பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 11, 2009

தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டு..!!!!

நான் என்ன பண்ணட்டும் என் இளவல் ராதாகிருஷ்ணன் எழுதிய அதே பதிவு தான் இது. (யப்பா உடனே இது ஈயடிச்சான் காப்பின்னு அவார்டு கொடுத்துடாதீங்கப்பா) நான் தேடி அலையாமல் அழகா தேர்ந்தெடுத்து சொன்ன ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்னி!!

***********************************

நிலவரி ரத்து, இலவச மின்சாரம், வட்டியில்லாக் கடன்,தவிர அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்..ஆறாவது ஊதியக்குழுவின் இடைக்கால நிவாரணமாக 4500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.இவர்கள் மட்டும் 15 லட்சம் இருப்பர்.குடிநீர் திட்டம், ஊரக வேலைவாய்ப்பு என 3849 கோடி செலவிடப்பட்டுள்ளது..இவர்கள் எண்ணிக்கை 3.4 கோடி.,மெட்ரோ ரயில், சிறந்த பேருந்து போக்குவரத்து..வெள்ள நிவாரணம், இலவச டி.வி., என நகர்ப்புற மக்கள் வாக்கு 2.7 கோடிவெளி மார்க்கெட்டில் அரிசி 35 ரூபாய் விற்கும் நிலையில் ரேஷனில் 1 ரூபாய்க்கு போடப்படுகிறது..இது பொருளாதார நிலையில் பின்தங்கியவர் ஆதரவை பெருக்கும்.

பொறுத்தவரை இன்று இலவசங்கள் சாதனையைப் படைக்கும்..தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சற்று வலுவான நிலையிலேயே உள்ளது.மேலும் பா.ம.க., எப்போதும் வெற்றி பெறும் கூட்டணியையே விரும்பும்...ஆகவே கடைசி நேரத்தில்..அவர்களும் இந்த அணியிலேயே தொடர்வர்..விஜய்காந்தையும் இந்த அணியில் சேர்க்க முயற்சி நடக்கிறது.

இலங்கை பிரச்னை பிரமாதமாக ஓட்டளிக்கும் போது மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தாது.மேலும் ..இன்று அனைத்துக் கட்சிகளுமே...இதை வைத்து அரசியல் செய்துக்கொண்டிருக்கும் நிலையில்...கலைஞரைத் தவிர வேறு யாரையும்..சாமான்யனால் நினைத்துப் பார்க்க முடியாது.இன்று தேசிய நலனையும்..அரசியல் நலனையும் வைத்துப் பார்த்தால் கலைஞரை விட்டால்..வேறு மாற்று இல்லை

55 comments:

 1. இலவச மின்சார கட் ??

  :)

  ReplyDelete
 2. ஊருல கரண்டு இல்லாமல் பட்ட கஷ்டம் எனக்குதாய்யா தெரியும் :)

  ReplyDelete
 3. ஏன் தொல்ஸ், லேபிள்ஸ் கரெக்ட் டா போட கூடாதா?

  காமெடி, மொக்கை, சிரிப்பு, நக்கல், நையாண்டி இதுல ஏதாச்சும் வகைப்படுத்தாம என்ன காரியம் பண்ணி இருக்கீங்க?

  ReplyDelete
 4. வாங்க ஆயில்யன், அனானி மின்னல். அப்து,நாகை சிவா!

  மின்னல்! கரண்ட் கட் என்பது பத்தி நானே "ஆற்காடு வீராசாமி என்னும் அசிங்கம்"ன்னு ஒரு பதிவே போட்டிருக்கேன். ஆனா தேர்தல்ன்னு வந்துட்டா நாம நிறை குறை இதில என்ன அதிகம்ன்னு பார்த்து தான் செயல் படனும் இல்லியா? அதனால உங்க ஓட்டு உதயசூரியனுக்கே! ஓக்கே!

  ReplyDelete
 5. \\ நாகை சிவா said...
  ஏன் தொல்ஸ், லேபிள்ஸ் கரெக்ட் டா போட கூடாதா?

  காமெடி, மொக்கை, சிரிப்பு, நக்கல், நையாண்டி இதுல ஏதாச்சும் வகைப்படுத்தாம என்ன காரியம் பண்ணி இருக்கீங்க?\\

  ஹி ஹி சிவா அப்படி பார்த்தா இந்த பின்னூட்டம் எந்த வகை? கண்டிப்பா நகைச்சுவை தானே!

  5 வருஷத்திலே செய்ய வேண்டிய தேர்தல் அறிக்கையை 2.5 வருஷத்திலே செஞ்சா கூட உங்களுக்கு நக்கல் தான்!

  ReplyDelete
 6. அதனால உங்க ஓட்டு உதயசூரியனுக்கே! ஓக்கே!
  //

  செக் எப்ப அனுப்புவீங்க

  :)

  ReplyDelete
 7. அப்து சந்தோஷம் அப்து! டபுள் சந்தோஷம்!

  ReplyDelete
 8. //நாகை சிவா said...
  ஏன் தொல்ஸ், லேபிள்ஸ் கரெக்ட் டா போட கூடாதா?

  காமெடி, மொக்கை, சிரிப்பு, நக்கல், நையாண்டி இதுல ஏதாச்சும் வகைப்படுத்தாம என்ன காரியம் பண்ணி இருக்கீங்க?
  //

  Puli,
  ippadi thani thaniyava poaduvaru. athaan "Arasiyal"nu ellathaiyum sethu poatutare ;)

  ReplyDelete
 9. ஓட்டு இல்லாதவன் பின்னூட்டம் போடலாமா?

  ஒரு காலத்தில் திமுகவிற்கு கள்ள ஓட்டு போட்டவன்.

  இப்போதைக்கு நடுநிலைவியாதி

  ReplyDelete
 10. //
  ஹி ஹி சிவா அப்படி பார்த்தா இந்த பின்னூட்டம் எந்த வகை? கண்டிப்பா நகைச்சுவை தானே!//

  பதிவு எவ்வழியோ பின்னூட்டமும் அவ்வழியே !

  (பந்து உங்க பகுதியில் ;)

  //5 வருஷத்திலே செய்ய வேண்டிய தேர்தல் அறிக்கையை 2.5 வருஷத்திலே செஞ்சா கூட உங்களுக்கு நக்கல் தான்!//

  இப்போ உண்மையிலே யாரு நக்கல் பண்ணுறானு எனக்கு புரியல...

  லக்கியின் 100 நாள் ஆட்சிக்கு போட்ட அதே கமெண்ட் தான் இதுக்கு போடனும் போல ;)

  ReplyDelete
 11. என்னை கடலில் போடுங்கள்

  கட்டுமரமாக மிதப்பேன்  சாதனை லிஸ்டில் இதையும் இனைத்து கொள்ளவும்

  :)

  ReplyDelete
 12. வாங்க பாலாஜி! நல்லா சொன்னீங்க! அரசியல் என்பது சாக்கடைன்னு அதன் ஓரமா போய்கிட்டே இருக்கும் நபர்களுக்கும் உங்களுக்கும் அதிக வித்யாசம் தெரியலை!

  காமடி, மொக்கை, சிரிப்பு எல்லாம் கெட்ட விஷயமா எனக்கு படலை!

  ReplyDelete
 13. சிவா 100 நாள்க்கும் 2.5 வருஷத்துக்கும் இடையே என்ன நடந்தது என்பது தான் கேள்வியே! அதே பின்னூட்டம் இப்ப நீங்க போட்டா அது நீங்க உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்துடுச்சுன்னு அர்த்தம்!

  ReplyDelete
 14. //சிவா 100 நாள்க்கும் 2.5 வருஷத்துக்கும் இடையே என்ன நடந்தது என்பது தான் கேள்வியே! அதே பின்னூட்டம் இப்ப நீங்க போட்டா அது நீங்க உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்துடுச்சுன்னு அர்த்தம்!//

  சாதனைகளை விட சோதனைகளே அதிகம் தொல்ஸ். இது இல்லாத வன்முறை, அராஜகம், அத்துமீறல் னு அடுக்கிட்டே போகலாம். அரசை விட கழகத்தை விட குடும்பமே பிரதானமாக அமைந்த நாட்கள் இந்த ஆட்சி காலத்தில் மட்டுமே. இதற்காக மற்ற கட்சியை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. 1996 - 2001 ஆட்சியையும் 2006-2009 நீங்களே சுயபரிசோதனை பண்ணி பாருங்கள் தொல்ஸ்.

  ReplyDelete
 15. ஏன் சிவா இந்த ஆட்சியில் 100 கோடி செலவு செய்து வளர்பு மகன் கல்யாணம் நடந்ததா?அதற்கு டி ஜி பி தான் ஊர்வல பாதுகாப்புக்கு கையில் ரிவால்வருடன் வந்தாரா?

  கை நீட்டி சொல்லுங்க ஒரு ஊழல் குற்றச்சாட்டை?

  குடும்பம்ன்னு இருந்தா பிரச்சனை வரும். அது கலைஞர் குடும்பம் என்பதால் மீடியாவுக்கு செய்தி!

  ஹி ஹி நாங்க சுயபரிசோதனையில் ஜெயிச்சவங்க சாரே!

  ReplyDelete
 16. \\அராஜகம், அத்துமீறல் னு அடுக்கிட்டே போகலாம்.\\

  ஹஹ்ஹஹ்ஹா! நீங்க இன்னமும் ஜெ ஆட்சி மோகத்தில் இருக்கீங்க! அரசு ஊழியரை டெசோ விலே போட்டதை சொல்ரீங்களா?? இது திமுக ஆட்சிப்பா!

  ReplyDelete
 17. அரசு ஊழியரை டெசோ விலே போட்டதை சொல்ரீங்களா?? இது திமுக ஆட்சிப்பா!
  //


  ஐய்ய்ய்ய்


  அதனாலதானா சட்டகல்லூரி மேட்டர்லையும்

  போலிஸ் வக்கில் பிரச்சனையிலையும் வேடிக்கை பாக்குறீங்களா.. :)

  ReplyDelete
 18. கலைஞர் டெக்னிக் அப்படியே உடன்பிறப்புக்கு வருவதில் வியப்பு ஏதும் இல்லை. அதுக்கு தான் அடுத்த கட்சியை ஆதரவு அளிக்கவில்லை என்று சொன்னேன். நீங்க கேட்பது போலவே மாற்றி மாற்றி கை நீட்ட முடியும் தொல்ஸ்.

  ஊழல் குற்றச்சாட்டை. லஞ்சத்தை லீகலைச்சு பண்ணியாச்சே அப்புறம் என்னத்துக்கு ஊழல் னு தனியா வேற சொல்லனும்.

  1 ரூபாய் க்கு அரிசி எத்தன பேருக்கு கிடைக்குது. அது எந்த அளவுக்கு கள்ள சந்தையில் வருது என்று உங்களுக்கே தெரியும், அதில் கழக உடன்பிறப்புகளும், கண்மணிகளும் கூட்டு.

  இலவச டிவி பெற்றவர்கள் எத்தனை. கழக உடன்பிற்ப்பு வீட்டில் ரூம்க்கு ஒரு டிவி உள்ள வீடு எத்தனை உங்களுக்கு காட்டட்டும்.

  இப்ப தெருவுக்கு தெரு வீதி வீதிக்கு ஒரு காலேஜ், அதிலும் ஆசிரியர் பயிற்சி பள்ளி, நர்சிங் அது இது ஏகப்பட்ட கோர்ஸ். ஒரு கோர்ஸ் க்கு எவ்வளவு லட்சம் யாருக்கிட்ட குடுத்தா எப்படி வேலை முடியும் என்பது முதற்கொண்டு சொல்ல முடியும் தொல்ஸ். அது உங்களுக்கே தெரியும்.

  மதுரையில் நீங்க போய் ஒரு இடத்தை விலை பேசி பாருங்களேன், உண்மை நிலவரம் உங்களுக்கே தெரியும்.

  தமிழ்நாடே மின்சாரம் இல்லாமல் இருந்துச்சு. மின் வெட்டே இல்லனு கூசமா சொன்ன அரசு தானே இது.

  சென்னையில் இருந்து மாயவரத்துக்கு ஆக்கூர் முட்டு வழியில் ஊருக்கு போவது இல்லை போல நீங்கள்.

  மானாட மயிலாட நிகழ்ச்சி பற்றி பேச தான் சட்டசபையில் நேரம் இருந்தது.

  சரி விடுங்க.. குறை ஏதும் மாற போவது இல்லை. கண்ணை கட்டிட்டீங்க. அப்படியே தொடரட்டும்...

  ReplyDelete
 19. மதுரை சம்பவமும், மாநகராட்சி தேர்தலும் மே இந்த ஆட்சியின் வன்முறையுமே போதும் வரலாற்றில் பதிவு செய்ய..

  எதை எடுக்க எதை விடுக்க குழப்பம் வருது என்னத்த பண்ண சொல்லுங்க

  ReplyDelete
 20. //குடும்பம்ன்னு இருந்தா பிரச்சனை வரும். அது கலைஞர் குடும்பம் என்பதால் மீடியாவுக்கு செய்தி!//

  :)))

  வேணாம் தொல்ஸ் விடுங்க....

  ReplyDelete
 21. அட வாங்க இம்சை அரசன்! சட்ட கல்லூரி பிரச்சனை ஒரு சென்னை கல்லூரியிலே நடந்த ஒருசாதி மோதல். தேவர் சாதிக்கும் தலித் இனத்துக்கும் நடந்தது. இதிலே போலீஸ் கை கட்டி பார்த்தது மகா குற்ரம். அதுக்கான தண்டனை வழங்க்கப்பட்டு விட்டது அந்த வேடிக்கை சிரிப்பூ போலீஸ்க்கு. அதான் ஒரு அரசுக்கு அழகு. அது நடந்தாச்சு. அது போல அவங்க மூதாதையர் வழக்கறிஞர் vs போலீஸ் மோதல் என்பதும் வழகறிஞரின், போலீசாரின் அடாவடித்தனம் தான். ஆனா அதுவும் சென்னை உள்ள தான் நடந்தது. அதுக்கும் திமுக ஆட்சிக்கும் என்ன தொடர்பு. ஆனா டெசோ சட்டம் பாய்ச்சப்பட்டு தமிழ் நாடு முழுக்க அந்த கொடுமை நடந்தது அதிமுக ஆட்சியால் தான் என்பதை இம்சை அரசனே புரிந்து கொள்ளுங்கள்!

  ReplyDelete
 22. //ஆனா அதுவும் சென்னை உள்ள தான் நடந்தது. அதுக்கும் திமுக ஆட்சிக்கும் என்ன தொடர்பு.//

  யப்பா சாமி.... சத்தியராஜ் பார்த்து கவுண்டர் சொல்லுற டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது....

  நல்லா இருங்க நல்லாவே இருங்க

  ReplyDelete
 23. \\1 ரூபாய் க்கு அரிசி எத்தன பேருக்கு கிடைக்குது. அது எந்த அளவுக்கு கள்ள சந்தையில் வருது என்று உங்களுக்கே தெரியும், அதில் கழக உடன்பிறப்புகளும், கண்மணிகளும் கூட்டு.

  இலவச டிவி பெற்றவர்கள் எத்தனை. கழக உடன்பிற்ப்பு வீட்டில் ரூம்க்கு ஒரு டிவி உள்ள வீடு எத்தனை உங்களுக்கு காட்டட்டும்.
  \\

  சிவா சின்ன பிள்ளை தனமா விவாதம் செய்ய கூடாது! 3 லட்சம் பேர் உள்ள நாகையிலே 200 போலீஸ் தான். அதுக்கால 3 லட்சம் போலீசா போட முடியும். அவனவனா பார்த்து திருந்தனும். இல்லாட்டி நீங்க அரசியில்ல புகுந்து மாத்தனும். அதை விட்டுட்டு ஓட்டு கூட போடாம பொட்டி தட்டிகிட்டு எனக்கு டீவி வரலை, பக்கத்து வீட்டுக்கு வந்துடுச்சுன்னு சொல்வது அபத்தம்!

  ReplyDelete
 24. \\இப்ப தெருவுக்கு தெரு வீதி வீதிக்கு ஒரு காலேஜ், அதிலும் ஆசிரியர் பயிற்சி பள்ளி, நர்சிங் அது இது ஏகப்பட்ட கோர்ஸ். ஒரு கோர்ஸ் க்கு எவ்வளவு லட்சம் யாருக்கிட்ட குடுத்தா எப்படி வேலை முடியும் என்பது முதற்கொண்டு சொல்ல முடியும் தொல்ஸ். அது உங்களுக்கே தெரியும்.
  \\

  இது எம்ஜியார் செஞ்ச குற்றம். இதுக்கும் கலைஞர் மேல பழியா? 8 எஞினியரிங் காலேஜ் இருந்த இடத்தில் இன்னிக்கு 300 காலேஜ்! யார் செஞ்ச குற்றம் இது!

  ReplyDelete
 25. //அபி அப்பா said...
  வாங்க பாலாஜி! நல்லா சொன்னீங்க! அரசியல் என்பது சாக்கடைன்னு அதன் ஓரமா போய்கிட்டே இருக்கும் நபர்களுக்கும் உங்களுக்கும் அதிக வித்யாசம் தெரியலை!

  காமடி, மொக்கை, சிரிப்பு எல்லாம் கெட்ட விஷயமா எனக்கு படலை!
  //
  appa arasiyal ketta vishayama?

  Maduraila Dhinakaran officela 3 perai erichathu, Dharmapurila bus erichi college students konnathellam Arasiyal kaaranathuku thaane?

  ithukage entha arasiyal vathiyavathu athuku poarupethukitaangala? alla avungalai aatharikaravanga yaaravathu thappunu solli kural kodutheengala? (ethir katchi kaaravangalai sollala, athe katchi kaaravangalai solren)

  ippadi patta unga (both DMK and ADMK) arasiyal saakadainu sollama Santhanamnu solluvanga?

  Antha amma rendaiyiram kaasu koduthuthunu, color TV kodukaroamnu makkalai attract panra Pachoanthi arasiyal Saakadai thaan.

  udane antha amma naanga Computer kodupoamnu solra arasiyalum Saakadai thaan.

  Spectram oozhalai pathi Sun TV pesa aarambicha udane Ithayam Inithathi, kangal panithathunu solra arasiyal Saakadai thaan.

  Kajanala kaasu illai athanala muttaiku pathil Urulai kizhangu poaduvoamnu solli kaasu setha Arasiyal saakadai thaan.

  Athaiye muttai viyabarigalta kaasu vaangitu maathiri Arasiyal Saakadai thaan.

  ippadi rendu arasiyal Saakadaigalaiyum sollikite poagalam.

  Kadaisiya, antha ammaku intha aiya nichayam paravai illainu solluven.

  aana intha rendu arasiyalum Saakadainu solrathai naan maathika mudiyathu. Neenga venumna Santhanamnu eduthu poosikonga.

  ReplyDelete
 26. இது வரை ஒரு சட்டசபை தேர்தலை தவிர்த்து மற்ற எல்லா தேர்தலுக்கும் ஒட்டு போட்டு இருக்கேன்... இது உபதகவல்

  ReplyDelete
 27. அன்பு பாலாஜி! கண்டிப்பாய் நாளை ஸ்பெட்ரம் பத்தி பேசுவோம்!இப்ப அளவு கடந்த தூக்கம் வருது!

  ஆனா 1 மட்டும் நிச்சயம். யார் இருந்தா என்ன போனா என்ன நான் ஒருத்தன் மாத்திரம் இருந்தாவதுஇந்த திமுக கொடியை பிடிச்சுகிட்டு நிப்பேன் இந்த வலை உலகில்!இது சத்தியம்! வரேன் நாளைக்கு!

  ReplyDelete
 28. சரி எம்.ஜி.ஆர். ஆரம்பிச்சு வச்சார். நீங்க ஏன் சாமி தொடர்ந்து கிட்டு இருக்கீங்க, விட வேண்டியது தானே... அட அது அப்படி மகாலெட்சுமி ஆச்சே ! விட முடியுமா சொல்லுங்க னு கேட்டா கஷ்டம் தான்

  ReplyDelete
 29. //தேவர் சாதிக்கும் தலித் இனத்துக்கும் நடந்தது. இதிலே போலீஸ் கை கட்டி பார்த்தது மகா குற்ரம். அதுக்கான தண்டனை வழங்க்கப்பட்டு விட்டது அந்த வேடிக்கை சிரிப்பூ போலீஸ்க்கு. அதான் ஒரு அரசுக்கு அழகு. அது நடந்தாச்சு. அது போல அவங்க மூதாதையர் வழக்கறிஞர் vs போலீஸ் மோதல் என்பதும் வழகறிஞரின், போலீசாரின் அடாவடித்தனம் தான்.//

  Police manthiri yaru? avar thaane intha rendukum poarupu ethukanum?

  moreover rendume prechanai nadaka poaguthunu policeku therinja vishayam thaan...

  muthal casela sandai nadaka poaguthunu police already nirutha pattirukargal. aana Jaathi voteku bayanthu yaaru melayum appa police kai veikala.

  sandai nadaka poaguthunu therinji munnadiye anga police irukum pothu avungaluku instruction koduthiruka maatanga?

  summa adichi vidatheenganne... Arasiyala ithellam saatharanamappanu sollitu poanga.

  ReplyDelete
 30. விதாண்ட வாதம் என்று முடிவு பண்ணிட்டு களம் இறங்கிட்டீங்க தொல்ஸ்.

  வெற்றி உங்களுக்கு தான், ஆனால் தோல்வி கண்டிப்பாக எனக்கு மட்டும் இல்லை நமக்கு தான்...

  நல்ல தூக்கம் அமையட்டும் :)

  ReplyDelete
 31. //அபி அப்பா said...
  அன்பு பாலாஜி! கண்டிப்பாய் நாளை ஸ்பெட்ரம் பத்தி பேசுவோம்!இப்ப அளவு கடந்த தூக்கம் வருது!

  ஆனா 1 மட்டும் நிச்சயம். யார் இருந்தா என்ன போனா என்ன நான் ஒருத்தன் மாத்திரம் இருந்தாவதுஇந்த திமுக கொடியை பிடிச்சுகிட்டு நிப்பேன் இந்த வலை உலகில்!இது சத்தியம்! வரேன் நாளைக்கு!
  //

  Spectrum pathi mattum illai...

  Maduraila Dinakaran officela sethavangalukum serthu pathil sollunga...

  naan poana pinnootathula ketathukum sethu pathil sollunga.

  Inga nadakura arasiyal Saakadai thaan Saakadai thaan Saakadai thaan.

  ReplyDelete
 32. //சிவா சின்ன பிள்ளை தனமா விவாதம் செய்ய கூடாது!//

  சின்னப்புள்ள வாதம் சிறுபிள்ளைத்தனமாக உங்களுக்கு தெரியுது.

  // 3 லட்சம் பேர் உள்ள நாகையிலே 200 போலீஸ் தான். அதுக்கால 3 லட்சம் போலீசா போட முடியும். //

  அப்படி போட்டா கூட ஏதும் நடக்காது போல இருக்கே. உடன்பிறப்புக்கு சல்யூட் அடிச்சுட்டு தான் மேல் அதிகாரிக்கே இப்ப சல்யூட் அடிக்குற நிலைமைல போலீஸ் இருக்கு.

  //அவனவனா பார்த்து திருந்தனும். இல்லாட்டி நீங்க அரசியில்ல புகுந்து மாத்தனும். //

  ரெடிமேட் டயலாக். இதுக்கு பதில் என்னனு உங்களுக்கே தெரியும் தொல்ஸ்.

  //அதை விட்டுட்டு ஓட்டு கூட போடாம பொட்டி தட்டிகிட்டு எனக்கு டீவி வரலை, பக்கத்து வீட்டுக்கு வந்துடுச்சுன்னு சொல்வது அபத்தம்!//

  எனக்கு அதுக்கு அந்த டிவி எல்லாம்.
  ரேசன் கார்ட் டே வேணாம்னு சொல்லுறேன் எங்க வீட்டுல, கலைஞரே மஞ்சள் கார்டு உனக்கு ஏண்டா னு கேட்குறாங்க என்னத்த சொல்ல...

  ReplyDelete
 33. சிவா நான் விதண்டாவாதம் செய்யவில்லை! அதை செய்வது நீங்க தான்!1 ரூபா அரிசியில் ஊழல்ன்னு சொல்றீங்க! அப்படி எந்த ஆட்சியிலும் நடக்க த்தான் செய்யும்/ நாம 7 கோடி பேர் மக்கள். அதிலே ஊருக்கு 200 பேர் தப்பு செய்வான். முன்ன மாதிரி இல்ல இல்ல மீடியா பவர்புல். உடனே செய்தியாகும். அப்படியாக உங்க காதுக்கு எக்ஸாசரேட் ஆகி வந்த செய்தி தான் எல்லாம்.நாளை வர்ர்ரேன்!

  ReplyDelete
 34. ஓட்டு வாங்க வரிசையில் நிற்கிற கட்சியிலே எந்த கட்சி தேவலாம் என்று பார்த்தால் திமுக தான் தேறும். நான் உங்க கட்சி அபி அப்பா.

  ReplyDelete
 35. தொல்ஸ் எனக்கு ஊர்ல அரிசி வியாபாரம். 40 வருடத்துக்கு மேல் அதை வியாபாரம், மீடியா சொல்லுவதை எல்லாம் நம்பும் அளவுக்கு என் மதி நிலை இல்லை.

  நானும் தூங்க போறேன், நாளைக்கு பேசுவோம். முடியுற கதையா இது?

  ReplyDelete
 36. //வேறு மாற்று இல்லை//
  ஏன் இல்லே? யார் சொன்னாங்க. கலைஞர் retire ஆவட்டும். ஸ்டாலின் வரட்டும்

  ReplyDelete
 37. //
  கலைஞரைத் தவிர வேறு யாரையும்..சாமான்யனால் நினைத்துப் பார்க்க முடியாது
  //

  அப்படியா...அப்ப மீதிக் கட்சிக்கு ஓட்டுப் போட்றவங்க எல்லாம் சாமான்யங்களெ இல்லையா? தி.மு.க கூட்டணி 50,000 வோட்டு வாங்குனா, எதிர் கூட்டணி 40,000 வாங்குது... அப்ப அவங்கள்லாம்?

  என்னங்க அபி அப்பா, கணக்கு ஒதிக்குதே :)))

  ReplyDelete
 38. ஒன்னு சொல்றேன். இந்தத் தெனாவெட்டுத்தான் திமுக தலைமையை இந்த ஆட்டம் ஆட வைக்குது. ஜெயலலிதா வெளங்காத அரசியல்வாதிதான். அத விட்டா இங்கதான வந்தாகனும்னு நெனைக்கிறதாலத்தான் ஆட்டம் ஜாஸ்த்தியாருக்கு திமுக கூடாரத்துல.

  இந்த நிலைமை நிச்சயம் மாறியே ஆகனும்.

  நிறை குறையெல்லாம் அலச வேண்டியதுதான். ஆனா கட்சியப் பாத்து ஏன் அலசுறீங்க? அவ்வளவு பிராக்டிக்கலான ஆளுன்னா ஒங்க தொகுதியைப் பாத்து அதுல நிக்குறவங்கள்ள நிறைகுறைகளைப் பாருங்க.

  ஜெயலலிதா வெளிப்படையாச் செஞ்சதை கருணாநிதி மறைமுகமாச் செய்றாரோன்னு தோணுது.

  ரெண்டு பேரையும் ஒன்னாத்தான் நான் எடை போடுறேன். சீர்தூக்கிப் பாத்தா ரெண்டுமே தூக்கிப் போட வேண்டிய நிலைலதான் இருக்குது.

  ReplyDelete
 39. //நிலவரி ரத்து, இலவச மின்சாரம், வட்டியில்லாக் கடன்,தவிர அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்..ஆறாவது ஊதியக்குழுவின் இடைக்கால நிவாரணமாக 4500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.இவர்கள் மட்டும் 15 லட்சம் இருப்பர்.குடிநீர் திட்டம், ஊரக வேலைவாய்ப்பு என 3849 கோடி செலவிடப்பட்டுள்ளது..இவர்கள் எண்ணிக்கை 3.4 கோடி.,மெட்ரோ ரயில், சிறந்த பேருந்து போக்குவரத்து..வெள்ள நிவாரணம், இலவச டி.வி., என நகர்ப்புற மக்கள் வாக்கு 2.7 கோடிவெளி மார்க்கெட்டில் அரிசி 35 ரூபாய் விற்கும் நிலையில் ரேஷனில் 1 ரூபாய்க்கு போடப்படுகிறது.//


  உங்கள் பக்தியை கண்டி வியந்து நிற்கிறேன்.
  இந்த சலுகைகளுக்கு செலவான தொகை தி.மு.க குடும்பம் மம்பட்டி எடுத்து உழைச்சு சம்பாரிச்சதா?

  எல்லாம் மக்கள் பணம் அந்த பணத்துல சும்மா கிள்ளி போட்டதுக்கே இந்த ஆர்ப்பாட்டாமா?

  மும்முடிவுகளற்ற பார்வைகளோடு எஈங்க எதையும் அணுக போறதில்லை!
  ஏன்னா நீங்க சொல்லிருக்கிங்க உங்க உடம்புல தி.மு.க ரத்தம் ஓடுதுன்னு
  (என் உடம்புல “O" + ஓடுது).

  ReplyDelete
 40. டொக் டொக் டொக்.. மே ஐ கம் இன்!!

  ReplyDelete
 41. //இன்று இலவசங்கள் சாதனையைப் படைக்கும்..தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சற்று வலுவான நிலையிலேயே உள்ளது.//

  கிழிஞ்சது கிருஷ்ணகிரி(கும்க்கி மன்னிக்க)
  இலவசம் நாட்டை கெடுத்து குட்டி சுவராக்கிருச்சு!
  நம்ம வரிப்பணம் ஆக்கபூர்வமான வழிகள்ள செலவாகனும்னு உங்களுக்கு கொஞ்சம் கூட ஆசையில்லையா!
  உங்க கட்சி பக்தியில அவுங்க என்ன செஞ்சாலம் ஏத்துகுவிங்களா?

  ReplyDelete
 42. //இலங்கை பிரச்னை பிரமாதமாக ஓட்டளிக்கும் போது மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தாது.//

  அதாவது எவனுக்கும் சூடு, சொரணை இல்லைங்கிறிங்க! கரைக்டா!

  ReplyDelete
 43. //ஏன் இல்லே? யார் சொன்னாங்க. கலைஞர் retire ஆவட்டும். ஸ்டாலின் வரட்டும்//

  ஸ்டாலின்னா?? எங்கே செல்லும் இந்த பாதைஐஐஐஐஐ?!!

  ReplyDelete
 44. //கலைஞரைத் தவிர வேறு யாரையும்..சாமான்யனால் நினைத்துப் பார்க்க முடியாது.//

  பக்தி முக்தி போனால் இப்படி தான் பிதற்றுவார்கள்!
  சாமான்யனுக்கும் தெரியும் என்ன செய்யனும்னு இது வரைக்கும் அத செய்யலையாமா! இனிமே வந்து கழட்டிருவாரோ!

  ReplyDelete
 45. பாலாஜி! நீங்க சொல்லும் தர்மபுரி 3 பெண்கள் கொலையும் தினகரன் விபத்தும் ஒரே தராசிலே வச்சு ஏன் பார்க்குறீங்க. அப்ப உங்க மனசிலே அரசியல்ன்னா சாக்கடை ன்னு ஒரு மனபிராந்தீயிலே இருக்கீங்க. அதை விடுத்து வெளிய வாங்க!

  நான் எழுதிய "திருநங்கை கண்ணகி" பதிவு படிங்க.
  http://abiappa.blogspot.com/2007/09/blog-post_7491.html

  இருங்க மேலிடம் கூப்பிடுது பின்ன வரேன்!

  ReplyDelete
 46. ஆமாங்க என் கணக்கு படி 40ல் அதிகபட்சமாக 14 தொகுதியில் வெற்றிவாகை சூடப்போவது தி.மு.கதான் :)))

  ReplyDelete
 47. //ஆனா 1 மட்டும் நிச்சயம். யார் இருந்தா என்ன போனா என்ன நான் ஒருத்தன் மாத்திரம் இருந்தாவதுஇந்த திமுக கொடியை பிடிச்சுகிட்டு நிப்பேன் இந்த வலை உலகில்!இது சத்தியம்! வரேன் நாளைக்கு!//

  வேட்டிய ரெண்டு மூனு பெல்ட் போட்டு இறுக்க கட்டிக்கிட்டு வாங்க இல்லை...அதுவும் உருவப்படும்!!!

  ReplyDelete
 48. அது சரி..

  சிவா அண்டு வாலு நீங்க யாருக்கு ஓட்டுப்போடுவீங்கன்னு சொல்லுங்க?

  நாங்க எங்க கும்மியைக் கூட்றோம்.

  திமுக ஆட்சியில் மட்டுமே வேலைப் பரவலும்,ஏழையின் நிலை உயர்வும் நிச்சயம். சிலக் குறைகள் இருக்கலாம் அது நிவர்த்தி செய்யப்படும்.

  ஆணையிட்டே யார் தடுத்தாலும்
  ஆதவன் மறைவதில்லை..

  ஆயிரந்தான் எடுத்துச் சொன்னாலும்
  உமக்கு புரிவதில்லை.

  haha..

  அபிஅப்பா, தூள் கிளப்புங்க...

  ReplyDelete
 49. \\கலைஞரைத் தவிர வேறு யாரையும்..சாமான்யனால் நினைத்துப் பார்க்க முடியாது.இன்று தேசிய நலனையும்..அரசியல் நலனையும் வைத்துப் பார்த்தால் கலைஞரை விட்டால்..வேறு மாற்று இல்லை//

  நம் நாட்டில் நடக்கும் துயர சம்பவங்களுக்கும், சொந்த வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களையும் மறக்க இது போன்ற காமெடிகளை அட்டிகடி வழங்கவும். நன்றி.

  ReplyDelete
 50. //தேசிய நலனையும்..அரசியல் நலனையும் வைத்துப் பார்த்தால் கலைஞரை விட்டால்..வேறு மாற்று இல்லை
  //
  :)))

  நம்மூர்க்காரருன்னு இந்த ஒரு வரி குசும்பிலேயே நிருபிச்சீட்டீங்கண்ணே!

  ReplyDelete
 51. poda neeyum un blog um

  ReplyDelete
 52. நம் ஓட்டு காங்கிரஸ் திமுக கூட்டணிக்கே.. விஜயகாந்த் வந்த மாதிரி தான்.. ராமதாசும் ரெடி.. இந்த முறையும் 40/40 உறுதி.

  ஜெய் ஹோ..!!! :)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))