பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 12, 2007

துபாயில் 1 மணி நேரம் டைம் பாஸுக்கு 2 திர்காம்!!!

நேத்து இங்கே வார ஆரம்பமாச்சா, அதனால கொஞ்சம் ஆணி ஆதிகமா இருந்துச்சு. எல்லாத்தையும் பிடுங்கிட்டு வீட்டுக்கு போனா செம போர். எவனாவது மாட்டினா தேவலை நாம கொஞ்சம் ஃபிரஷ் ஆகிக்கலாம்ன்னு நெனச்சா ஒருத்தனும் மாட்டலை. போன்ல யார் கிட்டயாவது மொக்கை போடலாம்ன்னு பார்த்தா 0 ஃபில்ஸ் தான் இருந்துச்சு.பின்ன ஏதாவது படம் பார்க்கலாமேன்னு உக்காந்தா நம்ம விஜய் படம் ஒன்னு மாட்டுச்சு. பார்த்து கிட்டு இருந்தேன். அதில விஜய் பைக் வேணும்ன்னு நெனைச்சா மேலேயிருந்து பைக் சாவி விழுது. தொப்பி வேணும்ன்னு நெனைச்சா தொப்பி கிடைக்குது. சரி நாமலும் அதுபோல செய்வோமேன்னு "ஆண்டவா நம்ம மொபைல்ல ஒரு 25 திர்காம் தட்டி விடுப்பா"ன்னு ஒரு அப்ளிகேஷன் போட்டேன். என்ன ஆச்சர்யம் டொய்ங்ன்னு ஒரு 25 திர்காம் வந்து விழுந்துச்சு. thanka aandava ன்னு ஒரு SMS அந்த நம்பருக்கு தட்டி விட்டுட்டு சரி மொக்கை போட சரியான ஆளை தேடினேன்.



என்னடா அபிஅப்பா வினையூக்கி மாதிரி அமானுஷ்யமா எழுதறார்ன்னு நெனைக்காதீங்க விஷயம் இது தான். இங்க ஒரு மெபைல்ல இருந்து வேற மொபைல்க்கு பைசா டிராண்ஸ்பர் பண்ணலாமா அப்படி ஒரு அப்பாவி இன்னொறு அப்பாவிக்கு டிராண்ஸ்பர் பண்ணும் போது ஒரு நம்பரை தப்பா அடிச்சு அது எனக்கு வந்துடுச்சு!

கொஞ்ச நேரத்துல ஒரு போன் அதே நம்பர்ல இருந்து!

ஹாலோ யூ தமில் யூ தமில்

நான் தமில் இல்ல நான் பேசுவது தான் தமில்

சார் என் பேரு பளனிச்சாமி உங்க போன்க்கு 25 திர்காம் அனுப்பினேன் வந்துச்சா

வந்துச்சுங்க ரொம்ம புண்ணியமா போகும் உங்களுக்கு!

அய்யோ அது உங்களுக்கு அனுப்பலை சார் என் தம்பி ஊர்ல இருந்து வந்திருக்கான் அவனுக்கு அனுப்பினேன் ஒரு நம்பர் தப்பா போச்சு அதான் உங்களுக்கு வந்துடுச்சு அதை எனக்கே திருப்பி அனுப்பிடுங்க சார்

எனக்கு அனுப்ப தெரியாதுங்களே நான் ஒரு படிக்காத லேபர்ங்க

அப்புடியா நான் சொல்ற மாதிரி செய்யி!

(சார் போய் ஒருமைக்கு வந்தாச்சு)

சரி சார் எப்படின்னு சொல்லுங்க - இது நான்

முதல்ல ஆஷ் கீய அழுத்து!

எனக்கு அது எங்க இருக்குன்னு தெரியாது சார்

கூட்டல் குறி மாதிரி இருக்கும் அதை அமுக்கு

எனக்கு கணக்கு வராது சார் அதனால கூட்டல் குறி எதுன்னு தெரியாது

கூட்டல் குறி தெரியாதா முண்டம் நாலாம்பு பெயிலான எனக்கே தெரியுது நீ என்ன படிச்சிருக்க

உங்கள விட அதிகமா படிச்சு இருக்கன் சார்

அப்புடி என்ன படிப்பு

2ம்ம்பு பாஸ் சார் பாஸு பெருசா பெயிலு பெருசா

டேய் டேய் டேய் கவுண்டமணி செந்தில் வெளையாட்டு வேணாம் மரியாதையா அனுப்பு

போங்க சார் இப்புடி சொன்னா அனுப்ப மாட்டேன்!

சரி சரி தற்குறி தற்குறி கீழ இருக்க கடேசி பட்டன அமுக்கு!

ஏன் சார் கோவபடிறீங்க மூலமா?

வந்துடும் போல இருக்கு சீக்கிரம் அமுக்குடா கடேசி பட்டன

சார் உங்க குரலுக்கு பாடுனா நல்லா இருக்கும் சார் ஒரு பாட்டு பாடுங்க

டேய்ய்ய்ய் நல்லா வருது வாயில, நீ எங்கிட்டு இருக்க சொல்லு கிட்டத்துல இருந்தா நானே வந்து காச மாத்திகிறன்

நீங்க எங்க இருக்கீங்க அத மொதல்ல சொல்லுங்க சார்

நான் அல்கூஸ் கிராண்ட் மால் கிட்ட இருக்கேன்

(அட நம்ம இடத்துக்கு பக்கத்துல தான்)

சார் நான் புஜைராவில இருக்கேன் வந்து வாங்கிகுங்க

அடங்கொய்யால அதுக்கே 200 திர்காம் ஆவுமே, டேய் எப்படியாவது அனுப்புடா அய்யோ இவன் கிட்ட மாட்டிகிட்டனே

நீங்க ஒரு பாட்டு பாடுங்க யார்கிட்டயாவது கேட்டு அனுப்பறேன்

டேய்ய்ய் சரி என்ன பாட்டு சொல்லு சொல்லி தொலை பின்னயும் அனுப்பல.....

பல்லேலக்கா பாடுங்க சார்...

பல்லேலக்கா பல்லேலக்கா பல்லேலக்கா....டேய் இதுக்கு மேல தெரியலடா

சரி அப்ப வேற பாட்டு பாடுங்க சார்

;
;
;
;
இப்படியா 1 மணி நேரம் போச்சு அவனுக்கு இதுக்கே 8 திர்காம் ஆகியிருக்கும். அதுக்கு பின்ன பாவம்ன்னு 35 திர்காம் இன்னிக்கு காலைல அனுப்பி வச்சேன் 1 மணி நேரம் டைம் பாசுக்கு 2 திர்காம்

43 comments:

  1. நொந்து போனவங்க நாங்ககெல்லாம் இருக்கும் போது...வெளியே போயிம்..உங்க வேலைய காட்டுறீங்களா..

    எனக்கு இது போல் கிரெடிட் கார்டு தரொம் அப்படின்னு சொன்னவங்க கிட்ட..சீரியசா.."செலவழிச்சா திருப்பித் தரணும்மா..?" அப்படின்னு கேட்டு..அந்த பொண்ணு..அதுக்கு பதில் சொல்ல தெரியாம..பொறுங்க கேட்டு சொல்லுறேன் அப்படின்னு..மத்தவங்கள கூப்பிட ஒரே காமெடி தான் போங்க..

    ReplyDelete
  2. எனக்கும் இதுபோல் பத்து திர்ஹாம் வந்துச்சு!! நான் போன் செய்து யார் என்றேன் , ஹிந்தியல மாத்தாடினான் வேண்டாம் டா உன் 10 திர்ஹாம் என்று திருப்பி நானே அனுப்பினேன்! இன்று.

    ReplyDelete
  3. அபி அப்பா, என்ன இது? இந்த abcdefgh பின்னூட்டமெல்லாம் ஏன் போடறீங்க? அது சரி, உங்க ரெண்டு பேருக்கும் ஒரே தமிழ் டீச்சரோ?
    ம்ம்ம்ம்., இன்னொருத்தர் காசை எடுத்து வச்சுட்டு, பதிவு வேறேயா?
    அப்பாடா, இன்னிக்காவது சீக்கிரமாப் பின்னூட்டம் போட முடிஞ்சதே! :P

    ReplyDelete
  4. இவ்வளவு வருஷம் இங்கு இருக்கேன்,ஒரு தடவை கூட எனக்கு இந்த மாதிரி ஆனதில்லை.
    ஏங்க அபி அப்பா,எனக்கு ஒரு வாட்டி அனுப்புங்க,வருதா வரலையா என்று செக் பண்ணிக்கிறேன்.
    பின் குறிப்பு: திருப்பி அனுப்ப முடியாது. :-))
    ரொம்ப ஓவரா சிரிச்சா ராத்திரி தூக்கம் போயிடுமே என்று அவசரம் அவசரமாக படித்து முடித்தேன்.

    ReplyDelete
  5. நமக்கு யாரும் இப்படிலாம் தப்பா அனுப்ப மாட்றாங்களே :-). அனுப்பிட்டு என்னை அழைச்சா ராங் நம்பருன்னு வச்சிடுவோம்ல:-)

    அபி அப்பா ஒரு சந்தேகம் //இப்படியா 1 மணி நேரம் போச்சு அவனுக்கு இதுக்கே 8 திர்காம் ஆகியிருக்கும். அதுக்கு பின்ன பாவம்ன்னு 35 திர்காம் இன்னிக்கு காலைல அனுப்பி வச்சேன் 1 மணி நேரம் டைம் பாசுக்கு 2 திர்காம்// 1 மணி நேரத்திற்கு 18 திர்ஹம்ஸ் ஆகுமே? ஒரு நிமிடத்திற்கு 30 fல்ஸாச்சே? அதென்ன ஒரு மணி நேரம் டைம் பாசுக்கு 2 திர்ஹம் கணக்கு?

    ReplyDelete
  6. ஆனாலும் இந்த விளையாட்டு ரொம்ப காஸ்ட்லியா இருக்குப்பா.

    ReplyDelete
  7. அபிஅப்பா,
    கொளுத்திட்டீங்க. பாவம் அந்த ஆளூ..

    நீங்க பொழுது போகாம இருக்கீங்க..னு தெரியாமப் போன் பண்ணிட்டாரரு..

    அன்புடன்,
    சீமாச்சு..

    ReplyDelete
  8. கணக்குல நீங்க வீக்குனு எல்லாருக்கும் சொல்லனுமா..

    அதுக்கு குசும்பன் கிட்ட சொன்னா எல்லாருக்கும் தெரியுற மாதிரி பதிவு போடுவாரு..:)

    ReplyDelete
  9. உங்களுக்கு மட்டும் எப்படி தான் இந்த மாதிரி எல்லாம் மாட்டுறானுங்களே ;-)

    ReplyDelete
  10. அபி அப்பா... நெசமாவே நடந்த கதையா... இல்ல டுபாக்கூரா? சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துருச்சி. அவனுக்கு இப்பிடி ஒரு ஆளுட்ட மாட்டிட்டோமேன்னு........ (மீதி நீங்க முடிச்சிருங்க; இல்ல 2 திர்ஹம் அனுப்புங்க. ;-))

    ReplyDelete
  11. உங்களுக்குனே யாராச்சும் மாட்டுவாங்களா இப்படி? பாவம் அந்தாளு .. :))))

    ReplyDelete
  12. ஆகா...தமிழ்மணம்..ஜிடாக்கு இத்தனைக்கப்புறமும் உங்களுக்கு போர் அடிக்குதுன்னா ...முழுநேரமும் அரட்டை அடித்தாலும் உங்களுக்கு பத்தாது போல...


    அந்த ஆளா பாவம்...ஏங்க முதல்ல் சரியா நம்பர் அடிக்காதது தப்பு..
    அப்பறம்...பாருங்க படிக்காத ஆளுன்ன வுடனே மரியாதை குறைஞ்சுடுச்சே... :)

    ReplyDelete
  13. //எனக்கு கணக்கு வராது //

    எனக்கும் கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு. அவர் அனுப்பிச்சது 25 திர்ஹம். நீங்க திருப்பி அனுப்பிச்சது 35 திர்ஹம். எனக்கு என்னவோ நீங்க 10 திர்ஹம் செலவு பண்ணின மாதிரி தோணுது. உங்களுக்கு 2 திர்ஹம்னுதான் தோணுதா? எப்படிங்க அது?

    ReplyDelete
  14. enakkum ithu pola rendu moonu thadavai dhirhams kidachathu undu....ana ippo ulla transfer systemla illai....banking systemla...so no thollais....only enjoy!!!!!!!!!....niraya perukku kathula pogai waruthu pola?.....joooot.......

    ReplyDelete
  15. பதிவைப் படித்ததும் எழுந்த கேள்வி: எப்படிங்க நீங்க இப்படியெல்லாம் எழுதுறீங்க?

    பின்னூட்டம் படிச்சதும்: எப்படிங்க நீங்க, குசும்பன் எல்லாம் இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க?

    ReplyDelete
  16. //இப்படியா 1 மணி நேரம் போச்சு அவனுக்கு இதுக்கே 8 திர்காம் ஆகியிருக்கும். அதுக்கு பின்ன பாவம்ன்னு 35 திர்காம் இன்னிக்கு காலைல அனுப்பி வச்சேன் 1 மணி நேரம் டைம் பாசுக்கு 2 திர்காம்//

    அவ்ளோ வெட்டியாவா இருக்கீங்க...உங்க டேமேஜர் நம்பர் குடுங்க...புடுங்க இன்னும் நெறைய ஆணி தரச் சொல்றேன்.
    :)

    ReplyDelete
  17. //Collapse comments


    TBCD-2 said...
    நொந்து போனவங்க நாங்ககெல்லாம் இருக்கும் போது...வெளியே போயிம்..உங்க வேலைய காட்டுறீங்களா//

    வாங்க ஏபிசிடி கிரடிட் கார்டு தொல்லைய அண்ணாச்சி ஒரு பதிவாவே போட்டாரு:-) பாருங்க அதை!

    ReplyDelete
  18. // குசும்பன் said...
    எனக்கும் இதுபோல் பத்து திர்ஹாம் வந்துச்சு!! நான் போன் செய்து யார் என்றேன் , ஹிந்தியல மாத்தாடினான் வேண்டாம் டா உன் 10 திர்ஹாம் என்று திருப்பி நானே அனுப்பினேன்! இன்று//

    குசும்மா இவ்வளவு நல்லவனா நீ! கண்ணுல வாட்டர் வருதுய்யா:-)

    ReplyDelete
  19. //செந்தில் said...
    Uncontrollable laugh, nice//
    நன்றி செந்தில்!

    ReplyDelete
  20. //கீதா சாம்பசிவம் said...
    அபி அப்பா, என்ன இது? இந்த abcdefgh பின்னூட்டமெல்லாம் ஏன் போடறீங்க? அது சரி, உங்க ரெண்டு பேருக்கும் ஒரே தமிழ் டீச்சரோ?
    ம்ம்ம்ம்., இன்னொருத்தர் காசை எடுத்து வச்சுட்டு, பதிவு வேறேயா?
    அப்பாடா, இன்னிக்காவது சீக்கிரமாப் பின்னூட்டம் போட முடிஞ்சதே! :P //

    வாங்க கீதாம்மா! நம்ம ஏபிசிடி யும் நானும் இப்பதான் தமிழ் கத்துக்கும் கொயந்தங்க!

    அதான் அடுத்த நாள் 2 திர்காம் அதிகமா போட்டு குடுத்தாச்சே:-))

    ReplyDelete
  21. // வடுவூர் குமார் said...
    இவ்வளவு வருஷம் இங்கு இருக்கேன்,ஒரு தடவை கூட எனக்கு இந்த மாதிரி ஆனதில்லை.
    ஏங்க அபி அப்பா,எனக்கு ஒரு வாட்டி அனுப்புங்க,வருதா வரலையா என்று செக் பண்ணிக்கிறேன்.
    பின் குறிப்பு: திருப்பி அனுப்ப முடியாது. :-))
    ரொம்ப ஓவரா சிரிச்சா ராத்திரி தூக்கம் போயிடுமே என்று அவசரம் அவசரமாக படித்து முடித்தேன்.//

    வாங்க குமார் அண்ணா! ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து, அது போல உங்க பதிவ பார்த்து நாளாச்சு சீக்கிரம் போடுங்கண்னே!

    ReplyDelete
  22. // ஜெஸிலா said...
    நமக்கு யாரும் இப்படிலாம் தப்பா அனுப்ப மாட்றாங்களே :-). அனுப்பிட்டு என்னை அழைச்சா ராங் நம்பருன்னு வச்சிடுவோம்ல:-)

    அபி அப்பா ஒரு சந்தேகம் //இப்படியா 1 மணி நேரம் போச்சு அவனுக்கு இதுக்கே 8 திர்காம் ஆகியிருக்கும். அதுக்கு பின்ன பாவம்ன்னு 35 திர்காம் இன்னிக்கு காலைல அனுப்பி வச்சேன் 1 மணி நேரம் டைம் பாசுக்கு 2 திர்காம்// 1 மணி நேரத்திற்கு 18 திர்ஹம்ஸ் ஆகுமே? ஒரு நிமிடத்திற்கு 30 fல்ஸாச்சே? அதென்ன ஒரு மணி நேரம் டைம் பாசுக்கு 2 திர்ஹம் கணக்கு?//

    வாங்க ஜஸீலா! 30 பில்ஸ் தான்! ஆனா 5 பகுதியா நடந்துச்சு பேச்சு வார்த்தை! ஒவ்வொரு தடவையும் அவனுக்கு பிரஷர் எகிறின பின்னயும் போனை கட் பண்னிடுவான். நான் முதல் பகுதி மட்டுமே போட்டிருக்கேன், 5 வது தடவை பேசும் போது "யோவ் உன் கிட்ட கெஞ்சினதுக்கு 8 திர்காம் ஆச்சுய்யா"ன்னு சொன்னான்! ஆக டோட்டலா 1 மணி நேரம் பொழுது போச்சு!:-))

    ReplyDelete
  23. //இலவசக்கொத்தனார் said...
    ஆனாலும் இந்த விளையாட்டு ரொம்ப காஸ்ட்லியா இருக்குப்பா. //

    வாங்க கொத்ஸ்! காஸ்ட்லி ஒன்னியும் இல்ல, ஆண்டவன் புன்ணியத்துல எவனாவது மாட்டனும் அவ்ளோவ் தான்:-))

    ReplyDelete
  24. // Seemachu said...
    அபிஅப்பா,
    கொளுத்திட்டீங்க. பாவம் அந்த ஆளூ..

    நீங்க பொழுது போகாம இருக்கீங்க..னு தெரியாமப் போன் பண்ணிட்டாரரு..

    அன்புடன்,
    சீமாச்சு.. //

    வாங்க வாங்க சீமாச்சு அண்ணா! மாயவரத்து குசும்பு மாட்டினா ரிவீட்டு தானே:-))

    ReplyDelete
  25. //மின்னுது மின்னல் said...
    கணக்குல நீங்க வீக்குனு எல்லாருக்கும் சொல்லனுமா..

    அதுக்கு குசும்பன் கிட்ட சொன்னா எல்லாருக்கும் தெரியுற மாதிரி பதிவு போடுவாரு..:)//

    வாங்க மின்னல்! குசும்பனுக்கு இருக்குடீ ஒரு நாளு:-))

    ReplyDelete
  26. //கோபிநாத் said...
    உங்களுக்கு மட்டும் எப்படி தான் இந்த மாதிரி எல்லாம் மாட்டுறானுங்களே ;-) /

    அதிஷ்டம் கோபி அதிஷ்டம்:-))

    ReplyDelete
  27. //காட்டாறு said...
    அபி அப்பா... நெசமாவே நடந்த கதையா... இல்ல டுபாக்கூரா? சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துருச்சி. அவனுக்கு இப்பிடி ஒரு ஆளுட்ட மாட்டிட்டோமேன்னு........ (மீதி நீங்க முடிச்சிருங்க; இல்ல 2 திர்ஹம் அனுப்புங்க. ;-)) //

    வாங்க காட்டாறு! நெசமா நடந்தது தான் அவன் இனி இதை மறக்கவே மாட்டான் அவனுக்கு ஒரு கட்டத்துல சிரிப்பு வந்துடுச்சு:-))

    ReplyDelete
  28. //delphine said...
    good one.
    but paavam .. //

    டாக்டர் அதான் 2 திர்காம் அதிகமாவே அனுப்பியாச்சே! ச்சும்மா ஜாலிக்கு தான்:-))

    ReplyDelete
  29. // காயத்ரி said...
    உங்களுக்குனே யாராச்சும் மாட்டுவாங்களா இப்படி? பாவம் அந்தாளு .. :)))) //

    ஆமாம் எல்லாம் அதிஷ்டம் தான் காரணம் தங்கச்சி:-)

    ReplyDelete
  30. //முத்துலெட்சுமி said...
    ஆகா...தமிழ்மணம்..ஜிடாக்கு இத்தனைக்கப்புறமும் உங்களுக்கு போர் அடிக்குதுன்னா ...முழுநேரமும் அரட்டை அடித்தாலும் உங்களுக்கு பத்தாது போல...//

    ஆஹா ஓவர் நம்பர் இருந்தா போட்டு குடுத்துடுவீங்க போல:-(


    //அந்த ஆளா பாவம்...ஏங்க முதல்ல் சரியா நம்பர் அடிக்காதது தப்பு..
    அப்பறம்...பாருங்க படிக்காத ஆளுன்ன வுடனே மரியாதை குறைஞ்சுடுச்சே... //

    டாக்டர் இந்த பாயிண்ட பாருங்க! முத்து லெஷ்மின்னா முத்து லெஷ்மி தான்:-)

    ReplyDelete
  31. // Sridhar Venkat said...
    //எனக்கு கணக்கு வராது //

    எனக்கும் கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு. அவர் அனுப்பிச்சது 25 திர்ஹம். நீங்க திருப்பி அனுப்பிச்சது 35 திர்ஹம். எனக்கு என்னவோ நீங்க 10 திர்ஹம் செலவு பண்ணின மாதிரி தோணுது. உங்களுக்கு 2 திர்ஹம்னுதான் தோணுதா? எப்படிங்க அது?//

    சிம்பிள் ஸ்ரீதர் வெங்கட்! அவர் எனக்கு அனுப்பினது 25 திர்காம், அவர் என்கிட்ட பேசினது 8 திர்காம் ஆக 33 திர்காம், நான் அனுப்பினது 35 திர்காம் ஆக அவர் காசு நமக்கு எதுக்கு அதான் 2 திர்காம் என் செலவுன்னு சொன்னேன்:-))

    ReplyDelete
  32. //jaseela said...
    enakkum ithu pola rendu moonu thadavai dhirhams kidachathu undu....ana ippo ulla transfer systemla illai....banking systemla...so no thollais....only enjoy!!!!!!!!!....niraya perukku kathula pogai waruthu pola?.....joooot.......//

    வாங்க ஜஸீலா! இது நீங்க தானா?

    ReplyDelete
  33. பாவம் உங்ககிட்ட மாட்டினதுக்கு அவன் இன்னொரு 25 திர்ஹம் வாங்கி நண்பருக்கு அனுப்பியிருக்கலாம்.

    ஒரு நாள் எனது நண்பர் ( பக்கத்து கட்டில்காரர்) யாருக்கோ ஒரு கார்டு வாங்கி அந்த நம்பரை சொல்லிக்கொண்டிருந்தார்.

    சொல்லும்பொழுது அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். நானும் எனது மற்றொரு நண்பரும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தோம்..

    அவர் நம்பரைச் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே நான் சுதாரித்துக்கொண்டு போர்வைக்குள் மூடியபடியே எனது மொபையில் நண்பர் கூறிய எண்களை அழுத்தினேன்.

    எனது மொபைலில் காசு ஏறிவிட்டது. அப்படியே கண்மூடிவிட்டேன்...நண்பரோ, எதிர்முனைக்காரர் நம்பர் ஏறமாட்டேன்கிறது என்று திரும்ப திரும்ப சொல்ல, இவரும் திரும்ப திரும்ப நம்பரை சொன்னார்..

    நண்பரும், சரி நாளை ETISALAT சென்று புகார் சொடுக்க வேண்டும் என்று கண்மூடிவிட்டார்...


    நானும் அய்யோ பாவம் என்று திருப்பிக் கொடுத்துவிட்டேன்..

    உங்கள் பதிவினை படிக்கும்பொழுது எனக்கு அந்த சம்பவம் ஞாபகம் வருகின்றது...

    ( சரி உங்களுக்கு தரவேண்டிய பரிசுப்பொருள் என் கிட்ட இருக்கு)

    ReplyDelete
  34. // தருமி said...
    பதிவைப் படித்ததும் எழுந்த கேள்வி: எப்படிங்க நீங்க இப்படியெல்லாம் எழுதுறீங்க?

    பின்னூட்டம் படிச்சதும்: எப்படிங்க நீங்க, குசும்பன் எல்லாம் இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க? //

    தருமி சார் உங்க வருகையே சந்தோஷம் தருது இதுல பாராட்டு வேறயா? ரொம்ப நன்றி சார்!

    ReplyDelete
  35. // கைப்புள்ள said...
    //இப்படியா 1 மணி நேரம் போச்சு அவனுக்கு இதுக்கே 8 திர்காம் ஆகியிருக்கும். அதுக்கு பின்ன பாவம்ன்னு 35 திர்காம் இன்னிக்கு காலைல அனுப்பி வச்சேன் 1 மணி நேரம் டைம் பாசுக்கு 2 திர்காம்//

    அவ்ளோ வெட்டியாவா இருக்கீங்க...உங்க டேமேஜர் நம்பர் குடுங்க...புடுங்க இன்னும் நெறைய ஆணி தரச் சொல்றேன்.
    :) //

    கைப்ஸ்! இது ஆணி புடுங்கிட்டு வீட்டுக்கு வந்த பின்ன நடந்துச்சு! சீக்கிரமா சுட சுட பதிவு போட்டு தாக்குங்க கைப்ஸ், ரொம்ப ஆவலா இருக்கோம்:-)

    ReplyDelete
  36. // நிலவு நண்பன் said...
    பாவம் உங்ககிட்ட மாட்டினதுக்கு அவன் இன்னொரு 25 திர்ஹம் வாங்கி நண்பருக்கு அனுப்பியிருக்கலாம்.

    ஒரு நாள் எனது நண்பர் ( பக்கத்து கட்டில்காரர்) யாருக்கோ ஒரு கார்டு வாங்கி அந்த நம்பரை சொல்லிக்கொண்டிருந்தார். //

    வாங்க நிலவு நண்பன்!
    இங்கியும் அப்படி சில சமயம் நடக்கும் அது போல:-)) எப்ப வர்ரீங்க நம்ம ஊருக்கு! பரிசை நண்பர் வந்து வாங்கிப்பார் அவர் கிட்ட சொல்லிட்டேன்!:-))

    ReplyDelete
  37. உங்க பதிவ பார்த்து நாளாச்சு சீக்கிரம் போடுங்கண்னே!
    நம்ம பேர் மேலே கொஞ்சம் சொடுக்கித்தான் பாருங்களேன்!!
    தமிழ்மணத்தில் வராதுங்க.
    எங்க! உங்களுக்கு ஜிடாக்கிலே நேரம் பத்தலை அதைவிட காசு அனுப்ப மக்கள் வேறு இருக்காங்க.
    நடத்துங்க ராசா! நடத்துங்க.நல்லா இருந்தா சரி.

    ReplyDelete
  38. // வடுவூர் குமார் said...
    உங்க பதிவ பார்த்து நாளாச்சு சீக்கிரம் போடுங்கண்னே!
    நம்ம பேர் மேலே கொஞ்சம் சொடுக்கித்தான் பாருங்களேன்!!
    தமிழ்மணத்தில் வராதுங்க.
    எங்க! உங்களுக்கு ஜிடாக்கிலே நேரம் பத்தலை அதைவிட காசு அனுப்ப மக்கள் வேறு இருக்காங்க.
    நடத்துங்க ராசா! நடத்துங்க.நல்லா இருந்தா சரி.//

    ஆமா குமார் அண்ணே! வீடியோவா போட்டு தாக்கியிருக்கீங்களே! ஆமா ஏன் தமிழ்மணத்துல வரலை?

    ReplyDelete
  39. என்னது மொபைல்லே காசு அனுப்பலாமா? மெய்யாலுமா?
    எங்கே ஒரு 100 திர்ஹாம் அனுப்புங்க, வருதான்னு பார்க்கலாம்:-)

    ReplyDelete
  40. //ஆக அவர் காசு நமக்கு எதுக்கு //

    அட அதத்தானே நானும் சொன்னேன். உங்க செலவு 10 திர்ஹம்ன்னு. என்னமோ போங்க!

    ஆனாலும் அநியாயத்துக்கு நல்லவனா இருக்கீங்கண்ணே. இப்படி இருக்காதீங்கண்ணே... குசும்பு புடிச்ச தம்பிங்க, மின்னலடிக்குற நேரத்துகுள்ள லொடுக்குன்னு ஏமாத்திடுவாய்ங்க... அப்புறம் அய்யான்னாலும் வராது... அய்யனார்னாலும் வராது. அம்புட்டுதான். சொல்லிபுட்டேன்.

    ReplyDelete
  41. உங்களுக்குன்னே மாட்றாங்கையா?:))))))))
    உண்மைதானா? உட்கார்நது யோசிச்சதாய்யா?

    ReplyDelete
  42. இந்த அறிமுகம் வருவதற்க்கு முதல் நாள் எனது நண்பர் ஒரு காட் வாங்கி தரும்படி கேட்டார். அடுத்த நாள் இந்த முறை வந்து விட்டது. நான் இருந்த இடத்தில் இருத்து 25திர்காம் பெறுமதியான காட்டை புதிய முறை மூலம் அனுப்பி விட்டேன். நண்பர் ஒசியில் வந்துருப்பதாக எண்ணி ஒசியில் கதைத்து மூடித்து விட்டார். இதில் யார் தப்பு என்னுடையதா அல்லது அவர்ருடையதா?

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))