பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 7, 2007

மயிலாடுதுறை!!!


மயிலாடுதுறைகாரங்க தாம்ப்பா "கைபுள்ள" நம்ம அரசாங்கத்துக்கு. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானுங்க ரொம்ப நல்லவங்கப்பா ன்னு சமயம் கிடைக்கும் போதெல்ல்லாம் கும்மி எடுக்கும்.
.
தஞ்சை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் போது கீழதஞ்சை மாவட்டத்துக்கு மைய பகுதியே மயிலாடுதுறை தான். ஆனால் நாகை தலைநகராக்கப் பட்டது. அப்பவும் பேசாம வாயை மூடிகிட்டு இருந்தோம். பின்ன நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்த போது அப்பவும் மயிலாடுதுறை புறக்கனிக்கப்பட்டு நாகைக்கு மிக அருகே இருக்கும் திருவாரூர் தலைநகராகியது. மாயவரத்துகாரன் எல்லாம் போண்டா சாப்பிட்டு கொண்டு இருந்தோம்.
.
அதெல்லாம் போகட்டும்ன்னு பார்த்தா இப்போ தொகுதி சீரமைப்புன்னு சொல்லிகிட்டு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி என்பதே வேண்டாம் சிதம்பரம்(தனி) தொகுதியோட போய் ஒட்டிக்கோன்னு சொல்லிட்டாங்க. புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சீர்காழி, மயிலாடுதுறை,பூம்புகார் இதல்லாம் சேர்ந்து சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியாம். என்ன கொடுமை ஆண்டவா. கொள்ளிடம் ஆத்துக்கு அடுத்து உள்ள சிதம்பரம்,காட்டுமன்னார்கோவில், புவனகிரி இங்கே எல்லாம் தஞ்சை பேச்சு வழக்கு கூட இல்லை. அது வேற ஸ்டைல்.
.
என்ன காரணத்துக்கு பிரிச்சாங்க என்பது விஷயமில்லை. ஆனா இனி பாராளுமன்றத்தில் "மயிலாடுதுறை" மயிலாடுதுறை" என்ற வார்த்தை ஒலிக்காது என்பதே என் வருத்தம். நிச்சயமாக என் மண்ணின் மைந்தர்களுக்கும் இந்த வருத்தம் இருக்கும் என்பது நிச்சயம். இதில் கட்சி வேறுபாடு இல்லாமல் வருத்தம் இருக்கும். என் வருத்தத்தை இங்கே பதிவு செய்து விட்டேன்.
.
அடுத்த ஆப்பு ரெடி பண்ணுங்கப்பா! நாங்க ரெடி வாங்கிக்க! 1 செட் போண்டா வித் கெட்டி சட்னி பார்சேல்ல்ல்ல்ல்....

20 comments:

  1. போட்டோ உதவி முத்துலெஷ்மி அவர்கள்- நன்றி

    ReplyDelete
  2. Indiavaiye maplethaan parthirukken. ithule mayilaaduthurai enggennu poi theduven???

    ReplyDelete
  3. thideernnu samuga akkaraiyodu ezhuthiyirukkeenggale? ithuvum superthaan. :-D

    ReplyDelete
  4. அடப்பாவமே ...

    மயிலாடுதுறை அது ஆகும் இதுஆகும்ன்னு சொல்லிட்டுருந்தாங்க இப்படி ஓன்னுமில்லாம ஆகிடுச்சே..
    :(

    ReplyDelete
  5. அப்படியே ஸ்ட்ராங்கா ஒரு டீ பார்சல்...

    ReplyDelete
  6. தலைவா

    இந்த பதிவுக்கு நாங்கள் பின்னூட்டம் போடாலாமா?

    ReplyDelete
  7. \\ .:: மை ஃபிரண்ட் ::. said...
    thideernnu samuga akkaraiyodu ezhuthiyirukkeenggale? ithuvum superthaan. :-D \\\

    தோழி...கலக்கல் ;-))

    ReplyDelete
  8. ம்ம்ம்ம்ம், நியாயமான வருத்தம், ஆனாலும் உங்களோட எம்.பி ஒருத்தர், மயிலாடுதுறையை "துபாய்" ஆக்கறேன்னு சொல்லி உங்க எல்லாரையும் "துபாய்"க்கே அனுப்பி, இதான் மயிலாடுதுறைனு சொல்லிட்டார் போலிருக்கே! :P

    ReplyDelete
  9. "ஆனா இனி பாராளுமன்றத்தில் "மயிலாடுதுறை" மயிலாடுதுறை" என்ற வார்த்தை ஒலிக்காது

    என்னது யார் எப்ப பேசினா? நான் இதுவரை பேசினது இல்லை அப்புறம் யாரு பேசி இருப்பா? இதில் ஏதோ வெளிநாட்டு சதி இருக்கும் போல இருக்கு...

    ReplyDelete
  10. அப்பா இனி மணி சங்கர் அய்யர் எம்.பி ஆக முடியாது! அது வரை சந்தோசம் தான்:)

    ReplyDelete
  11. நான் எப்ப அவனை அடிக்கலாம்!!!

    ReplyDelete
  12. கோபிநாத் said...

    தலைவா

    இந்த பதிவுக்கு நாங்கள் பின்னூட்டம் போடாலாமா?


    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    [கோபி நீ மட்டும்தான் ரிப்பீட்டேய் போடுவியா நானும்தான்]

    ReplyDelete
  13. //மயிலாடுதுறை அது ஆகும் இதுஆகும்ன்னு சொல்லிட்டுருந்தாங்க இப்படி ஓன்னுமில்லாம ஆகிடுச்சே//
    அக்கா அப்படி சொல்லாதீங்க?

    நம்ம ராம்தாஸ் இருக்காருல அவரு பொண்ணுதான் அடுத்த எலெக்ஷனல மணிக்கு சங்கு ஊத போறதா எனக்கு ஊருலேருந்து சேதி வந்துச்சே..!

    அ.அப்பா டோண்ட் ஒர்ரி அவங்க வந்து மாத்துவாங்க!

    ReplyDelete
  14. இங்க சீரியஸா பதிவு போட்டிட்டுர்க்கீங்க. அங்க எல்லாரும் உங்கள கும்மிட்டு இருக்காங்க. போற போக்கைப்பாத்தா கைபுள்ளய ஜெயிச்சுடுவீங்க போல இருக்கு

    ReplyDelete
  15. பாராளுமன்றத்தில் "மயிலாடுதுறை"
    சட்டமன்றத்திலா?
    கடந்த 10 வருடங்களில் ்யிலாடுதுற மயிலாடுதுறையை என்ற வார்த்தயை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே சொல்லியிருப்பார்கள்,அதுவும் பாராளுமன்றத்தில்...!!! கேட்கவே வேண்டாம்.
    சான்சே இல்லை.

    ReplyDelete
  16. மனி சங்கர் அய்யர் 'மயிலாடுதுறையை' துபாய் ஆக்குவேன் துபாய் ஆக்குவேன்னு சொல்லி எங்ககிட்ட ஓட்டு வாங்கினாரு - துபாய் ஆயிட்டா நிறைய 'பேரிச்சம்பழம் சாப்பிடலாம்' 'ஒட்டகமெல்லாம்' பாக்கலாம்னு அவரு பொய்ய நம்பி இரண்டு மூணு தடவை ஓட்டும்போட்டோம். கடைசியில் கனவுகண்டுகொண்டிருந்த எங்கள் கண்ணிலே 'பாலைவன' மணலை அள்ளி கொட்டிவிட்டு மாயவரத்தை சிதம்பரத்தோடு இணைத்துவிட்டார்கள் படுபாவிகள்.

    மனிச்சங்கர் எங்கள் ஊருக்கு (பொறையார்) செய்தது ஒன்னே ஒன்னுதான் எங்க ஊர் நுழைவில் 'ராஜீவ் காந்தி'க்கு ஒரு சிலை வைத்து - பள்ளர் சகோதரர்கள் வசிப்பதால் சாதிப்பெயரால் அழைக்கப்பட்ட அந்த முச்சந்தியை 'ராஜீவ்புரமாக' மாற்றினார்.

    ReplyDelete
  17. மயிலாடுதுறை வாசிகளுக்கும்- தொகுதி மக்களுக்கும் ஓர் இனிப்பான செய்தி!
    மயிலாடுதுறையை சிதம்பரம் பாரளுமன்றத் தொகுதியோடு இணைக்கும் முயற்சி- மனிசங்கரரின் 'காய் நகர்த்தலால்' கைவிடபட்டதாக சென்றவார நக்கீரனில் படித்தேன்.

    ReplyDelete
  18. hello abi appa
    ungha appa amma nalama
    myd ku juction varalanu varutha padaringale
    ungha vituku ungha appa amma varalanu varatha patathu unda
    athukukagha first varutha padungha nyayam undu
    ithai avasiyam publish pannavum

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))