும் பரவால்ல ......!!! நீங்க உங்க மூஞ்சிய மறந்துபோயிராதிங்கோ......!!! அப்பறம் நெம்ப கஷ்டம்....!!!!!
  // மூன்று நாள் முன்ன ஒருத்தனை (மீண்டும்) சந்திச்சேன். என் கம்பனியிலே சப்காண்டிராக்ட் கம்பனில ஒரு இஞினர். //


  அத உடுங்க தம்பி .....!! மேட்டருக்கு வாங்க ......!!!  // அவன் ஒரு மலையாளி. //


  ஓஓஒ........!!! ஓபிஸ் சேட்டன்......!!!
  " ஹ்.....ஹே..!! ஹ்.....ஹே..!!

  போய் வரும்போ ..... என்து கொண்டு வரும்.....!!

  இடியாப்பமும் ...... கொலாபுட்டும் கொண்டுவரும்....!!!! "
  // என்னை அவன் பார்த்ததுமே அவன் கண்ணில் ஒரு பிரகாசம். //


  எத்தன வாட்ஸ் தம்பி.....!!! ஹெவி லோடு ஆயிருக்கபோவுது.........????  // "சாரே நீங்க தானே அது நான் தான் பைஜு நியாபகம் இருக்கா என்னை? உங்களை என்னால மறக்க முடியாது சாரே " //


  அடங்கொன்னியா......!!! தம்பி...... என்ன இது.......!! ரூட்டு மாறுது.......!!!!  // எனக்கு தலையும் புரியலை. காலும் புரியலை. நான் உடனே " அட என்னங்க என்னை நீங்க எப்ப பார்தீங்க"ன்னு கேட்டேன். //  நெல்லா யோசிங்கோ தம்பி...!! உங்குளுக்கு சார்ட் டேர்ம்..... லாங் டேர்ம்..... மெமரி லாஸ் ஏதாவது இருக்குதா.......??  // "சார் ஒரு ரெண்டு வருஷம் இருக்கும் நானும் நீங்களும் துபாய்ல இருந்து டாக்ஸில அபுதாபி போனோம். என்னை தெரியுதா/" //  அத்தான கேட்டன்.......!! காருல போனதுக்கு பணம் குடுக்காம எஸ்கேப் ஆயிருபீங்க........??

  மாட்டுனீங்களா....!!!


  மாட்டுனீங்களா....!!! .......  // ஆஹா அவனா இவன்ன்னு நெனைச்சு என் மனசு கொசு வத்தி சுத்த ஆரம்பிச்சுது //  அட நெம்ப சுத்தாதீங்கோ .... அளவா சுத்துங்கோ.......!! எங்குளுக்கு தல சுத்துது......!!!!  // ஆரம்பிச்சா 36 மணி நேரம் தொடர்ந்து கான்கிரீட். ஒரு உலக சாதனையா செய்ய போவதா மீடிங்ல சொன்னாங்க. //  யாரு ஊட்டுக்கு தம்பி காங்கிரீட்டு .......!!!  // வேற வழி இல்லை. //


  எதுக்கு ...... தப்புச்சு ஓடருதுக்கா......!!!!


  // அதுக்கு அடுத்த நாள் அபுதாபி தமிழ் சங்கத்திலே பட்டிமன்ற புகழ் ராஜா வின் நிகழ்சி. அதுக்கு போன் மேல போன்.//


  நீ போய் ... அங்க என்ன பண்ணபோற தம்பி.......???  // சரின்னு எல்லாம் முடிச்சுட்டு அடுத்த நாள் மாலை 6க்கு வீட்டுக்கு வந்து படுத்தா செம தூக்கம். //


  அப்புடியே நல்லா தூங்கியிருந்தீனா தம்பி ....!! இதுக்கு மேல மொக்க போடுறதுக்கு உனக்கும் மேட்டர் கெடச்சிருக்காது.....!! நானுமும் மெனக்கட்டு இப்புடி மொக்கைய போட்ட்ருக்க மாட்டேன்........!!!!!  // அப்பன்னு பார்த்து போன் "அபி அப்பா உடனே வாங்க உங்களுக்காக வெயிட்டிங்" அப்படின்னு திரும்ப திரும்ப போன். //


  நெல்ல வேல செல்லுபோன்ன்ல கூப்புட்டாங்க......!! இதே பேஜரா இருந்தா...... இப்புடித்தான் அனுபுச்சிருப்பாங்க ......!!!

  " WANTED PERSON .....

  ABI NAINAA....."


  // சரி நடப்பது நடக்கட்டும்ன்னு டாக்ஸி ஸ்டாண்டுக்கு போனேன். //


  ஏனுங்கோ தம்பி ....!! டாக்சி ஸ்டாண்டுக்கு .... டாக்ஸில போகுலியே ......???  // போய் டிரைவர் பக்கத்து முன் சீட்டுல உக்காந்த அடுத்த நிமிஷம் தூங்கினேன். //


  நெல்ல வேல ... ஆர்வத்துல ஓடிபோய் டிரைவர் சீட்டுல உக்காந்து தூங்குளியே......???

  அப்பறம் நெம்ப சிரமமா போயிருக்கும்.......!!!!  // அப்ப தான் அந்த பைஜு பின் சீட்டிலே இருந்து என்னை தட்டி " சாரே வந்து பின்னால என் பக்கத்திலே உட்காருங்க. நீங்க தூங்கி அதனால டிரைவரும் தூங்கி என்களை நிம்மதியா தூங்க வச்சிடாதீங்க"ன்னு சொன்னார். //


  அவங் கெடந்துட்டுபோரான் ....... ஹிப்போபோடமஸ் மண்டையன்............!!! அந்த மாதிரி நிம்மதியான தூக்கம் ஒலகத்துல வேற எங்கிங்க தம்பி கெடைக்கும்.......!!!  // சரின்னு நானும் பின்னால வந்து உட்காந்தேன். அப்பவே அவர் கிட்ட சொன்னேன். "சாரே நான் ரொம்ப டயர்டு அதனால தூங்குவேன் பரவாயில்லயா"ன்னு கேட்டதுக்கு, அவர் 'அட சாரே நல்லா தூங்குங்க அதுனால என்ன பிரச்சனை"ன்னு சொன்னாரு. //
  ஏந்தம்பி........!! உட்டா தூங்கும்போது பக்கத்துல இருக்குரவிங்கள பாட்டு பாட சொல்லுவியாட்ட இருக்குதே......!! ஓஓஒ..... !! இந்த டகால்டி வேலையெல்லாம் ஆகாது கண்ணு....!!!!  // நான் அப்ப கூட அவர் கிட்ட சொல்லியிருக்கலாம். நான் தூங்கும் போது மத்தவங்களுக்கு என்ன பிரச்சனை வரும்ன்னு. நானும் நல்ல பிள்ளையா வந்து அவர் கிட்ட பக்கத்துல உக்காந்து கிட்டேன். //  ஏந்தம்பி.....!! தூங்கும்போது பக்கத்துல இருக்குரவிங்க மூஞ்சிய புடுச்சு பொராண்டி வெச்சுபுடுவியா...????

  நெம்ப தப்பு......!! நெம்ப தப்பு....!!!!  // எனக்கு ஒரு கெட்ட பழக்கம். //


  ஏந்தம்பி... நெசமாவே....... உனக்கு ஒரே ஒரு கெட்ட பழக்கம் மட்டுந்தானா......????
  // நான் மாயவரத்தில் இருந்து சென்னைக்கு பஸ்ஸில் வந்தா கூட மாயவரத்தின் புறநகர் எல்லாம் பார்த்ததில்லை. //


  ஐயோஓஒ........!! ஏனுங் தம்பி....!! மாயவரமே புறநகர் மாதிரிதான் இருக்கும்...!! அதுக்கு எது தம்பி புறநகர்...!!!!


  ஏனுங்கோ தம்பி...!! பதிவ படிக்கிரவிங்கள பத்தி கொஞ்சம் கூட நெனச்சு பாக்குறதில்ல.....!!!

  நெம்ப தப்பு தம்பி .....!! நெம்ப தப்பு....!!!!
  // சரின்னு வந்து அவன் பக்கத்திலே உட்காந்து தூங்க ஆரம்பிச்சேன். வண்டி போகும் வேகத்திலே நான் முன் சீட்டிலே முட்டி முட்டி நெத்தி புடைச்சு போனதை பார்க்க சகிக்காமல் ' சாரே என் மேல சாஞ்சுகுங்க"ன்னு சொல்லி சனியை இழுத்து பாக்கெட்ல போட்டுகிட்டான். //  ஹ.. ஹ... ஹா ....!! தம்பி.... !! பாகிட்டுல போட்டிருந்தா... அத கழுட்டி போட்டனையும் உங்கள மறந்திருப்பான்......!! இழுத்து அவனோட உச்ச்சந்தலையிலேயே வெச்சிகிட்டான்...... அதனாலதேன் இன்னுமும் உங்கள மறக்காம இருக்குரான்......!!!!
  // என் பாகெட்ல வச்சது நேரா அவன் இதயத்தை துளைக்க அவன் எடுத்து எடுத்து என்னவோ ப்பதில் சொல்ரான். //  என்னத்த சொல்லீருப்பான்....!!! " நமஸ்காரம் ... சாரு ஓபீஸ்ல கொரட்ட ... ச்ச ... சாரி... கொறச்சு பிசியாய்ட்டு ஒண்டு.....!!! " ............................  // கிட்ட தட்ட அரை மணி நேரத்தில் 25 போன். //


  மனுஷன் தூங்குனாளுமும் .... கணக்குல நெம்ப கரைக்ட்......!!!!  // அப்பவும் டமார் டமார்ன்னு அவன் தலையை குறி வச்சே முட்டினேன். //


  அப்போ உன்ன..... பாகிஸ்தான் பாடர்ல நிக்க வெச்சிரலாம் தம்பி......!!!!  //சரின்னு அவன் தூங்குவதை விட்டுட்டு என்னை பிடிச்சுப்பதிலேயே தன் முழு கவனமும் செலுத்தினான் //


  கெவனமா இருங்கோ தம்பி.....!! நெம்ப கவனம் செலுத்தி ...... மண்டைய கொதறி வெச்சுரப்போரான்......!!!!


  // திடீர்ன்னு கர்முர்ன்னு சந்தம் கேட்ட பின்ன ஏதோ சைலன்சர் தான் புட்டுகிச்சோன்னு டிரைவர் வண்டிய நிப்பாட்ட, நம்ம மலையாளி 'சார் தான் அது"ன்னு வெளக்கி சொல்லி வண்டிய எடுத்துட்டங்க. //


  அடங்கொக்க மக்கா.....!! தம்பி.....ராசா........!! உன்னையத்தான் நா இத்தன நாளா தேடிகிட்டு இருந்தேன்.....!! சத்தியமங்கலத்துல .... எங்க மச்சாரு தோட்டத்துல அடிக்கடி யான வந்திருது தம்பி......!!


  தெனமும் சித்த நேரம் நீ வந்து தூங்கீட்டு போனீனா .... நெம்ப சவுரியமா இருக்கும் தம்பி......!!!!

  சாமி .. சாமியா ... இருப்பா....!! வாடா கண்ணு.......!!!! மேடி அண்ணன் உன்னைய சந்தைக்கு கூட்டிட்டு போய் முட்டாயெல்லாம் வான்த்கி தரேன் கண்ணு....!!!!  // நல்லா அசந்து தூங்கினா எனக்கு வாணி ஒழுகும். அதாங்க ஜொள்ளு ஊத்தும். //


  அப்போ இன்னுமும் நெம்ப சவுரியமா போச்சு.....!!! அட தம்பி.... !! நீயொரு பொக்கிஷம்...!!! தமிழ்நாட்டுக்கு உம்பட அரும பெருமையெல்லாம் தெரியில போ....!!
  நீ இன் வந்து தூங்குநீனா ......நெல்லு.... பயிரெல்லாம் முப்போகமும் வெலையும்...!!!  //மெதுவா நான் அவன் தூக்கம் கலைக்காமல் இறங்கிட்டேன். அவன் முழிச்சு பார்த்தா கொலை தான் விழும். //


  கொலையா.....!!! நான் இருந்திருந்தா....... தொரத்தி.... தொரத்தி ... கடுச்சு வெச்சிருப்பேன்.....!!!!
  // பார்த்தா அந்த லூசு ஜன்னல் வழியே முழிச்சுகிட்டு எட்டி பார்த்து என்னை ஏதோ திட்டுது. //  அட உடு தம்பி.......!! புரியாத பாஷதான .......!!!!!
  // இப்ப 3 நாளா அந்த லூசு வந்து "சாரே நீங்க தானே அது நீங்க தானே அதுன்னு கேக்க "அய்யா நான் துபாய் வந்து 3 மாசம் தான் ஆகுது, ரொம்ப புதுசு. தவிர அபுதாபி எல்லாம் நான் பார்த்ததே இல்லை. //


  ஹ ,.. ஹ... ஹா.......!! சிக்குனியா.......!! சிக்குனியா.....!!!௧  // இது விசயகாந்து மேல சத்தியம்"ன்னு சொல்லிகிட்டு இருக்கேன். //


  இது நெம்ப தப்பு....!! அவுரு மேல சத்தியம் பண்ணாத தம்பி...!!


  ஏன்னா..... அவுரு அடுத்த படத்துல எங்க கவியதலைவி ஷகிலாவோட ரவுன்ன்டு கட்டுறாரு.....!!!  // என்ன பண்ணலாம் அவனை???? //


  இன்னொருக்க அவன டாக்ஸில போலாம் வான்னு கூப்புடு........!!!!!! உம்பக்கமே
  அந்த ஹீல்ஸ் மண்டையன் தல வெச்சு படுக்க மாட்டான்....!!!!

  ReplyDelete
 60. தல,

  அந்த அன்பரின் போன் நம்பெர் அல்லது இமெயில் அய்டி இருந்தா இங்க தள்ளுங்க.
  பிற‌கு பாருங்க‌ நிச‌மான‌ வேடிக்கைய‌.

  (கும்மி என்றால் ஆளை கும்ம‌ற‌து என்றும் ஒரு அர்த்த‌ம் இருக்குல்ல !)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))