பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 20, 2009

நட்ராஜுக்கு இதை எல்லாம் சொல்லி கொடுத்தது யாரு?

நம்ம நட்ராஜ் இப்ப வர வர செய்யும் ரவுசு லீலைகள் ரொம்ப அதிகமா போச்சு. அவன் அம்மாவின் செல் தான் அவனுக்கு முக்கிய விளையாட்டு பொருள். அவனுக்காக பொம்மை போன் வாங்கி கொடுத்தா 'அதை நீ வச்சுக்கோ எனக்கு உன் போனை தா" என அடம்.
இப்படித்தான் ஒரு நாள் வீட்டில் ரூமில் அவன் அம்மா கிட்ட போன் கேட்டு அழுதிருக்கான். அழுவதுன்னா சும்மா அழுக மாட்டான். கீழே புரண்டு புரண்டு அழுவான். உடனே என் தங்கமணி அதை கண்டுக்காம ரூம்ல இருந்து கிச்சன் போயிட்டாங்க. அங்க போன பின்னே இவன் அழும் சத்தம் இல்ல. டக்குன்னு அழுகையை நிப்பாட்டிட்டு இவன் நேரா எழுத்து கிச்சன் வந்து அங்கு கீழே படுத்து புரண்டு அழுதிருக்கான்.

அப்பவும் கண்டுக்காம கிச்சனை விட்டு விட்டு ஹால்க்கு போயிருக்காங்க டி வி கிட்ட. இவன் அப்பவும் டக்குன்னு அழுகையை நிப்பாட்டிட்டு ஹால் பக்கம் வந்து என் மனைவிக்கு நேரா படுத்துகிட்டு அழுதிருக்கான்.

இவங்க அப்பவும் அவனை கண்டுக்காம ரூம் பக்கம் போயிருக்காங்க. அவன் அப்பவும் விடாம அழுகையை நிப்பாட்டிட்டு நேரா ரூம்க்கு போயிருக்கான். அங்கயும் கீழே படுத்து புரண்டு சத்தம் போட்டு அழுது கிட்டே என் மனைவி காலை சொறிஞ்சு "அம்மா தம்பி பாரு தம்பி பாரு"ன்னு சொல்லியிருக்கான். என்ன ஒரு வில்லத்தனம்?

இதை எல்லாம் யார் சொல்லிகொடுத்தது??

62 comments:

 1. அடா சொல்ல மறந்துட்டேன்! போட்டோஸ் எடுத்தது ஆயில்யன்! நன்றி ஆயில்யா!!

  ReplyDelete
 2. அதானே யாரு சொல்லிக் கொடுத்தது:))?

  படங்கள் அருமை. ஆயில்யனுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்:)!

  ReplyDelete
 3. அப்பாவோட லொள்ளு பிள்ளைக்கு இருக்காதா பின்னே!

  ReplyDelete
 4. என் மருமகன் சமத்து!

  ReplyDelete
 5. :) ஆயில்யனுக்குள்ள இத்தனை திறமையான்னு ஜீவ்ஸ் சொல்றது உண்மை தான்.. குழந்தைங்கள படம் எடுக்கறது ரொம்ப கஷ்டம் தான். அதுவும் நிமிசத்துக்கு பத்து சேஷ்டை செய்யும் நட்ராஜை எடுத்தது பெரிய வேலை தான்...

  ReplyDelete
 6. காது குத்தீட்டீங்க போல

  ReplyDelete
 7. குழந்தைக்காகவே 1100 அப்படியே வச்சிருக்கீங்க போல

  ReplyDelete
 8. இது என்ன அபிஅப்பா வம்பா போச்சு.

  நீங்க சின்ன பிள்ளயா இருக்கறச்சா..

  இப்படிதான் பண்ணுவீங்கலாம்.

  அப்போ உங்க அம்மா, நாலு சாத்து சாத்தி, உங்களுக்கு ஒரு உம்மா கொடுப்பாங்களாம், என்கிட்ட சொன்னது மறங்துடுச்சா?

  ReplyDelete
 9. நல்லா இருக்கு அபி அப்பா, குழந்தைக்குச் சுத்திப் போடச் சொல்லுங்க! படங்கள் ஆயில்யனா?? ஆயிலையே காணோமே?? மாயவரத்திலா இருக்கார் ஆயில்யன்?? ம்ம்ம்ம்ம்ம்?? ஆயில் எடுக்கிறாரோ?

  ReplyDelete
 10. இதெல்லாம் சொல்லியா குடுக்கனும். அதுவும் உங்க பையனுக்கு:)

  ReplyDelete
 11. abi appa solli kuduthaaraam :P

  ReplyDelete
 12. அப்பா மாதிரி டெக்னிக்கலா இருக்கான்.. :)

  ReplyDelete
 13. என் மாப்பிக்கு எவ்ளோ அறிவு:)))

  ReplyDelete
 14. //இதை எல்லாம் யார் சொல்லிகொடுத்தது??
  //

  ஹி ஹி
  வேற யாரு நான் தான்:)))))

  ReplyDelete
 15. போட்டோஸ் அவ்வளவும் அட்டகாசம்:))

  ReplyDelete
 16. அப்பா குணம் பிள்ளைக்கு..

  உங்க அம்மா, அப்பாவைக் கேட்டாத் தெரியும் நீங்க அடிச்ச லூட்டி என்ன என்று..

  ReplyDelete
 17. போனுடன் இருக்கும் படம் மிகவும் அருமை.மகிழ்ச்சி முகத்தில் குதூகலிக்கிறது.

  ReplyDelete
 18. :-))
  போட்டோக்கள் அருமை..

  ReplyDelete
 19. என் மாப்பியை அழகாய் படம் பிடித்த அண்ணன் ஆயில் வாழ்க!!

  ReplyDelete
 20. வேற யாரு?

  எல்லாம் அவங்க அப்பாவா தான் இருக்கும்

  வேணும்னா நட்டுக்கு போன் செய்து கேளுங்க.

  ReplyDelete
 21. /
  தீபா வெங்கட் said...

  என் மருமகன் சமத்து!
  /

  ரிப்பீட்டு போட்டுக்கிறேன் இப்போதைக்கு!

  ReplyDelete
 22. /இதை எல்லாம் யார் சொல்லிகொடுத்தது??//

  மீன் குஞ்சுக்கு யார் நீந்தக் கத்துக் குடுக்கனும்.. உங்க புள்ளயாச்சே.. எதை எப்டி சாதிக்கனும்னு தெரிஞ்சி வச்சிருக்கான்.. கிருஸ்ணாக்கா தான் பாவம்.. :)

  வர வர அழகு கூடிட்டே போகுது...மாயவரத்துல எத்தனை பொண்ணுங்க பைத்தியம் புடிச்சி அலையப் போறாங்களோ? :))

  ReplyDelete
 23. // தீபா வெங்கட் said...

  என் மருமகன் சமத்து!//

  ஜூப்பரு.. ;))

  ReplyDelete
 24. அண்ணே,


  சூப்பரா இருக்கான் தம்பி... பொறந்தப்போ பார்த்தது அவனை பார்த்தது... :)

  சீக்கிரமே அவனை மதுரைக்கு வர வைச்சி பார்த்துக்கிறேன்..... :))

  ReplyDelete
 25. //இராம்/Raam said...

  சீக்கிரமே அவனை மதுரைக்கு வர வைச்சி பார்த்துக்கிறேன்.....
  //

  ரைட்டு !

  அண்ணே புடிங்க அட்வான்ஸ் வாழ்த்துக்களை! வாய்ப்புக்களிலிருந்தால் நானும் வருவேன் :))

  ReplyDelete
 26. //அபி அப்பா said...
  அடா சொல்ல மறந்துட்டேன்! போட்டோஸ் எடுத்தது ஆயில்யன்! நன்றி ஆயில்யா!!
  //

  அட அண்ணே!

  இதுக்கு எதுக்கு நன்றியெல்லாம் :)

  ReplyDelete
 27. //ராமலக்ஷ்மி said...
  அதானே யாரு சொல்லிக் கொடுத்தது:))?

  படங்கள் அருமை. ஆயில்யனுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்:)!
  //

  தாங்க்ஸ் அக்கா :))

  ReplyDelete
 28. //நாமக்கல் சிபி said...
  அப்பாவோட லொள்ளு பிள்ளைக்கு இருக்காதா பின்னே!
  //

  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

  ReplyDelete
 29. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
  :) ஆயில்யனுக்குள்ள இத்தனை திறமையான்னு ஜீவ்ஸ் சொல்றது உண்மை தான்.. குழந்தைங்கள படம் எடுக்கறது ரொம்ப கஷ்டம் தான். அதுவும் நிமிசத்துக்கு பத்து சேஷ்டை செய்யும் நட்ராஜை எடுத்தது பெரிய வேலை தான்...
  //

  அவ்வ்வ்வ்வ்வ் (ஆனந்த கண்ணீர் பை தி பை ஜீவ்ஸ் அண்ணாச்சி நொம்ப்பபொய் சொல்லுவாரு அதையெல்லாம் நம்பிடாதீங்க அக்கா)

  ReplyDelete
 30. //கீதா சாம்பசிவம் said...
  நல்லா இருக்கு அபி அப்பா, குழந்தைக்குச் சுத்திப் போடச் சொல்லுங்க! படங்கள் ஆயில்யனா?? ஆயிலையே காணோமே?? மாயவரத்திலா இருக்கார் ஆயில்யன்?? ம்ம்ம்ம்ம்ம்?? ஆயில் எடுக்கிறாரோ?
  //

  வந்தாச்சு கீதா அம்மா வந்தாச்சு!

  :)

  ReplyDelete
 31. //Poornima Saravana kumar said...
  என் மாப்பியை அழகாய் படம் பிடித்த அண்ணன் ஆயில் வாழ்க!!
  //

  டாங்க்யூ தங்கச்சி :)

  ReplyDelete
 32. அபிய கேட்டா தெரியும்.

  ReplyDelete
 33. பரம்பரை பழக்கம் போல.(படம்பரை)

  ReplyDelete
 34. புத்திசாலி பையன்..(நல்லா படிக்கவும் "புத்திசாலியோட பையன்"ன்னு படிக்க வேண்டாம்)

  ReplyDelete
 35. //அப்பாவோட லொள்ளு பிள்ளைக்கு இருக்காதா பின்னே!//

  அதானே?

  ReplyDelete
 36. புதுசா ஒரு ஆள் வந்து சொல்லித் தரணுமாக்கும்!!!

  ReplyDelete
 37. பிள்ளையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டுற கதையால்ல இருக்கு....எல்லாத்தையும் சொல்லிக் குடுத்துட்டு..."யாருன்னு" ஒரு கேள்வி வேறயா

  ReplyDelete
 38. அவசியம் யாரு தெரிஞ்சு ஆகனுமா?

  ;))))

  ReplyDelete
 39. அப்பனுக்கு பிள்ளை தப்பாது பிறந்திருக்குங்கறீங்க.. சரியா?

  ReplyDelete
 40. தமிழ் பிரியன் said...

  அப்பா மாதிரி டெக்னிக்கலா இருக்கான்.. :)// றிப்பீட்டேஏஏஎ

  ReplyDelete
 41. //என்ன ஒரு வில்லத்தனம்?
  இதை எல்லாம் யார் சொல்லிகொடுத்தது??//

  அதானே என்ன ஒரு வில்லத்தனம்.. ?!!

  நட்டு செம கியூட்டு.. கண்ணு சுத்தி போடுவீங்களாம்..

  ReplyDelete
 42. // என்ன ஒரு வில்லத்தனம்?
  இதை எல்லாம் யார் சொல்லிகொடுத்தது??//
  உங்கள் நண்பர் ராதாவாக இருக்குமோ ?
  :-)))

  ReplyDelete
 43. அப்பனுக்கு புள்ளை தப்பாம பொறந்திருக்கு.!

  ReplyDelete
 44. சூப்பர் போட்டோஸ்!! நட்டு ரொம்ப க்யூட்! :-)

  ReplyDelete
 45. //போட்டோஸ் எடுத்தது ஆயில்யன்! நன்றி ஆயில்யா!!//

  ஆமா..நன்றி ஆயில்ஸ்! அழகான தருணங்களை காப்ச்சர் செய்ததற்கு! :-)

  ReplyDelete
 46. //இதை எல்லாம் யார் சொல்லிகொடுத்தது??
  //


  ஆமா...இதெல்லாம் சொல்லிக் கொடுக்கணூமா என்னா..அதெல்லாம் தானா வரும்! :-))

  ReplyDelete
 47. // தீபா வெங்கட் said...
  என் மருமகன் சமத்து!
  //

  :-))

  ReplyDelete
 48. //கவிதா | Kavitha said...
  //என்ன ஒரு வில்லத்தனம்?
  இதை எல்லாம் யார் சொல்லிகொடுத்தது??//

  அதானே என்ன ஒரு வில்லத்தனம்.. ?!!

  நட்டு செம கியூட்டு.. கண்ணு சுத்தி போடுவீங்களாம்..
  //

  நாங்க திருஷ்டிதானே சுத்தி போடுவோம்!! கண்ணை சுத்திப் போட்டுட்டு என்ன பண்ணுவீங்க அப்புறம்?!!

  ReplyDelete
 49. வாங்க அபி நைனா......!!!


  இதுல இருந்தே தெரியுது உங்ககிட்ட இருக்குறது ஊம குசும்புன்னு ......!!!!!  இதெல்லாம் நடராஜ் குட்டி உங்ககிட்ட இருந்து கத்துக்காம ... வேரயாருகிட்ட இருந்ந்து கட்டுகிட்டிருப்பான்.....!!!!!


  இதெல்லாம் நெம்ப டூ மச் தம்பி.....!!

  ReplyDelete
 50. // என்ன ஒரு வில்லத்தனம்?
  இதை எல்லாம் யார் சொல்லிகொடுத்தது??//

  இந்த வில்லத்தனம்தானே வேணாங்கறது. :P

  ReplyDelete
 51. மீன் குஞ்சுக்கு நீந்த கத்து தரணுமா?
  அதெல்லாம் அப்பா புத்தி குழந்தைக்கும் பிறப்புலேயே வந்துரும்.

  ReplyDelete
 52. ரொம்ப அருமையான போட்டோ எல்லாம்.

  நடராஜ் சூப்பர், குழந்தைக்கு திர்ஷ்டி சுத்தி போடுங்க.

  ஆயிலன் அண்ணா ரொம்ப நல்லா போட்டோ எடுத்து இருக்கீங்க!

  ReplyDelete
 53. //
  அதானே யாரு சொல்லிக் கொடுத்தது:))?
  //

  நல்ல கேள்வி போங்க, இதுக்கெல்லாம் ரூம் போட்டா யோசிப்பாங்க??

  அப்பாகிட்டே இருக்கற குசும்புதான் அப்படியே வந்திருக்குன்னு நினைக்கறேன் :))

  ReplyDelete
 54. //
  Poornima Saravana kumar said...
  //இதை எல்லாம் யார் சொல்லிகொடுத்தது??
  //

  ஹி ஹி
  வேற யாரு நான் தான்:)))))
  //

  Repeeeeeettai

  ReplyDelete
 55. //
  ஆயில்யன் said...
  //Poornima Saravana kumar said...
  என் மாப்பியை அழகாய் படம் பிடித்த அண்ணன் ஆயில் வாழ்க!!
  //

  டாங்க்யூ தங்கச்சி :)

  //

  நானும் வாழ்த்திகறேன்.
  ஆயில் வாழ்க
  ஆயில் வாழ்க
  ஆயில் வாழ்க
  ஆயில் வாழ்க!!!

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))