பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 28, 2009

ஆற்காடு வீர்ராசாமிக்கு ஒரு கிழிந்த கடிதம்!!!



அன்புள்ள ஆற்காடு வீராசாமி அவர்களுக்கு அபிஅப்பாவின் ஒரு கிழிந்த கடிதம்,ஏன்னபடிச்சுட்டு எப்படியும் கிழிக்கதான் போறீங்க. அதனால நானே கிழிச்சு கொடுத்துடுறேன்.


இன்றைக்கு இரவு 8.30 முதல் 9.30 வரை உலக வெப்பமயமாவதை தடுத்து பூமியை காக்கும் பொருட்டு எல்லா சுவிச்சும் ஆஃப் பண்ணிட்டு இருட்டுல குத்த வச்சீருக்கனும்ன்னு உலக புண்ணியவான் எல்லாம் சொல்லியிருக்காங்க.


நீங்களோ தேர்தல் பிசியிலே இருப்பீங்க. தெரியும் இருந்தாலும் சரியா இரவு 8.29க்கு நம்ம தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொடுத்தீங்கன்னா நாங்க 8.30க்கு டாண்னு சுவிட்சை ஆஃப் பண்ணிட்டு உட்காந்துப்போம்.


"போடா வெண்ணை உனக்கு ஏன் அத்தனை கஷ்டம் அதை நானே பார்த்துக்கறேன். தமிழ்நாடு வெப்பம் அடையாம நான் பார்த்துக்குறேன்" அப்படீன்னு நீங்க அடம் பிடிக்க கூடாது.


எங்க வீட்டு சுவிட்சை ஆஃப் பண்ணி பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதா. கொஞ்சம் மனசு வையுங்க. எங்களோட இந்த சின்ன ஆசையை பூர்த்தி செய்யுங்க!


அன்புடன்

அபிஅப்பா

31 comments:

  1. :)

    இதை எழுத உடன்பிறப்பு ஆன உங்களுக்கு மட்டும் தான் தகுதி உரிமை இருக்கு! ;)))

    சரியா சொன்னீங்க சீ கிழிச்சீங்க ;)

    ReplyDelete
  2. இதெல்லாம்..ரொம்ப அதிகம் சொல்லிட்டேன்

    ஃஃஃஃஃஃஃ

    பேசாம ரசினி வீட்டில் அமத்த சொல்லுவோம்..அவர் அமத்தினா..தமிழ்நாடே அமத்தினா மாதிரி..

    ReplyDelete
  3. சூப்பர் நக்கலு...எல்லாரும் வாழைப்பழத்துல ஊசிதான் குத்துவாங்க...நீங்கபெரிய கடப்பாறையையே குத்துறீங்க...

    ReplyDelete
  4. // எங்க வீட்டு சுவிட்சை ஆஃப் பண்ணி பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதா. //

    பேராசைப் பெரு நஷ்டம்...

    இப்படி எல்லாம் ஆசைப் படக்கூடாது..

    ReplyDelete
  5. //
    "போடா வெண்ணை உனக்கு ஏன் அத்தனை கஷ்டம் அதை நானே பார்த்துக்கறேன். தமிழ்நாடு வெப்பம் அடையாம நான் பார்த்துக்குறேன்" அப்படீன்னு நீங்க அடம் பிடிக்க கூடாது.//

    ரொம்பவும்தான் காலை வார்ரீங்க..

    ReplyDelete
  6. சூப்பரு.. யாராவது வீராசாமிக்கு (டி.ஆர் அல்ல) ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து குடுங்கப்பா..

    ReplyDelete
  7. ஆற்காடு வீர்ராசாமி ஐயா மனசு வைச்சா முடியும் :)
    Earth Hour தொடர்பாக நானும் பதிவுபோட்டுள்ளேன் அதன் முகவரி இதோ
    http://skylinelk.blogspot.com/2009/03/830.html

    ReplyDelete
  8. இதெல்லாம் நொம்ப்ப ஓவரூ சொல்லிப்புட்டேன் :))

    ReplyDelete
  9. //
    எங்க வீட்டு சுவிட்சை ஆஃப் பண்ணி பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதா. கொஞ்சம் மனசு வையுங்க. எங்களோட இந்த சின்ன ஆசையை பூர்த்தி செய்யுங்க!
    //

    இதேயே தான் தமிழ்நாட்டுல ஆறு கோடி பேரு கேக்குறாங்க அபி அப்பா...:0))

    ReplyDelete
  10. :)))))
    மயிலாடுதுறை எம்பி சீட்க்கு ஆற்காட்டார் போட்டி போடறாராமே.. நெசமா? :)

    ReplyDelete
  11. toooooo much...udanpirappu ippidi yellam eluthalamaa anna:-))

    ReplyDelete
  12. பாவம்ய்யா அவரு தேர்தல் சமயத்தில் உடன்பிறப்பு காலவார கூடாது..:)

    ReplyDelete
  13. யாரங்கே...
    அபி அப்பாவின் ஆணையை நிறைவேற்ற ஆவண செய்யவும் !

    ReplyDelete
  14. ஹையோ!

    ஹையோ!

    ஆற்-காட்டார்

    ReplyDelete
  15. //அன்புடன்
    அபிஅப்பா
    //

    என்னா அன்பு அற்காட்டார் மேல்?!! முடியல!! :)))

    ReplyDelete
  16. தல...

    அட்டகாசமான கடிதம் ;-))

    ReplyDelete
  17. உடன்பிறப்பு இப்படிதான் இருக்கணும். அடுத்தவங்க நம்ம குறையை சுட்டி காட்டறதுக்கு முன்னால நாமளே சொல்லி காட்டிடணும். இதுதான் நமக்கு நாமே திட்டம் சரியா அபி அப்பா

    ReplyDelete
  18. அப்பா, இப்பொதெல்லாம் அப்படி கிடையதே. இந்த பதிவ 6 மாசத்துக்கு முன்னாடி போட்டிருந்தா கரெக்ட இருந்துருக்கும்.

    ReplyDelete
  19. \\நீங்களோ தேர்தல் பிசியிலே இருப்பீங்க. தெரியும் இருந்தாலும் சரியா இரவு 8.29க்கு நம்ம தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொடுத்தீங்கன்னா நாங்க 8.30க்கு டாண்னு சுவிட்சை ஆஃப் பண்ணிட்டு உட்காந்துப்போம்.

    "போடா வெண்ணை உனக்கு ஏன் அத்தனை கஷ்டம் அதை நானே பார்த்துக்கறேன். தமிழ்நாடு வெப்பம் அடையாம நான் பார்த்துக்குறேன்" அப்படீன்னு நீங்க அடம் பிடிக்க கூடாது.

    எங்க வீட்டு சுவிட்சை ஆஃப் பண்ணி பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதா. கொஞ்சம் மனசு வையுங்க. எங்களோட இந்த சின்ன ஆசையை பூர்த்தி செய்யுங்க!\\

    எப்படி இப்படி பக்குவமா கெஞ்ச முடியுது. கிரேட்ட்ட்ட்ட்ட்ட்ட்.........

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. அபி அப்பா. சூப்பர்.
    நாங்கள்ளாம் நேத்து ஒரு மணிநேரம் மின்சக்தி நிறுத்தி வைத்திருந்தோம். நீங்க சொன்னதை அவர் கேட்டுட்டார்னு நினைக்கிறேன்:))))))))

    ReplyDelete
  21. உங்க ஏரியாவுல இன்னுமா மின்சாரம் அப்பப்போ வராம போகுது?!

    ReplyDelete
  22. இப்பயும் தினம் 4 லேர்ந்து 6 கரெண்ட் இருப்பதில்லயாமே மாயவரத்துல.. :)
    நல்லகிழிந்த கடிதம்..

    ReplyDelete
  23. வாங்கோ அபி நைனா.......!!!!!




    இவ்வளவு பெரிய கிலிஞ்ச கடுதாசியா........!!!! நெம்ப கஷ்டப்பட்டு எழுதீருப்பீங்க போல.......????!!!??? நெம்ப கிரேட் .....!!!!


    ஆனா ... உங்க கிலிஞ்ச கடுதாசி அவருக்கு எப்புடி போய் சேந்துது தெரியுமா......???




    அவருக்கு மொளகா பஜ்ஜின நெம்ப இஷ்டமாமா.......!! அந்த பஜ்ஜிய உங்க கடுதாசில மடுச்சு குடுத்திருக்காங்க .......!!! அதுமில்லாம எங்க ஏரியா சைடெல்லாம் கரண்ட கட்டு பண்ணவே இல்ல.......!!! ஏனுங்கோ தம்பி .... இது உங்குளுக்கு எவ்ளோ பெரிய இழுக்கு....!!!!


    அடுத்த பதிவுல அந்த பப்பாளி மண்டயனுக்கு ஒரு பகிரங்க எதிர்ப்பு கடுதாசிய போட்டுருங்க ......!!!!


    ஆமா ..... சொல்லிபோட்டேன் ......!! அப்பறம் உம்பட சாயிஸ் தம்பி......!!!!

    ReplyDelete
  24. நடுநிலைமௌயா இருக்குற மாதிரி என்னதான் நீங்க வேசம் போட்டாலும் உங்க வேசம் அப்பட்டமா வெளியே தெரியுது அபிஅப்பா!

    தேர்தலுக்கு நாலு மாசத்துக்கு முந்தியே இனிமே க்ரண்டு ஒழுங்கா வரும்னு அறிக்கை கொடுத்து அதையும் சென்சிகிட்டு இருக்காங்க!

    ஆனா பாருங்க உங்களுக்கு நீங்களே ஆப்பு வச்சிகிற மாதிரி கரண்டு கட்ட மறந்திருந்த மக்களுக்கு ஞாபக படுத்துறிங்க!

    ReplyDelete
  25. \\ வால்பையன் said...
    நடுநிலைமௌயா இருக்குற மாதிரி என்னதான் நீங்க வேசம் போட்டாலும் உங்க வேசம் அப்பட்டமா வெளியே தெரியுது அபிஅப்பா!

    தேர்தலுக்கு நாலு மாசத்துக்கு முந்தியே இனிமே க்ரண்டு ஒழுங்கா வரும்னு அறிக்கை கொடுத்து அதையும் சென்சிகிட்டு இருக்காங்க!

    ஆனா பாருங்க உங்களுக்கு நீங்களே ஆப்பு வச்சிகிற மாதிரி கரண்டு கட்ட மறந்திருந்த மக்களுக்கு ஞாபக படுத்துறிங்க!\\

    அடேய் தம்பி வென்னை வாலு ! நீ ஒட்டு மொத்த தமிழகமும் ஈரோடு மட்டும் தான் என நினைச்சுகிட்டு இருந்தா நீ ஒரு முட்டாள்!!!!!

    ReplyDelete
  26. ஏன் சித்தப்பூ,
    ஏன் இப்டி?
    என்கிட்ட சொல்லியிருந்தா நான் கலைஞருக்கே கடுதாசி போட்ருப்பேன்ல?

    ReplyDelete
  27. // அபி அப்பா said...

    அடேய் தம்பி வென்னை வாலு ! நீ ஒட்டு மொத்த தமிழகமும் ஈரோடு மட்டும் தான் என நினைச்சுகிட்டு இருந்தா நீ ஒரு முட்டாள்!!!!! //


    வாங்கோ அபி நைனா......!!!!


    அந்த காங்கோ மண்டையன் வால்பையன என்ன வேணுமுனாலும் திட்டிகோ தம்பி...!!!!

    ஆனா.... தம்பி ஈரோட்ட பத்தி மட்டும் பேசாத நீ......!! முன்னபின்ன ஈரோட்ட பாத்திருகிரியா தம்பி......??

    உங்க ஊரு மாயவரமே எங்க ஊரு பஸ்ஸ்டாண்ட் சயிசுலதான் இருக்கும்....!!


    எனக்கு தெருஞ்சு மாயவர என்றன்சுல ஒரு ஆர்ச்சு " மாயவரம் ஊராச்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது " அப்புடீன்னு......

    ஆனா அதே ஆர்ர்சுக்கு பின்னாடி " நன்றி மீண்டும் வருக " அப்புடீன்னு போற்றுக்குது ...... !! அப்போ ஊரு எங்கதான் இருக்குது.....!!!!

    மனசுல வெச்சுக்கோ தம்பி.....!!!

    மறந்து தூக்கத்துலகோடா ஈரோட்ட பத்தி நெனச்சுபுடாத.....!! ஆமா சொல்லிபோட்டேன் ...!!!!!

    ReplyDelete
  28. //ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்//

    ரமணனும் இல்லை, இது பைபிளில் வருகிற வசனம்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))